search icon
என் மலர்tooltip icon

    துலாம்

    வார ராசிபலன் 27.10.2024 முதல் 3.11.2024 வரை

    27.10.2024 முதல் 3.11.2024 வரை

    லாபகரமான வாரம். ராசியில் லாபாதிபதி சூரியன் 2, 7-ம் அதிபதி செவ்வாயின் பார்வையில் சஞ்சாரம் செய்கிறார்.தொட்டது துலங்கும்.வசதி வாய்ப்புகள் பெருகும். கரைந்த சேமிப்புகள் மீண்டும் உயரும். பற்றாக்குறை பட்ஜெட் அகலும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதம் விலகும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். வேலையில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும், சிலருக்கு புதிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இரண்டாம் திருமண முயற்சி சாதகமான பலன் தரும்.

    மாமன், மைத்துனர் வழியில் இருந்த மனக்கசப்புகள் மாறும்.' வாழ்க்கையில் சில பிரச்சினைகள் தடைகள் வந்தாலும் சுக்ரன் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார். எதிர்பார்த்த ஊதிய உயர்வு மற்றும் தீபாவளி போனஸ் மனதை மகிழ்விக்கும். அடமான நகைகள், சொத்துக்களை மீட்கக் கூடிய சந்தர்ப்ப சூழ்நிலை கூடி வரும். மருமகன் புதிய தொழிலுக்கு முதல் கேட்டு முரண்டு பிடிப்பார். சிலருக்கு மருத்துவம் சம்பந்தமான உயர்கல்வியில் சேர வாய்ப்பு உள்ளது. கனகதாரர ஸ்தோத்திரம் கேட்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×