என் மலர்
துலாம்
12.01.2025 முதல் 18.01.2025 வரை
சுப பலன்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சனியுடன் செவ்வாய் பார்வையில் சேர்க்கை பெறுகிறார். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கைவிட்டுப் போனது எல்லாம் தேடி வரும். பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம்.
தொழிலை இழுத்து மூடிவிட்டு வேறு வேலைக்கு சென்று விடலாமா? என்று நம்பிக்கை இழந்து இருந்தவர்கள் கூட வாழ்வில் செட்டிலாக்கி விடும் வகையில் மாற்றமான நல்ல சுப பலன்கள் உண்டாகும். சொத்து தொடர்பான வழக்குகள் முடிவிற்கு வரும். வீடு, நிலம், தோட்டம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது. விவசாயிகளுக்கு பழைய விவசாய கடன் அல்லது வட்டி தள்ளுபடியாகும்.
பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த அனைத்து சிக்கலும் தீரும். குடும்பத்துடன் உல்லாசமாக சுற்றுலா சென்று வருவீர்கள். அரசியல்வாதிகள் கருத்து ஒற்றுமை அதிகமாகும். ஆரோக்கியகேடு வைத்தியத்தில் சீராகும். அரசு உத்தியோகத்திற்கு பணி நியமன ஆணை கிடைக்கும். பவுர்ணமியன்று சத்திய நாராயணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406