என் மலர்
மீனம் - வார பலன்கள்
மீனம்
இந்த வார ராசிப்பலன்
5.6.2023 முதல் 11.6.2023 வரை
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் மேலோங்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். வியாபாரம் பெருகும். சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும். தொழில் நிறுவனத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள்.
நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.அரசியலில் ஈடுபட்டோருக்கு விபரீத ராஜ யோகம் தரும் காலமாகும். திருமணத்தடை அகலும். வீடு வாகனம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.
மாமியாரின் பாராட்டு, தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை மகிழ்ச்சியை அதிகரிக்கும்.மகன், மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும்.எந்த செயலிலும் வெற்றி பெற பிரத்தியங்கரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வணங்குதல் மிக நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
29.5.2023 முதல் 4.6.2023 வரை
குடும்பத்தில் குழப்பம் நீங்கி நன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி குரு தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நிற்பதால் தொழிலுக்கு தேவையான பணத்தை திரட்டுவதில் வெற்றி பெறுவீர்கள்.உறவினர் மத்தியில் மரியாதை கூடும். 6-ம் அதிபதி சூரியன் 3ம்மிடத்தில் இருப்பதால் திறமையான வேலையாட்கள் கிடைபார்கள்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம்.
கர்ப்பிணிகளுக்கு ஆண் குழந்தை பிறக்கும்.தற்போது விரயத்தில் சனி இருப்பதால்எதையும் யோசிக்காமல் புதிய சொத்துக்கள் வாங்கிப் போடுவது உத்தமம். நிலைமை சீராகும் போது கடன் தானாக அடைபட்டு விடும்.பாகப்பிரிவினைகள் சுமூகமாகும். தந்தையின் அன்பும், ஆசீர்வாதமும் கிடைக்கும். பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.
31.5.2023 அன்று மாலை 6.30 முதல் 3.6.2023 12.28 மணி மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தலைவலி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். பவுர்ணமியன்று திருச்செந்தூர் முருகனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
22.5.2023 முதல் 28.5.2023 வரை
தடைகள், எதிர்ப்புகள் விலகும் வாரம். ராசி மற்றும் 10ம் அதிபதி குரு 4, 7ம் அதிபதி புதனுடன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள்.தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும்.
ஏற்றுமதி, இறக்குமதி தொழில் ஏறுமுகமாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல இருக்கும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பிள்ளைகள் திருமணம், குடும்பச் செலவு என சுபச் செலவு வரும். சிலர் அரசியல் வாழ்க்கை வெறுத்து கட்சியில் இருந்து விடுபடலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும்.
கணவன், மனைவிக்கிடையில் இருந்த பிரச்சினைகள் தீரும்.அரசாங்க ஊழியர்கள் ஆவணங்களில் கையெழுத்து போடும்போது கவனமாக இருக்க வேண்டும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். திருமணத் தடை அகலும். வியாழக்கிழமை நெய்தீபம் ஏற்றி நவகிரக குருபகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
15.5.2023 முதல் 21.5.2023 வரை
தெய்வகடாட்சம் உண்டாகும் வாரம். 4-ம் அதிபதி புதன் ராசி அதிபதி குருவுடன் சேர்க்கை பெறுவதால் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்.பணம் சம்பாதிப்பதில் ஆக்கமும், ஊக்கமும் ஏற்படும்.
அடிமைத் தொழிலில் இருந்தவர்களுக்கு சொந்த தொழில் செய்யும் எண்ணம் உதயமாகும். நேரத்திற்கு சாப்பிட முடியாமல் கடுமையாக உழைக்க நேரும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். பெற்றோர்களால் நன்மை ஏற்படும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும். சிலரின் வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும்.
