search icon
என் மலர்tooltip icon

    துலாம் - வார பலன்கள்

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    24.7.2023 முதல் 30.7.2023 வரை

    நல்ல விசயங்கள் தாமாகவே நடக்கும் வாரம்.லாப ஸ்தானத்தில் புதன், செவ்வாய், சுக்ரன் சேர்க்கை குரு, சனி பார்வையில் வார ஆரம்பத்தில் பல நல்ல விஷயங்கள் நிறைவேற வாய்ப்புள்ளது. பண நெருக்கடி காலத்தில் விலகிய உறவுகளும், உடன் பிறப்புகளும், நண்பர்களும் இப்போது நலம் விசாரிப்பார்கள். சமூகத்தில் நன்மதிப்பு பெறவும் தொழில் ரீதியான நல்ல முன்னேற்றம் பெறவும் சாதகமான வாரமாக இருக்கும்.

    ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நிலவிய அவஸ்தைகள் குறையும். கடனால் ஏற்பட்ட அவமானங்கள் குறையும். தொடர்ந்து வந்த பற்றாக்குறை பட்ஜெட் தீரும்.வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துணிவீர்கள். லாப அதிபதி சூரியன் ராகு கேதுவின் மையப்புள்ளியில் இருப்பதால் கொடுக்கல், வாங்கலில் நிதானம் தேவை.

    ஆண், பெண் எச்சரிக்கையாக பழக வேண்டும். உயர்கல்விக்கு விரும்பிய கல்லூரியில் அட்மிஷன் கிடைக்கும். திருமணத் தடை அகலும். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேற குடும்பம் துணையாக இருக்கும். ஆடிக் கூழ் தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    17.7.2023 முதல் 23.7.2023 வரை

    பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் 2,7-ம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை பெறுவதால் நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும். குடும்பத்தார் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும். உங்களின் செயல்பாடுகள் சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையையும் ஏற்படுத்தும்.

    தொழில் தொடர்பாக திட்டமிட்ட அனைத்து செயல்பாடுகள் சிறப்பாக நிறைவேறும். படித்து முடித்தவர்கள் செல்லும் நேர்முகத் தேர்வில் வெற்றியும் மன நிறைவான வேலை கிடைக்கும். சிலருக்கு இடப் பெயர்ச்சி எண்ணம் மிகுதியாகும்.

    ஞாபக குறைவு ஏற்படலாம். முக்கிய ஆவணங்கள் இல்லாத சொத்திற்கு உரிய ஆவணங்கள் கிடைக்கும். வீடு மனை வாங்கும் வாய்ப்புகள் சாதகமாகும். உயர்ந்த வாகன வசதி அமையும். திருமணம், புத்திர பிராப்தத்தில் நிலவிய தடைகள் அகலும். தாய், தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். ஆடி வெள்ளிக்கிழமை மலர் மாலை அணிவித்து பெண் தெய்வங்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    10.7.2023 முதல் 16.7.2023

    தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரனும் தன அதிபதி செவ்வாயும்லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும். தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும். சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்பிற்காகவெளியேறலாம். புத்திர பாக்கியம் உண்டாகும்.

    பங்கு சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். சிலருக்கு நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும். சம்பந்திகள் சண்டை முடிவிற்கு வரும். வெவ்வேறுஊர்களில்பிரிந்துவாழ்ந்ததம்பதிகள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும்நல்ல நேரம். புதிய சொத்துக்கள், உயர்ரக வாகனங்கள் சேரும்.

    13.7.2023அன்று 1.58 காலை முதல் 15.7.2023 இரவு 11.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதை அமைதியாக வைத்திருக்க முயற்சிக்கவும். தேவையற்ற கற்பனை, சிந்தனைகளை தவிர்க்கவும்.ஆடி வெள்ளிக்கிழமை அஷ்டலட்சுமிகளையும் வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    3.7.2023 முதல் 9.7.2023 வரை

    வாழ்வில் புதிய மாற்றம் ஏற்படப் போகும் வாரம். 2, 7-ம் அதிபதி செவ்வாய் லாப ஸ்தானம் சென்று குரு பார்வை பெற்று தன் வீட்டைத் தானே பார்க்கி றார். குடும்பத்தில் இருந்த பிரச்சிினைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியத்துடன் மன வலிமையுடன் செயல்படுவீர்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும்.

    பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடைபாதை வியாபாரிகளின் லாப விகிதம் அதிகமாக இருக்கும். போட்டி, பொறாமை யால் கண் திருஷ்டி உண்டாகும். மறு திருமண முயற்சி சாதகமாகும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.

