search icon
என் மலர்tooltip icon

    தனுசு - குருப்பெயர்ச்சி பலன்கள்

    தனுசு

    குருபெயர்ச்சி பலன்-2024

    தனுசு-சஷ்டம குரு 45%

    ராஜயோகம் நிறைந்த தனுசு ராசியினரே!

    இதுவரை பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரித்த குருபகவான் மே1, 2024 அன்று ஆறாமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செல்கிறார். சனிபகவான் முயற்சி ஸ்தானத்திலும், ராகு பகவான் சுக ஸ்தானத்திலும் கேது பகவான் தொழில் ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள்.

    சஷ்டக குருவின் பொதுபலன்கள்

    தனுசு ராசியின் அதிபதி மற்றும் சுக ஸ்தான அதிபதியுமான குரு பகவான் 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செல்கிறார். ராசி மற்றும் சுக ஸ்தான அதிபதியான குருபகவான் 6ம்மிடம் செல்வது சற்று ஏற்ற இறக்கமான பலன்களை ஏற்படுத்தும். ஆறில் குரு ஊரில் பகை. 6ம்மிடம் என்பது உப ஜெய ஸ்தானமாக இருத்தாலும் ராசி அதிபதி மற்றும் சுக ஸ்தான அதிபதி 6ம்மிடம் செல்லும் போது கடன் நோய், எதிரி, வழக்கு சார்ந்த விஷயங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

    கடுமையாக உழைத்து உழைப்பிற்கான ஊதியம் நற்பெயர், அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டிய நேரம். அவசியமின்றி வேலையை மாற்றக்கூடாது. சிலருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் உண்டு அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள்.

    சிலர் கடன் பட்டு அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். சிலர் ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்குவார்கள். பெண்களால் காதல் மற்றும் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் அவமானம் உண்டு. ஆரோக்கியத்தில் சிறு சுணக்கம் உண்டாகும். உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம் என்பதால். கவனமாக இருப்பது நல்லது.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்

    குருவின் 5ம் பார்வை 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் உள்ள கேதுவின் மேல் பதிகிறது. 10ல் ஒரு பாவி இருப்பது நல்லது. 10ல் உள்ள பாவி கேதுவை 6ல் நிற்கும் குரு பார்ப்பது தனுசு ராசிக்கு சற்று சுமாரான பலன். கடன் பெற்று புதிய தொழில் துவங்குவது அல்லது வியாபாரத்தில் அதிக கடனுக்கு பொருளை விற்பது போன்றவற்றை இந்த ஓராண்டு காலம் தவிர்க்க வேண்டும். கமிஷன் அடிப்படையிலான முதலீடற்ற தொழில் நடத்துபவர்களுக்கு மிக மிக சாதகமான பலன் கிடைக்கும்.

    கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. சுய தொழில் புரிபவர்கள் தொழிலில் புதிய திட்டங்களை மாற்றங்களை சுய ஜாதக பரிசீலினைக்கு பின் செயல்படுத்துவது நல்லது.

    எதிரிகளையும், நம்பிக்கை துரோகிகளையும் அடையாளம் காண்பீர்கள். பலதலைமுறையாக விற்காமல் கிடந்த குடும்ப சொத்துக்களை கிடைத்த விலைக்கு விற்று விடலாம் என்ற எண்ணம் மேலோங்கும்.பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு மிகுதியாகி வழக்கு பதியப்படலாம். புத்திரம் இல்லாதவர்களுக்கு குல தெய்வமே குழந்தையாக பிறக்கும்.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள்

    குருவின் 7ம் பார்வை ராசிக்கு 12ம்மிடமான அயன, சயன, விரய ஸ்தானத்தில் பதிகிறது.பொன் பொருள் ஆபரணங்கள் ஆகியவைற்றை கவனமாக கையாள வேண்டும். கோர்ட், கேஸ் பிரச்சனையால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வீர்கள். பொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளித்து விட முடியும்.

    ஆரோக்கிய குறைபாட்டால் அடிக்கடி மருத்துவ மனைக்கு சென்றவர்கள், படுக்கையில் நீண்ட நாள் இருந்தவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், கை காலில் அடிபட்டு வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் இருந்தவர்கள் பூரண குணமடைந்து லெளகீக இன்பங்களை அனுபவிக்கு வாய்ப்பு உருவாகும்.

