என் மலர்
மீனம் - வார பலன்கள்
மீனம்
வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை
20.10.2024 முதல் 26.10.2024 வரை
தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாரம். வக்ரம் பெற்ற ராசி அதிபதி குருவிற்கு அஷ்டமாதிபதி சுக்ரன் பார்வை உள்ளதால் வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் .சிலர் பழைய தொழில் கூட்டாளிகளை விலக்கி விட்டு புதிய தொழில் கூட்டாளிகளை சேர்க்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வு பெற்று சுய தொழில் தொடங்கலாமா என்று சிந்திக்கக் கூடிய நேரம். குடும்ப உறவினர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். என்றோ வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு பல மடங்காக உயரும்.
வாங்கிய கடனை திருப்ப கொடுப்பீர்கள். கொடுத்த கடனை வசூலிப்பீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சிலர் புதிதாக கட்டிய வீடு வாங்குவீர்கள் அல்லது கட்டுவீர்கள். சிலர் தீபாவளிக்கு புதிய இரண்டு, நான்கு சக்ர வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.பலருக்கு வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். திருமணமான இளம் பெண்கள் கருத்தரிப்பார்கள்.சிலர் குடும்பத்துடன் வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம்.பெண்கள் பிறந்த வீட்டிற்கும் புகுந்த வீட்டிற்கும் பெருமை சேர்ப்பீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை
கடன் தொல்லை குறையும் வாரம். கோட்சாரத்தில் உங்கள் 6-ம் அதிபதி சூரியன் பலம் குறைகிறார். லட்சியத்தையும், கொள்கையையும் விடாது பின்பற்றுவீர்கள். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். இதுவரை உங்களை அச்சுறுத்திய கடன் தொல்லையிலிருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும். திருமணத் தேதி குறித்து விட்டு பணத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நெருங்கிய உறவில் திருமண முயற்சி கைகூடும். வீடு, மனை தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த நற்செய்திகள் உங்களை திக்கு முக்காடச் செய்யும். வாரிசுகள் கல்வி, வேலை விசயமாக இடம் பெயர நேரும். ஆரோக்கிய குறைபாடு இருப்பவர்கள் உரிய மருத்துவரை அணுகினால் விரைவில் நிவாரணம் பெற முடியும்.
தொழில் துறையில் சில புதிய முதலீடுகள் செய்ய ஏற்ற நேரம். பல வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த சொத்துக்கள் விற்பனை யாகும். தையல் கலைஞர்களுக்கு வேலைப்பளு மிகுதியாகும். மன நிறைவான தீபாவளி போனஸ் கிடைக்கும்.புத்திர பாக்கியம் உண்டாகும். சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பீர்கள். கணவன் மனைவி ஒற்றுமை சீராகும்.சில விவாகரத்து தம்பதிகள் மீண்டும் சேரும் வாய்ப்பு உருவாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை
6.10.2024 முதல் 12.10.2024 வரை
விபரீதராஜயோகமான வாரம். ஆட்சி பலம் பெற்ற அஷ்டமாதிபதி சுக்ரனுடன் 4,7-ம் அதிபதி புதன் சேர்க்கை. மனைவி வழிச் சொத்தில் நிலவிய எதிர்ப்புகள் அகன்று முழுச் சொத்தும் கிடைக்கும்.உபரி வருமானம் கிடைக்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் நன் மதிப்பு,பெருமை உண்டாகும். சொத்துக்களுக்கு நல்ல வாடகைதாரர்கள் கிடைப்பார்கள். சொத்துக்க ளின் மதிப்பு உயரும். தொழிலில் கூட்டாளிகளிடம் கவனமாக செயல்படவும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும்.
முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும்.தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.ஆண் வாரிசுகளுக்கு விரும்பிய அரசு வேலை கிடைக்கும். 6.10.2024 அன்று மாலை 5.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலர் நண்பர்கள் போல் நடித்து காலை வாரி விடுவார்கள். பாக்கிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் தலைக்கு வந்தது தலைப் பாகையோடு சென்று விடும். சாமுண்டியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)
29.9.2024 முதல் 5.10.2024 வரை
விபரீதராஜயோகமான வாரம். அஷ்டமாதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் அதிர்ஷ்ட பணம், உயில் சொத்து, பினாமி சொத்து போன்ற எதிர்பாரத வரவு ஏற்படும். ராசிக்கு 7ல் சூரியன், கேது சேர்க்கை கிரகண தோஷம்.சிலருக்கு காதல் திருமணம் நடைபெறும். சிலருக்கு கூட்டுக் குடும்பம் அல்லது கூட்டுத் தொழிலில் பிரிவினை நடக்கும்.சிலர் கோபத்தால் நல்ல வாய்ப்புகளை தவற விட்டு பின் வருந்துவார்கள். தடைபட்ட புத்திர பிராப்தம் கிட்டும். வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய தொழில் கடன் கிடைக்கும்.
கோட்சார ரீதியான சர்ப்ப, செவ்வாய் தோஷத்தால் திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகலாம். கணவன், மனைவி ஒற்றுமையாக இருந்தாலும் மூன்றாம் நபரின் குறுக்கீடு நிம்மதி யின்மையை ஏற்படுத்தும் என்பதால் பிறரின் நயவஞ்சக பேச்சை நம்பக்கூடாது. வாடகை வீட்டுத் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும். 4.10.2024 அன்று காலை 5.05 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால வீண் அலைச்சல்கள், விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஞாபகமறதி உண்டாகும். அமாவாசையன்று அந்தணர்களின் தேவையறிந்து உதவவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் (22.9.2024 முதல் 28.9.2024 வரை)
22.9.2024 முதல் 28.9.2024 வரை
சுகமான வாரம். ராசிக்கு சூரியன், மற்றும் உச்ச புதன் பார்வை இருப்பதால் நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தெளிவான முடிவுகள் கிடைக்கும்.தோற்றம் பொலிவு பெறும். சிந்திக்கும் திறன் கூடும். எதிலும் தனித் திறமையுடன் செயல்படுவீர்கள். பொருளாதார ஏற்றம், எதிர்பாராத தனலாபம் உண்டு. அஷ்டமாதிபதி சுக்ரன் ஆட்சி செய்வதால் காப்பீடு சார்ந்த லாபம் அதிகரிக்கும். சிலர் புதிய பாலிசி எடுக்கலாம். எதிர்கால தேவைக்காக முதலீடு செய்வீர்கள். பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் ஏற்படும்.
கண், காது, மூக்கு மற்றும் சுவாச உறுப்புகள் தொடர்பான பிரச்சினைகள் மாற்று மருத்துவத்தில் அறுவை சிகிச்சையில் குணமாகும். மனைவி வழி சொத்திற்காக மாமனாரிடம் கருத்து வேறுபாடு, வம்பு வழக்கு தோன்றும். சிலர் குழந்தையை தத்து எடுக்கலாம். பங்குதாரருடன் இணைந்து தொழிலுக்கு சொந்தமான இடம் வாங்க ஏற்ற நேரம். புதுவிதமான இடங்களுக்கு சுற்றுலா சென்று வருவீர்கள். திருமண வயதினருக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். பெண்களுக்கு மாங்கல்ய தோஷம் அகலும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். கொண்டைகடலை தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)
15.9.2024 முதல் 21.9.2024 வரை
சுமாரான வாரம்.அஷ்டமாதிபதி சுக்ரன் ஆட்சியால் ஞாபக சக்தி கூடும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். நல்ல உணவு ,விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். உடன் பிறந்தவர்களின் உதவியால் பொருளாதார நிலைகள் உயரும். புதிய வீடு போன்ற அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கு முன், அதற்குரிய மூலப் பத்திரங்கள், வில்லங்க விவகாரங்கள், பட்டா போன்ற ஆவணங்களை ஆராய்ந்து வாங்குவது நல்லது. சிறு தொழில் புரிபவர்களுக்குத் தேவையான வங்கிக் கடன் கிடைத்து தொழிலை விரிவாக்கம் செய்யலாம்.
