என் மலர்
துலாம் - வார பலன்கள்
துலாம்
இந்த வார ராசிப்பலன்
13.2.2023 முதல் 19.2.2023 வரை
விரும்பிய கடன் தொகை கிடைக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் உச்சமடைந்து ஆட்சி பெற்ற 3, 6-ம் அதிபதி குருவுடன் இணைவதால் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் வலுப்பெறுகிறது.எனவே ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவசியமற்ற வம்பு, வழக்கை தவிர்த்தல் நலம்.
சுக்ரன் ஆறாமிடத்தை கடக்கும் வரை கடன், ஜாமீன் போன்ற விசயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். இந்த காலகட்டத்தில் எந்த விதமான கடனுக்கு முயற்சி செய்தாலும் நிச்சயம் கைகூடும். குறிப்பாகஎதிர்பார்த்த தொழில் விரிவாக்க கடன், வீட்டு கடன் கிடைக்கும். அடமானத்தில் இருக்கும் வீட்டை, நகையை மீட்க தேவையான பண உதவி கிடைக்கும்.
தொழில், உத்தியோ கத்திற்காக அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். அவரவரின் தகுதிக்கும் திறமைக்கும் தகுந்த அரசு, தனியார், வெளிநாட்டு வேலை கிடைக்கும்.வேலைப்பளு அதிகமாகும். சிவராத்திரியன்று பச்சரிசி மாவினால் சிவனுக்கு அபிசேகம் செய்து வழிபட கடன் தொல்லை சீராகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
வாழ்வில் வசந்தம் உலா வரும் வாரம். ராசி அதிபதி சுக்ரனும் ஐந்தாம் அதிபதி சனியும் பஞ்சம ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் பல விதமான மாற்றங்கள், ஏற்றங்கள் ஏற்படும். நல்ல வேகமும், விவேகமும் உண்டாகும். பணவரவில் இருந்த தடை, தாமதம் சீராகும். பணப் பற்றாக்குறைகள் அகலும். எவ்வளவு தாழ்ந்த நிலையில் இருப்பவருக்கும் பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். திருமண வயதில் உள்ள பிள்ளைகளுக்கு சீரும் சிறப்புமாக திருமணம் செய்து முடிப்பீர்கள். மூத்த சகோதரருடன் நல்லிணக்கம் உண்டாகும்.
வட்டிக்கு வட்டி கட்டி மீள முடியாத கடன் பிரச்சினைகள் கூட தீரும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு பூர்வீகச் சொத்து விற்பனை முலம் பெரும் பணம் கிடைக்கும். அடமானத்தில் உள்ள சொத்துக்கள் மீண்டு வரும். பாகப் பிரிவினையில் இருந்த சட்ட சிக்கல் தீரும். ஆரோக்கிய குறை பாடுகள் அகலும். குலதெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். சுப பலன்களை அதிகரிக்க சனிக் கிழமை காளியை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
மேன்மையான வாரம். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகளும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். வீடு, தோட்டம் என அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மனதை மகிழ்விக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். பெண்களுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும்.
சிலருக்கு தொழில் ரீதியாகவோ, வேறு காரணத்திற்காகவோ வெளியூர், வெளிநாடு செல்ல நேரும். 2.1 .2023 இரவு 8.50 மணி முதல் 5.1.2023 அன்று காலை 8.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நேரத்திற்கு சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்லது. ஏகாதசியன்று திருமஞ்சன அபிசேகம் செய்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
23.1.2023 முதல் 29.1.2023 வரை
வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சனியுடன் சேர்க்கை பெறுவதால் அன்றாட செயல்களில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குல தெய்வ அனுகிரகத்தால் தடுமாற்றங்கள் அகன்று எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். உயர்கல்வி முயற்சி வெற்றி தரும். பெரிய மனிதர்களின் ஆதரவில் கவுரவப் பதவி கிடைக்கும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தின் மூலம் சமுதாய அங்கீகாரம் உயரும். சித்தப்பா மற்றும் மூத்த சகோதரருடன் பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கும். இந்த வாரத்தில் வீட்டுக்கடன், தொழில் விரிவாக்க கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏழில் ராகு இருப்பதால் திருமண வரன் பார்ப்பதில் கவனம் மற்றும் பொறுமை தேவை. சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம். நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அன்னபூரணியை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
23.1.2023 முதல் 29.1.2023 வரை
வளர்ச்சிக்கான அறிகுறிகள் தென்படும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சனியுடன் சேர்க்கை பெறுவதால் அன்றாட செயல்களில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். குல தெய்வ அனுகிரகத்தால் தடுமாற்றங்கள் அகன்று எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்திர பிராப்த்தம் உண்டாகும். உயர்கல்வி முயற்சி வெற்றி தரும். பெரிய மனிதர்களின் ஆதரவில் கவுரவப் பதவி கிடைக்கும்.
