search icon
என் மலர்tooltip icon

    மீனம் - வார பலன்கள்

    மீனம்

    இந்த வார ராசிபலன்

    6.5.2024 முதல் 12.5.2024 வரை

    சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசி மற்றும் 10-ம் அதிபதி குரு முயற்சி ஸ்தானமான 3-ம்மிடத்தில் சஞ்சரிப்பதால் திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி உண்டாகும்.

    நல்ல தொழில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். தொழில் தொடர்பானவர்களுடன் நல்லிணக்கம் உண்டாகும். வேலையில் உள்ளவர்க ளுக்கு இடமாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். கடன் சுமையை குறைக்க புதிய வழிகள் தென்படும்.அரசாங்க வேலை முயற்சி வெற்றி தரும். பெண்களுக்கு கணவன் வழி உறவினர்களின் ஆதரவு உண்டு.

    7-ம் இடத்தை குரு பார்ப்பதால் களத்திர தோஷம் நீங்கி திருமணத்தடைகள் விலகும். உங்கள் குடும்பத்திற்கு நல்ல மருமகள், மருமகன் அமைவார்கள். சிலரின் சுய விருப்ப விவாகம் நிறைவேறும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கலாம். அமாவாசை அன்று தண்ணீருடன் இட்லி தானம் வழங்குவது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிபலன்

    29.04.2024 முதல் 05.05.2024 வரை

    வெற்றி மேல் வெற்றி உண்டாகும் வாரம் . ராசி மற்றும் பத்தாம் அதிபதி குரு முயற்சி ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேறும். எதிர்காலம் பற்றிய பயம் அகலும். தைரியம், தன்னம்பிக்கை அதிகமாகும். புதிய தொழில் வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.

    சிலர் ஒப்பந்த வேலைக்காக வெளிமாநிலம் செல்லலாம். சிலர் கிடைக்கும் லாபத்தை மறுமுதலீடு செய்வார்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களை சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். வாழ்க்கை துணைக்கு பதவி உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளுக்காக சுப செலவு செய்ய நேரும். மருமகள், மருமகன் பூர்வீகச் சொத்து பிரிவினையில் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

    பூர்வீகச் சொத்தில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். 6-ம் அதிபதி சூரியன் உச்சம் பெறுவதால் கடன் பெறுவதையும், கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேற்று இன மத நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். வெள்ளிக்கிழமை ஸ்ரீ வரலட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    22.4.2024 முதல் 28.4.2024 வரை

    குடும்ப நிலை உயரும் வாரம்.2,9ம் அதிபதி செவ்வாய் ராசிக்குள் நுழைகிறார். சுக்ரன் தன ஸ்தானம் செல்கிறார்.தன வரவு சிறப்பாக இருக்கும்.செலவுகள் குறைந்து சேமிப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும்.வேலை மற்றும் தொழிலில் மன நிறைவு உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டு தொழில் அல்லது வேலை வாய்ப்பு கிடைக்கும். பெற்றவர்கள், பெரியவர்களின் நல்லாசியுடன் திருமணம் நடக்கும். அழகிய, ஆடம்பர விலையுயர்ந்த வெளிநாட்டு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள் வீடு வாகன யோகம் சிறப்பாக அமையும்.

    பெண்கள் அமைதியாக குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவார்கள். ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். 23.4.2024 அன்று காலை 9.18 மணி முதல் 25.4.2024 இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட சிறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க கூடாது. சித்ரா பவுர்ணமியன்று கோது மையால் செய்யப்பட்ட உணவுகளை தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    15.4.2024 முதல் 21.4.2024 வரை

    எண்ணிய காரியங்கள் நிறைவேறும் வாரம். ராசியில் அஷ்டமாதிபதி சுக்ரன் ராகு சேர்க்கை. இது அதிர்ஷ்டத்தை அதிகரிக்க கூடிய கிரக அமைப்பு. ஆரோக்கியம், ஐஸ்வர்யம் ஆகியவற்றை அதிகரிக்க போகிறது. புத்திர பிராப்தம் இல்லாதவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறக்கும்.பிரிந்து வாழும் தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். தொழில் ஆதாயம் உண்டு. வழக்கமான பணிகள் இயல்பாக நடக்கும்.