    வீட்டில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம்,மணி விழா போன்ற சுப நிகழ்விற்கான விரயங்கள் இருக்கும். வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். விசா தொடர்பான பிரச்சனைகள் சீராகும். மதப் பற்றால் மதம் தொடர்பான ஆசிரமங்கள், இயக்கங்களில் போய் சேர்ந்தவர்கள் மீண்டும் குடும்பம், குழந்தைகள் என வாழத் தொடங்குவார்கள்.துக்கம் குறைந்து படுத்தவுடன் நிம்மதியான தூக்கம் வரும்.

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்

    குருவின் 9ம் பார்வை தனம், வாக்கு. குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது. சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். நெருக்கடிகள் விலகும் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். குடும்ப உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும். தன வரவில் தன்னிறைவு உண்டாகும். பொருளாதர முன்னேற்றம் மகிழ்சிச்யை தரும். பல்வேறு விதமான யோக பலன்கள் வீடு தேடி வரும். வாழ்க்கைத் தேவைகள் படிப்படியாக பூர்த்தியாகும். திருமணத் தடை அகலும்.விரும்பிய வரன் கிடைக்கும்.

    பிள்ளைபேறு இன்மையால் அவதிப்பட்டவர்களின் இல்லத்தில் குழந்தை தவழும். பலருக்கு புதிய மொழியை கற்பதில் ஆர்வம் அதிகரிக்கும். பேச்சை தொழிலாக கொண்ட ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் , கமிஷன் ஏஜென்ட்கள், ஜோதிடர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு தேவைக்கு மிகுதியான உபரி வருமானம் கிடைக்கும்.

    கொடுக்கல் வாங்கல்கள் சீராகும். ஒரு சில காரியங்கள் ஆரம்பத்தில் தடைபட்டாலும் முடிவில் நல்லவிதமாக உங்களுக்கு சாதகமாக முடியும்.அரசு வகை ஆதாயம் நிச்சயம் உண்டு. வயதான தாய் தந்தையர்கள் பிள்ளைகளால் நன்கு பராமரிக்கப்படுவார்கள்.

    குருவின் கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் (1.5.2024- 13.6.2024 வரை)

    தனுசு ராசிக்கு பாக்கியாதிபதியான சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் எதிர்காலம் பற்றிய தைரியமும் தன்நம்பிக்கையும் அதிகரிக்கும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளுக்கு திருமணம் நடத்துவீர்கள். பேரன், பேத்தி, கொள்ளு பேரன் பேத்தி என பாக்கியம் தொடர்பான அனைத்து பலன்களும் நடக்கும்.

    சிலர் வெளியூர், வெளிநாட்டில் செட்டிலாகலாம். புனித யாத்திரைகள் செல்வீர்கள். முன்னோர்களின் நல்லாசிகள் உங்களை வழி நடத்தும்.ஒரு சிலருக்கு தந்தையின் பதவியை ஏற்று செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும். உங்களின் குலம் தொடர்பான கோவில் பூஜைகள், திருவிழாக்கள்,குடும்ப சுப நிகழ்வுகளில் முதல் மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கும்.

    குருவின் ரோகிணி நட்சத்திர சஞ்சார பலன்கள் (14.6.2024 முதல் 20.8.2024. வரை)

    தனுசு ராசிக்கு அஷ்டமாதிபதியாகிய சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கடன் மற்றும் குடும்ப பிரச்சனைக்காக தலை மறைவானவர்கள் வீடு வந்து சேருவார்கள். ஏற்கனவே நடை பெற்றுக் கொண்டு இருக்கும் வழக்குகளின் விசாரணைகள் தள்ளிப்போகும் அல்லது வழக்குகள் உங்களுக்கு சாதகமாகாது.

    பூர்வீகச் சொத்து தொடர்பான கோர்ட பிரச்சனைகள் மன வருத்தத்தை தரும் என்பதால் வழக்கை ஒத்திப்போடுவது உத்தமம்.சாமியை கும்பிட்டு பெரிதாக என்ன சாதித்தோம், சாமியே கிடையாது என்ற விரக்தி ஏற்படும். சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய நேரும்.