தொழில் மற்றும் உத்தியோகத்தின் மூலம் சமுதாய அங்கீகாரம் உயரும். சித்தப்பா மற்றும் மூத்த சகோதரருடன் பூர்வீக சொத்து தொடர்பான பேச்சு வார்த்தை நடக்கும். இந்த வாரத்தில் வீட்டுக்கடன், தொழில் விரிவாக்க கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏழில் ராகு இருப்பதால் திருமண வரன் பார்ப்பதில் கவனம் மற்றும் பொறுமை தேவை. சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம். நிரந்தர வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அன்னபூரணியை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
16.1.2023 முதல் 22.1.2023 வரை
திடீர் திருப்பங்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெற்ற 5-ம் அதிபதி சனியுடன் பஞ்சம ஸ்தானத்தில் சேர்வதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது. உங்கள் குடும்ப, குல விவகாரங்களில் தலையிட்டவர்கள் தாமாக விலகுவார்கள். இனிமை தரும் இடமாற் றங்கள் ஏற்படும்.
குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீகத்தை விட்டு வெளியேறிய சிலர் மீண்டும் சொந்த மண்ணில் குடியேறும் வாய்ப்பு உள்ளது. குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். ஆன்மிகம் சம்பந்தமான சுற்றுப் பயணம் செய்வீர்கள். புனித தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம், தொழிலில் இருந்த மந்த நிலை மாறும்.
பெரிய மனிதர்களின் ஆதரவோடு புதிய தொழில் துவங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. இழந்த சேமிப்புகளை ஈடுகட்டுவீர்கள். பிள்ளைகளுக்கு சுப நிகழ்வு செய்து மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையோடு ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிதம்பரம் நடராஜரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
9.1.2023 முதல் 15.1.2023 வரை
துணிவும், தன்னம்பிக்கையும் கூடும் வாரம்.ராசி மற்றும் 8-ம் அதிபதி சுக்ரன் கேந்திராதிபதி, திரிகோணாதிபதியாகிய சனியுடன் கூடுவதால் புதிய திருப்பங்கள் ஏற்படும்.பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதால் இழுபறியாக இருந்த முயற்சிகள் இப்பொழுது பலிதமாகும்.திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் அகலும். உடலும், மனமும் பொலிவு பெறும். பிள்ளைகளால் நன்மையும், பெருமையும் உண்டாகும்.
அவர்களின் எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும். குடும்பத் தேவையை நிறை வேற்றுவீர்கள். தொழிலில் அபிவிருத்தி உண்டா கும். பொருளாதார நிலை உயரும். கடன் சுமை குறையும். தந்தை மகன் உறவில் அன்பு மிளிரும். சிறு சிறு உடல் உபாதைகள் மருத்துவத்தில் சீராகும். கல்வி சம்பந்தமாக எடுக்கும் முயற்சிகள் கைகூடும். நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் எண்ணம் கைகூடும். திருமணம் நிச்சயமாகும் வாய்ப்பு பிரகா சமாக உள்ளது.
தற்காலிக பணியில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரமாகும். பொது வாழ்வில் இருப்ப வர்களுக்கு புதிய பதவிகள் பொறுப்புகள் கிடைக்க லாம். வெள்ளிக்கிழமை கன்னி மூல கணபதியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
2.1.2023 முதல் 8.1.2023 வரை
மேன்மையான வாரம். தன ஸ்தானத்தை குரு பார்ப்பதால் மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகளும் அதற்கான உதவிகளும் கிடைக்கும். வீடு, தோட்டம் என அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மனதை மகிழ்விக்கும்.
குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும். வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் மறுமுதலீடாக மாறும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். தொழிலில், உத்தியோகத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். பெண்களுக்கு புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். சிலருக்கு தொழில் ரீதியாகவோ, வேறு காரணத்திற்காகவோ வெளியூர், வெளிநாடு செல்ல நேரும்.
