என் மலர்
மீனம் - வார பலன்கள்
மீனம்
இந்த வார ராசிப்பலன்
12.12.2022 முதல் 18.12.2022 வரை
தெய்வ அனுகூலமும், அதிர்ஷ்டமும் உங்களை வழி நடத்தும் வாரம். 4, 7-ம் அதிபதி புதனும் 3, 8-ம் அதிபதி சுக்ரனும் தொழில் ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் தம்பதிகள் தொழில் அல்லது வேலைக்காக இடம் பெயரலாம்.நண்பர்கள், சகோதரர்களால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
தொழில்துறையில், வேலையில் போட்டி, பொறாமை, இடையூறு, இன்னல்கள் இருந்தா லும் எந்த பாதிப்பும் இல்லாமல் எல்லாம் நிறைவாக நிறைவேறும். சிலருக்கு முக்கிய தேவைகளுக்காக கடன் வாங்கும் தேவை உண்டாகும். அப்படி வாங்கினால் அதை அடைத்து விட முடியுமா? என்ற கவலையும் உண்டாகும். ராசி அதிபதி குருவின் பார்வை 5,9-ம் இடத்தில் பதிவதால் தகப்பனாருடன் ஏற்பட்ட வருத்தம் மறையும். உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும்.
முக்கியமான தேவைகள் நிறைவேறும். வீடு, கட்டிடம் சம்பந்தமான பணிகளில் ஆதாயம் உண்டு.சிலருக்கு சிறு அறுவை சிகிச்சைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு வேலை மாற்றும் சிந்தனை அதிகரிக்கும். திருமணத் தடை அகலும். ஆரோக்கியம் சிறக்கும்.விதி எந்த ரூபத்தில் வந்தாலும் மாற்றும் வல்லமை இறைபக்திக்கு உண்டு என்பதால் சரபேஸ்வரரை வழிபட்டு நலம் பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
5.12.2022 முதல் 11.12.2022 வரை
விழிப்புணர்வோடு செயல்பட வேண்டிய காலம். விரைவில் விரையச் சனியின் ஆதிக்கம் துவங்க உள்ளதால் அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள்.கூட்டாளிகள் மற்றும் நண்பர்களை பகைக்காமல் இருப்பது நல்லது. பொருளாதார நிலை ஏற்ற இறக்கமாக இருக்கும்.
பணம், கொடுக்கல் வாங்கலில் நம்பிக்கை யானவர்களே ஏமாற்றலாம். அதிக முதலீட்டில் சொந்த தொழில் செய்பவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு உழைக்கிறீர்களோ அவ்வளவுக்கு லாபம் கிடைக்கும். தடைபட்ட திருமண வாய்ப்புகள் கூடி வரும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் விலை உயர்ந்த நகை மற்றும் பொருள்களை இரவல் தரவும் வாங்கவும் வேண்டாம்.
அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
28.11.2022 முதல் 4.12.2022 வரை
புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் வாரம். ராசி மற்றும் பத்தாம் அதிபதி குரு ஆட்சி பலம் பெறுவதால் தொழிலில் பொறுப்புடன் செயல்ப டுவீர்கள். உங்கள் பேச்சிலும், செயலிலும் அறிவு மேம்படும். உங்கள் செல்வாக்கும், கவுரவமும் உயரக்கூடிய வகையில் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கப்போகிறது. எதிர்பார்த்ததை விட பணவரவு கூடுதலாகக் கிடைக்கும்.
பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். வசிக்கும் வீட்டை விரிவாக்கம் செய்வீர்கள். ஆனால், அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும்.
சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். சிலருக்கு தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு உள்ளது. சிவனுக்கு பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
21.11.2022 முதல் 27.11.2022 வரை
திறமைகள் மிளிரும் வாரம். 1,10-ம் அதிபதி குரு வக்ர நிவர்த்தி பெறுவதால் தடைபட்ட பணிகள் மளமளவென்று நிறைவேறும் . மதிப்பு, மரியாதை கூடும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகமாகும். குடும்ப உறுப்பினர்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்வீர்கள். பொருளாதார முன்னேற்றம் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.தாராள தன வரவு ஏற்பட்டாலும் மிகைப்படுத்தலான சுப விரையமும் இருக்கும்.