    குருவின் மிருகசீரிஷ நட்சத்திர சஞ்சார பலன்கள்(21.8.2024 முதல் 8.10.2024 வரை, 5.2.2025 முதல் 15. 5. 2025 வரை)

    தனுசு ராசிக்கு 5, 12ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உயர்குலத்தவராலும், உறவினர்களாலும் பெரிய உதவிகள் கிடைக்கும். மதப்பற்று மிகும். குழந்தைகளின் நலனில் ஆர்வம் உருவாகும். நல்ல துணிச்சலும், குரு பக்தியும் ஏற்படும். நிறைந்த வருமானம் இருக்கும். அடமானத்தில் இருந்த நகைகள் மீட்கப்படும்.புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசு தொடர்பான சலுகைகள் கிடைப்பதில் இருந்ததடை தாமதங்கள் விலகும்.

    குருவின் வக்ர காலம் (தனுசு ராசிக்கு 5,12-ம் அதிபதியான செவ்வாயின் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் 9.10.2024 முதல் 28.11.2024 வரை)

    வக்ரமடையும் காலத்தில் ஜனன கால ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் பலம் இழந்தவர்களுக்கு தவறான எண்ண அலைகள் மிகுதியாகும். இறையுடன் மனம் ஒன்றாது. ஒரு சிலர் மதம் மாறுவார்கள். பிள்ளைகளை சொந்த பொறுப்பில் கவனிப்பது நல்லது.

    தனுசு ராசிக்கு அஷ்டமாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் 29.11.2024 முதல் 4.2 2025 வரை குருபகவான் வக்ர மடையும் காலத்தில் புதிய முதலீடுகள், ஒப்பத்தங்களை தவிர்க்க வேண்டும். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும்.

    பரம்பரை நோய் தாக்கம் குறைந்து பூரண ஆரோக்யம் கிடைக்கும். அரச துரோகத்தால் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் குறைந்து விடுதலை கிடைக்கப் பெறுவார்கள்.

    திருமணம்

    இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும்.

    மாணவர்கள்

    4ல் உள்ள ராகுவால் பள்ளிக்கூடம் மாற்றலாம். கல்வியில் நாட்டம் குறையும். ஒரு பிறவியில் கற்ற கல்வி ஏழு பிறப்பிற்கும் உதவும். ஜாலியாக இருப்பதுடன் வரும் கல்வியாண்டில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த உங்களை தகுநிலைப்படுத்துவது மிக முக்கியம்.

    பெண்கள்

    பல வருடமாக தடைபட்ட விஷயங்கள் சுலபமாகவும் விரைவாகவும் நடந்து முடியும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.திருமணம், குழந்தை பேறு, கல்விச் செலவு, வீடு கட்டும் செலவு, கோவில் பிரார்த்தனை போன்ற சுப செலவு உண்டாகும்.மனக் கவலைகள் மறைந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்துவார்கள். கணவரும், புகுந்த வீட்டாரும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

     பரிகாரம்

    வியாழக்கிழமை குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து மஞ்சள் நிற பூக்களால் அர்ச்சித்து வழிபடவும். பராமரிப்பு இல்லாத சிவாலயங்களின் பராமரிப்பு பணிக்கு உதவவும். தீபமேற்ற எண்ணெய் வாங்கித் தரவும்.

    தனுசு

    குருப்பெயர்ச்சி பலன்கள் 2023

    பேராற்றல் நிறைந்த தனுசு ராசியினரே இதுவரை ராசிக்கு நான்கில் நின்று கேந்திராதிபத்திய தோஷம் ஏற்படுத்திய குருபகவான் பஞ்சம ஸ்தானம் எனும் ஐந்தாமிடம் செல்கிறார். அக்டோடர் 30, 2023 வரை மேஷ ராசியில் உள்ள ராகுவுடன் இணைகிறார். இந்த குருப்பெயர்ச்சி முழுவதும் சனியின் மூன்றாம் பார்வை பெற்று பலன் தரப்போகிறார்.

