என் மலர்
மீனம் - வார பலன்கள்
மீனம்
இந்த வார ராசிப்பலன்
13.3.2023 முதல் 19.3.2023வரை
திருமணத் தடை அகலும் வாரம். 4, 7-ம் அதிபதி. புதன் ராசி அதிபதி குருவுடன் இணைந்து நீச பங்க ராஜ யோகம் பெறுவதால் சுய ஜாதக ரீதியாக ஏழாமிடத்தில் பிரச்சினை இருந்தால் தோஷ நிவர்த்தி பெற்று திருமணம் நடைபெறும். நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் வாழ்க்கைத் துணையாக வர வாய்ப்புள்ளது. புதிய தொழில் முனைவோர்கள் கவர்ச்சிகரமான பொருட்களைப் பரிசாக அறிவித்து லாபத்தை அதிகரித்துக் கொள்வார்கள்.
தன ஸ்தான அதிபதி செவ்வாய் நான்காம் இடம் செல்வதால் நிலம் வாங்கி விற்கும் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடக்கும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். அஷ்டமாதிபதி சுக்ரன் தன ஸ்தா னத்தில் ராகுவுடன் நிற்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள்.
வாங்கிய நபர் வார்த்தை மாறிப் பேசலாம். உங்கள் உதவியைப் பெற்றவர்கள் உங்களுக்கு எதிராக மாறலாம்.பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். உறவி னர்களின் வருகையால் வீடு களைகட்டும். அரசுப் பணி யாளர்களின் முக்கிய தேவைகள் பூர்த்தி யாகும். சனிக்கிழமை காலபைரவ அஷ்டகம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
6.3.2023 முதல் 12.3.2023 வரை
சுமாரான வாரம். ஆறாம் அதிபதி சூரியன் விரய ஸ்தானத்தில் சனியுடன் இருப்பதால் சிலர் பழைய வேலை பிடிக்காமல் புதிய வேலை தேடுவார்கள். உலவுகின்ற கிரக நிலை வியாபாரத்திற்கு ஓரளவு உதவிகரமாக இருக்கும். புதிய தொழிலுக்காக விண்ணப்பித்த லைசென்ஸ் கிடைக்கும்.சிலரின் வாழ்க்கைத் துணை தொழிலுக்காக கடல்கடந்து செல்ல வாய்ப்பு உள்ளது.
சில தம்பதிகள் தொழில் அல்லது வேலை நிமித்தமாக குறுகிய காலம் பிரிந்து வாழலாம். பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும். ராசி அதிபதி குரு உச்சம் பெற்ற அஷ்டமாதிபதி சுக்ரனும் சேர்க்கை பெறுவதால் வெளியே தைரியமாக இருந்தாலும் உள்ளத்தில் பயமே மேலோங்கி நிற்கும்.
10.3.2023 மாலை 6.35க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் பணம், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். வீண் செலவால் மனச் சஞ்சலம் மனக் குழப்பம் உருவாகும்.மாசி மகத்தன்று மரிக்கொழுந்து சாற்றி சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
27.2.2023 முதல் 5.3.2023 வரை
புதிய தொழில் வாய்ப்புகள் அதிகரிக்கும் வாரம். ராசி மற்றும் பத்தாம் அதிபதி குரு ஆட்சி பலம் பெற்று உச்சம் பெற்ற அஷ்டமாதிபதி சுக்கிரனுடன் சேருவதால் வீபரீத ராஜயோக வாய்ப்புகள் உருவாகும்.உங்கள் சொல்வாக்கும், கவுரவமும் உயரக்கூடிய வகையில் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கப்போகிறது.
சற்று ஏறக்குறைய இரண்டு மாதங்களுக்குப் பிறகு குரு ராசியை விட்டு நகர்வதால் முக்கிய பணிகளை ஒத்திப்போடும் எண்ணத்தைத் தவிர்த்து விரைந்து செயல்படவும். வியாபாரத்தில் நுணுக்கமாக நடந்து கொள்ளுங்கள்.விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். உத்தியோகஸ்தர்கள் விரும்பிய இடமாற்றமும் பதவி உயர்வும் பெறுவார்கள். சில அரசியல் பிரமுகர்கள் சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவார்கள்.
மேலும் இது ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக தசை புத்திக்கு ஏற்ப செயல்படுவது உத்தமம். தம்பதிகளிடம் அந்நியோன்யம் அதிகரிக்கும். சுபவிருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
20.2.2023 முதல் 26.2.2023 வரை
சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். அஷ்டமாதிபதி சுக்ரன் ராசியில் உச்சம் பெறுவ தால் சிலருக்கு கடல் கடந்த வேலை செய்யும் யோகம் உண்டாகும். நண்பர்கள், உடன் பிறந் தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும். குடும் பத்தில் சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். சுப கடன் வாங்கி பூமி, வீடு,வாகன, வசதியை பெருக்குவீர்கள்.
