என் மலர்
மீனம் - வார பலன்கள்
மீனம்
இந்தவார ராசிபலன்
29.7.2024 முதல் 4.8.2024 வரை
மனோ தைரியம் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி குருவும், தன அதிபதி மற்றும் பாக்கிய அதிபதி செவ்வாயும் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் ஏற்பட்ட தடைகள், கால தாமதங்கள் விலகும். ஞாபக சக்தி கூடும்.வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். தெய்வ நம்பிக்கை அதிகமாகும். சொத்துதகராறு, பாகப்பி ரிவினை போன்றவற்றால் ஏற்பட்ட மன சஞ்சலம் விலகும். பேச்சில் நிதா னத்துடன் இருந்து உடன் பிறந்தவர்களை அனு சரித்துச் சென்றால் நிம்மதி நீடிக்கும்.தொழில் வளர்ச்சி பொருளாதார வளர்ச்சி சீராகும். இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும்.
கடனால் ஏற்பட்ட அவமானங்கள் குறையும். மாதச் சம்பள தாரர்களுக்கு தொடர்ந்து வந்த பற்றாக்குறை பட்ஜெட் பிரச்சினை தீரும்.வெற்றியின் திசையை நோக்கி பயணிக்க துணிவீர்கள். தங்களை மாய்த்துக் கொள்ள துணிந்தவர்கள் கூட மனம் மாறுவார்கள். தொழிலில் இருந்த தடைகள் மெதுவாக விலகி மறுபடியும் துளிர்க்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் நிலவிய அவஸ்தைகள் குறையும். செல்போன் நெட் வொர்க் மாற்றலாம். ஆடிப் பெருக்கு அன்று உணவு தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்தவார ராசிபலன்
22.7.2024 முதல் 28.7.2024 வரை
கவனமாக இருக்க வேண்டிய வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் இடத்தில் 6-ம் அதிபதி சூரியன் மற்றும் அஷ்டமாதிபதி சுக்ரன். தன்னம் பிக்கை குறையும். உடல் நலத்திலும் அக்கறை காட்டவும். உடன்பிறந்தோர் வழியில் கருத்து வேறுபாடு தோன்றும்.அநாவசியமான விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உயர் அதிகாரிகளிடம் வாக்குவாதங்களில் ஈடுபடாதீர்கள்.பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் மிகுதியாக இருக்கும். புதிய தொழில் முதலீட்டை தவிர்க்கவும்.
அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக்கால் வைக்காதீர்கள். வியாபாரிகள் அதிக லாபத்தை எதிர்பார்த்து வீண் கடன் தொல்லைகளுக்கு ஆளாக வேண்டாம். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்யுங்கள். சிலர் காதல் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. சுபமங்கல காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். பெண்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு அதிர்ஷ்ட பொருள். பணவரவு, உயில் சொத்து, பாலிசி முதிர்வு தொகை கிடைக்கும். ஆடி வெள்ளிக்கிழமை துர்க்கையை வழிபட இன்னல்கள் விலகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்தவார ராசிபலன்
15.7.2024 முதல் 21.7.2024 வரை
அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும் வாரம். ராசி அதிபதி குரு 2,9ம் அதிபதி செவ்வாயுடன் இணைந்து சகாய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். தொழில்துறையில், வேலையில் போட்டி, பொறாமை, இடையூறு, இன்னல்கள் இருந்தாலும் எந்த பாதிப்பும் இல்லாமல் எல்லாம் நிறைவாக நிறைவேறும். உத்தியோகத்தில் உங்கள் நிலை மேம்படும். பணியில் இருப்பவர்கள் தேவையான நேரத்தில் வேகமாக செயல்படுவதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டு பெறமுடியும். பாகப்பிரிவினை சுமூகமாகும். ஜாமீன் வழக்குகள் சாதகமாகும். உறவுகளிடம் நிலவிய கவுரவப் போராட்டம் விலகி ஒற்றுமை பலப்படும்.