கடன் தொல்லையில் இருந்து சிறிது சிறிதாக மீள்வீர்கள். 7ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகள் மீண்டும் இணையலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.சொந்தத் தொழில் செய்பவர்கள் அதிக முனைப்புடன் விடா முயற்சியுடன் செயல்பட்டால் பெரும் லாபம் கிட்டும்.மாற்றுமுறை வைத்தியத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
21.11.2022 பகல் 12.30 மணி முதல் 23.11. 2022 மாலை 4.03 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எண்ணங்களை செயலாக மாற்ற முடியாது. மனதில் இனம் புரியாத பய உணர்ச்சி இருந்து கொண்டே இருக்கும். இரட்டை பிள்ளையாரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
14.11.2022 முதல் 20.11.2022 வரை
கடன் தொல்லை அகலும் வாரம் . தன ஸ்தான அதிபதி செவ்வாய் சகாய ஸ்தானம் செல்வதால் போதிய தன வரவால் குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும். சொத்தை அடமானம் வைத்து சில்லரை கடனை அடைப்பீர்கள். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழிக்கு ஏற்ப சிலரின் இளைய சகோதரம் உதவிக்கரம் நீட்டுவார்கள். சிலருக்கு சளி, இருமல் காய்ச்சல், உடல் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். வெகு விரைவில் ஏழரைச் சனி துவங்கவுள்ளதால் அதிக முதலீடு கொண்ட செயல்களைத் தவிர்ப்பது நல்லது.
கிடைக்கும் பணத்தை வேறு வகையில் முதலீடு செய்வது நல்லது. சிலரது காதல் பிரிவினையில் முடியும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட இடையூறுகள் குறையும்.சிலர் பதிவுத் திருமணம் செய்து உற்றார் உறவினரை சங்கடப்படுத்துவர். தொழில் பங்குதாரரின் மேல் நம்பிக்கை குறைவு உண்டாகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். தினமும் திருகோளாற்று பதிகம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிப்பலன்
7.11.2022 முதல் 13.11.2022 வரை
லாபகரமான வாரம். லாபச் சனியால் நீண்ட நாட்களாக இருந்த பண பிரச்சினைகள் முடிவுக்கு வரும். திடீர் ராஜயோகம் வர வாய்ப்புள்ளது. .திடீர் யோகங்கள் கை கூடி வரும். பங்குச்சந்தை முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை தரும். மூத்த சகோதரர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும் குரு வக்ர நிவர்த்தி பெற்றவுடன் திருமண முயற்சிகள் கைகூடும்.
முழுத்திறமைகளையும் காட்டி மேலதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பீர்கள்.நோய்கள் நீங்கி ஆரோக்கியம் அதிகரிக்கும். வீடு கட்டும் வாய்ப்பு கூடி வரும். ராசிக்கு இரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நடக்கிறது. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனமாக இருக்கவும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிக்க முயற்சிக்கலாம். ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. கிரகண நாளில் யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். சாதுக்களிடம் ஆசி பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிப்பலன்
31.10.2022 முதல் 06.11.2022 வரை
விபரீத ராஜ யோகமான வாரம். 6ம் அதிபதி சூரியனும், எட்டாம் அதிபதி சுக்ரனும் 8ல் மறைவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவார்கள். பிரபலமான மனிதர்களின் சந்திப்பு உங்களின் புகழை அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் லாபகரமாக நடக்கும். அதிர்ஷ்டம், போட்டி, பந்தயம் போன்றவை உங்களின் வருமானத்தை பெருக்கும். பணத்தட்டுப்பாடு படிப்படியாக குறையும். தொழில் போட்டிகளை தாண்டி தனி முத்திரை பதிப்பீர்கள்.
