என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 28 செப்டம்பர் 2024
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமைக்கும் நாள். திட்டமிட்ட காரியம் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 27 செப்டம்பர் 2024
தனவரவு திருப்தி தரும் நாள். குடும்பத்தில் சந்தோஷம் தரும் சம்பவம் நடைபெறும். செல்வந்தர்களின் உதவியோடு கடன் பிரச்சனைகள் அகலும். பழகிய நண்பர்கள் பக்கபலமாக இருப்பர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 26 செப்டம்பர் 2024
ஆலய வழிபாட்டால் அமைதி கிடைக்கும் நாள். சங்கிலித்தொடர் போல வந்த கடன் சுமை குறையும். வியாபாரத்திலிருந்து மறைமுக போட்டிகள் மாறும். குடும்ப நலன் கருதி வருமானத்தைப் பெருக்க முன்வருவீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 25 செப்டம்பர் 2024
கனிவாகப்பேசி காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். திருமண பேச்சுகள் நல்ல முடிவிற்கு வரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் உண்டு. காரிய வெற்றிக்கு நண்பர்கள் உதவி செய்வர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 24 செப்டம்பர் 2024
இனிய செய்தி இல்லம் தேடி வரும் நாள். கல்யாணக் கனவுகள் நனவாகும். நிகழ்காலத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் குறுக்கீடாக இருந்தவர்கள் விலகுவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 23 செப்டம்பர் 2024
கல்யாண வாய்ப்புகள் கைகூடும் நாள். பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிட்டும். பூர்வீக சொத்துகள் விற்பனையால் கணிசமான லாபம் உண்டு.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 22 செப்டம்பர் 2024
உற்சாகம் அதிகரிக்கும் நாள். பல நாட்களாக செய்ய நினைத்த வேலையொன்றை இன்று செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துகளை மேலதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2024
முன்னேற்றத்திற்கு வழிவகை செய்துகொள்ளும் நாள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். வரவு திருப்தி தரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2024
மதியத்திற்கு மேல் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். விரயங்கள் அதிகரிக்கும். இடமாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். உறவினர்கள் உங்களை உதாசீனப்படுத்தலாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2024
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். கூட இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024
மனக்கலக்கம் ஏற்படும் நாள். சிந்தித்து செயல்படுவது நல்லது. பண நெருக்கடி அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்து கையெழுத்திடுவது நல்லது.