search icon
என் மலர்tooltip icon

    மீனம் - வார பலன்கள்

    மீனம்

    இந்த வார ராசிபலன்

    28.8.2023 முதல் 3.9.2023 வரை

    தொட்டது துலங்கும் வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் தந்தை வழிப் பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.வீடு வாகன யோகம், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு போன்ற எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும். சிலருக்கு இடப் பெயர்ச்சிக்குப் பிறகு நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் அதிகமாக உழைக்க நேரும். குருபகவான் தற்போது தன ஸ்தானத்தில் நிற்பதால் பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். பாக்கிகள் வசூலாகும். சம்பள பாக்கி கிடைக்கும். சேமிப்புகள் அதிகமாகும். தடைபட்ட சகோதர சகோதரிகளின் திருமண முயற்சி வெற்றியாகும். தம்பதிகளின் கருத்து வேறுபாடு குறையும்.உங்கள் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகப் போகிறது. ராசிக்குள் அக்டோபர் 30ல் ராகு உள்ளே நுழையும் முன்பு திருமணத்தை நடத்துவது நல்லது.மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். உடல் நிலை தேறும். பிரதோஷத்தன்று பச்சரிசி மாவினால் சிவன், நந்திக்கு அபிசேகம் செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிபலன்

    21.8.2023 முதல் 27.8.2023 வரை

    தர்மம் தலை காக்கும் நேரம். 2,9-ம் அதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் குடும்பத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.தந்தை அல்லது தந்தை வழி உறவில் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். உங்களின் பழைய கவுரவத்தை நிலை நிறுத்திக் கொள்வீர்கள். சிலர் உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு குலத் தொழில் துவங்கலாம்.பூமி, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். மூத்த சகோதர, சகோதரி மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. சொத்துக்கள் மூலம் வாடகை வருமானம் வந்து கொண்டே இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் சுமை குறையும்.மருத்துவச் செலவுகள் நீங்கும். தாய்வழிச் சொத்துப் பிரச்சினையில் எதிர்பாராத திருப்புமுனை உண்டாகும். 21.8.2023 மாலை 5.30 முதல் 24.8.2023 அன்று 2.54 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் புதிய சொத்துக்கு அட்வான்ஸ் கொடுப்பதை தவிர்க்கவும். கருட பஞ்சமியன்று பச்சைக் கற்பூர அபிசேகம் செய்து கருடரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    14.08.2023 முதல் 20.8.2023 வரை

    மன அமைதி கிடைக்கும் வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாய் ராசியைப் பார்ப்பதால் ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். பிள்ளைகள் தங்கள் சாதனைகளால் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் மூலம் புதிய தொழில் தொடர்புகள் கிடைக்கும். வேலை, வியாபாரம், தொழில் அபிவிருத்தி போன்றவற்றிற்கு அலைச்சலான பயணமும் செலவுகளும் செய்ய நேரும்.

    விளையாட்டு, காவல் துறையினரின் திறமை பாராட்டப்படும். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை பூர்வீகச் சொத்து, பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விசயத்திற்காக கோபத்துடன் மன இறுக்கத்துடன் இருப்பார். தந்தையின் ஆரோக்கியத்திற்காக விட்டுக் கொடுக்க முயற்சிப்பீர்கள். குடும்பப் பிரச்சினைகளை தம்பதிகள் தங்களுக்குள் பேசி சீராக்குவார்கள். வாழ்க்கைத் துணை அனைத்து பணிகளுக்கும் உதவியாக இருப்பார். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். ஆடி அமாவாசையன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    07.08.2023 முதல் 13.8.2023 வரை

    விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். வக்ரம் பெற்ற 3,8-ம் அதிபதி சுக்ரன் 6-ம் அதிபதி சூரியனுடன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு கேதுவின் மையப்புள்ளியில் சேர்க்கை பெறுவதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பி கட்ட முடியாமல் பகை உருவாகும். சொத்து அடமானத்தின் பெயரில் கடன் வாங்கும் எண்ணம் தோன்றும். ஜாமீன் போட்டு வம்பு வழக்கில் சிக்கிக்கொள்ள நேரும். விற்கப்பட வேண்டிய சொத்துக்கள் முறையான ஆவணம் இன்மையால் தடைபடும். அண்டை அயலாருடன் சொத்து தொடர்பான எல்லைத் தகராறு உண்டாகும்.