வியாபாரத்தில் இருந்த அரசாங்கத் தடைகள் நீங்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்சினைகளை பேசி தீர்ப்பீர்கள் ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் எதிரிகளை பிரமிக்க வைக்கும். பழைய கடன்களை அடைப்பீர்கள். வீடு கட்ட முயற்சி மேற்கொள்வீர்கள். வெளிநாடு செல்வதற்கான முயற்சி வெற்றியைத் தரும். சிலர் வேலை மாறுதலாகி வேறு இடம் செல்ல வேண்டி வரும். கடினமாக உழைத்தாலும் மேலதிகாரிகளின் கவனத்தை கவருவது சற்று சிரமம். நீண்ட நாள் விற்காமல் கிடந்த நிலம் விற்பனையாகும். ஆலங்குடி சென்று வரவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
நிதானத்தை கடை பிடிக்க வேண்டிய வாரம். அஷ்டமாதிபதி சுக்ரன் நீச்ச பங்கம் பெற்ற சூரிய னுடன் ராசிக்கு எட்டில் ஆட்சி பெறுவது நிற்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பலன் இல்லை. எதை யும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. சிலருக்கு வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மறைவு ஸ்தானங்கள் வலுப்பெற்று சாதகமற்ற நிலையில் இருப்பதால் உழைப்பது நீங்கள் நல்ல பெயர் வாங்குவது உங்களை விரட்ட நினைக்கும் சக ஊழியராக இருப்பார். எதிர்பாலினத்தவருடன் கவனமாக இருக்கவும். ராசிக்கு 2,8-ம் இடம் கிரகண தோஷத்தால் பாதிப்பு அடைவதால் குல, இஷ்ட தெய்வ தெய்வ வழிபாட்டுடன் இந்த வாரத்தை கடக்க முயலவும். பெண்களுக்கு தடைபட்ட பணிகள் துரிதமாகும். உடல் நலத்தில் கவனம் தேவை.
25.10.2022 அன்று காலை 2.32 மணி முதல் 27.10.2022 காலை 6.30-க்குள் சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வீண் அலைச்சல் தூக்க மின்மை அதிகரிக்கும். வேலைப்பளுவும் கூடும். கோபத்தையும் குறைப்பது நல்லது. வெளியூர் பயணத்தை தவிர்க்கவும். கிரகணத்தன்று கொண்டைக்கடலை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். அஷ்டமாதிபதி சுக்ரன் நீச்ச பங்கம் பெற்ற சூரிய னுடன் ராசிக்கு எட்டில் ஆட்சி பெறுவது நிற்பது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பலன் இல்லை. எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. சிலருக்கு வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மறைவு ஸ்தானங்கள் வலுப்பெற்று சாதகமற்ற நிலையில் இருப்பதால் உழைப்பது நீங்கள் நல்ல பெயர் வாங்குவது உங்களை விரட்ட நினைக்கும் சக ஊழியராக இருப்பார்.
எதிர்பாலினத்தவருடன் கவனமாக இருக்கவும். ராசிக்கு 2,8-ம் இடம் கிரகண தோஷத்தால் பாதிப்பு அடைவதால் குல, இஷ்ட தெய்வ தெய்வ வழிபாட்டுடன் இந்த வாரத்தை கடக்க முயலவும். பெண்களுக்கு தடைபட்ட பணிகள் துரிதமாகும். உடல் நலத்தில் கவனம் தேவை. 25.10.2022 அன்று காலை 2.32 மணி முதல் 27.10.2022 காலை 6.30-க்குள் சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வீண் அலைச்சல் தூக்கமின்மை அதிகரிக்கும். வேலைப்பளுவும் கூடும். கோபத்தையும் குறைப்பது நல்லது. வெளியூர் பயணத்தை தவிர்க்கவும். கிரகணத்தன்று கொண்டைக்கடலை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிபலன்
17.10.2022 முதல் 23.10.2022 வரை
நன்மையும் தீமையும் கலந்த வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாய் 4-ம் இடம் செல்வதால் தொழிலில் மதிப்பு, மரியாதை உயரும். தடைபட்ட வாடகை வருமானம் வரும். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். 6ம் அதிபதி சூரியனும் அஷ்டமாதிபதி சுக்ரனும் அஷ்ட ஸ்தானத்தில் கேதுவுடன் இணைவதால் கடன் தொல்லை, இழப்புகள், விரயங்கள் வந்து சேரும்.