    பொருளாதாரம் சீராக இருக்கும். வரவும், செலவும் உண்டு. வாகன வசதிகள் மேம்படும். புதிய பொருட்சேர்க்கை மகிழ்ச்சி தரும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். கணவன், மனைவி ஒற்றுமை மேலோங்கும். பெண்களுக்கு மிகச் சாதகமான நன்மைகள் உண்டாகும். முக்கிய நிர்வாகப் பொறுப்புகளை வேலையாட்களிடம் ஒப்படைக்கும் முன்பு பல முறை யோசிக்கவும்.

    சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தடைபட்ட வாடகை வருமானம் வந்து சேரும். உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். வீடு, வாகனம் போன்ற சுப செலவுகளுக்கு மாமனாரிடம் இருந்து கணிசமான தொகை கிடைக்கும். உடல் அசதி, அசவுகரியம் மற்றும் பொருள் விரயத்தில் இருந்து விடுபட தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    8.4.2024 முதல் 14.4.2024 வரை

    சுமாரான வாரம். ஆறாம் அதிபதி சூரியன் உச்சம் பெற்று 3, 8-ம் அதிபதி சுக்ரனுடன் சேர்க்கை பெற்றதால் மனபலம், தைரியம் வெற்றியைத் தரும். அறிவாற்றலால் சாதிக்க வேண்டிய நேரம். குரோதி வருட தமிழ் புத்தாண்டு பிறந்தவுடன் ராசியை விட்டு சூரியன் நகர்ந்து விடுவார். கடனால் ஏற்பட்ட பிரச்சி னைகள் குறையத் துவங்கும். வேலைக்காக ஊர்மாற லாம் அல்லது வீடு மாறலாம். போலி பத்திரம், போலி கையெழுத்து போன்றவற்றால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும்.அண்டை, அயலாருடன், பக்கத்து நிலத்தினருடன் நிலவிய எல்லைத் தகராறு முடிவிற்கு வரும். ராசி அதிபதி குரு முயற்சி ஸ்தானத்தை நோக்கி முன்னேறிக் கொண்டு இருக்கிறார்.

    கடந்த சில மாதங்க ளாக ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும் நேரம் வந்துவிட்டது. எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் நிதானமாக சிந்தித்து வேரறுப்பீர்கள். ஏற்ற இறக்கங்களை சமாளித்து வெற்றி வாகை சூடுவீர்கள்.பெண்களின் திறமைகள் பாராட்டப்படும் போற்றப்படும். பெண்க ளுக்கு தாய் வழி சொத்து பிரச்சினை முடிவிற்கு வரும். வருமானமின்றி கஷ்டப்பட்ட சிறு கலைஞர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும.சிலர் ஆடம்பர வீடு கட்டிச் செல்வார்கள். குல தெய்வத்தை சரணாகதியடைந்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    1.4.2024 முதல் 7.4.2024 வரை

    ராசியில் ராகு அஷ்டமாதிபதி சுக்ரன் மற்றும் ருண, ரோக, சத்ரு ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை. சூரியன் ராகு சம்பந்தம் கிரகண தோஷம் அமைப்பு இருப்பதால் நோய், நொடி, கடன், எதிரி தொல்லை உத்தியோக மற்றம் ஏற்படுத்தக்கூடிய அமைப்பு ஆகும். சுக்ரன் ராகு சேர்க்கை வம்பு. வழக்கு, அவமானம், சர்ஜரி போன்ற அசவுகரியத்தை உருவாக்கும் கிரக அமைப்பு. வெளித் தோற்றத்தில் நன்றாக தெரியும் மீன ராசியினர் எளிதில் தங்கள் பிரச்சினைகளை பிறருடன் பகிரும் வழக்கமில்லை. ஆனால் மனதளவில் மிகுந்த பலவீனத்தினர். தற்போது கோட்சாரத்தில் ராசியில் உள்ள கிரகங்களின் சஞ்சாரம் மிகச் சுமாராக உள்ளதால் அதிக கோபம் மற்றும் மன அழுத்த பாதிப்பு உருவாகும். அது அதிகம் பாதிப்பை ஏற்படுத்தும்.

    அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறுபவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்க ருண, ரோக, சத்ரு ஸ்தான இயக்கம் மட்டுப்படும். சூரியனும் சுக்ரனும் மீனத்தை கடக்கும் வரை அன்றாட இயல்பான பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். வம்பு வழக்குகளை ஒத்தி வைக்கவும். ஸ்ரீ ராமானுஜரை வழிபட மன பாரம் குறையும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    25.3.2024 முதல் 31.3.2024 வரை

    சுமாரான வாரம். ராசியில் ராகு உச்சம் பெற்ற அஷ்டமாதிபதி சுக்ரன் மற்றும் ஆறாம் அதிபதி சூரியனுடன் சேர்க்கை இருப்பதால் வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளத்தில் பயமே மேலோங்கி நிற்கும்.சிலர் பழைய வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடுவார்கள். நீங்கள் செய்யும் வேலைக்கான பாராட்டை வேறொருவர் பெறுவார். அரசியல் வாதிகள் வெளிவட்டார செல்வாக்கை அதிகரிக்க ஆடம்பரமாகச் செலவு செய்வார்கள். தம்பதிகளிடம் கருத்து வேறுபாடு தோன்றலாம். அவ்வப்போது சிற்சில வாக்குவாதங்கள் பிரச்சினைகள் தோன்றினாலும் ஒற்றுமை பாதிக்காது. எதிர் பாலினத்தவரிடம் கவனமாக பழகவும். திருமண முயற்சியை ஓரிரு வாரங்களுக்கு ஒத்தி வைக்கவும்.

    சில முக்கிய சம்பவங்கள் பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் முடிவில் நன்மையாகவே இருக்கும். 27.3.2024 அன்று காலை 2.56 மணி முதல் 29.3.2024 அன்று மதியம் 2.09 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தகவலை நம்பி வங்கிக் கணக்கு எண்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. சிவ கவசம் படித்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    18.3.2024 முதல் 24.3.2024 வரை

    அமைதி காக்க வேண்டிய நேரம். 6-ம் அதிபதி சூரியன் ராசியில் நிற்பதால் எதிரிகளை வெல்லும் சாதுர்யம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு எதிரிகளை புறமுதுகு காட்டச் செய்ய உகந்த நேரம். அதே நேரத்தில் அடக்கமாக அமைதியாக இருப்பவர்களுக்கு கிரகங்கள் துணை நிற்கும்.ஆணவம் தலைக்கணத்தோடு இருப்பவர்களுக்கு தக்க பாடம் புகட்டும். இப்பொழுது 6-ம் அதிபதி சூரியன் ராகுவுடன் ராசியில் நிற்பதால் செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைவீர்கள். இடப் பெயர்ச்சியால் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும்.

    அதனால் குடும்பத்தில் நல்லிணக்கம் உருவாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். நன்மைகளே மிகுதியாக நடக்கும், எனினும் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பங்குனி உத்திர நாளில் குல தெய்வத்தை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    11.3.2024 முதல் 17.3.2024 வரை

    ஆனந்தமான வாரம். 6-ம் அதிபதி சூரியன் ராசியில் நீச்ச புதன் மற்றும் ராகுவுடன் நிற்பதால இது வரை நீங்கள் அலுவலகத்தில் விரும்பி எதிர் பார்த்த பணி உங்களுக்கு வழங்கப்படும். உத்தியோ கம் அல்லது தொழில் மாற்றங்களை சந்திக்க நேரும். தொழில் கூட்டாளி சேர்க்கை மற்றும் புதிய ஒப்பந்தங் களில் கவனம் தேவை. அரசியல் தொடர்புடையவர்க ளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு நடைபெறும். தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும். வழக்கு விவகா ரங்களில் இழுபறி யான சூழல் உண்டாகும். சொத்துக்கள் சேர்க்கை அதிகரிக்கும். சொத் துக்களின் மதிப்பு உயரும்.