    கண் சிகிச்சை வெற்றி தரும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். சொந்த வீட்டு ஆசை நிறைவேறும். பண்டிகைகள், விழாக்களில் கலந்து கொண்டு ஆனந்த மடைவீர்கள். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது நன்மை தரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    26.6.2023 முதல் 2.7.2023 வரை

    எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும் வாரம். 2,7-ம் அதிபதி செவ்வாய் லாப ஸ்தானம் சென்று 5-ம் அதிபதி சனியின் பார்வையில் செல்வதால் குடும்பத்திலும் வெளியிலும் நிறைய நன்மைகள் நடைபெறும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய நல்ல அரசாங்க வேலை கிடைக்கும், அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

    எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத நோயில் இருந்து விடுபட குரு பகவான் அருள்புரிவார். கணவரின் ஆரோக்கிய கேட்டால் வருந்திய பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தடைகள் வந்தாலும் ராசியை குரு பார்ப்பதால் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார்.

    காதலால் அவமானம் உண்டாகும். மாணவர்கள் கல்வியின் பொருட்டு வெளிநாடு செல்லலாம். சிலர் பிழைப்பிற்காக வெளிநாடு செல்லலாம். சிலருக்கு அதிர்ஷ்ட பொருள் வரவு ஏற்படும்.சப்த மாதர்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    19.6.2023 முதல் 25.6.2023 வரை

    சகாயங்கள் மிகுந்த வாரம். லாப அதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை, தைரியம், துணிச்சல் மேலோங்கும். தந்தை வழி உற்றார், உறவினர்களால் ஆதாயம் உண்டு.சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்..பொதுக் காரியங்களில் ஈடுபடுவார்கள். அரசியல் ஆர்வம், ஆதாயம் உண்டு.

    புதிய முயற்சியில் ஈடுபட்டால் நல்ல அனு கூலமான பலன்களையும் ஆதாயங்களையும் பெற முடியும். வீடு கட்ட, அல்லது புதிய தொழில் கடன் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாகும். தொழில் முன்னேற்றமும் லாபமும் மகிழ்சியைத் தரும். வாழ்க்கைத் துணை பற்றிய எதிர்பார்ப்பை குறைத்தால் திருமண வாய்ப்பு உடனே தேடி வரும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

    ஆன்மீக நாட்டம் மத நம்பிக்கை அதிகரிக்கும். மனைவி, மக்கள், பேரன், பேத்திகள், சொத்து சுகம் என அனைத்து பாக்கிய பலன்க ளையும் அடைவீர்கள். இனம் புரியாத நோயின் தன்மை தாக்கம் சிகிச்சையில் சீராகும். சனிக்கி ழமை ஸ்ரீ வீரபத்திரரை வணங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    12.6.2023 முதல் 18.6.2023 வரை

    சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும் வாரம். லாபஅதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானம் செல்வதால் புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.தொழில்மேன்மை, காரிய சித்தி, முன்னேற்றம் போன்ற சுப பலன்கள் நடக்கும்.

    பெண் குழந்தைகளுக்கு காதணி விழா, பூப் புனித நீராட்டு விழா,போன்ற சுபச் செலவு ஏற்படலாம். பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு பெயர், புகழ் பரவும்.தாய் மாமன் உறவுகளால் அனுகூலம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையும் காலம் இது. பிள்ளைகள் உயர் கல்விக்காக வெளி மாநிலம், வெளிநாடு செல்ல நேரும்.

    15.6.2023 இரவு 8.23 முதல் 18.6.2023 காலை 5.12 வரை சந்திராஷ்டமம் இருப்பதால்கிடைக்கும் சந்தர்ப்பத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகலாம். துர்க்கையை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    5.6.2023 முதல் 11.6.2023 வரை

    திருப்திகரமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோகத்தில் பொறுமை, கடமை உணர்வு அதிகரிக்கும். தொழில் விரிவாக்கத் திட்டத்திற்கு அரசு மற்றும் வங்கி உதவிகள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வழி பிறக்கும். உபரி வருமானங்கள் அதிகம் கிடைக்கும்.

    ஐஸ்வர்யம் பெருகும். சிலருக்கு பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். பூர்வீகச் சொத்து தொடர்பாக சித்தப்பாவுடன் பேச்சு வார்த்தை நடக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு கருப்பை நோய் பாதிப்பு குறையும்.அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. மாணவர்களுக்கு உயர் கல்வி முயற்சி வெற்றி தரும்.

