search icon
என் மலர்tooltip icon

    மீனம் - வார பலன்கள்

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    26.9.2022 முதல் 2.10.2022 வரை

    முறையான திட்டமிடுவதற்கு தேவையான வாரம். மூன்றாமிட செவ்வாயால் முட்டுக்கட்டையாக இருந்த தடைகளை தாண்டி தொழிலை மேம்படுத்துவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் அரிய காரியங்களை செய்வீர்கள். எடுக்கப்பட்ட தொழில், உத்தியோக முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபட நேரிட்டால் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செய்யவும்.

    உடல் ஆரோக்கியம் மேம்படும். ராசி அதிபதி குருவை அஷ்டமாதிபதி சுக்ரன் பார்ப்பதால் எதிர் பாலினத்த வரால் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் அவமானம் உண்டு.சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் உடலை தாக்கும்.

    27.9.2022 மாலை 6.17 முதல் 29.9.2022 இரவு 11.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரின் விசயத்தில் தலையிட்டு மன உளைச்சலை அதிகரிக்கக் கூடாது. பண விசயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெள்ளிக் கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    19.9.2022 முதல் 25.9.2022 வரை

    புதிய முதலீடுகள் தவிர்க்க வேண்டிய காலம். 1,10-ம் அதிபதி குரு வக்ரம் பெற்றதால் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்கவேண்டி வரும். 6-ம் அதிபதி சூரியன் 7-ம் அதிபதி புதனுடன் இணைவதால் கூட்டுத் தொழிலில் லாபம் குறைந்து கடன், எதிரி தொல்லை அதிகமாகும்.

    உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். 11-ம் அதிபதி சனி வக்ரம் பெற்றதால் மூத்த சகோதரர், சித்தப்பாவால் வம்பு, வழக்கு, கடன் உண்டு. ஜனவரில் ஏழரைச் சனி ஆரம்பம் ஆகுவதால் சிலர் தொழில், வேலைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம்.

    சிலரின் இரண்டாம் திருமண முயற்சி பலன் தரும். தனஸ்தானத்தில் ராகு நிற்பதால் சம்பந்தம் இல்லாத அறிமுகம் இல்லாத நபர்களால் ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கவனம் தேவை. அமாவாசையன்று அந்தணர்களுக்கு இயன்ற தான, தர்மங்கள் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    12.9.2022 முதல் 18.9.2022 வரை

    ஏற்றம், இறக்கம் நிறைந்தவாரம். ராசி அதிபதி குரு ராசியில் வக்ரம்பெற்று இருப்பதால்சிறிய தடை தாமதங்கள் இருந்தாலும் வெற்றி நிச்சயம். உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அதிகமாக உழைக்க நேரும். பொருளாதாரத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டு.

    ஆறாம் அதிபதி சூரியன் ஏழில் வக்ர புதனுடன்இருப்பதால் வம்பு, வழக்கு தேடி வரலாம். அரசுக்கு தண்டம் கட்டலாம். அசையும்,அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.கண்ணில் உபாதைகள் இருந்தால் உரியசிகிச்சையை பெற வேண்டும்.

    விருந்து உபசாரங்கள், கேளிக்கை களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். 5-ம் இடத்தை வக்ரம் பெற்ற குரு, சனி பார்ப்பதால்சிலருக்கு காதல், காமம், பூர்வீக சொத்து, குழந்தைகள், அறிவு சார்ந்த விஷயங்களில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள், தர்மசங்கடங்கள் வரலாம்.உற்றார் உறவினர்களால் பயன் இருக்காது.

    வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் சீராகும். இரண்டாம் திருமண முயற்சி நிறைவேறும்.நண்பர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இடமாற்றம் கிடைக்கும்.விலகிய சொந்தங்கள் மீண்டும் வந்து சேருவார்கள். சனிக்கிழமை மகா விஷ்ணுவை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    5.8.2022 முதல் 11.9.2022 வரை

    மாறுதலான சம்பவங்கள் நிறைந்த வாரம். வாக்கு ஸ்தானத்தில் ராகு இருப்பதால் பேச்சுத் திறமையால் வருமானம் அதிகரிக்கும். பேச்சில் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். ஆடம்பர விருந்து உபசாரங்கள் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். தொழில் தொடர்பாக திட்டமிட்ட அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக நிறைவேறும். ஒருவர் சம்பாத்தியத்தில் தள்ளாடிய குடும்பம் பிள்ளைகளின் வருமானத்தால் நிமிர்ந்து நிற்கும்.

    சிலர் வெளிநாட்டில் அந்நிய மொழி பேசுபவர்கள் மத்தியில் வாழ நேரும். களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கி திருமணம் இனிதே நடைபெறும்.

    பெண்களுக்கு வெளிநாட்டுப் பொருட்கள் மீது மோகம் அதிகரிக்கும். இந்த வாரம் செல்லும் நேர்முகத் தேர்வில் வெற்றியும் மன நிறைவான வேலையும் கிடைக்கும். உயர்ரக வாகன வசதி அமையும். வெற்றிலை மாலை அணிவித்து ஆஞ்சநேயரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    29.8.2022 முதல் 4.9.2022 வரை

    சுமாரான வாரம். ஆறாம் அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று இருப்பதால் பட்டப் படிப்பு முடித்து வேலை கிடைக்காதவர்களுக்கு படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கும். தொழில், வேலையில் மேன்மையான பலன்கள் உண்டு. சிலர் குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்ய ஆர்வம் உண்டாகும். பரம்பரை சொத்தின் மீது உள்ள வில்லங்கத்திற்காக வக்கீலிடம் ஆலோசனை பெறுவீர்கள். சிலர் பிழைப்பிற்காக ஒப்பந்த அடிப்படையில் வெளியூருக்கு இடம் பெயரலாம். வீடு மாற்றும் எண்ணம் பலிதமாகும். வரவிற்கு மீறிய செலவும் விரயமும் உண்டாகும்.

    உயர் கல்லூரி நுழைவுத் தேர்வில் வெற்றி உண்டாகும். கடன், நோய், வைத்தியச் செலவு அதிகரிக்கும். கணவன் மனைவி கருத்தொற்றுமை இருக்கும். வரதட்சனை பிரச்சனையில் பிறந்த வீட்டிற்கு வந்த மகள் மீண்டும் புகுந்த வீடு செல்வார். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும்.

    31.8.2022 பகல் 12.03 மணி முதல் 2.9.2022 மாலை 5.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நண்பர்களுடன் எச்சரிக்கையாக பழக வேண்டும். துரோகங்கள், ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. கால பைரவரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    22.8.2022 முதல் 28.8.2022 வரை

    சிந்தித்து செயல்பட வேண்டிய வாரம். ஆறாம் அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெறுவதால் சிலர் சொந்த தொழிலில் இருந்து விடுபட்டு உத்தியோகத்தில் இணையலாம்.சிலரை சம்பள உயர்வு உற்சாகப்படுத்தலாம். மனைவிக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். திருமண வயதினருக்கு திருமணம் கூடிவரும். செவ்வாயின் சஞ்சாரம் சற்று சாதகமாக இருப்பதால் அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை நிலவும். அரசு ஊழியர்களுக்கு உதிரி வருமானங்கள் சிறப்பாக இருக்கும்.

    உங்கள் உணர்வுகளை, குறிப்பாக கோபத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்வது நல்லது. தேவையான நிதி கிடைப்பதால் கடன்களிலிருந்து விடுபடுவீர்கள். ராசி அதிபதி குரு வக்ரம் பெற்றதாலும் ஆறாம் அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெறுவதாலும் அதிர்ஷ்டம் சற்று குறைவுபடும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும்.

