search icon
என் மலர்tooltip icon

    துலாம்

    வைகாசி மாத ராசிபலன்

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரித்து உங்கள் ராசியை பார்க்கிறார். எனவே புத்துணர்ச்சியோடு செயல்பட்டு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அஷ்டமத்தில் குரு சஞ்சரிப்பதால் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. அரை குறையாக சில பணிகள் நிற்கும். 'கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்கலாமா?' என்று யோசிப்பீர்கள். அஷ்டமத்து குருவிற்கு பரிகாரமாக, வியாழக்கிழமை தோறும் குரு கவசம் பாடி குரு பகவானை வழி படுவது நல்லது.

    ரிஷப - சுக்ரன்

    வைகாசி 7-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், அஷ்டமாதிபதியாகவும் விளங்கும் சுக்ரன், 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் வேளையில் சுபச்செலவுகள் அதிகரிக்கும். பெண் வழி பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். பெண் பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்கள் வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும். உத்தியோகத்தில் இதுவரை கேட்டும் கிடைக்காத சலுகைகள் இப் பொழுது கிடைக்கும். பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பணியில் சேர வாய்ப்பு உண்டு.

    ரிஷப - புதன்

    வைகாசி 11-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் பொழுது எதிர்பாராத நல்ல திருப்பங்கள் ஏற்படும். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பார்கள். அந்த அடிப்படையில் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டி, மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்துவீர்கள். பழைய ஆபரணங்களைக் கொடுத்து விட்டு, புதிய ஆபரணங்களை வாங்கி மகிழும் நேரம் இது. வாகன யோகமும் உண்டு. பயணங்கள் பலன் தருவதாக அமையும்.

    மேஷ - செவ்வாய்

    வைகாசி 18-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகும். தைரியகாரகன் செவ்வாய் இப்பொழுது உங்கள் ராசியைப் பார்ப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இடம், பூமி வாங்குவதில் இருந்த இடையூறுகள் அகலும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப்போட்ட இடத்தை, இப்பொழுது அதிக விலைக்கு விற்பனை செய்வீர்கள். அதன் மூலம் வரும் லாபத்தை கொண்டு கடன் சுமையை குறைத்துக்கொள்வீர்கள். வீடு கட்டும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

    மிதுன - புதன்

    வைகாசி 27-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது ஒரு பொன்னான நேரமாகும். தொட்டது துலங்கும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தந்தை வழி உறவில் இருந்த விரிசல் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட சலுகைகள் இப்பொழுது கிடைக்கும். வெளிநாட்டில் பணிபுரிய எடுத்த முயற்சி கைகூடும்.

    மிதுன - சுக்ரன்

    வைகாசி 31-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, நினைத்தது நிறைவேறும். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும். பண நெருக்கடி அகலும். வருமானம் உயர நண்பர்கள் வழிகாட்டுவர். வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்பு உருவாகும். கல்யாணக் கனவுகள் நனவாகும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மனக்குழப்பம் அகலும். மாற்றங்கள் திருப்தி தரும்.

    வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு அபிவிருத்தி உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகார வர்க்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு செல்வாக்கு உயரும். மாணவ - மாணவி களுக்கு கல்வி முன்னேற்றம் ஏற்படும். பெண்களுக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- மே: 14, 15, 23, 24, 29, 30, ஜூன்: 8, 9, 13, 14.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    ×