2.1 .2023 இரவு 8.50 மணி முதல் 5.1.2023 அன்று காலை 8.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி நேரத்திற்கு சாப்பிட்டு ஓய்வு எடுப்பது நல்லது. ஏகாதசியன்று திருமஞ்சன அபிசேகம் செய்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
19.12.2022 முதல் 25.12.2022 வரை
நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம்.2,7- ம் அதிபதி செவ்வாய் 8-ல் இருப்பதால் வாழ்க்கை துணையால் எதிர்பாராத அதிர்ஷ்ட பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும். தாய்மாமாவிடம் எதிர்பார்த்த காரியம் முடிய சற்று காலதாமதமாகும்.வியாபாரத்தில் பணியாளர்களால் சிறு சிறுபிரச்சினை ஏற்படக்கூடும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும்.
பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் உற்சாகத்தை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு உயரதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.
பெண்களுக்கு மாமியார் டார்ச்சர் குறையும். அரசின் இலவச தொகுப்பு வீடு கிடைக்கும்.
கல்விக்காக வெளியூர், வெளிநாடு மற்றும் விடுதியில் தங்கியிருந்த பிள்ளைகள் இல்லம் திரும்புவார்கள். தந்தை-மகன் உறவு பலப்படும். தம்பதிகளிடம் புரிதல் அதிகரிக்கும்.திருமண முயற்சி கைகூடும். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
12.12.2022 முதல் 18.12.2022 வரை
சகாயமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் பாக்கிய அதிபதி புதனுடன் சகாய ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் நல்ல ஞானம், சிந்தனைகள் பெருகும். பிறர் அறியா நுட்பங்களை அறிந்து தன்னிச்சையாக செயல்படும் தைரியம் உருவாகும்.பொருளாதார சுணக்கங்கள் விலகி அதிகப்படியான வருமானம் கிடைக்கும்.
சுகமான, சொகுசான ஆடம்பர பங்களா, வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. திருமணம், கல்வி, தொழில், உத்தியோகம், பிள்ளைப் பேறு போன்ற சுப செலவிற்காக உடன் பிறந்தவர்களுக்கு உதவ வேண்டிய சூழ்நிலை உள்ளது. காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சினைகள் அறுவை சிகிச்சையால் சீராகும். இடப்பெயர்ச்சி செய்ய வாய்ப்புகள் உள்ளது.
வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு கடன் பெற்று புதிய சுய தொழில் துவங்கலாம். திருமண முயற்சி நிறைவேறும். எடுத்தோம், கவிழ்த்தோம் என்றில்லாமல் நிதானமாக செயல்பட்டால் அதிக நன்மையடையலாம். வெள்ளிக் கிழமை அஷ்ட லட்சுமிகளை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
5.12.2022 முதல் 11.12.2022 வரை
லாபகரமான வாரம். லாப அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள்.பங்குதாரர் வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும்.
நல்ல பல கருத்துக்களைக் கேட்பதின் மூலமாக உங்களுக்கு ஞானத் தன்மை அதிகரிக்கும். பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள். 2,7-ம் அதிபதி செவ்வாய் 8-ல் வக்ர கதியில் இருப்பதால் திருமண முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. கணவன்- மனைவி இடையே சின்னச்சின்ன ஊடல்கள் வந்து போகும். எதிரிகளால் பிரச்சினைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும்.
6.12.2022 மதியம் 3.02 முதல் 9.12.2022 அன்று காலை 1.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவார்கள். உடன் இருப்பவர்களே குழி பறிக்கும் முயற்சியில் இறங்குவார்கள் என்பதால் யாரையும் நம்பக்கூடாது.மகா கணபதியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
துலாம்
இந்த வார ராசிப்பலன்
28.11.2022 முதல் 4.12.2022 வரை
கடனை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய வாரம். 2,7-ம் அதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் நின்று வாக்கு ஸ்தானத்தைப் பார்ப்பதால் வாக்கில் நிதானம் தேவை. குடும்ப உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும்.பேச்சாற்றலால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் பெரிய தொழில் முதலீடுகளில் விழிப்புணர்வு அவசியம்.
தொழில் பங்குதாரர்களால் வம்பு, வழக்கு உருவாகலாம். சில தம்பதிகள் தொழில் நிமித்தமாக அல்லது கருத்து வேறுபாட்டால் பிரியலாம். 3, 6-ம் அதிபதி குரு ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். வழக்குகள் சாதகமாகும்.
சிலருக்கு கடன் அல்லது பொருள் இழப்பு அல்லது சிறு நோய் தாக்கம் உண்டாகலாம். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். அனைத்தும் வெற்றி பெறும் நல்ல காலமாக இந்த வாரம் அமையும். தினமும் மாலை வேளையில் சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406