வேலையின்மையால் பிறரின் வெறுப்பிற்கு ஆளாகியவர்களுக்கு கவுரவமான வேலை கிடைக்கும். சிலருக்கு மைத்துனருடன் இணைந்து புதிய தொழில் தொடங்கும் ஆர்வம் உண்டாகும். சிலர் வயது மூப்பு மற்றும் சோர்வால் வாரிசுகளிடம் தொழில் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுக்க விரும்பலாம்.
திருமணத்தடை அகலும். சிலருக்கு மறுமண யோகம் உண்டாகும். 6-ம்மிடத்திற்கு சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் தாய் மாமனுடன் சிறு மனபேதம் உண்டாகலாம். எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன் னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும். அமாவாசையன்று இயன்ற உணவு தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
13.2.2023 முதல் 19.2.2023 வரை
சுமாரான வாரம். ராசி அதிபதி குருவும் 3,8-ம் அதிபதி சுக்ரனும் ராசியில் இணைவதால்உற்றார், உறவினர்கள், உடன் பிறந்தவர்கள் மூலம் சிறு சிறு மனத் தாங்கல் உருவாகும். குடும்ப உறுப்பினர்களிடம்தேவையற்ற பேச்சை தவிர்க்கவும். குறைந்த ஊதியத்திற்கு அதிக நேரம் உழைக்க நேரும்.பணவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெற்று பொது குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.
சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சியில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மூலம் கடன் கிடைக்கும்.சிலர் உயர் கல்விக்காகக், வேலைக்காக வெளியூர், வெளிநாடு செல்வர்.பேச்சை மூலதனமாக கொண்டவிற்பனை பிரதிநிதிகள், வக்கீல்கள், ஆசிரி யர்களுக்கு வருமானம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும்.
13-ந் தேதி இரவு 8.37 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் தோன்றும். கொடுக்கல் வாங்கலில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. காரியசித்திக்குசிவனை இளநீர் அபிசேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
உழைப்பிற்கான அதிர்ஷ்டத்தை அடையக் கூடிய அற்புதமான வாரம். ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடைய திறமைகள் அனைவருக்கும் தெரியவரும். பய உணர்வும், கலக்கமான மனநிலையும் விலகி மனத்தில் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும்.புதிய தொழில் ஒப்பந்தம் கிடைக்கும். கடனால் சுணங்கிய தொழிலை முன்னேற்ற பாதைக்கு எடுத்துச் செல்லும் மார்க்கம் தென்படும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து குடும்ப வருமானம் உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் பேச்சிற்கு குடும்ப உறுப்பினர்கள் மதிப்பு கொடுப்பார்கள்.
பழகிய வட்டாரத்தில் மதிப்பும், அந்தஸ்தும் கூடும். தன ஸ்தானத்திற்கு சனி பார்வை இருப்பதால் சேமிக்க முடியவில்லை என்ற ஆதங்கம் மனதை வாட்டும். பெண்களுக்கு வேலை செய்யும் இடங்களில் நிலவிய மனக்கசப்புகள் தீரும்.11.2.2023 மதியம்1.02க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வெளி உணவுகளைத் தவிர்க்கவும். பசுவிற்கு வாழைப்பழம் வழங்கவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ஆறாம் அதிபதி சூரியன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் நிற்பதால் சில புதிய உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு ஒப்பந்த வேலை கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். முன் கோபத்தால் பகைமை உருவாகும் என்பதால் சில முக்கிய விஷயங்களை நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் சமாளிக்க முடியும்.
சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். மாற்று முறை சிகிச்சையால் நோய்க்கு தீர்வு கிடைக்கும். சிலருக்கு நீதி மன்ற வழக்குகளுக்காக அதிக பணம் செலவு செய்ய நேரும். அடிக்கடி இடப் பெயர்ச்சி செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். திருமணத் தடைகள் அகலும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் சிறிய கடன் தொகை கிடைக்கும். ஏகாதசியன்று இயன்ற தான தர்மம் செய்யவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
23.1.2023 முதல் 29.1.2023 வரை
இழுபறிகள் குறையும் வாரம். 5,7,9ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் அதிர்ஷ்டசாலியாக திகழ்வீர்கள். பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். கடவுள் நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். வர்த்தகம் லாபத்துடன் நடக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான இழுபறிகள் நீங்கும். உங்களுக்கு சேர வேண்டிய பாகப் பிரிவினை பங்கு முழுமையாக சொத்தாகவோ, பணமாகவோ வந்து சேரும். சிலர் பூர்வீகப் பங்குப் பிரிவினை பணத்தில் பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையை வெளிபடுத்த சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்.
சகோதரரால் சகாயங்கள் உண்டாகும். கணவன் அல்லது மனைவிக்கு உத்தியோக ரீதியான மாற்றங்கள் உண்டாகும். தனித்தனியாக வேறு வேறு இடங்களில் பணிபுரிய நேரும். ஊடகங்களில் பணிபுரிபவர்களின் தனித் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வங்கி கடனை திரும்பச் செலுத்த கால அவகாசம் கிடைக்கும். சிலருக்கு விருப்ப திருமணம் நடைபெறும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை மனக்கசப்பு முடிவுக்கு வரும். தினமும் சிவபுராணம் படிக்க தொல்லைகள், மனக் கவலைகள் அகலும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
16.1.2023 முதல் 22.1.2023 வரை
மாற்றங்கள் நிறைந்த வாரம். ஏழரைச் சனி துவங்கினாலும் ராசியில் உள்ள குருவின் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானத்திற்கு இருப்பதால் எப்பொழுதும் உழைத்துக் கொண்டே இருக்கும் ஆர்வம் மிகுதியாகும்.துணிந்து சில முடிவுகளை எடுத்து முன்னேறுவீர்கள்.தொழில் உத்தியோக நிமித்தமாக அடிக்கடி பிரயாணம் செய்ய நேரும்.