    ஐந்தாமிட குருவின் பொது பலன்கள்:

    ஐந்தாமிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம்.தனுசு ராசிக்கு ராசி மற்றும் நான்காம் அதிபதியாகிய குரு பூர்வ புண்ணிய ஸ்தானம் சென்று தன, முயற்சி ஸ்தான அதிபதி சனியின் பார்வை பெறுவது சிறப்பான அமைப்பு. இது இழந்ததை மீண்டும் மீட்டுத்தரக் கூடிய கிரக அமைப்பு. இதுவரை நிலவி வந்த தடைகள், தடங்கல்கள் நீங்கி நல்லதொரு முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். பிறந்த குழந்தை முதல் வயோதிகர்கள் வரை அவரவர் வயதிற்கேற்ற சுப பலன்கள் நடந்து கொண்டே இருக்கும். பரிசுகள், பட்டங்கள், பதவிகள் கிடைக்கும்.

    குடும்பத்தில் கணவன் மனைவி அன்பு பெருகும். தடைபட்ட பல விசயங்களுக்கு விடைகள் கிடைத்து அனுகூலமான மாற்றங்கள் பெற்று மகிழ்வீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி கணிசமான லாபம் உயரும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும்.பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். படுக்கையில் இருப்பவர்கள் கூட எழுந்து நடமாடுவார்கள். பய உணர்வு நீங்கி வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும். தடைபட்ட பூர்வீகச் சொத்து பாகப்பிரிவினை பேச்சு வார்த்தையில் சுமூகமாகி உங்களை நாடி வரும். நிலையான தொழிலோ, உத்தியோகமோ இன்றி அவதியுற்றவர்களுக்கு மனதிற்கு பிடித்த தொழில் அல்லது உத்தியோகம் அமையும். குல தெய்வ அனுகிரகம் ஏற்படும். குல தெய்வம் தெரியாதவர்களுக்கு குல தெய்வம் பற்றி அறியும் காலம் வந்து விட்டது.

    குருவின் ஐந்தாம் பார்வை பலன்கள்:

    தனுசு ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்திற்கு குருவின் ஐந்தாம் பார்வை பதிவதால் மனதில் நிலவிய பலவிதமான குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். பலகாலமாக முடிக்க முடியாமல் தீர்க்க முடியாமல் கிடந்த குடும்ப பிரச்சனைகளுக்கு நல்ல விடை கிடைக்கும். உற்றார், உறவினர்கள் மனதில் உங்களைப் பற்றிய தவறான எண்ணங்கள் மறைத்து நல்ல சிந்தனை உண்டாகும்.கோவில் பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். ஆலயத் திருப்பணிக்கு உதவி செய்வீர்கள். ஆன்மீகப் பெரியோர்கள், மகான்கள், குருமார்கள், இவர்களை தரிசிக்க கூடிய வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சிலருக்கு குருவின் உபதேசங்கள், தீட்சைகள் கிடைக்கும். நல்ல ஜோதிடர், நல்ல மருத்துவர், நல்ல குருமார்களின் அறிமுகம் கிடைக்கும்.புதிய கலைகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை மகன் அன்பு பெருகும். பல கோயில் குளம் ஏறி இறங்கிய பலனால் புத்திர பேறு கிடைக்கும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து பார்க்கும் பாக்கியம் உண்டாகும்.

    குருவின் ஏழாம் பார்வை பலன்கள்:

    ராசிக்கு பதினொன்றாமிடமான லாப ஸ்தானத்திற்கு குருவின் ஏழாம் பார்வை பதிவதால் தொழிலில் நிலவிய தடைகள் விலகி புத்துயிர் பெறும். வியாபாரம், உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்ப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருந்த நிலை மாறும். பணிச் சுமை குறையும்.பொருளதார முன்னேற்றம் ஏற்படும். வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். பொன், பொருள் வாங்குவீர்கள். கடன் தொல்லைகள் நீங்கும். அடகு நகைகள் மற்றும் சொத்துக்களை மீட்பீர்கள். வீடு, மனை, நிலங்கள், .அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்குவீர்கள். மூத்த சகோதர, சகோதரிகளின் வாழ்வில் சுப பலன்கள் உண்டாகும். மூத்த உடன் பிறப்புகள் சித்தப்பாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறையும். சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர்கள் சொகுசு வாழ்க்கையை நோக்கி முன்னேறுவார்கள்.