    சில வேண்டாத புதிய பிரச்சினைகள் தோன்றி மன அழுத்தத்தை அதிகப்படுத்தும். வீண் கவலைகளை விடுத்து உங்கள் கடமைகளை சரியாகச் செய்யுங்கள். முயற்சி எடுத்து செய்யும் அனைத்து காரியங்களும் வெற்றி பெறும் நல்ல காலமாக இது அமையும். தினமும் அய்யனாரப்பனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    15.8.2022 முதல் 21.8.2022 வரை

    வீட்டிலும் வெளியிலும் புகழும் செல்வாக்கும் அதிகரிக்கும் வாரம்.ராசி அதிபதி குருராசியில் ஆட்சி பலம் பெறுவதால் எந்தக் காரியத்திலும் சுறுசுறுப்பாக இறங்குவீர்கள். ஆடம்பரச் செலவால் பணவிரயம் ஏற்படும்.உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். பல வகையில் பொருள் சேர்க்கை உண்டாகும்.

    புதிய திட்டங்கள் மூலம் தொழிலை மேம்படுத்துவீர்கள். அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும்.தொழில் போட்டியாளர்களை புறமுதுகு காட்டி ஓட வைப்பீர்கள்.சிலர் நீண்ட கால மாக ஆசைப்பட்ட வாகனத்தை வாங்குவீர்கள். சிலர் வீட்டைப் புதுப்பிக்கும் வேலையில் இறங்கு வார்கள். சிலர் புதிய வீடு கட்டும் ஆர்வம் உதயமாகும்.

    உடன் பிறந்த சகோதர-சகோதரிகளுடன் மறைந்த தாய், தந்தையின் சொத்தைப் பிரிப்பதில் மனக் கசப்பு உருவாகும். அரசாங்க ஊழியர்கள் சிறப்பாக பணி செய்து பலன் பெறுவார்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள்‌. பங்குச்சந்தை வியாபாரம் நல்ல லாபத்தைக் கொடுக்கும். ஆன்லைன் சூதாட்டத்தை தவிர்க்க வேண்டும். வியாழக் கிழமை குரு கவசம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    8.8.2022 முதல் 14.8.2022 வரை

    திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். உங்கள் தொழில் விஷயமாக தீட்டிய முக்கியத் திட்டங்கள் நிறைவேற எடுத்த புதிய நடவடிக்கைகள் வெற்றி பெறும். சீரான பொருளாதார உயர்வினால் பெண்களுக்கு எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். இரண்டாமிட ராகுவால் வார்த்தைகளால் உறவுகளை காயப்படுத்தக்கூடாது.

    நியாயமான பிரச்சினை என்றாலும் நிதானமாகப் பேசுங்கள். அரசியல்வாதிகள் கட்சி முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொண்டர்களை அரவணைத்துச் செல்லவும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். மாமனாரால் ஏற்பட்ட மனச்சங்கடம் மறையும். கணவன்-மனைவி ஒற்றுமை மேலோங்கும்.

    வாழ்க்கைத் துணையின் மூலம் வருமானம் உண்டாகும்.நினைத்ததை சாதித்துக் கொள்ள தகுந்த சூழ்நிலை வந்து சேரும்.இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். ஆரோக்கியம் முன்னேற்றம் தரும். எந்த முடிவையும் அவசரப்படாமல் நிதானமாக எடுக்க வேண்டும். வெளியூர்ப் பயணங்கள் அலைச்சலில் முடியும். அடுத்தவர் பிரச்சினையில் தலையிடாதீர்கள்.பசு மற்றும் ஜீவ ராசிகளுக்கு உணவு வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    1.8.2022 முதல் 7.8.2022 வரை

    சாதகமான வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்றதால் கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும். நோய் தொல்லை கட்டுக்குள் இருக்கும்.பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும்.

    பயணங்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றி வம்பு வழக்கிலிருந்து விடுபடுவீர்கள். தொழில், உத்தியோகத்தில் நிலவிய ஏற்ற இறக்கங்கள் சமன்படும்.தாய், தந்தையின் அன்பும், ஆதரவும் பெருகும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டு வருவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். வீடு கட்டும் பணி துரிதப்ப டுத்தப்படும். பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து இணைவார்கள்.