சேமிப்பு குறையும். கொடுக்கல், வாங்கலில் ஏமாற்றங்களைச் சந்திக்கலாம். எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளிடம் ஒற்றுமை குறையும். சிலர் உத்தியோகத்தில் விருப்ப ஓய்வு பெறலாம். இளம் வயதினருக்கு திருமண முயற்சிகள் இழுபறியாகும். லாப ஸ்தானத்தில் நின்ற சனி பகவான் விரய ஸ்தானத்தை நெருங்கிக் கொண்டு இருப்பதால் அதிகமான அலைச்சல், உறவுகள் மீது அதிருப்தி, பழகிய வட்டாரத்தில் ஏமாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது.
புதிய தொழில் முயற்சியை தவிர்க்கவும். வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும். பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். மன உளைச்சலை தவிர்க்க அமைதியை கடைபிடிக்கவும்.நவகிரகங்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
10.10.2022 முதல் 16.10.2022 வரை
அனுகூலமான வாரம். ஏழாமிடம் புதனால் பலம் பெறுவதால் சிலர் வாழ்க்கைத் துணையுடன் இணைந்து கூட்டுத் தொழில் துவங்கலாம்.புதிய தொழிலுக்கு முயற்சிப்பவர்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.குலத் தொழில் விருத்தியடையும். உத்தியோகஸ்தர்களுக்கு மன நிறைவான போனஸ் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள். கணவன்-மனைவி ஒற்றுமை சீராகும்.
வேலை விஷயமாக பிரிந்திருந்தவர்கள் மீண்டும் குடும்பத்தோடு ஒன்று சேருவார்கள். 4ம் அதிபதி புதன் உச்சம் பெற்றதால் அன்னையின் அன்ப அரவணைப்பு, உதவிகள் ஆதரவாய் இருக்கும்.பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளை எதிர் பார்க்கலாம். சுபகாரிய நிகழ்ச்சிகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். உயர்ந்த வாகன வசதி அமையும்.
சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனை வியாக அமைவாள். இரண்டு, நான்கு சக்ர வாகன டீலர்களுக்கு விற்பனை அதிகரிக்கும். சிலருக்கு உதவிகரமான புதிய நண்பர்கள் கிடைப்பர். அனைத்து விதமான சாதகமான பலன்களும் மீன ராசியினருக்கு உண்டு. பெருமாளையும் தாயாரையும் வணங்கி நலம் பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
3.10.2022 முதல் 9.10.2022 வரை
எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டத்தை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதிர்ஷ்டம் உங்களை விரும்பும் நேரம். பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வீடு, மனை, வாகனம், திருமணம், மகப்பேறு போன்றவற்றின் மூலம் நீண்டநாள்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும்.
தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெண்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்கக் கூடாது.மருத்துவச் செலவுகள் குறையும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும்.
ஏழரைச் சனி ஆரம்பமாக இருப்பதால் பழைய வேலையில் இருந்து புதிய வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். பெண்களுக்கு புகுந்தவீட்டு உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும். ராசி அதிபதி குருவை 6ம் அதிபதி சூரியனும் எட்டாம் அதிபதி சுக்ரனும் பார்ப்பதால் சேமிப்பு தொகையை பார்ப்பது அரிதாகும். மகிஷாசுரமர்தினியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406