    குருவின் ஒன்பதாம் பார்வை பலன்கள்:

    ராசியில் குருவின் ஒன்பதாம் பார்வை பதிவதால் மனதில் தெளிவு, தன்னம்பிக்கை பிறக்கும். உடல் தேஜஸ் பெறும். பல புதிய மாற்றங்கள் செய்வது பற்றிய சிந்தனை உருவாகும். எதிர்காலம் பற்றிய பயம் விலகும்.மனதில் இருந்த கவலைகள், கஷ்டங்கள் எல்லாம் நிவர்த்தியாகும். உங்களுடைய திறமைகள் மற்றவர்களால் அங்கீகரிக்கப்படும் காலம். பட்ட கஷ்டத்திற்கு பயனடையும் காலம் என்று சொல்லலாம். பரந்த மனப்பான்மை தாராள குணம் ஏற்படும்.தந்தை, தந்தை வழி முன்னோர்களின் ஆசியும், ஆஸ்தியும் கிடைக்கும். சிலர் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக வெளியூர், வெளிநாடு செல்வார்கள். நீங்கள் பட்ட அனைத்து கஷ்டத்திற்கும் நிவர்த்தியாக தற்போது பலனடையப் போகிறீர்கள்.

    அசுவினி நட்சத்திர சஞ்சார பலன்கள்

    22.4.2023 முதல் 21.6.2023 வரை

    கோட்சாரத்தில் ராசிக்கு 11ல் சஞ்சரிக்கும் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் உடலிலும் மனதிலும் புதுத் தெம்பு பிறக்கும். உங்களுடைய எண்ணங்கள் அனைத்தும் பலிக்கும். கையில் பணப்புழக்கம் அதிகரித்து குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் சொல் கேட்பார்கள். புதிய தொழில் கிளைகள் திறக்கலாம். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் சொகுசு பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

    பரணி நட்சத்திர சஞ்சார பலன்கள் 22.6.2023 முதல் 17.4.2024 வரை

    தனுசு ராசிக்கு 6, 11ம் அதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் சஞ்சரிக்கும் காலத்தில் அரசு வேலை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. IAS, IPS, IFS பணிக்கு தேர்வு எழுதுபவர்களுக்கு பணி நியமனம் உண்டு. விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கும். பிள்ளைகளின் சுப காரியத்திற்கு எதிர்பார்த்த தொகை எதிர்பார்த்த இடத்திலிருந்து கிடைக்கும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். விரயங்கள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். உறவினர்களாலும், சமூதாய அந்த ஸ்தான மனிதர்களாலும் பெரிய உதவிகள் கிடைக்கும்.

    கிருத்திகை நட்சத்திர சஞ்சார பலன்கள் 18.4.2024 முதல் 30.4.2024 வரை

    தனுசு ராசிக்கு பாக்கியாதிபதியான சூரியனின்கிருத்திகை நட்சத்திரத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் கவுரவம் அந்தஸ்து கூடும்படியான சம்பவங்கள் நடக்கும். உயர் கல்வி கற்பதற்கு இதுவரை நிலவி வந்த தடைகள் அனைத்தும் விலகும். அரியர்ஸ் பாடத்தை எளிதி முடிப்பீர்கள். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். மதப்பற்று மிகும். பல தலைமுறையாக விற்காத பூர்வீகச் சொத்துக்கள் விற்கும். 4.9.2023 முதல் 26.11.2023 வரை பரணி நட்சத்திரத்திலும் 27.11.2023 முதல் 31.12.2023 வரை அசுவினி நட்சத்திரத்திலும் குரு பகவான் வக்ரம் அடையும் காலத்தில் வயதானவர்களுக்கு வெளிநாட்டி லிருக்கும் பேரன் பேத்திகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

    பெண்கள்: பெண்களுக்கு இது சூப்பரான குருப்பெயர்ச்சி. நேரம் காலம் நன்றாக இருக்கும் பொழுது கிடைக்கும் சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தவேண்டும். உபரி வருமானத்தை சேமித்து நகை,வெள்ளிப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய் வழி சொத்து கிடைக்கலாம்.உடல் பெருக்கம் ஏற்படும். உணவு கட்டுப்பாடு, ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களின் தகுதிக்கு தகுந்த உயர்வு உண்டு.

