என் மலர்
மீனம் - வார பலன்கள்
மீனம்
வார ராசி பலன்கள்
4-7-2022 முதல் 10-7-2022 வரை
சுபவிரயம், சுப மங்கலச் செலவு உண்டாகும். நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமாக திருப்பம் ஏற்படும்.நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண்ணும் அமையும். தேக ஆரோக்கியம், மன அமைதி, பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும்.
ராசிக்கு 4ல் ஏற்பட்டுள்ள புத ஆதித்திய யோகம் மாணவர்களுக்கு கல்வி ஆர்வத்தை அதிகரிக்கும். வாட்டி வதைத்த கடன் பிரச்சினை ஓரளவு குறையும்.நல்ல திறமையும் தகுதியும் வாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும்.
புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். தந்தையின் மூலம் பெரும் பணம் கிடைக்கும். எதிரிகள் தொல்லை குறையும். தம்பதிகளிடையே ஒற்றுமையும் அனுசரனையும் அதிகரிக்கும்.
7.7.2022 அன்று காலை 12. 20 மணி முதல் 10.7.2022 அதிகாலை 4.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்களிலும் முயற்சிகளிலும் தடை, தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். சொர்ணாகர்ஷண பைரவரை வழிபடவும்.
போதுமான பணம் கிடைத்தாலும் செலவுகளும் மிகுதியாக இருக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசி பலன்கள்
27-6-2022 முதல் 03-7-2022 வரை
இது வரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். ராசியில் குரு ஆட்சி, தன ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி சகாய ஸ்தானத்தில் சுக்ரன் ஆட்சி, விரய ஸ்தானத்தில் சனி ஆட்சி என பல கிரக சஞ்சாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் தொழில், வியாபாரத்தில் வியக்கும் வகையில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
புதிய சொத்துக்கள் வாங்கும் அமைப்பு உள்ளது. நீண்ட நாட்களாகதீர்க்க முடியாமல் அலைக்கழித்த சட்டம் தொடர்பான பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.சிறு பிரச்சினைகளால் பிரிந்த நண்பர்கள், உறவினர்கள், சகோதர, சகோதரிகள் பகை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். உங்களுடைய வீண் பிடி வாதம், முன் கோபம் குறையும்.தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுப்பீர்கள்.கணவன், மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.
போதுமான பணம் கிடைத்தாலும் செலவுகளும் மிகுதியாக இருக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு மருத்துவ உதவி செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை
சகாயமான வாரம். முயற்சி ஸ்தான அதிபதி சுக்ரன் 3ம் இடத்தில் ஆட்சி பலம் பெற்றதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியமும் துணிச்சலும் மேலோங்கும். உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் இருக்கும்.வழக்குகளின் வெற்றி செய்தி கிட்டும். நீண்ட நாள் மனக்குறைகள் விலகும். பங்கு வர்த்தகம் லாபம் தரும். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள்.
நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்க ஏற்ற வாரம். நீண்ட காலமாக திருமண தடையை சந்தித்தவர்களுக்கு திருமணம் நிச்சயமாகிவிடும். வீட்டில்ஆனந்தமும் மகிழ்ச்சியும் நிரம்பியிருக்கும். எதிர் பாலின வழிப் பிரச்சினைகள் குறையும்.
புத்திர பிராப்தம் கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சமுதாய மதிப்பு மரியாதை உயரும்.
அக்கம் பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும். தம்பதிகளின் திரும்ண வாழ்வு மேலும் சிறப்படையும். ருண ரோக சத்ரு ஸ்தான அதிபதி சூரியன் 4ம் இடமான சுக ஸ்தானத்தில் இருப்பதால் போதிய ஓய்வு, உறக்கம் இருந்தாலும் ஏதாவது ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும்.பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்குசிவப்பு வஸ்திரம் சாற்றி வழிபடவும்
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை
வெற்றிகரமான வாரம்.ராசி அதிபதி குரு 2,9ம் அதிபதி செவ்வாயுடன் ராசியில் இருப்பதால் கம்பீரமான தோற்றம் உண்டாகும்.மனதைரியம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கு மிக முக்கியம் என உணர்ந்து செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு வீர தீரச் செயல்களில் வெற்றி உண்டு. நிலம், வீடு, வாகனம் வாங்குவதில் சுமூகநிலை நீடிக்கும். உடல் நலக்குறைபாடுகள் அகலும். பூர்வீகச் சொத்துக் குழப்பம் முடிவிற்கு வரும். வம்பு, வழக்குகளில் சாதகமான முடிவு வரும்.
தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள். பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் மன நிறைவைத் தரும். வெளித் தொடர்புகள் மூலம் சீரான பண வரவு இருக்கும். தோல் வியாதி, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் கட்டுப்படும். இதுவரை குல தெய்வம் எதுவென்றுதெரியாதவர்களுக்கு குலதெய்வ இருப்பிடம் தெரியும் வாய்ப்பு உள்ளது.
தர்ம காரியங்களில் மனம் லயிக்கும். திருமணப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடியும். 2,8-ம் இட சர்ப்பங்களால் சில அசவுகரியம் இருந்தாலும் வாரம் முழுவதும் பல தடைகளையும்கடந்து வெற்றி உண்டாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசி பலன்கள்
6.6.2022 முதல் 12.6.2022 வரை
உற்சாகமான வாரம். புதிய தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும். ராசி அதிபதி குரு 2, 9-ம் அதிபதி செவ்வாயுடன் ராசியில் இணைவதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தைரியம் ஏற்படும்.
சொத்து சார்ந்த பிரச்சினைகள் சீராகும். சிலர் உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை, குடும்பத்தை விட்டு பிரியலாம். உங்களின் நியாயமான கோரிக்கைக்கு உயர் அதிகாரி செவி சாய்ப்பார். தடைபட்ட திருமணம் இந்த மாதத்தில் நிச்சயிக்கப்படும். மூத்த சகோதரரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
10.6.2022 மாலை 4.06 முதல் 12.6.2022 மாலை 6.33 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் பழகும் போது சற்று கவனமாக இருக்கவும்.உங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் ஈடுபாடு காட்டாதீர்கள். பிரதோஷத்தன்று சிவனுக்கு கரும்புச்சாறு அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசி பலன்கள்
30.5.22 முதல் 5.6.22 வரை
சோதனைகள் சாதனைக ளாக மாறும் வாரம். தன, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், ராகு சேர்க்கை இருப்பதால் தேவையற்ற நட்புகள், உறவுகளின் தொல்லைகள் உண்டாகும். சொத்துக்களாலும் சொந்தங்களாலும் சில பிரச்சினைகள் தலை தூக்கும்.
உறவினர்களுக்கு செய்யும் உதவி உபத்திரவமாக முடியும். வெளி நாட்டு தொழில் மூலம் அபாரமான பண வரவு கிடைக்கும். கண் திருஷ்டி அதிகரித்து சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். பெண்களுக்கு பிள்ளைகளால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். திருமணத்திற்கு வெளியூர் வரன் அமையும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது. உயர் கல்வி வாய்ப்பு சித்திக்கும். வேலைக்காக தனித்தனி ஊரில் வசித்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள்.
பணிபுரியும் இடத்தில் பணத்தை கையாளுவதில் கவனம் தேவை. சிலருக்கு விற்பனையான சொத்தால் வில்லங்கம் வரலாம். குடும்ப ஸ்தான சுக்ரன் ராகுவால் சில எதிர்மறையான பலன்கள் நடைபெற்றாலும் ராசியில் உள்ள குரு, செவ்வாய் பகவான் எல்லாவற்றையும் எதிர் கொள்ளும் தைரியத்தை தருவார்கள்.
