search icon
என் மலர்tooltip icon

    துலாம்

    வார ராசிபலன் 22.12.2024 முதல் 28.12.2024 வரை

    22.12.2024 முதல் 28.12.2024 வரை

    அறிவும் திறமையும் பளிச்சிடும் வாரம். ராசி அதிபதி சுக்ரனுக்கு குரு மற்றும் செவ்வாயின் பார்வை இருப்பதால் மலைபோல் வந்த பிரச்சினைகள் பனி போல் விலகும். குடும்பத்தில் நிலவிய உட்பூசல் குறைந்து அமைதிப் பூங்காவாகும். தேவையற்ற பேச்சுக்கள், வாக்கு வாதங்கள் குறையும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வருமானம் உயரும். வருமானம் தரக்கூடிய புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கைவிட்டுப் போனது எல்லாம் கிடைக்கும்.பூர்வீகச் சொத்து தொடர்பான உயில் எழுத பேச்சுவார்த்தை நடத்த உகந்த நேரம். எல்லைத் தகராறு, நிலத்தகராறு, வாய்க்கால் தகராறு, பட்டா சார்ந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

    ஜாமீன் வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.அரசாங்க வேலை, வெளிநாட்டு வேலை முயற்சி பலன் தரும். பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திருமணத் தடை அகலும்.புத்திரப் பிராப்தம் கிடைக்கும். பெற்றோர்கள், பெரியோர்கள், முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தை அதிகரிக்க மாற்று முறை வைத்தியத்தை நாடுவீர்கள். வயதானவர்களுக்கு காலணிகள், போர்வைகள் வாங்கி தானம் தரவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×