    மாணவர்கள்: அக்டோபர் 30,2023ல் ராகு 4ம்மிடம் செல்வதால் குழந்தைகள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் . 10ம் வகுப்பு 12ம் வகுப்பு மாணவ / மாணவிகள் மனனம் செய்யாமல் நன்றாக புரிந்து படித்தால் நீங்கள் விரும்பும் மதிப்பெண்ணை பெற முடியும். கணிதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து முயற்சி செய்யும் மாணவிகள் முதல் மதிப்பெண் எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

    உத்தியோகஸ்தர்கள்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வேலையிலிருந்த கெடுபிடிகள் குறையும். மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.நல்ல பண வரவு சுப விரயம் ஆகிய நன்மைகள் மிகும்.

    ராகு/கேது பெயர்ச்சி: அக்டோபர் 30,2023ல் ராகு நான்காம் இடத்திற்கும் கேது பத்தாமிடமும் செல்கிறார். பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது பழமொழி. பத்தாமிட கேது தொழில், உத்தியோகத்தில் தனித்திறமையுடன் மிளிரச் செய்வார். உங்களுடைய தொழில் சார்ந்த உப தொழில் ஒன்று துவங்கும் வாய்ப்புள்ளது.

    பரிகாரம்: விடா முயற்சியுடன் எதையும் செய்வதன் மூலம் கடவுள் அருள் உங்கள் பக்கம் இருக்கும். நல்லது நினைக்க நல்லதே நடக்கும். வியாழக்கிழமை சித்தர்களின் ஜீவ சமாதியில் நெய்தீபம் ஏற்றி வழிபட அருமையான சுப பலன்கள் உண்டாகும். உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் மஞ்சள், சந்தனம் அபிசேகம் செய்து மஞ்சள் லட்டு படைத்து குரு பகவானை வழிபட நிலையான முன்னேற்றம் உண்டாகும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    குருப்பெயர்ச்சி பலன்கள் - 2023

    குருபக்தி மிகுந்த தனுசு ராசியினரே ராசிக்கு 4ல் குரு பகவான் ஆட்சி பலம் பெறுகிறார்.

    சனிபகவான் 2 ,3ம் இடத்திலும் ராகு பகவான் 5ம் இடத்திலும், கேது பகவான் 11ம் இடத்திலும் பயணிக்கிறார்கள். இதுவரை ராசிக்கு 3ம் இடத்தில் சஞ்சரித்த ராசி அதிபதி குருபகவான் 4ம் இடமான சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். தனுசு ராசிக்குகுரு பகவான் ராசி அதிபதி மற்றும் சுகாதிபதி. இந்த குருப் பெயர்ச்சி இழந்த அனைத்து சுகங்களையும் மீட்டுத் தருவதாக இருக்கும். இழப்புகளை ஈடு செய்ய எடுத்த முயற்சிகள் வெற்றி கிடைக்கும் . குழப்பங்கள் தீரும்.

    மனக் கலக்கங்கள் காரிய தாமதம் அகலும். இழந்த பதவிகள் கிடைக்கும். பணத்தட்டுப்பாடு, பணமுடக்கங்கள் குறையும் வாய்ப்பு உள்ளது.பிரச்சனைகளை பொறுமையாக சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும்.எந்த காரியத்தை யாரிடம் பேசி எப்படிசாதிக்க வேண்டும் என்ற திறமை வளரும். மற்றவரின் உதவியை விரும்பாமல்உங்கள் வாழ்க்கை முன்னேற்றத்தை நீங்களே முயன்று அடையும் பக்குவம் பெறுவீர்கள்.கிடைக்கும்நேரத்தையும் , சந்தர்ப்பத்தையும் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பேராசை குறையும்.புத்திசாலித்தனமும், தைரியமும் அதிகரிக்கும். நல்ல தோற்றப் பொழிவும், ஜன வசீகரமும் ஏற்படும். சாஸ்த்திர ஞானமும் வியாபார தந்திரமும் உயரும். உயர்ந்த லட்சியம் உங்களை ஆட்கொள்ளும்.