இடமாற்றம் தொடர்பான எண்ணம் அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் பொதுச்சுவர், காம்பவுண்ட சுவர் தொடர்பான பிரச்சனையால் மன உளைச்சல் அதிகரிக்கும்.பொறாமையால், கண்திருஷ்டியால் நண்பர்களே பகைவராவார்கள்.சிறு சிறு உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு விபரீத ராஜ யோகமாக அதிர்ஷ்ட பணம், பொருள் உயில் சொத்து கிடைக்கலாம்.மனதில் எதிர்காலம் பற்றிய கற்பனை பயம் அதிகரிக்கும். சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை
சிந்தனைகளின் போக்கில் தெளிவான மாற்றங்கள் உண்டாகும் வாரம். அஷ்டமாதிபதி சுக்ரன் நீசம். புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். திருமண முயற்சிகள் வெற்றியில் முடியும்.
குரு மற்றும் ராகு கேதுக்கள் சொத்துகள் தொடர்பான விசயத்தில் சிறு மன உளைச்சலைத் தரலாம். சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ப வீடு, வாகன முயற்ச்சியில் ஈடுபடுவது நல்லது. மாணவர்கள் கல்விக்காக வெளியூருக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். கண் திருஷ்டி, போட்டி,பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். கடன் பிரச்சனைகளால் மனவருத்தங்கள் ஏற்படும்.
9.9.2024 காலை 11. 28 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. உடன் பிறந்த சகோதரர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கவும். ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும். உணவு கட்டுப்பாட்டு டன் நிதானமும் பொறுமையும் தேவை. சிவனுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)
1.9.2024 முதல் 7.9.2024 வரை
எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாய் 4ம்மிடமான சுக ஸ்தானம் செல்கிறார். குடும்பத்தில் நிலவிய கூச்சல் குழப்பம் மறைந்து அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். சொத்துக்களின் மதிப்பு உயரும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டிற்கு செல்லலாம். தடைபட்ட வாடகை வருமானம், நிலுவையில் உள்ள சம்பள பாக்கி, வராக்கடன்கள் கிடைக்கும்.அரசு வேலைக்கான வாய்ப்பு உள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும்.
சமூக அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி முயற்சிகளில் நன்மைகள் நடைபெறும். பெண்களுக்கு ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்போடு சுப காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். 6.9.2024 இரவு 11 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிக்கிறது.சற்று பொறுமையோடும் கவனத்தோடும் இருப்பது நல்லது. இரவு நேர பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது. மஞ்சள் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)
25.8.2024 முதல் 31.8.2024 வரை
சிந்தனைகளில் தெளிவு பிறக்கும் வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாய் சுக ஸ்தானத்தில் சஞ்சாரம். அடிப்படை வாழ்வாதாரத்திற்குப் போராடியவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். பிள்ளைகளுக்கு கல்வியில் நாட்டம் உண்டாகும். நிலுவையில் உள்ள சம்பளபாக்கி கணிசமான தொகையாகச் சேர்ந்து கிடைக்கும். சிலருக்கு தந்தையின் வாரிசு அரசு வேலை கிடைக்கும். சிலர் வாரிசுகளை தங்களின் தொழில், வியாபாரத்தில் ஈடுபடுத்தி ஆனந்தம் அடைவார்கள். குழந்தை பாக்கியம் உன்டாகும்.சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் உண்டாகும். உறவுகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.
மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டினை மாற்றி அமைப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான சூழல் உண்டாகும். 6-ம் அதிபதி சூரியன் ஆட்சி செய்வதால் முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் சிறு மனஸ்தாபம் ஏற்பட்டு விலகும்.ஆரோக்கிய பிரச்சினைகள் குறையும். எதிர்பாலினத்த வரிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். சித்தர்க ளின் வழிபாட்டில் ஆர்வம் கூடும். நெய் தீபம் ஏற்றி கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் (19.8.2024 முதல் 25.8.2024 வரை)
19.8.2024 முதல் 25.8.2024 வரை
நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய வராம். 6-ம் அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்று அஷ்டமாதிபதி சுக்ரனுடன் சேர்க்கை பெறுவதால் வரவு செலவில் கவனம் தேவை.வேலை இழந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் திறமை மிக்க செயல்பாடுகள் பாராட்டப்படும். இரக்க குணத்தால் தான தர்மங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை உணர்வு உண்டாகும். மூத்த சகோதரர் வழி ஆதாயம், திடீர் அதிர்ஷ்டம், கவுரவப் பதவிகள், மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். நல்ல மாற்றங்கள் வந்து சேரும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும்.
ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.புதிய பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம். மனைவி வழி சொத்திற்காக மாமனாரிடம் கருத்து வேறுபாடு, வம்பு வழக்கு தோன்றும்.பெண்கள் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். எல்லா வசதிகளும் இன்பமும் இருந்தாலும் ஏதாவது மனக்குறை உங்களை வாட்டும். செவ்வாய் கிழமை சுப்ரமணிய புஜங்கம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)
12.8.2024 முதல் 18.8.2024 வரை
உற்சாகமான வாரம்.வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அதி கரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தரும். தொடர்ச்சியான லாபத்தால் அதிக முதலீடின்றி வியாபாரம் பெருகும். கூட்டாளிகள் நட்பால் ஆதாயம் உண்டு. வார இறுதியில் வாழ்க்கையின் பல முக்கி யமான விஷயங்களை குடும்ப உறுப்பினர்களுடன் உட்கார்ந்து பேசி முடிவு எடுக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் வார்த்தைகள் குடும்பத்தினரை காயப்படுத்தலாம். உரிமையை விட உறவுகளே முக்கியம் என்பதை உணர்ந்து பேசவும். பெண்கள் ஆடம்பர பொருட்கள் வாங்கி வீட்டை அழகு படுத்துவார்கள்.
சொத்துகளை புதுபித்து பராமரிப்பு பணியில் ஈடுபடுவீர்கள்.குழந்தை பாக்கியம் கிடைக்கும்.புதிய முதலீடுகள் குறித்த தீர்க்கமான திட்டமிடுதல் அவசியம். சிறு சிறு பிரச்சினைகள் தோன்றலாம். 13.8.2024 அன்று அதிகாலை 4.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய குடும்ப பிரச்சினைகளை மத்தியஸ்தர்களிடம் பேசும் போது வாயைக் கொடுத்து மாட்டக்கூடாது. வரலட்சுமி பூஜையன்று ஜீவ ராசிக்கு உண விடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)
5.8.2024 முதல் 11.8.2024 வரை
முயற்சிகள் பலிதமாகும் வாரம்.ராசி அதிபதி குரு 2,9-ம் அதிபதி செவ்வாயுடன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்பட்டுத் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். சீரான பொருளாதார முன்னேற்றத்தால், மனதிற்குப் பிடித்தபடி மனை, வண்டி வாகனம் என அனைத்தும் அமையும். மாணவர்களின் உயர் கல்வி முயற்சி சித்திக்கும். கண் சிகிச்சை பலன் தரும். சிலருக்கு அரசாங்க வேலை கிடைக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கிய குறைபாடு சீராகும்.
தடைபட்ட பணி மாற்றம், ஊதிய உயர்வு, இடமாற்றம் இப்பொழுது உங்களை மகிழ்விக்கும். குடும்பத்துடன் பூர்வீகம் சென்று வரும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைப்பேறு, புதிய தொழில் வாய்ப்புக்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள், யோகங்கள், புண்ணிய தல தரிசனங்கள் கிடைக்கும். 10.8.2024 அன்று மாலை 4.15 மணிக்கு சந்திராஷ்டமம் துவங்குவதால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் அவமானம் நேரிடும் கவனமாக இருங்கள். ஆடிப்பூரத்தன்று பஞ்சாமிர்த அபிசேகம் செய்து அம்மன் வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406