    உயர் அதிகாரிகளால் சில சங்கடங்கள் நிலவும். அதனால் வேலை மாற்றம் செய்யும் சிந்தனை மேலோங்கும். சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும். தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும். அடுத்தவர் தவறை சுட்டிக் காட்டி உங்களின் வெளிப்படையான பேச்சால் பிரச்சினையை விலை கொடுத்து வாங்கக் கூடாது. உடல் நலனில் அக்கறை தேவை. ஆடி வெள்ளிக்கிழமை ஆதி பராசக்தியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    31.7.2023 முதல் 6.8.2023 வரை

    தடைகள் அகலும் வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாயின் 8ம் பார்வை ராசியில் பதிவதால் தந்தையின் கடன் மற்றும் பூர்வீக சொத்தால் நொந்த உங்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது. தந்தை- மகன் உறவு சிறக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். செயற்கைக் கருத்தரிப்பிற்கு முயற்சி செய்பவர்களுக்கும் இது சாதகமான காலம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த தடை தாமதங்கள் அகலும்.

    வருமானம் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் நன்மதிப்பை பெற சற்று அதிகமாகவே செலவு செய்வீர்கள். விரய அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் பெரும் விரயம் ஏற்படாது. வீண் செலவுகளை குறைத்து வருமானத்திற்கு ஏற்ப திட்டமிட்டு அகலக்கால் வைக்காமல் நிதானமாக செயல்பட்டால் கடன் இல்லாமல் சமாளிக்க முடியும். பேஸ்புக் மூலம் புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புதிய நட்பால் சில சங்கடங்கள் நேரலாம் என்பதால் எச்சரிக்கை தேவை. ஆடிப்பெருக்கன்று கடலில் நீராடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    24.7.2023 முதல் 30.7.2023 வரை

    திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும் வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாயின் 8ம் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் திடீர் அதிர்ஷ்டமும் சுப விரயமும் ஏற்படும். அதிர்ஷ்ட பணம் உயில் சொத்து கிடைக்க வாய்ப்பு கள் உள்ளது. குடும்பத்தில் கடந்த கால நிகழ்வுகளால் நிலவிய மனக்கசப்புகள் மறையும். தொழில் துறை, வேலை உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளும் திட்டங்களும் நிறைவேறும்.

    சிலருக்கு வேலையில் மாற்றம் உண்டாகும்.வெளிநாடு முயற்சியில் முன்னேற்றம் உண்டு. சில ரியல் எஸ்டேட் தாரர்களுக்கு அரசுத் துறை நிறு வனங்களின் ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதமான பதில் வரும். செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் ஆண்களும், பெண்களும் அளவாகப் பழகுவது நல்லது.

    25.7.2023 அன்று இரவு 11.13 முதல் 27.7.2023 இரவு 7.29 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க நேரும். குழப்பமான மனநிலையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும். அம்மனுக்கு மஞ்சள் அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    17.7.2023 முதல் 23.7.2023 வரை

    வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாய் 6-ம்மிடத்தில் சஞ்சரிப்பதால் தொழிலில் எதிர்பார்த்தபடி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். கடன்பிரச்சினைகள் உண்டாகும். அல்லது விண்ணப்பித்த கடன் கிடைக்கும்.அரசு ஊழியர்களுக்குக் அதிகாரமிக்க உயர்பதவிகள் கிடைக்கும். சிலருக்குக் கவுரவப் பட்டங்கள் கிடைக்கும்.

    நண்பர்கள் மற்றும் உறவுகளின் வருகையால் உள்ளம் மகிழும். பெண்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள்.வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்களுக்கு வேலையை விட்டுவிடும் எண்ணம் தோன்றும். பூர்வீக சொத்து சம்பந்தமாக உங்களுக்கும் சகோதரருக்கும் சலசலப்பு ஏற்பட வாய்ப்புண்டு.

    வாழ்க்கைத் துணை, வியாபார பங்குதாரரிடம் அனுசரித்து செல்ல வேண்டிய காலம்.தடைபட்ட புத்திர பிராப்தம் சித்திக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் குறையும். சில சங்கடங்கள் நிலவினாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனியாக மறையும். ஆடி மாதம் புனித நதிகளில் நீராடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    10.7.2023 முதல் 16.7.2023

    தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாயின் 8ம் பார்வை ராசி யில் பதிவதால் விபரீத ராஜ யோகம் உண்டாகும்.திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. யார் அக்கவுண்டிலோ ஏற வேண்டிய பணம்உங்கள் அக்கவுண்டில் ஏறும்.அதிர்ஷ்டத்தை விரும்பாதவர்களைக் கூட அதிர்ஷ்டம் விரும்பும்.

    மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பீர்கள். மேல் அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். 6-ம்மிட சுக்ரன் செவ்வாயால் இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தவர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் மூலம் தொழில், வியாபாரம் விரிவடையும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு.

    எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.அமாவாசையன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    3.7.2023 முதல் 9.7.2023 வரை

    மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும் வாரம். 2 , 9ம் அதிபதிக்கு குருப் பார்வை கிடைப்பதால் குரு மங்கள யோகம் ஏற்படுவதால் தங்களின் செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டு இலகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மருமகன் மகன் ஸ்தானத்தில் நின்று உங்கள் தேவைகளை நிறைவு செய்வார்.

    குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். வார ஆரம்பத்தில் சில காரியங்கள் ஆரம்பிக்கும் போது தோல்வி தருவது போல் இருந்தாலும் முடிவில் வெற்றியைக் கொடுக்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் அல்லது வாபஸ் பெறப்படும். தந்தை வழிச் சொத்துப் பிரச்சினைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும்.

    குடிப்பழக்கம், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள்ம ருத்துவத்தில் சீராக வாய்ப்பு உள்ளது. கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் மூலம் சில பொருள் வரவுகள் ஏற்படும். புதிய கூட்டுத் தொழில் முயற்சிக்கு ஏற்ற காலம். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். தினமும் நடராஜரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    26.6.2023 முதல் 2.7.2023 வரை

    ஏற்றம், இறக்கம் நிறைந்த வாரம். 2, 9-ம் அதிபதி செவ்வாய் 6-ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செல்வதால் பொருளாதாரத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டு. சிறிய தடை தாமதங்கள் இருந்தாலும் வெற்றி நிச்சயம் உரிய நேரத்திற்கு சாப்பிட முடியாமல் அதிகமாக உழைக்க நேரும். கடன் பெற்று சொத்து ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

    6-ம் அதிபதி சூரியன் 4, 7-ம் அதிபதி புதனுடன் சேர்ந்து சுக ஸ்தானத்தில் நிற்பதால் முக்கிய பணத் தேவைக்கு மீட்டர் வட்டி, கந்து வட்டி போடும் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறாமல் வங்கிகளில் கடன் பெறுவது பாதுகாப்பு தரும். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.நண்பர்களிடம் இருந்து விலகி இருப்பது நல்லது.

    28.6.2023 அதிகாலை 3.27 முதல் 30.6.2023 காலை 10.20 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சுலபமாக முடிக்க வேண்டிய செயல்களில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். ஞாபக மறதி மற்றும் மனச் சோர்வு மிகுதியாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    19.6.2023 முதல் 25.6.2023 வரை

    ஆதாயம் நிறைந்த வாரம். குடும்ப ஸ்தானத்திற்கு சனியின் தாக்கம் குறைவதால் குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப்புள்ளியாகும். வீண் விரயங்கள் குறையும்.அதிக முதலீடு செய்ய வேண்டிய புதிய தொழில் ஒப்பந்தங்களில் கவனம் தேவை. சில்லரை வணிகர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம்.

    வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய சொந்த தொழில் எண்ணம் தோன்றும். பிள்ளை களின் முன்னேற்றம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். வைத்தியச் செலவு குறையும். சிலர் உடன் பிறப்புகளுக்காக சொத்தை விட்டுக் கொடுப்பார்கள். சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.

    எதிர்பாலினத்தவரிடம் கவனமாக பழகவும். வீடு, வாகனம், வயல்வெளி, தோட்டம் வாங்கும் யோகம் உள்ளது. கணவன், மனைவி குடும்ப உறவுகளிடையே இணக்கமான சூழல் நிலவும். மனக் கவலைகள் அகலும். சிவ, சக்தியை வழிபட வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மீனம்

    இந்த வார ராசிப்பலன்

    12.6.2023 முதல் 18.6.2023 வரை

    மகிழ்ச்சியான வாரம். ராசிக்கு 5-ம் இடத்தில் சுக்ரன், செவ்வாய் சேர்க்கை இருப்பதால் வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும்.பங்கு வர்த்தகத்தில் வருமானம் இரட்டிப்பாகும்.வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். வேலை பார்க்கும் இடத்தில் சாதகமான சூழல் உண்டாகும். நிலுவையில் உள்ள வாடகை வருமானம், சம்பள பாக்கிகள் கிடைக்கும்.

    அடமான நகைகள் மீண்டு வரும். இதுவரை தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும். கணவர் மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தாய் வழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி சந்தோசம் பெருகும். 6-ம் அதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் நிற்பதால் கடன் பெற்று அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.

    சிலருக்கு சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும்.குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். திருமண முயற்சிகள் நல்ல முன்னேற்றம் தரும்.சிலர் சகோதர, சகோதரி களுக்காக பணம் செலவு செய்ய நேரும். தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×