    4.8.2022 காலை 6.40 முதல் 6.8.2022 பகல் 12.06 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறருக்கு நல்லது செய்தாலும் அது தீமையாகவே முடியும் என்பதால் அடுத்தவர்களின் விசயத்தில் தலையிடுவதைத் தவிர்க்கவும். சனிக்கிழமை நவகிரக சனி பகவானை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    வார ராசி பலன்கள்

    25.7.2022 முதல் 31.7.2022 வரை

    எந்த ஒரு கடினமான வேலையையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தன ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்றதால்விதவிதமான பொன் பொருள், ஆபரணங்கள் வாங்குவர். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமையும், உயர்வும் ஏற்படும். தாய்வழி உறவுகளின் உதவி கிடைக்கும்.

    விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு, அவர்களின் திறமைக்கு வேலை கிடைக்கும்.தொழில் புரிபவர்களுக்கு அரசு மற்றும் வங்கி மூலமான உதவிகள் கிடைத்து நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.

    சிலருக்கு பணி நிமித்தமாக வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படும். செல்வ நிலைகள் உயரும். பிற்கால நலன்கருதி சேமிப்புக்கள், பங்குச் சந்தை ஆகியவற்றில் முதலீடு செய்வது நல்லது. போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிட்டும். இந்த வாரம் உங்களின் திட்டமிடுதல் மற்றும் செயல்படும் முறையில் சில மாற்றங்களை கொண்டு வந்தால்நல்ல சாதனை படைக்கலாம். பிரதோசத்தன்று சிவனுக்கு தேன்அபிசேகம் செய்யவும்

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    18-7-2022 முதல் 24-7-2022 வரை

    வளமான பலன்களைப் பெறும் வாரம். ராசி அதிபதி குருவிற்கு சனி பார்வை இருப்பதால் தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி சீராகும். இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். கடனால் ஏற்பட்ட அவமானங்கள் குறையும்.

    மாதச் சம்பளதாரர்களுக்கு தொடர்ந்து வந்த பற்றாக்குறை பட்ஜெட் தீரும்.வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துணிவீர்கள். தங்களை மாய்த்துக் கொள்ள துணிந்தவர்கள் கூட மனம் மாறுவார்கள். தொழிலில் இருந்த தடைகள் மெதுவாக விலகி மறுபடியும் துளிர்க்கும்.ஆண்கள் பெண்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும்.பிள்ளைகளுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.

    நிலுவையில் உள்ள சம்பளபாக்கி கணிசமான தொகையாகச் சேர்ந்து கிடைக்கும். சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். சிலர் வாரிசுகளை தங்களின் தொழில், வியாபாரத்தில் ஈடுபடுத்தி ஆனந்தம் அடைவார்கள். குழந்தை பாக்கியம் உண்டாகும். சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் உண்டாகும். சித்தர்களின் வழிபாட்டு தலங்களில் உலவாரப்பணியில் ஈடுபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    11.7.2022 முதல் 17.7.2022 வரை

    கவனமாக இருக்க வேண்டிய காலமிது. 11,12- ம் அதிபதி சனி வக்ர கதியில் மகரம் சென்று ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம், அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் தன்னம்பிக்கை குறையும். உடல் நலத்திலும் அக்கறை காட்டவும். உடன் பிறந்தோர் வழியில் கருத்து வேறுபாடு தோன்றும்.

    அநாவசியமான விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் வாக்கு வாதங்களில் ஈடுபடாதீர்கள் பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். புதிய தொழில் முதலீட்டைதவிர்க்கவும். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக்கால் வைக்காதீர்கள்.வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம்.

    ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்யுங்கள். மாணவர்கள் அதிக கவனம் செலுத்தி படிப்பது நல்லது. பெண்களுக்கு கணவரின் ஒற்றுமை மகிழ்ச்சியை அதிகரிக்கும். சுபமங்கல காரியங்கள் திட்டமிட்டபடி சிறப்பாக நடக்கும். சிலர் காதல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. வியாழக்கிழமை குரு பகவானை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×