சனி வக்ரம் பெறுவதால் ஏழரை சனியால் நீங்கள் அனுபவித்த துன்பம், துயரத்திலிருந்து விடுதலை கிடைக்கப் போகிறது. 16.7.2024 அன்று மாலை 7.51 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். விலை உயர்ந்த உடமைகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். சின்ன மாரியம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்தவார ராசிபலன்
8.7.2024 முதல் 14.7.2024 வரை
நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசி அதிபதி குருவும் 2,9-ம் அதிபதி செவ்வாயும் 3-ம் இடமான உப ஜெய ஸ்தானத்தில் சேர்க்கை பெறுகிறது. எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். ஊர் மாற்றம், நாடு மாற்றம் அல்லது வீடு மாற்றம் நடக்கும்.சமுதாய மரியாதை கிடைக்கும்.குலத் தொழிலில் இருப்பவர்களுக்கு தந்தையின் முழுமையான ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும்.பல காலமாக சொற்ப சம்பளத்தில் வேலை பார்த்தவர்களுக்கு விசேஷமான சம்பள உயர்வு உண்டு. சிலர் உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு புதிய தொழில் துவங்கலாம்.
பூர்வீக சொத்து மீதான வழக்குகள் சமாதனமாக பேசி முடிக்கப்படும். பெண்களின் நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள், ஆசைகள் நிறைவேறும்.சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு. கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட சந்தர்ப்பம் கிடைக்கும். 14.7.2024 அன்று காலை 8.43 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கிய காரியங்கள் இழுபறியாகும். பிறர் விசயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். அரசின் சட்ட திட்டங்களை மதித்து நடக்கவும். மகா விஷ்ணுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்தவார ராசிபலன்
1.7.2024 முதல் 7.7.2024 வரை
எதிர்பாராத புதிய திருப்பங்கள் உண்டாகும் வாரம். சனி பகவான் வக்ரம் பெற்றதால் ஏழரைச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். பய உணர்வு, நோய் தாக்கம், சொத்துக்களால் பயனற்ற நிலை, வறுமை, உறவுகளால் ஏற்பட்ட மன வேதனை போன்ற பாதிப்புகள் விலகும். செயற்கை முறை கருத்தரிப்பை நாடியவர்களுக்கு குலதெய்வமே குழந்தையாகப் பிறக்கும். அலுவலகத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலையாட்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் சாதகமாகும். தொழில் முன்னேற்றமும் லாபமும் மகிழ்சியைத் தரும். எதிர்காலத் தேவைக்காக திட்டமிடுவீர்கள்.
வாழ்க்கை துணைக்கு விரும்பிய உத்தியோக உயர்வு உண்டு. தாயின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சுப விசேஷங்கள் நடக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதை உறுத்திய பிரச்சினைகளுக்கு தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.சிலருக்கு பல் தொந்தரவு ஏற்படலாம். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர்கல்வி முயற்சி வெற்றி தரும். சனிக்கிழமை ராகு வேளையில் காளியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்தவார ராசிபலன்
24.6.2024 முதல் 30.6.2024 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம். சனி வக்ரம் பெறப் போவதால் ஆசைகளால் மனம் அலைபாயும். குடும்ப ஸ்தானத்தை சனி பார்த்ததால் ஏற்பட்ட வழக்குகளால் நிம்மதி மனத் தடுமாற்றம் சீராகும். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி பெறுவதால் குடும்ப உறுப்பினர்கள் உங்களுடைய வேகமான செயல்பாடுகளுக்கு துணையாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். விவசாயிகளுக்கு அரசு வழி ஆதாயம் உண்டு. பேச்சை மூலதனமாக கொண்ட வக்கீல்கள், ஆசிரியர்கள், விற்பனை பிரதிநிதிகள் ஏற்றம் பெறுவார்கள். பங்கு வர்த்தகத்தில் ஏற்றமான நிலை நீடிக்கும்.