நவீன ரக வாகனம் மற்றும் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் வாங்குவீர்கள். புதிய சொத்துக்கள் வாங்க திட்டமிடுவீர்கள். 2,9-ம் அதிபதி செவ்வாய் நீசமானதால் சிலருக்கு இடமாற்றங்கள் ஏற்படும். கடன் கொடுத்தவர்களின் கெடுபிடி, சகோதரர் விரோதம், அரசு வகைத் தொல்லை, ஆகியவை ஏற்படும். எனவே துன்பம் வரும் போது துவளாமல், தைரியத்துடன் வாழ்க்கையில் முன்னேற முயலுங்கள். அமாவாசையன்று அந்தணர்களுக்கு தான தர்மம் வழங்கவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
8.5.2023 முதல் 14.5.2023 வரை
பொருளாதார முன்னேற்றம் பெருகும் வாரம். தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் நீசம் பெற்றாலும் ராசி மற்றும் பத்தாம் அதிபதி குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்ததை விட அதிகமாக தனவரவு இருக்கும். வாக்கால் வருமானம் பெருகும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும்.
வியாபாரத்தை விரிவாக்கி லாபத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். மனதில் சில சில சங்கடங்கள் இருந்தாலும் படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.உடல் நிலை ஆரோக்கியமாக இருக்கும். தந்தை வர்க்கத்தால் பல நன்மைகள் ஏற்படும்.விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்கிக் குவிப்பீர்கள். ஆடை ஆபரணம், சொத்து சேர்க்கை, ஏற்படும். புத்திர பாக்கியம் கிடைக்கும். திருமணம் நடக்கும்.
வாழ்க்கைத் துணை மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். சம்பா தித்த பணத்தை புதிய முதலீட்டுத் திட்டங்கள் மூலம் சேமிக்க முற்படுவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். சங்கடஹர சதுர்த்தியன்று தயிர் அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
1.5.2023 முதல் 7.5.2023 வரை
தேவைகள் பூர்த்தியாகும் வாரம். தன ஸ்தானம் பலம் பெறுவதால் சொர்ப்ப சம்பளத்தில் வாழ்க்கை நடத்தியவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு திறமையை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், விரும்பிய இடமாற்றமும் கிடைத்து குடும்பத்துடன் இணையக் கூடிய வாய்ப்பும் கிடைக்கும். நல்லோர் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.
திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும். பிராயணங்களால் ஆதாயம் உண்டு. திருமண வயது அடைந்தவர்களுக்கு நல்ல வரன். அமையும்.பெண்களுக்கு தாய்வழி ஆதரவும், சீதனமும் கிடைக்கும். வயதானவர்களுக்கு மாற்று முறை வைத்தியத்தால் கை, கால் மூட்டு வலி குறையும்.
4.5.2023 அன்று காலை 9.20 முதல் 6.5.2023 மதியம் 3.22 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணிச்சுமை காரணமாக ஓய்வு நேரம் குறையும். பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. பவுர்ணமியன்று சரபேஸ்வரரை மனதார வழிபட யோகம் ராஜயோகமாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
24.4.2023 முதல் 30.4.2023 வரை
லாபகரமான காலம். ராசி அதிபதி குரு தன ஸ்தானத்தில் நின்று தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் விவேகமான சிந்தனை செய்து தொழிலை வளர்ப்பீர்கள். இது பொற்காலம் என்று சொல்லும் வகையில் உபரி வருமானம் உண்டாகும். கடன் பிரச்சிினைகள் நீங்கும். குடும்ப உறுப்பினர்களால் சந்தோஷம் ஏற்படும். சேமித்த பணத்திற்கு நகையாகவோ, இடமாகவோ வாங்குவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம் அதிகரிக்கும்.
ஏழரைச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். கணவன் மனைவியின் அன்னியோன்யம் அதிகரிக்கும். உறவினர்களை வீட்டிற்கு அழைத்து மகிழ்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தற்காலிக வேலையில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும்.
பெற்றோரின் அசையும் அசையா சொத்துக்கள் உங்கள் பெயருக்கு மாறி வரும்.
