search icon
என் மலர்tooltip icon

    துலாம் - வார பலன்கள்

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    1.5.2023 முதல் 7.5.2023 வரை

    மன நிறைவும், நிம்மதியும் உண்டாகும் வாரம். லாப அதிபதி சூரியன் உச்சம் பெற்று தனக்காரகன் குருவுடன் இணைந்து ராசியை பார்ப்பதால் புதிய முயற்சிகள், சிந்தனைகள் வெற்றி தரும்.பணம் பல வழிகளில் வந்து சேரும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். வராக்கடன்கள் வசூலாகும். வீடு, நிலம், வாகனம் வாங்குதல், கால்நடை வாங்குதல் ஆகியவை ஏற்படும்.

    பதவி உயர்வு, உயர் அதிகாரிகளிடம் நற்பெயர் பெறுதல், மதிப்பு மரியாதை, கவுரவம் உயர்தல் போன்ற நல்ல பலன்கள் நடக்கும். எதிரிகளை வென்று ஏற்றமடைவீர்கள். வேடிக்கை, விநோதங்கள், பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு சென்று மனம் நிம்மதியை அதிகரிப்பீர்கள். பங்காளித் தொல்லைகள் குறையும்.திருமணத் தடை விலகி திருமணம் நடக்கும்.

    சிலர் பயன் படாத சொத்துக்களை விற்று லாபம் பார்க்கலாம். அதை தொழிலில் மறுமுதலீடு செய்யலாம். அல்லது பங்கு பத்திரமாக மாற்றலாம். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கையுடன் கடன்களும், நோய்களும் குறைந்து ஆனந்தம் பெருகும்.பவுர்ணமியன்று தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    24.4.2023 முதல் 30.4.2023 வரை

    எதிர்காலம் பற்றிய பயம் விலகும் வாரம். 7-ல் நிற்கும் குரு ராசியை பார்ப்பதால் தன்னம்பிக்கை தைரியம் அதிகமாகும். மனதில் எண்ணிய திட்டங்களை செயல்படுத்த ஏற்ற நேரம். உங்கள் செயல்பாடுகள் மூலம் நல்ல பெயர் எடுப்பீர்கள். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தொழில் தொடர்பான வர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும்.

    ஏழாமிடம், ராசியில் நிற்கும் ராகு கேதுக்களால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். குழந்தையில்லாத் தம்பதிகள் டெஸ்ட் டியூப் மூலமாக கருத்தரிக்க முயற்சி எடுப்பதற்கு மிகச் சிறந்த காலமாகும். 11-ம் அதிபதி சூரியன் 7-ல் உச்சம் பெறுவதால் மறுதிருமண முயற்சி சித்திக்கும்.வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றம் நடக்கும். புதிய வீடு கட்ட, வாகனம் வாங்க கடன் உதவி பெறலாம்.

    தந்தை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கண் திருஷ்டி, செய்வினை, ஆரோக்கிய கேடு, வேலையின்மை போன்ற பாதிப்புகள் விலகும். 24.4.2023 மதியம் 1.13 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகளை மதியத்திற்கு மேல் செய்யவும். பதஞ்சலி முனிவரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    17.4.2023 முதல் 23.4.2023 வரை

    சுமாரான வாரம். லாபஅதிபதி சூரியன் களத்திர ஸ்தானத்தில் ராகுவுடன் இணைவதால் வாழ்க்கை துணைக்கு பதவி உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். கொடுக்கல் வாங்கல் சிரமமின்றி நடைபெறும். ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும். ராசிக்கு ஏழாமிடத்தில் கிரகணம் சம்பவிப்பதால் திருமண முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. வேலையின்மையால் வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் திரும்பலாம். வார இறுதியில் குருபகவான் ஏழாமிடத்திற்கு வந்து ராசியைப் பார்ப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்று விடும்.

    22.4.2023 அதிகாலை 5 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிந்திக்கும் திறன் குறையும். அவசரமின்றி நிதானமாக செயல்படவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கிரகணத்தன்று ஆதரவில்லாத குழந்தைகளின் கல்விக்கு உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    வார ராசிப்பலன்

    10.4.2023 முதல் 16.4.2023 வரை

    விபரீத ராஜயோகமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் மதிப்பு மிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் லாபம் தரும். கடன் விவகாரங்களில் அனுகூல நிலை ஏற்படும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்றுத்தரும்,பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். இழந்த பதவி தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.

    பெண்களுக்கு சிறப்பான உயர்வான காலம். இன்னும் சில நாட்களில் ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் நன்மைகள் மேலும் கூடும். சிலருக்கு வீடு அல்லது வேலையில் மாற்றம் உண்டாகும். ஆயுள் ஆரோக்கியம் தொடர்பான பய உணர்வு அகலும். எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழகினால் அவமானங்களை தவிர்க்க முடியும். சொத்துகள் வாங்கும் முயற்சி வெற்றி தரும். திருமண முயற்சி பலிதமாகும். தினமும் மகாலட்சுமியை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    3.4.2023 முதல் 9.4.2023 வரை

    எதிர்மறை சிந்தனைகள் விலகும் வாரம். 2, 7-ம் அதிபதி செவ்வாயும், 9, 12-ம் அதிபதி புதனும் பரிவர்த்தனை பெறுவதால் திருமணம், குழந்தை பாக்கியம், வீடு வாகன யோகம், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு போன்ற எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும். பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும்.