வேற்று மதத்தினர் ஆதரவால் புதிய தொழில் வாய்ப்பு கிட்டும். உபரி பணத்தை பூமி, வயலில் முதலீடு செய்வீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் அனுமதி கிடைக்கும்.திருமணம் நடக்கும்.குடும்பத் தேவைக்கு ஏற்ற சரளமான பணப்புழக்கம் உண்டு. சிலர் ஒப்பந்த வேலைக்காக வெளிமாநிலம் செல்லலாம். மூத்த சகோதர சகோதரிக்கு வேலை கிடைக்கும். சிலர் காசி, கயா போன்ற தலங்களுக்கு தீர்த்த யாத்திரை சென்று வரலாம்.மாணவர்களின் கல்வி ஆர்வத்திற்கு பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். குரு பகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்தவார ராசிபலன்
17.6.2024 முதல் 23.6.2024 வரை
செயலில் ஏற்றம், சிந்தனையில் மாற்றம் ஏற்படும் வாரம். ஆட்சி பலம் பெற்ற சுக ஸ்தான அதிபதி புதனுடன் அஷ்டமாதிபதி சுக்ரன் மற்றும் ருணரோக சத்ரு ஸ்தான அதிபதி சூரியன் சேருவதால் தாய் வழி உறவுகளுடன் மன பேதம் ஏற்படலாம். சிலர் கோபத்தால் நல்ல வாய்ப்புகளை உறவுகளை இழக்க நேரும். தந்தை வழி உறவுகளிடம் இருந்த சங்கடங்கள், பிரச்சினைகள் விலகி ஆதரவு உண்டாகும்.தொழில், உத்தியோக ரீதியான வழக்கின் தீர்ப்பு சாதகமாகும். தொழில், உத்தியோகம் காரணமாக சிலரின் தந்தை குடும்பத்தை பிரிந்து வெளியூர் செல்லலாம்.
கணவன் மனைவியிடம் ஒற்றுமை அதிகரிக்கும்.குல தெய்வ கோவில் மற்றும் ஆலயத் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டில் வசிக்கும் சிலர் விடுமுறைக்கு பூர்வீகம் வந்து செல்லலாம். 19.6.2024 பகல் 11.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிக முதலீடுகள் கொண்ட தொழில் நடத்துபவர்கள் சற்று நிதானத்துடன் செயல்படவும். கோபத்தால், தெளிவற்ற சிந்தனையால் நல்ல வாய்ப்புகளை தவற விடலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பவுர்ணமியன்று சித்தர்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்தவார ராசிபலன்
10.6.2024 முதல் 16.6.2024 வரை
தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம். தன ஸ்தான அதிபதி, பாக்கியாதிபதி செவ்வாய் ஆட்சி.மன வலிமை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபிட்சமும் உண்டாகும். மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பணம் பல வழிகளில் தேடி வரும். அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். வீடு, வாகனயோகம், குழந்தைப்பேறு, திருமணம் போன்ற பாக்கிய பலன்கள் கைகூடும். உத்தியோகத்தில் திறமையாக செயல்படுவீர்கள். பணி நிரந்தரமாகும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலை மாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.
தந்தை வழி உறவினர்கள் மூலம் சொத்து கிடைக்கும். இருப்பிடம் மாறுதல் செய்யலாம். திருமண முயற்சி கை கூடும். மேற்படிப்பு முயற்சி வெற்றியாகும்.ராசி அதிபதி குரு சகாய ஸ்தானத்தில் நிற்பதால் ஏழரைச் சனியின் தாக்கத்தால் சற்று குழம்பினாலும் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியைத் தரும். வீண் செலவுகளை குறைத்து வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு நிதானமாக செயல் பட்டால் கடன் சுமை குறையும். உடல் உபாதைகள் அகலும். வைத்தியம் பலன் தரும். சனிக்கிழமை உடல் ஊனமுற்றவர்களின் தேவையறிந்து உதவ நன்மைகள் மிகுதியாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்தவார ராசிபலன்
3.6.2024 முதல் 9.6.2024 வரை
மனக்குழப்பம் அகலும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுவதால் எந்த ஒரு காரியத்திலும் துணிந்து இறங்கி செயல்பட்டு வெற்றி பெறும் தைரியம் உருவாகும்.உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள். தொழில் வளம் சிறக்கும். நிம்மதியாக தொழிலை நடத்துவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். திடீர் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. அலு வலகத்தில் உங்கள் மேல் சுமத்தப்பட்ட பழிகள் விலகும். சகோதரர்களை அனுசரித்துச் செல்வது அவசியம்.
