என் மலர்
துலாம்
வார ராசிப்பலன் 10.11.2024 முதல் 16.11.2024 வரை
முயற்சிகள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் 3, 6-ம் அதிபதி குருவுடன் பரிவர்த்தனை செய்வதால் 4,5-ம் அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தியாகிறார். வீரமும் விவேகமும் அதிகமாகும்.தவணை முறைத் திட்டத்தில் வீட்டு மனை அல்லது தோட்டம் வாங்குவீர்கள். இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வுத் தொகை கிடைக்கும். புதிய பாலிசி எடுப்பீர்கள். சிலர் புதிய நகைச் சீட்டு ஆரம்பிக்கலாம். தந்தைக்கு தொழில் முன்னேற்றம் உண்டு. உயர் ஆராய்ச்சி கல்வி படிப்பில் ஏற்பட்ட தடைகள் அகலும். பங்குச் சந்தை மூலம் உபரி வருமானம் கிடைக்கும். சனி சாதகமாக இருப்பதால் பங்குதாரர்கள் மற்றும் வேலையாட்கள் ஆதரவால் தொழிலில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க முடியும். பிள்ளைகளுக்கு பெற்றோர்களால் மன உளைச்சல் உண்டாகும். எனவே பெற்றோர்கள் தங்கள் பிரச்சனையை பிள்ளைகள் முன் விவாதிப்பதை தவிர்க்கவும்.
16.11.2024 அன்று காலை 3.16 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பமாகிறது. பேச்சில் நிதானம் தேவை. எல்லோரையும் அனுசரித்துச் சென்றால் நிம்மதி நீடிக்கும். எந்த காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன் உண்டாகும். பவுர்ணமி அன்னாபிசேகத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி, செல்: 98652 20406