    தேடிச் செல்லும் அன்பு நிலையற்றது, தேடி வரும் அன்பே நிலையானது என்பதை உணர்வீர்கள். வேதனைகளை விரட்டி சாதனைகளாக மாற்றும் சிந்தனைகள் உதயமாகும். கடன் கேட்கும் உற்றார், உறவினர் நண்பர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும், பின்னர் அதைத் திருப்பிக் கேட்டு அவர்கள் பின் அலைய நேரும். படித்து முடித்த மகனின் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைத்து விடும். விலகிச் சென்ற சகோதர சகோதரிகள்மீண்டும் நட்பாகுவார்கள்.அதனால் பாகப்பிரிவினைகள் சாதக மாகும். உடல் சோர்வும், மனச்சோர்வும் நீங்க விநாயகர் அகவல் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    4.3.2024 முதல் 10.3.2024 வரை

    திடீர் அதிர்ஷ்டத்தால் ஏற்றம் உண்டாகும் வாரம். அஷ்டமாதிபதி சுக்ரன் தன அதிபதி செவ்வாயுடன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வழக்குகள், பஞ்சாயத்துகள் சாதகமாகும். நீண்ட நாட்களாக தீராமல் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு தெரியும் எதிர்காலம் குறித்து என்ன முடிவு செய்வதென்று இருளில் திக்கு, திசை தெரியாதவர்களுக்கு முன்னேற்றப்பாதை தென்படும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் முயற்சியில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் கடன் கிடைக்கும்.

    ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். உங்களின் திறமையை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு விற்காமல் தேங்கி கிடந்த பொருட்கள் விற்றுத் தீரும். காதல் கசக்கும். அண்டை அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை தவணை முறையில் வாங்குவீர்கள். தந்தை மகன் உறவு பலப்படும். மனநல, உடல் நல பாதிப்புகள் விலகும். ராசியில் ராகு 7-ல் கேது நிற்பதால் சுய ஜாதக பரிசீலனைக்குப் பிறகு திருமணத்தை நடத்துவது நல்லது. சிவராத்திரியன்று பஞ்ச கவ்ய அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    26.2.2024 முதல் 3.3.2024 வரை

    லாபகரமான வாரம். லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் நிற்பதால் மந்தமான தொழில் நிலை மாறி சிறப்பாக இயங்கத் துவங்கும். தொழிலுக்கு திறமையான வேலையாட்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். வெளிநாட்டு பயணம் மற்றும் வேலையில் நிலவிய தடைகள் விலகும்.இலாபத்தால் வசதிகள் பெருகும். கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.தற்போது விரயத்தில் சனி இருப்பதால் எதையும் யோசிக்காமல் புதிய சொத்துக்கள் வாங்கிப் போடுவது உத்தமம். நிலைமை சீராகும் போது கடன் தானாக அடைபட்டு விடும். பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். தந்தையின் அன்பும், அசீர்வாதமும் கிடைக்கும்.

    பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். தம்பதிகளிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு மாறி புரிதல் உண்டாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. அழகான, எழில் நிறைந்த வீடு கிடைக்கும். செய்வார்கள். அரசு வேலை முயற்சி சாதகமாகும். 2.3.2024 காலை 8.17 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். வியாழக்கிழமை ஸ்ரீ குபேர லட்சுமி அஷ்டோத்திரம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்தவார ராசிபலன்

    19.2.2024 முதல் 25.2.2024 வரை

    மகிழ்ச்சியான வாரம். லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். புதிய வியாபார ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிலும் மதி நுட்பத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் தகுதிக்கேற்ற பணி கிடைக்கும். அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடன் சுமை குறையும். பூர்வீகச் சொத்துக்காக பாராமுகமாக இருந்த உறவுகளிடம் பகைமை மறையும்.

    வெளிநாட்டு பயணம் சாதகமாகும். வாழ்க்கைத் துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். குடும்பப் பொறுப்புகள் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். திருமண, மறு திருமண முயற்சிகள் நிறைவேறும். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மன நிம்மதியால், சந்தோஷத்தால் உடல் நிலை தேறும். மாசி மகத்தன்று வாசனை திரவியங்களால் சிவனுக்கு அபிஷேகம் செய்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×