    1,4ம் அதிபதியாகிய குரு 4ல் கேந்திரம் ஏறி அர்தாஷ்டம குருவாகிறார். குரு உங்களுக்குகேந்திராதிபதி என்றாலும்பெரிய பாதகங்கள் எதுவும்நிகழாது. தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியின் பார்வையும்4ம் இடத்திற்கு இருப்பதால் தங்கள் தோற்றம் மற்றும் செயல்பாடுகளில் நல்ல மாற்றம்தோன்றும். குழப்பமான மனநிலை, சோர்வு, மன உளைச்சல் நீங்கி நிம்மதி பிறக்கும். கடன் பெற்றாவது வீடு, வாகன யோகம் அடைய முயல்வீர்கள். வீடு அல்லது தொழில் ஸ்தாபனத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள்.

    உங்களின் 4ம் அதிபதி குரு என்பதால்நீங்கள் வாங்கும் வீடு, மனை அருகில் ஆன்மீக ஸ்தலங்கள் இருக்கும்வாய்ப்புப்புள்ளது.முறையான ஆவணங்கள், பட்டா இல்லாத சொத்து போன்ற வற்றிற்கு உரிய ஆவணங்கள் கிடைக்கும். இடதோஷம் உள்ள மனை அல்லது பூமியின் அதிர்வலையில் குறைபாடு உள்ள சொத்தில் வாஸ்து குறைபாடு சரி செய்யப்படும். தாயின் ஆரோக்யத்தில் முன்னேற்றம் உண்டாகும். தாயார் அல்லது தாய் வழி சுற்றத்தினரால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கப் பெறுவீர்கள். தாய்வழிச் சொத்தில் உள்ள சட்ட சிக்கல்கள் முடிவுக்கு வரும். கால்நடைபாக்கியங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். 4ல் குரு உள்ளதால் மாணவ மாணவிகள் கடினமாக உழைத்தால் நல்ல மதிப்பெண் எடுப்பது நிச்சயம். 4ம் இடத்திற்கு சனிப் பார்வையும் இருப்பதால் பள்ளிப் படிப்பைபாதியில் நிறுத்திய மாணவர்கள் கூட மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிப்பார்கள்.

    5ம் பார்வை பலன்கள்: குருவின் 5ம் பார்வையும், சனியின் 7ம் பார்வையும் அஷ்டம ஸ்தானத்திற்கு இருப்பதால் ஆயுள், ஆரோக்கியம் சிறப்படையும். உடலும் மனமும் புத்துணர்வு பெறும். இந்தகுருப் பெயர்ச்சி நோயிலிருந்து உங்களை காக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆயுளுக்கு பங்கம் விளைவிக்க கூடிய கொடிய நோய்க்கு சிகிச்சை செய்பவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். தீராத கடன், இனம் புரியாத நோய் போன்றவற்றிலிருந்து சிறு நிவாரணம் கிடைக்கும். நீண்ட நாட்களாக தீர்க்க முடியாதசட்டம் தொடர்பான பிரச்சனைகளுக்கு நீதிமன்றத்தால்அலைக்கழிகப்பட்டுமன வேதனை அடைந்தவர்களுக்கு வழக்கு வியாஜியங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு திடீர் அதிரஷ்டம், உயில், காப்பீட்டு முதிர்வு தொகை போன்றவற்றின் மூலம் தன லாபங்கள் ஏற்படும்.

    கோட்சாரத்தில் 5ல் ராகு இருப்பதால் குழந்தை பாக்கியத்தில் தடைதாமதம்ஏற்படலாம். செயற்கை முறை கருத்தரிப்பிற்குமுயற்சி செய்பவர்கள் தங்கள் சுய ஜாதகத்தை சரிபார்ப்பது அவசியம். 17. 1.2023 க்கு பிறகு சனிபகவானின் 3ம் பார்வையும் 5ம் இடத்திற்கு இருப்பதால் உத்தியோகம் அல்லது தொழில் நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். குழந்தைகள் மூலம் குடும்பத்தில் தொல்லைகள் குழந்தைகளுக்காக கடன் படுதல் அல்லது குழந்தைகளுக்கு ஆரோக்கிய குறைபாடு போன்ற சச்சரவு ஏற்படலாம்.