    உடன் பிறப்புகளால் நன்மைகள் உண்டாகும்.சனி, செவ்வாய் சம்பந்தம் 5ம்மிடத்திற்கு இருப்பதால் செயற்கை முறை கருத்தரிப்பை ஒத்தி வைக்கலாம். திருமணத் தடை அகலும். பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவை சேரும். பாக்கிய பலன்களை அதிகரிக்க மகாலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    29.5.2023 முதல் 4.6.2023 வரை

    தொட்டதெல்லாம் வெற்றி பெறும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் 2,7-ம் அதிபதி செவ்வாயுடன் தொழில் ஸ்தானத்தில் சேர்க்கை. ராசிக்கு குரு, பாக்கியாதிபதி புதன் பார்வை என பல்வேறு கிரக நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இதுவரை உங்களுக்கு எது கிடைக்கவில்லை என்று ஏங்கிக்கொண்டு இருந்தீர்களோ அவை யெல்லாம் உங்களுக்கு கிடைக்கும்.

    சுய தொழில் செய்பவர்களுக்கு இக் காலம் வசந்த காலமாக மாறும். லாபம் பல வழிகளிலும் வரும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கேட்ட உதவி கிடைத்து முன்னேற்றம் காண்பீர்கள். வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். வசதியும், அந்தஸ்தும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.

    குடும்பத்திலும் நட்பு வட்டாரத்திலும் சுமூகமான நிலை நீடிக்கும். திருமணத் தடை அகலும். பெண்களுக்கு புகுந்த வீட்டாருடன் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறையும். பவுர்ணமியன்று குபேரன் வழிபாடு நல்ல மாற்றத்தை தரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    22.5.2023 முதல் 28.5.2023 வரை

    மகிழ்ச்சியான வாரம்.ராசி அதிபதி சுக்ரன் பாக்கிய ஸ்தானம் செல்வதால் ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.மகான்களின் தரிசனம் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்.பேரன், பேத்தி பிறப்பார்கள். தந்தையின் வெகு நாள் ஆசை, லட்சியத்தை நிறைவு செய்வீர்கள்.உங்கள் மருமகன் தேவையான நேரத்தில் கை கொடுத்து உதவுவார். வேலை இழந்த வாழ்க்கைத் துணைக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும்.

    மாணவர்களுக்கு உயர் கல்விக்கான போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும். உடன்பிறப்புகளிடம் இருந்து எதிர்பார்க்கும் நல்ல தகவல்கள் கிடைக்கும்.திரைக்கலைஞர் களுக்கு புதிய ஒப்பந்தங்கள் மூலம் பணமும், புகழும் கிடைக்கும். லாப ஸ்தான அதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழிலை மிக நேர்த்தியாக நடத்த வேண்டும். அலட்சியம் கூடாது.

    சிலருக்கு மறுமணம் ஏற்படும். சிலர் வீட்டு கடன் பெற்று வீடு வாங்கலாம். கணவன்-மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். வெள் ளிக்கிழமை அஷ்ட லட்சுமிகளையும் வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    15.5.2023 முதல் 21.5.2023 வரை

    புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். குடும்பத்தில் அமைதி பிறக்கும். உங்கள் ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

    தொழில் வளம் சிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல்கள் கிடைக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரயாதிபதி புதன் குரு, ராகுவுடன் இணைந்து ராசியைப் பார்ப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.

    திருமணம், குழந்தைப் பேறு கைகூடும். 19.5.2023 பகல் 1.35 மணி முதல் 21.5.2023 இரவு 9.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.அமாவாசையன்று வயதானவர்களின் தேவையறிந்து உதவவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    8.5.2023 முதல் 14.5.2023 வரை

    பாக்கிய பலன்களை அடையும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் பாக்கிய ஸ்தானம் செல்வதால் தோற்றத்தில் மிடுக்கும், செயலில் வேகமும் அதிகரிக்கும். எதையோ இழந்தது போல் வருத்தப்பட்டுக் கொண்டு இருந்த உங்கள் வாழ்வில் புது வசந்தம் வீசப் போகிறது. உங்களை வாட்டி வதைத்த நோய் தாக்கம் குறையும். வியாபாரத்தில் நிலவி வந்த சங்கடங்கள் விலகி லாபம் கூடும்.

    உத்தியோகஸ்தர்கள் பாராட்டப்படு வார்கள். அரசாங்க வேலைக்கு விண்ணப்பிக்க உகந்த காலம்.உங்களின் புகழ், கவுரவம் உயரும். புதிய நட்புகள் கிடைக்கும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும்.பணவரவு அதிகரிக்கும்.உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உத்தியோகம், வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரும்.

    திருமணத் தடை அகலும். பொன், பொருள், புதிய வீடு, நிலம் வாங்கும் யோகம் உள்ளது.சங்கடஹர சதுர்த்தியன்று பால் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×