என் மலர்
சிம்மம் - இன்றைய ராசி பலன்கள்
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024
மனக்கலக்கம் ஏற்படும் நாள். சிந்தித்து செயல்படுவது நல்லது. பண நெருக்கடி அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடுகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் யோசித்து கையெழுத்திடுவது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும். தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் குழப்பங்கள் ஏற்படும். கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2024
நல்ல தகவல் இல்லம் தேடி வரும் நாள். நண்பர்கள் வழியில் அனுகூலம் உண்டு. பம்பரமாக சுழன்று பணிபுரிந்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 14 செப்டம்பர் 2024
வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். நல்ல மனிதர்களின் நட்பு கிடைக்கும். இதைச் செய்வோமா, அதைச் செய்வோமா என்று நினைப்பீர்கள். மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024
மனக்குழப்பம் ஏற்படும் நாள். மற்றவர்களை நம்பி ஒப்படைத்த பொறுப்புகள் மீண்டும் உங்களிடமே வந்துசேரலாம். கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற இயலாது. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024
மதிப்பும், மரியாதையும் உயரும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024
யோகமான நாள். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்வி நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். உறவினர் வழியில் மனதிற்கினிய சம்பவம் நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2024
செல்வந்தர்களின் ஒத்துழைப்பால் சிறப்படையும் நாள். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. அதிகாலையிலேயே ஆச்சரியமான தகவல் வந்துசேரும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 9 செப்டம்பர் 2024
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் நாள். கூட்டுத்தொழிலை தனித்தொழிலாக மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். சொத்துகள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துகள் நல்ல முடிவிற்கு வரும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 8 செப்டம்பர் 2024
மனச்சுமை குறையும் நாள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவுவர். பிள்ளைகள் வழியில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். பிரபலமானவர்கள் உங்கள் முயற்சிக்கு உறுதுணைபுரிவர்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 7 செப்டம்பர் 2024
மனக்குழப்பங்கள் மாறும் நாள். தீட்டிய திட்டங்கள் வெற்றி பெறும். உத்தியோக மாற்றம் உறுதியாகலாம். மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான அறிகுறிகள் தோன்றும். தொழில் சீராக நடைபெறும்.
சிம்மம்
இன்றைய ராசிபலன் - 6 செப்டம்பர் 2024
செல்வாக்கு உயரும் நாள். நினைத்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் பணியாளர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் அகலும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். கல்யாணக் கனவுகள் நனவாகும்.