என் மலர்
துலாம்
வார ராசிபலன் 29.12.2024 முதல் 4.1.2025 வரை
29.12.2024 முதல் 4.1.2025 வரை
உற்சாகமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான சனியுடன் 2, 7-ம் அதிபதி செவ்வாயின் 8-ம் பார்வையில் சஞ்சாரம். வாழ்க்கை துணையால் எதிர்பாராத அதிர்ஷ்ட பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. தாய்மாமாவிடம் எதிர்பார்த்த காரியம் முடிய சற்று காலதாமதமாகும். இதுவரை வெளி உலகத்திற்கு தெரியாமல் இருந்த திறமைகள் வெளிப்படும். புகழ், அந்தஸ்து கவுரவம் உயரும். வீடு, வாகன யோகம் கிடைக்கும். அரசு வழியில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு சம்பள உயர்வும், சலுகைகளும் உற்சாகத்தை அதிகரிக்கும்.
அரசின் இலவச தொகுப்பு வீடு கிடைக்கும். கல்விக்காக வெளியூர், வெளிநாடு மற்றும் விடுதியில் தங்கியிருந்த பிள்ளைகள் இல்லம் திரும்புவார்கள். தந்தை மகன் உறவு பலப்படும். தம்பதிகளிடம் புரிதல் அதிகரிக்கும். திருமண முயற்சி கைகூடும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும்.வருமானம் சீராக இருந்தாலும் சமாளிக்க முடியாத விரயங்களும் ஏற்படும். அமாவாசையன்று பசுவிற்கு வாழைப்பழம் தானம் தரவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406