என் மலர்
தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தனுசு
இன்றைய ராசிபலன் - 21 நவம்பர் 2024
மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். மறதியால் பல பணிகளை விட்டுவிடும் சூழ்நிலை உருவாகும். குடும்பச்சுமை கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இயலாது. சேமிப்பில் சிறிது கரையும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 20 நவம்பர் 2024
மதியத்திற்கு மேல் மனக்கசப்பு தரும் சம்பவம் நடைபெறும் நாள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. மறதி அதிகரிக்கும். உடல் நலனுக்காக செலவிடுவீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 19 நவம்பர் 2024
கனிவான பேச்சுகளால் காரியங்களை சாதித்துக்கொள்ள வேண்டிய நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 18 நவம்பர் 2024
புதிய பாதை புலப்படும் நாள். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லபடியாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 17 நவம்பர் 2024
தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் நாள். குடும்பத்தினர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சொத்துப்பிரச்சனை சுமுகமாக முடியும். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 16 நவம்பர் 2024
இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் எடுத்த அக்கறைக்கு ஆதாயம் உண்டு. திருமணப் பேச்சுகள் முடிவாகலாம். நூதன பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 15 நவம்பர் 2024
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். கடன் பிரச்சனைகளை சாமர்த்தியமாகப் பேசி சமாளிப்பீர்கள். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் மனதில் இடம்பிடிப்பீர்கள்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 14 நவம்பர் 2024
நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டிய நாள். உங்களின் திறமையான செயல்பாடுகளை பார்த்து மற்றவர்கள் ஆச்சரியப்படலாம். அன்னிய தேசத்திலிருந்து உத்தியோகம் சம்பந்தமான அழைப்புகள் வரலாம்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 13 நவம்பர் 2024
பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். முன்னேற்றப்பாதையில் செல்ல நண்பர்கள் வழிவகுப்பர். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பிரிந்து சென்றவர்களால் ஏற்பட்ட பிரச்சனை அகலும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 12 நவம்பர் 2024
நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும் நாள். பிற இனத்தாரால் பெருமை வந்து சேரும். சாதுர்யமாக செயல்பட்டு பொருள்வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். வராத உறவினர்கள் திடீரென வரலாம்
தனுசு
இன்றைய ராசிபலன் - 11 நவம்பர் 2024
இல்லத்திலும், உள்ளத்திலும் அமைதி கூடும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறி உங்கள் கூட்டு முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வர். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.
தனுசு
இன்றைய ராசிபலன் - 10 நவம்பர் 2024
வாக்குவாதங்களை தவிர்த்து வளம் காண வேண்டிய நாள். தொழில் பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வரவு வருவதற்கு முன்னே செலவுகள் காத்திருக்கும்.