ராசிக்கு 12ல் விரய ஸ்தானத்தில் சனி ஆட்சி பலம் பெற்று தன ஸ்தானத்தை பார்ப்பதால் எதிலும் கவனமாகவும் நிதானமுடனும் செயல்படுவது நல்லது. பண விவகா ரங்களில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் வரலாம். சிலருக்கு கண்களில் அறுவை சிகிச்சைகள் செய்ய நேரும். நால்வர் பெருமக்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
17.4.2023 முதல் 23.4.2023 வரை
தன பிராப்தம் உண்டாகும் வாரம். 6ம் அதிபதி சூரியன் தனஸ்தானத்தில் உச்சம் பெற்று ராகுவுடன் சேர்க்கை பெறுவதால் இழந்த பழைய வேலை மீண்டும் கிடைக்கும். வெளிநாடு செல்லும் முயற்சி கைகூடும். அரசாங்க வேலை முயற்சிக்கு வெற்றி தரும். விவசாய நிலத்திற்கு புதிய ஒப்பந்ததாரர், குத்தகைதாரர்கள் கிடைப்பார்கள். பெண்களின் சுய தொழில் முயற்சிக்கு கைமேல் பலன் கிடைக்கும்.
அரசியல் பிரமுகர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட துன்பம் அகலும்.சில சமூக ஆர்வலர்களுக்கு அரச கவுரவம் கிடைக்கும்.தன குருவால் உங்களின் முயற்சிகள் புதிய உத்வேகம் பெறும். மாமன், மைத்துனர் வழி மனக்கசப்புகள் அகலும். தாராள தன வரவால் குடும்ப வாழ்க்கையில் திருப்திகரமான முன்னேற்றம் உண்டாகும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும்.
அடமான நகை மற்றும் சொத்துக்களை மீட்டு மகிழ்வீர்கள். புதிய சொத்துக்கள், தங்க ஆபரண சேர்க்கை உண்டாகும். கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும்.ஆரோக்கியத்தை மேம்படுத்த உரிய வைத்திய முறையை அணுக வேண்டும். கிரகணத்தன்று தாத்தா, பாட்டி மற்றும் முன்னோர்களிடம் நல்லாசி பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
வார ராசிப்பலன்
10.4.2023 முதல் 16.4.2023 வரை
நன்மையும் தீமையும் கலந்தே நடக்கும் வாரம். ராசி பத்தாம் அதிபதி குரு தன ஸ்தானத்தை நெருங்குவதால் தொழிலில் வெற்றியும், முன்னேற்றமும் உண்டாகும். மீன ராசிக்கு 6ம் அதிபதி சூரியனும் அஷ்டமாதிபதி சுக்ரனும் வலுப்பெறக் கூடாது. தற்போது கோட்சாரத்தில் சூரியன் உச்சம். சுக்ரன் ஆட்சி என்பதால் சில அசவுகரியங்கள் ஏற்படலாம். 6ம் அதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் உறவினர்கள் தொல்லையை கொடுத்தாலும் பொருட்படுத்தாமல் உதவி செய்வீர்கள்.சிலருக்கு பொருளாதார பற்றாக் குறையை சமன் செய்ய கடன் வாங்க வேண்டிய நிலை இருக்கும்.
வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பழைய வழக்கு விசாரணைகள் மீண்டும் தலை தூக்கும். திரைப்பட கலைஞர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி உண்டு. சகோதரரிடம் இணக்கமற்ற சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு விபரீத ராஜயோகத்தால் உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் கிடைக்க வாய்ப்புள்ளது.உஷ்ணம் தொடர்பான சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். திருமணம், புத்திர பாக்கியம் கைகூடும். விஜயலட்சுமியை வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
3.4.2023 முதல் 9.4.2023 வரை
லட்சியத்தை அடையும் வாரம். விரய அதிபதி சனி விரய ஸ்தானத்தில் இருப்பதால் சுப விரயங்கள் செய்ய உகந்த காலம். தற்போது விரயச்சனி நடப்பதாலும், தன ஸ்தானத்தை குரு நெருங்குவதாலும் எதையும் யோசிக்காமல் சொத்து வாங்கிப் போடுவது உத்தமம்.நிலைமை சீராகும் போது கடன் தானாக அடைபட்டு விடும். அலைச்சலும், அசதியுமான உள்ளுர், வெளியூர், வெளிநாட்டு தொழில் பயணங்கள் உண்டாகும்.