அஷ்டமாதிபதி சுக்ரன் ஆட்சி பெற்றதால் சில காரியத்தடைகள் எதிர்கொள்ள நேரும் இந்த நாட்களில் உங்கள் பணத்தை மிகவும் கவனமாக வைத்துக்கொள்ள வேண்டும். சில விவசாயிகள் எல்லை தகராறு பிரச்சினைக்காக நீதி மன்றம் செல்ல நேரும். வாழ்க்கைத் துணைக்கு இடமாறுதலுடன் வேலை கிடைக்கும். தாய் வழிச் சொத்தை விற்பதில் உங்கள் முயற்சிகளுக்கு உறவினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். சொத்து விற்பனையில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அமாவாசையன்று சித்தர்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசி பலன்
27.05.2024 முதல் 02.06.2024 வரை
செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும் வாரம். 2,9ம் அதிபதி செவ்வாய் வார இறுதியில் ஆட்சி பலம் பெறுகிறார். இது மீனத்திற்கு சுப பலனை இரட்டிப்பாக்கும் அமைப்பாகும். வேற்று மொழிப்புலமை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் ஒற்றுமை மேம்படும். குடும்பத்திற்கு புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கை நழுவிச் சென்ற தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகமாகும். ஏழரைச் சனி மற்றும் ராசியில் உள்ள ராகு 7ல் உள்ள கேது தாக்கத்தால் சிலர் கூட்டுக் குடும்பத்தில் பிரிந்து தனிக்குடித்தனம் செல்வார்கள். திருமண வரன் பற்றி தெளிவாக விசாரித்து முடிவு எடுக்கவும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்தவார ராசிபலன்
20.5.2024 முதல் 26.5.2024 வரை
அமைதி நிறைந்த வாரம். ராசியில் 2,9-ம் அதிபதி செவ்வாய் ராகுவுடன் சேர்க்கை. திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும் சிந்தனைகளும் பலிதமாகும். தொழில், வியாபாரம் போன்ற அனைத்திலும் முன்னேற்றம் உண்டாகும். பொருளாதார மாற்றதால் மேன்மையை அடைவீர்கள். அலுவலக பணிகள் சுமூகமாகும். பணி நெருக்கடிகள் அகலும். வழக்கு–கள் சாதகமாகும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு முன்னேற்றமான பலன்கள் நடைபெறும். மாணவர்கள் சாமர்த்தியமும் அறிவுத் திறமையையும் வெளிப்படும். உயர்கல்வி முயற்சி சித்திக்கும்.
மனைவி வழிச் சொத்து மற்றும் பூர்வீகச் சொத்தில் நிலவிய மன சஞ்சலம் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியான மங்கள நிகழ்வுகள் நடக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் எண்ணங்களை புரிந்து கொள்வார்கள்.உடல் நிலை மன நிலை தேறும். 20.5.2024 அன்று மாலை 4.34 மணி முதல் 23.5.2024 அன்று காலை 2.55 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எடுத்த செயல்கள் சிறு தடை, தாமதத்திற்கு பிறகு ஈடேறும். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் ஏற்படலாம். குரு பகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்தவார ராசிபலன்
13.5.2024 முதல் 19.5.2024 வரை
லாபகரமான வாரம். தன ஸ்தானத்தில் புதன், சுக்ரன் சேர்க்கை லாப ஸ்தானத்திற்கு குரு பார்வை என தன லாப ஸ்தானம் பலம் பெறுவதால் வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். தொழில் போட்டி, பொறாமை, மறைமுக எதிர்ப்புகள் யாவும் விலகும். தொழில் நிமித்தமான வெளியூர், வெளிநாட்டு பயணங்களில் ஆதாயம் கிட்டும். பதவியில் நிலவிய குளறுபடிகள் நீங்கும். வேலை மாற்றத்திற்கான விருப்பம் நிறைவேறும். அரசியல் பிரமுகர்கள், ஆசிரியர்கள், ஆலோசகர்கள், நிர்வாகிகள், ஜோதிடர்கள், ஊடகத்தில் பணிபுரிபவர்களுள் சாதகமான பலன் நடக்கும் .
மனதில் அமைதி குடிபுகும். வீடு மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.விவாகரத்து வரை சென்ற குடும்ப வழக்கு சீராகும். தங்க ஆபரணச் சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். புதிய ஆயுள் காப்பீடு, மெடிக்லைம் பாலிசிகள் எடுக்க உகந்த நேரம். அலுவலகத்தில் விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் அழைப்பு வரும். வீட்டில் தங்கம் தங்கும். குருபகவானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406