என் மலர்
துலாம்
வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை
5.1.2025 முதல் 11.1.2025 வரை
கடமைகள் நிறைவேறும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சனியுடன் சேர்க்கை பெறுகிறார். இது போன்ற கிரகச் சேர்க்கை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 30 வருடத்திற்கு பிறகு தான் உருவாகும்.கோட்சார கிரகங்கள் அனைத்தும் துலாம் ராசியினருக்கு சாதகமாக உள்ளது. பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுவதனால் ஆன்ம பலம் பெருகி ஆரோக்கியத் தொல்லை குறையும். தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றுவீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம தபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். திருமணத்தடை அகலும்.குல தெய்வ அருள் கிடைக்கும்.குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். 9.1.2025 அன்று இரவு 8.46 முதல் 11.1.2025 அன்று இரவு 11.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைப்பளுவும் அலைச்சலும் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406