    சம்பள பாக்கி வசூலாகும். சேவை மனப்பான்மை மிகும். ராசி அதிபதி சுக்ரன் எட்டில் ஆட்சி பலம் பெறுவ தால் ஒரு சிலருக்கு இன்சூரன்ஸ், பாலிசி முதிர்வு தொகை, உயில் சொத்து கிடைக்கும். வம்பு, வழக்கு அவமானங்கள், ஆரோக்கிய குறைபாடு விலகி எல்லாவற்றிலும் சாதகமான சூழ்நிலை நிலவும்.

    தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறை யான பத்திரப் பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். வரும் குருப் பெயர்ச்சி துலாம் ராசி மாணவர்களுக்கு நல்ல எதிர் காலத்தை உருவாக்கித்தரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு ஏற்ற காலம். பங்குனி உத்திரத்தன்று சிவனுக்கு விபூதி அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    27.3.2023 முதல் 2.4.2023 வரை

    மாற்றங்களால் மனம் மகிழும் வாரம். ராசிக்கு 6-ல் குரு ஆட்சி பலம் பெற்றதாலும் ராசியில் கேது, 7-ல் ராகு நின்றதாலும் கடந்த சில மாதங்களாக அனுபவித்து வந்து கடன், எதிரி, நோய் தொல்லை, விரயம்,கூட்டுத் தொழில்,நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும் காலம் வந்து விட்டது.

    குரு வெகு விரைவில் ஏழாமிடம் வந்து ராசியைப் பார்க்கிறார்.குரு, ராகுவுடன் இணைந்து ராஜயோகத்தை தரப்போ வதால் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும்.அதன் பலன் தற்போதே தெரியத் துவங்கி விடும். வாழவும் முடியாமல் மீளவும் முடியாமல் தவித்த நிலை மறையும்.

    உங்கள் முயற்சி, எண்ணங்கள் பலிதமாகும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் என நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையத் துவங்கும்.

    28.3.2023 அன்று அதிகாலை 4.25 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தம்பதிகள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.தினமும் ராகு காலத்தில் துர்க்கை அல்லது காளியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    20.3.2023 முதல் 26.3.2023 வரை

    உழைப்பின் பயனை அடையும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ராகுவுடன் இணைந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் நிலையான வருமா னத்திற்கு வழி பிறக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார். புதியதாக தொழில் துவங்குபவர்கள் முதலீடு அதிகம் இல்லாத சுய தொழில் செய்யலாம்.

    திருமணத்திற்கு வரன் தேடுபவர்களுக்கு நல்ல அழகான வாழ்க்கைத் துணை அமையும். சில ருக்கு புதுப்புது நண்பர்கள் கிடைத்துக் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கைத் துணைக்கு வேலை மாற்றம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் அன்பு அனுசரனையும் கிடைக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் பொழுது பத்திரங்களை சரிபார்ப்பது நல்லது. மாணவர்களுக்கு உயர் கல்வி பற்றி தீர்மானிப்பதில் குழப்பம் அதிகரிக்கும்.

    25.3.2023 இரவு 7.25க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் மனதின் வேகத்திற்கு ஏற்றவாறு செயல்களில் வேகம் இருக்காது. தேவையற்ற யோசனைகளால் கவலைகள் அதிகமாகும். ஸ்ரீராமரையும் சீதா தேவியையும் வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    13.3.2023 முதல் 19.3.2023வரை

    புதிய வாய்ப்புகள் வீடு தேடி வரும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ஏழாமிடத்தில் இருந்து தன் வீட்டைத் தானே பார்ப்பதால் நண்பர்கள், வாழ்க்கைத் துணை மூலம் உதவிகள் கிடைக்கும். வாழ்க்கையில் பிடிப்பும், உற்சாகமும் அதிகரிக்கும். சிந்தனை திறன் அதிகரிக்கும்.

    உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சுமூக நிலை ஏற்படும். தொழில் கடன் மற்றும் வீட்டு வசதிக்கடன் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு கவுரவப் பேராட்டத்தால் உடன் பிறந்தவர்களுடன் பகை உருவாகும். 2,7-ம் அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானம் செல்வதால் திருமணத் தடை அகலும்.

    பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடக்கும் யோகம் உள்ளது. சிலர் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வார்கள். சிலர் ஒப்பந்தப் பணி முடிந்து தாயகம் திரும்புவார்கள். கணவன், மனைவி உறவில் நிலவிய பனிப்போர் விலகும். கை விட்டுப் போன பொருட்கள் யாவும் மீண்டும் கிடைக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    6.3.2023 முதல் 12.3.2023 வரை

    தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் உச்சம் பெற்று உப ஜெய ஸ்தான அதிபதி குருவுடன் சேருவதால் விபரீத ராஜ யோகத்தை அனுபவிப்பீர்கள். உழைக்காத வருமானம் உண்டு. தொட்டது துலங்கும். ஆழ்மன சிந்தனை பெருகும்.