வெள்ளிக்கிழமை ஸ்ரீ கஜ லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசி பலன்கள்
30.5.22 முதல் 5.6.22 வரை
சோதனைகள் சாதனைக ளாக மாறும் வாரம். தன, குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன், ராகு சேர்க்கை இருப்பதால் தேவையற்ற நட்புகள், உறவுகளின் தொல்லைகள் உண்டாகும். சொத்துக்களாலும் சொந்தங்களாலும் சில பிரச்சினைகள் தலை தூக்கும்.
உறவினர்களுக்கு செய்யும் உதவி உபத்திரவமாக முடியும். வெளி நாட்டு தொழில் மூலம் அபாரமான பண வரவு கிடைக்கும். கண் திருஷ்டி அதிகரித்து சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். பெண்களுக்கு பிள்ளைகளால் ஏற்பட்ட மன வருத்தம் குறையும். திருமணத்திற்கு வெளியூர் வரன் அமையும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது. உயர் கல்வி வாய்ப்பு சித்திக்கும். வேலைக்காக தனித்தனி ஊரில் வசித்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள்.
பணிபுரியும் இடத்தில் பணத்தை கையாளுவதில் கவனம் தேவை. சிலருக்கு விற்பனையான சொத்தால் வில்லங்கம் வரலாம். குடும்ப ஸ்தான சுக்ரன் ராகுவால் சில எதிர்மறையான பலன்கள் நடைபெற்றாலும் ராசியில் உள்ள குரு, செவ்வாய் பகவான் எல்லாவற்றையும் எதிர் கொள்ளும் தைரியத்தை தருவார்கள்.
வெள்ளிக்கிழமை ஸ்ரீ கஜ லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22
ராசி அதிபதி குரு ஆட்சி பலம் பெறுவதால் உங்கள் செயல்பாடுகள் வெற்றிகரமாக அமையும். தன ஸ்தான அதிபதி செவ்வாய் ராசியில் நிற்பதால் வாக்கு ஸ்தானம் பலம் பெறுகிறது. குடும்ப உறுப்பினர்கள் உங்கள் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். பூமி,வீடு, வாகனம் வாங்கும் சிந்தனைகள் மேலோங்கும்.
உயர் கல்விக்கு சிலர் வெளிநாடு செல்லலாம். விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்திட்டத்தில் சேர்ந்து படிப்பீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தவர்களின் திறமைக்கு தகுந்த ஊதியம் கிடைக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வசூலாகும். ஆன்மீகச் சிந்தனைகள் அதிகரிக்கும்.
பெண்களுக்கு தாய் வழி ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு உத்தியோகத்தில் உள்ள நல்ல வசதியான களத்திரம் அமையும். புதன் ஆதித்ய யோகத்தால் பொது நல ஈடுபாடு அதிகரிக்கும். அமாவாசையன்று யானைக்கு கரும்பு வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிப்பலன்
இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை
ராசி அதிபதி குருவுடன் 2,9-ம் அதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் குரு மங்கள யோகம் ஏற்பட்டுள்ளது. இதுவரை முயற்சி செய்தும் நடைபெறாத விஷயங்கள் இறையருளால் சிறு முயற்சியில் வெற்றி பெறும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். தடைபட்ட சம்பள உயர்வும், உத்தியோக உயர்வும் இந்த வாரத்தில் கிடைக்கும். வியாபாரம் பெருகும்.
சிலருக்கு புதிய தொழில் துவங்கும் சிந்தனை உதயமாகும். களத்திர ஸ்தானம் பலம் பெறுவதால் இல்வாழ்க்கை இனிமையாக இருக்கும். கணவன், மனைவி கருத்து வேறுபாடுகள் அகலும். ஜாமீன் வழக்குகள் தள்ளுபடியாகும். சிலர் குடியிருக்கும் வாடகை வீட்டை விலைக்கு வாங்குவார்கள். பெண்களுக்கு பிள்ளையின் திருமணத்திற்கு சீர்வரிசை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அஷ்டமாதிபதி சுக்ரன் ராசியில் சஞ்சரிப்பதால் கண் திருஷ்டி அதிகரிக்கும். தினமும் லிங்காஷ்டகம் கேட்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406