என் மலர்
துலாம்
ஆனி மாத ராசிபலன்
எதிர்காலத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் துலாம் ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு பாக்கியாதி பதி புதனும், லாபாதிபதி சூரியனும் இணைந்திருப்பதால் இம்மாதம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் அகலும். வருமான உயர்விற்கு வழிபிறக்கும். அஷ்டமத்து குருவின் ஆதிக்கத்தால் இடையிடையே கொஞ்சம் விரயங்களும் தலைதூக்கும். இருப்பினும் இக்காலத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும்.
சனி வக்ரம்
ஆனி 5-ந் தேதி, கும்ப ராசியில் சனி வக்ரம் பெறுகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சனி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக பிள்ளைகள் வழியே சில பிரச்சினைகள் வந்து அலைமோதும். தொழிலில் திடீரென தொய்வு ஏற்படும். மன உறுதி குறையும். உணர்ச்சிவசப்பட்டு உறவினர்களை பகைத்துக் கொள்வீர்கள். சுமுகமாக முடிந்த சொத்துப் பிரச்சினை மீண்டும் தலைதூக்க வாய்ப்புண்டு. வாசல் தேடி வந்த வரன்கள் முடிவடையாமல் திரும்பிப் போகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் பகை அதிகரிக்கும். உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. உடல் நலனிலும் கொஞ்சம் கவனம் தேவை. இக்காலத்தில் சனிக்கிழமை விரதமும், சனி பகவான் வழிபாடும் நன்மையைத் தரும்.
கடக - புதன்
ஆனி மாதம் 12-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். இக்காலத்தில் செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் வந்துசேரும். கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். மாமன், மைத்துனர் வழியில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். உத்தியோகத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உண்டு. முக்கியப் புள்ளிகள் உங்கள் இல்லம் தேடி வந்து முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். பொருளாதார நிலை சீராகும்.
கடக - சுக்ரன்
ஆனி 23-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் ராசிநாதன் சுக்ரன் வருவது யோகம்தான். தொழில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வேலை இல்லை என்று இருந்தவர்களுக்கு விடிவு காலம் பிறக்கும். பணி ஓய்விற்கு பிறகும் ஒரு சிலருக்கு மீண்டும் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சியில் நல்ல பொறுப்புகள் கிடைக்கும். வீடு வாங்குவது, இடம் வாங்குவது போன்றவற்றில் கவனம் செலுத்தும் நேரம் இது.
ரிஷப - செவ்வாய்
ஆனி 27-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் செவ்வாய் சஞ்சரிக்கப்போவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களின் ஆதரவு குறையும். மருத்துவச் செலவு களால் மனக்கலக்கம் ஏற்படும். 'நினைத்தது நிறைவேறவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உறவினர்களும், உடன்பிறப்புகளும் பகையாக மாறலாம். விற்ற சொத்துக்களால் வில்லங்கங்கள் வரும். எதையும் அனுபவஸ்தர்களைக் கொண்டு ஆலோசனை செய்து முடிவெடுப்பதே நல்லது.
பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மாத கடைசியில் மனக்குழப்பம் தரும் தகவல் வரலாம். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு இடையூறுகள் அதிகம் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திருப்தி இல்லாத மாற்றங்கள் ஏற்படலாம். மாணவ - மாணவிகள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு மாதத்தின் முற் பகுதி மகிழ்ச்சியாக இருக்கும். பிற்பகுதியில் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
ஜூன்: 19, 20, 21, 25, 26, ஜூலை: 5, 6, 10, 11.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.