பிரயாணங்களால் ஆதாயம் உண்டு. சிலர் இது வரை ஒத்தி வைத்த கண் அறுவை சிகிச்சைக்கு மருத்துவமனை செல்ல நேரும்.கணவன் மனைவி உறவில் சிறு விரிசல் தோன்றி மறையும்.அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். திருமண முயற்சி வெற்றி தரும். மண வாழ்க்கையில் பிரிவை சந்தித்த வர்களுக்கு மறுதுணை அமையும்.
7.4.2023 அன்று காலை 1.10 காலை முதல் 9.4.2023 அன்று காலை 8.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்ததை செயல்படுத்த முடியாத வகையில் தடை இருக்கும். பங்குனி உத்திரத்தன்று நடரா ஜரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
27.3.2023 முதல் 2.4.2023 வரை
புத்திக்கூர்மையுடன் செயல்படும் வாரம். 2,9-ம் அதிபதி செவ்வாய் 4-ம்மிடம் செல்வதால் தாய், தந்தைவழி உறவுகளின் ஆதரவும் சொத்தும் கிடைக்கும். பெற்றோர்களின் ஆதரவோடு சில பிரச்சினைகளை பேசித் தீர்த்துக் கொள்வீர்கள். பொன் பொருள் சேரும். பூமி யோகம் உண்டு. பொருளாதார பற்றாக்குறை அகலும். வாங்கிய கடனை திரும்பச் செலுத்தி நாணயத்தை காப்பாற்ற இயலும்.
பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக ஒரு தொகையை வங்கியில் சேமிப்பீர்கள். நல்ல புதிய தொழில் வாய்ப்புகள் தேடி வரும். வேலை பார்க்கும் இடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு நம்பிக்கையை அதிகரிக்கும். சிலருக்கு வேலையில் மாற்றம் செய்ய நேரும். உடன் பிறந்தவர்களிடம் நிலவி வந்த கருத்துவேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும்.
மன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். சிலர் புண்ணிய காரியங்களுக்கு பொருள் உதவி செய்வீர்கள். ஆரோக்கிய குறைபாடு அகலும். குருப் பெயர்ச்சிக்குப் முன்பு திருமண முயற்சி செய்வது நல்லது. சனிக்கிழமை பசுவிற்கு பழம், கீரை, தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
20.3.2023 முதல் 26.3.2023 வரை
சுப விரயம் ஏற்படும் வாரம். 6-ம் அதிபதி சூரியன் ராசியில் இருப்பதால் எந்தப் பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து அதன்படி செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். வழக்குகள் சாதகமாகும். அடமானத்தில் இருக்கும் நகைகள், சொத்துக்கள் மீண்டு வரும்.
பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.உழைப்பிற்கு ஏற்ற வருமானம் நிச்சயம் உண்டு.பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து வர வேண்டிய சீதனங்கள் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். 2-ம்மிடத்தில் சுக்ரன் ராகு சேர்க்கை திருமண முயற்சியில் சில தடை, தாமதங்கள் நிலவ வாய்ப்பு உள்ளது. வாடகை வீட்டு தொல்லை அகலும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகழ்வீர்கள்.
சிலருக்கு சிறு நோய் தாக்கம் உண்டாகலாம். பூர்வீகச் சொத்து தொடர்பாக பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள் மூலம் சிறு மன உளைச்சல் உண்டாகும். சிலரின் தந்தை தொழிலுக்காக தூர தேசம் செல்லலாம். ஸ்ரீ கிருஷ்னரையும் ராதையையும் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406