சிலருக்கு பணி நிரந்தரமாவதில் தாமதம் ஏற்படலாம். தொழில், உத்தியோகத்திற்காக வெளியூர், வெளிநாட்டிற்கு இடம் பெயரலாம். வேலையாட்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். வேலை பார்ப்பவர்களுக்கு பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்துவர். பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய நேரும்.
சிலருக்கு மறு திருமணம் நடக்கும். 17.1.2023 மதியம் 1மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் திட்டமிட்ட காரியங்களில் பின்னடைவு இருக்கும்.எதிர்மறை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது அறிமுகம் இல்லாத புதிய நபர்களிடம் பழகக் கூடாது. சனிக்கிழமை சிவ வழிபாடு செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
9.1.2023 முதல் 15.1.2023 வரை
கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டிய காலம். 17.1.2023 அன்று முதல் உங்களுக்கு ஏழரைச் சனி துவங்க உள்ளதால் தொழிலை மேம்படுத்த வங்கிக் கடன் கிடைக்கும். தொழில் வியாபார ரீதியான போட்டி பொறாமைகள் ஏற்பட்டாலும் வர வேண்டிய வாய்ப்புகள் தடைபடாது. சிலர் கூட்டுத் தொழிலில் இருந்து விடுபடு வார்கள். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாட்டில் சென்று பிழைக்கும் எண்ணம் தோன்றும்.
இடமாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என நிம்மதியைத் தேடும் மாற்றங்கள் உண்டு.உத்தியோகம் சம்பந்தமான பிரச்சினைகள் ஓரளவு நல்ல முடிவிற்கு வரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். கடன் பிரச்சினையில் இருந்து இடைக்கால நிவாரணம் உண்டாகும். பணம் கிடைக்கிறது என்பதற்காக தொழிலில் அதிக முதலீடு செய்யக் கூடாது. தீட்டிய திட்டங்களில் வெற்றி பெற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவுவார்கள். அலைச்சல் மிகுதியாக இருந்தாலும் நிம்மதியான தூக்கம் இருக்கும்.
15.1.2023 காலை 6.48-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் மற்றவர் விசயத்தில் தலையிடுவதை தவிர்க்கவும். உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருக்கவும். குல தெய்வத்தை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
2.1.2023 முதல் 8.1.2023 வரை
பொறுப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ஆறாம் அதிபதி சூரியன் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் நிற்பதால் சில புதிய உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு ஒப்பந்த வேலை கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். முன் கோபத்தால் பகைமை உருவாகும் என்பதால் சில முக்கிய விஷயங்களை நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் சமாளிக்க முடியும்.சொந்த தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். மாற்று முறை சிகிச்சையால் நோய்க்கு தீர்வு கிடைக்கும்.
சிலருக்கு நீதி மன்ற வழக்குகளுக்காக அதிக பணம் செலவு செய்ய நேரும். அடிக்கடி இடப் பெயர்ச்சி செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். திருமணத் தடைகள் அகலும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் சிறிய கடன் தொகை கிடைக்கும். ஏகாதசியன்று இயன்ற தான தர்மம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மீனம்
இந்த வார ராசிப்பலன்
19.12.2022 முதல் 25.12.2022 வரை
திட்டம் தீட்டி வெற்றி பெற வேண்டிய காலம். 10- ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் 6-ம் அதிபதி சூரியன் நிற்பதால் வேலை இல்லாத வர்களுக்கு தகுதிக்கும், திறமைக்கும் தகுந்த வேலை கிடைக்கும். சிலருக்கு விருப்பமில்லாத இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சிலர் வெளி மாநிலம் , வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும்.
இந்த கால கட்டத்தில் கோட்சார சனி விரய ஸ்தானத்தை நோக்கி நகர்வதால் வீடு, வாகனம், பிள்ளைகளின் திருமணம், படிப்பு, நகை வாங்குவது என விரயத்தை சுப செலவாக முதலீடாக மாற்றுவது நல்லது.தொழிலில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு பொருளாதாரத்தில் தன் நிறைவு கிடைக்கும்.
உடன் பிறந்தவர்களால் மனம் மகிழும் சம்பவம் நடக்கும். 21.12.2022 அன்று அதி காலை 2.57 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல், வாங்கல்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.மற்றவர்களுடன் விவாதம் செய்வ தைத் தவிர்ப்பது நல்லது. அனுமன் ஜெயந்தியன்று ஸ்ரீ ராம ஜெயம் எழுதி ஆஞ்சநேயரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406