    7ம் பார்வை பலன்கள்:அரசியல், ஆன்மிகம், கல்வி, சொந்த தொழில் போன்ற எந்த துறையாக இருந்தாலும் அதில் நிலவிய மந்த நிலை மாறி தொழில் சூடு பிடிக்கும். உழைத்த உழைப்பிற்கு நிறைந்த வாபம் உண்டு. தொழில் மூலம் மரியாதை கிடைக்கும். சமூக அந்தஸ்து உயரும் .வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமூக நலச் சங்கங்களில் பதவி கிடைக்கும் புதிய ஒப்பந்தங்கள் கைகூடி வரும். உங்களின் 10ம் அதிபதி புதன் என்பதால் கமிஷன் தொடர்பான தொழிலில்இருப்பவர்களுக்கு முன்னேற்றம்நன்றாக இருக்கும். இதுவரை ஒரு தொழில் செய்து வந்தவர்கள் இரண்டு தொழில் செய்வார்கள். பலருக்கு புதிய தொழில் எண்ணம் வரும். வருமானம் பல மடங்கு பெருகும். 5ல் ராகு இருப்பதால் சிலர் புதிய வழி, குறுக்குவழி தொழில தந்திரங்களைப் பயன்படுத்தி வருமானத்தை அதிகப்படுத்துவீர்கள்.

    9ம் பார்வை பலன்கள்: குருவின் 9ம் பார்வை 12ம் மிடமான விரய ஸ்தானத்திற்கு இருப்பதால் குல தெய்வ கோவில் வழிபாட்டில் இருந்ததடை, தாமதங்கள் விலகும். விட்டுப் போன வழிபாடுகள், பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிட்டும். சிலர் தொழில் அல்லது உத்தியோகத்திற்காக வெளி நாட்டிற்குச் செல்லலாம். தொழில் நன்றாக இருந்தாலும் பெரிய லாபம் நிற்காது. போதிய வருமானம் இருந்தாலும்இழப்புகள், விரயத்தை தவிர்க்க முடியாத சூழ்நிலை இருக்கும். செலவுகளை குறைந்துக் கொள்வது நலம். கவனமாக தொழில் நடத்த வேண்டிய காலம்.தொழில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. சுய தொழில் செய்பவர்களுக்குபொருளாதார நிலையில் அவ்வப்போது சிறு சிறு சுணக்கம் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். நிம்மதியான தூக்கம் வரும்.

    குருவின் வக்ர பலன்கள்: 29.7.2022 முதல் 23.11.2022 வரை சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குரு வக்ரம் அடையும் காலத்தில்வாக்கு ஸ்தானத்தில் சனி பகவான் நிற்பதால் கடினமான மற்றும் அடுத்தவர் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை தவிர்க்க வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் போகும். குடும்பத்தில் சிறு சிறு மனக்கசப்பு தோன்றி மறையும். ஆரம்பக்கல்வி பயிலும் குழந்தைகளுக்குகல்வியில் சிறு தடை அல்லது மந்த நிலை இருக்கும். குரு உங்களை உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் போது 5ல் உள்ள ராகு எதிர்பாராத சறுக்கலையும் ஏற்படுத்தும், வீண் பழிக்கு ஆளாக நேரும் என்பதால் சட்டத்திற்கு புறம்பான செயல்களை செய்யக்கூடாது இந்த கால கட்டத்தில் நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்க வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள். அவசர தேவைக்கு நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று தற்போதைய நிதி நிலையை சரி செய்ய முடியும். குருவின் வக்ர நிவர்த்திக்கு பிறகு சனிப் பெயர்ச்சிக்குப் பிறகு கடனால் கவலை உண்டாகும்.

    பெண்கள்: திருமணம் ஆன தம்பதியினர் மகிழ்ச்சியாக இல்லறம்நடத்துவார். தம்பதியினர்தொழில் நிமித்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணமாகவோவெவ்வேறுஊர்களில் பிரிந்துவாழ்ந்து கொண்டிருந்தால்இப்பொழுது ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும் அற்புதமான நல்ல நேரம் . விவகாரத்து ஆன தம்பதிகள் கூட மறுபடியும் சேர்ந்து வாழும் வாய்ப்பு உருவாகும். மனக்கசப்பு மாறும்.

    பரிகாரம்: செவ்வாய் கிழமை காலை 11-12 மணி வரையான சனி ஒரையில் முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து பட வேண்டும்.சனிக் கிழமை காலை 8-&-9 மணி வரையான செவ்வாய் ஒரையில் சிவனுக்குநல்லெண்ணெயில் சிவப்பு திரி இட்டு 6 விளக்குகள் ஏற்றி வழிபட வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×