என் மலர்
துலாம்
பங்குனி மாத ராசிபலன்
நேர்மறை எண்ணத்தால் நிகழ்காலம் சிறக்கும் என்று கூறும் துலாம் ராசி நேயர்களே!
பங்குனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் பஞ்சம ஸ்தானத்தில் சனியோடு சஞ்சரிக்கிறார். எனவே பூர்வ புண்ணிய ஸ்தானம் பலப்படுகிறது. குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் குழப்பங்கள் அகலும். குதூகலம் தரும் சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். பொருளாதார நிலை உயரும். புதிய மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு நல்ல காரியங்கள் பலவும் செய்ய முன்வருவீர்கள்.
செவ்வாய் - சனி சேர்க்கை
மாதத்தின் முதல் நாளிலேயே கும்ப ராசிக்குச் செல்லும் செவ்வாய், மாதம் முழுவதும் அங்குள்ள சனியோடு இணைந்து சஞ்சரிக்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் பஞ்சம ஸ்தானத்தில் பகை கிரகமான சனியோடு இணைவது அவ்வளவு நல்லதல்ல. பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் இழக்கும் என்பதால், எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்கொள்ளும் குறுக்கீடுகளால் தடைகள் அதிகரிக்கும். பாகப்பிரிவினைகள் இழுபறி நிலையில் இருக்கும். உடன்பிறப்புகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். விற்ற சொத்துக்களிலும் வில்லங்கங்கள் வரலாம். எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நேரம் இது. பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. சனி வழிபாடு தக்க பலன் தரும்.
புதன் வக்ரம்
மீனத்தில் நீச்சம் பெற்று சஞ்சரித்து வரும் புதன், பங்குனி 13-ந் தேதி வக்ரமும் அடைகிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வலிமை இழக்கும்பொழுது, பெற்றோர் வழிப் பிரச்சினைகள் தலைதூக்கும். பூர்வீக சொத்துக்களின் பஞ்சாயத்துக்கள் முடிவடையாமல் தாமதப்படும். எந்த காரியத்திலும் ஒரு முடிவுக்கு வர இயலாது. பாக்கியாதிபதி பலமிழக்கும் இந்த நேரத்தில், காரியத்தில் தேக்கநிலையும், கடமையில் தொய்வும், கலக்கம் தரும் மனநிலையும் ஏற்படும். இருப்பினும் விரயாதிபதியாகவும் புதன் விளங்குவதால் விரயத்திற்கேற்ற வரவு உண்டு. எந்த வேலையையும் ஒரு முறைக்கு இருமுறை செய்யக்கூடிய சூழ்நிலை அமைந்தாலும், முடிவில் வெற்றி கிடைக்கும்.
மீனம் - சுக்ரன்
பங்குனி 19-ந் தேதி, சுக்ரன் தன்னுடைய உச்ச வீடான மீன ராசிக்கு செல்கிறார். அங்கு புதனோடு சேர்ந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். உங்கள் ராசிநாதனாக விளங்கும் சுக்ரன் உச்சம் பெறுவது, உன்னதமான வாழ்வை அமைத்துக் கொடுக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்கள் பலன் தரும். நல்ல நிறுவனங்களில் பணிபுரிய வெளிநாட்டில் இருந்து அழைப்புகள் வரலாம். குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவீர்கள். உத்தியோகத்தைப் பொறுத்தவரை, நீங்கள் கேட்ட சலுகைகளை உயர் அதிகாரிகள் கொடுப்பர்.
நீங்கள் நினைத்த இடத்திற்கு கூட மாறுதல் கிடைக்கலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு வேலையாட்களால் வந்த பிரச்சினை அகலும். கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கலைஞர்களுக்கு நினைத்தது நிறைவேறும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வேலைக்கு விண்ணப்பித்த பெண் களுக்கு வேலைவாய்ப்பு தேடி வரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
மார்ச்: 18, 19, 20, 23, 30, 31, ஏப்ரல்: 4, 6,13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கருநீலம்.