என் மலர்
துலாம்
வார ராசிபலன்
25.9.2023 முதல் 1.10.2023 வரை
துன்பம் குறைந்து இன்பம் பெருகும் வாரம். ராசிக்கு குருப் பார்வை. தொழில் ஸ்தானத்தில் நிற்கும் ராசி அதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் பருவ வயது எட்டியும் பருவமடையாத பெண் குழந்தைகள் பருவமடைவார்கள். உயிரின வளர்பில் ஆர்வம் அதிகரிக்கும். வீடு கட்டும் எண்ணமும் நில புலன் வாங்கும் எண்ணமும் இல்லாதவர்களுக்கு சொத்து சேரலாம். சிலர் தாயாரின் அன்பை சாதகமாக்கி தாயாரின் வீடு, மனையை தன் பெயரில் எழுதி வாங்குவார்கள். திருமண வாழ்வில் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும்.குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.வீட்டில் அடிக்கடி மங்களகரமான விசேஷங்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.மாமியார், மருமகள் உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நகைச் சீட்டு, ஏலச் சீட்டு என சேமிப்புகள் அதிகரிக்கும்.நகை புடவை என ஆடம்பர அழகு பொருட்கள் வாங்கி ஆனந்தமாக வாழ்வீர்கள்.வாழ்க்கைத் துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம்.செலவுகள் அதிகமாகும். ஆனால் வருமானமும் கூடுவதால் சரியாகிவிடும். மகாளய பட்ச காலத்தில் பட்சிகளுக்கு தானியம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406