என் மலர்
துலாம்
வார ராசிபலன் 17.11.2024 முதல் 23.11.2024 வரை
17.11.2024 முதல் 23.11.2024 வரை
புதிய முயற்சிகள் வெற்றி தரும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் சகாய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். தன ஸ்தானத்தில் சூரியன், புதன் சேர்க்கை .புதுப்புது நல்ல விஷயங்கள் நடக்கும். புது தொழில் துவங்குவது, புது வேலைக்கு செல்வது, புது வீட்டிற்கு செல்வது இதுபோல நிறைய நல்ல மாற்றங்கள் ஏற்படும். உற்சாகமாக இருப்பீர்கள். இந்த வாரத்தை கடந்து போனதே தெரியாது. திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சுப செலவு ஏற்படும்.கடன் தொல்லை, இழப்புகள், விரயங்கள் விலகும். தொல்லை கொடுத்து வந்த மேனேஜர் இட மாற்றம் ஆவார்.
காழ்புணர்ச்சியால், தவறான புரிதலால் பிரிந்த உடன் பிறப்பு உங்களை புரிந்து கொள்வார். பங்குச் சந்தை ஆதாயம் மகிழ்ச்சி தரும். அடமான நகைகள் மீண்டு வரும். அசையாச் சொத்துகளின் மதிப்பு உயர்வதால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். காதல் திருமணம் கைகூடும். 18.11.2024 அன்று அதிகாலை 4.31 மணி வரை சந்திராஷ்டம் இருப்பதால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நல்லது கெட்டதை புரிந்து கொள்ள முடியாத மனநிலை இருக்கும். அனாவசிய முன்கோபம் வேண்டாம். தேய்பிறை அஷ்டமியில் காளியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406