    ஒரு இடத்தில் நிலையாக இருக்காமல் சுறுசுறுப்பாக இயங்கி புதிய முயற்சி செய்து கொண்டே இருப்பீர்கள். பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. குல தெய்வ அனுகிரகம் உண்டாகும். பிள்ளைகளால் பெற்றோரும், பெற்றோர்களால் பிள்ளைகளும் பயன் பெறுவார்கள்.வழக்குகளில் வெற்றி உண்டாகும்.ஏப்ரல் 22, 2023 குருப் பெயர்ச்சிக்கு முன்பு வேலையில் எதிர்பார்த்த வேலை மாற்றம் இடப்பெயர்ச்சி கிடைத்துவிடும்.வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமா கவே நடக்கும்.

    6,8ம்மிட அதிபதிகள் வலுப்பதால் சிலருக்கு கடன் தொல்லை சர்ஜரி, வம்பு, வழக்கு வரலாம். சுய தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையாக நிதானத்துடன் இருக்க வேண்டும். மாசிமகத்தன்று பச்சைக் கற்பூரம் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    27.2.2023 முதல் 5.3.2023 வரை

    மன மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நிகழும் வாரம். 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி என மூன்று கிரகச் சேர்க்கை இருப்பதால் புண்ணிய பலன்கள் அதிகரிக்கும். உயர்ரக வாகன வசதி அமையும். கடன் தீர்க்க சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள்.மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். குழந்தை பேறு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது. வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

    தொழிலில் செய்த முதலீடு பல மடங்கு லாபத்தைத் தரும். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் வாக்குவன்மையால் நன்மைகள் ஏற்படும். கோட்சார செவ்வாயால் தடைபட்ட திருமணம் கைகூடி வரும். ஆட்சி பலம் பெற்ற ஆறாம் அதிபதி குருவுடன் உச்சம் பெற்ற ராசி அதிபதி சுக்ரன் கூடுவதால் விண்ணப்பித்த தொழில், வீட்டு, வாகன கடன் இந்த வாரத்திற்குள் கிடைத்து விடும்.

    28.2. 2023 இரவு 8.32 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்வதைத் தவிர்க்கவும். விநாகயரை அருகம்புல் சாற்றி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    20.2.2023 முதல் 26.2.2023 வரை

    தடை, தாமதங்கள் விலகும் வாரம். ராசி மற்றும் 8-ம் அதிபதி சுக்ரன் 3,6-ம் அதிபதி குருவுடன் 6-ம் இடத்தில் உச்சம் பெறுவதால் சிலர் அரசு வேலை கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டில் வேலை கிடைக்கும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். விண்ணப்பித்த வீடு, வாகன கடன் கிடைக்கும்.

    சகோதர, சகோதரிகளின் பணத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிர்பந்தம் உண்டாகும். பிள்ளைகளின் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். லாப ஸ்தானத்திற்கு செவ்வாய், சனி பார்வை இருப்பதால் ஏலத்திற்கு போக இருந்த பூர்வீகச் சொத்து சித்தப்பாவின் முயற்சியால் காப் பாற்றப்படும். உடல் பாதிப்புகள் அகலும். இளம் பெண்களுக்கு கருவுறுதல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. திரைக் கலைஞர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தேடி வரும். சில தம்பதிகளிடம் அவ்வப்போது கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.

    26.2.2023 காலை 10.15-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வேலைப்பளு அதிகமாகும். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    துலாம்

    இந்த வார ராசிப்பலன்

    13.2.2023 முதல் 19.2.2023 வரை

    விரும்பிய கடன் தொகை கிடைக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் உச்சமடைந்து ஆட்சி பெற்ற 3, 6-ம் அதிபதி குருவுடன் இணைவதால் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் வலுப்பெறுகிறது.எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவசியமற்ற வம்பு, வழக்கை தவிர்த்தல் நலம்.

    சுக்ரன் ஆறாமிடத்தை கடக்கும் வரை கடன், ஜாமீன் போன்ற விசயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் எந்த விதமான கடனுக்கு முயற்சி செய்தாலும் நிச்சயம் கைகூடும். குறிப்பாகஎதிர்பார்த்த தொழில் விரிவாக்க கடன், வீட்டு கடன் கிடைக்கும். அடமானத்தில் இருக்கும் வீட்டை, நகையை மீட்க தேவையான பண உதவி கிடைக்கும்.

    தொழில், உத்தியோ கத்திற்காக அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். அவரவரின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த அரசு, தனியார், வெளிநாட்டு வேலை கிடைக்கும்.வேலைப்பளு அதிகமாகும். சிவராத்திரியன்று பச்சரிசி மாவினால் சிவனுக்கு அபிசேகம் செய்து வழிபட கடன் தொல்லை சீராகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×