search icon
என் மலர்tooltip icon

    தனுசு - குரோதி வருடம் வருட பலன்

    தனுசு

    தமிழ் புத்தாண்டு ராசிபலன்

    எதிர்பார்ப்புகள் நிறைவேறும்! குரு கடாட்சம் நிறைந்த தனுசு ராசியினருக்கு குரோதி வருட புத்தாண்டு நெருக்கடிகள் விலகி செயல்களில் முன்னேற்றம் உண்டாகும் வருடமாக அமைய நல் வாழ்த்துக்கள்.

    சஷ்டம குருவின் பலன்கள்:

    தனுசு ராசிக்கு ராசி அதிபதி மற்றும் 4ம் அதிபதியான குரு பகவான் மே 1, 2024 முதல் 6ம்மிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானம் செல்கிறார். 6ம்மிடம் என்பது உப ஜெய ஸ்தானம். ராசி அதிபதி சுக ஸ்தான அதிபதி குரு உப ஜெய ஸ்தானமாக இருந்தால் கூட 6ம்மிடம் செல்வது சற்று சுமாரான பலன் தான். தனியார், அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்திற்கு விசுவாசமாகவும், நன்றியுடனும் இருப்பீர்கள்.அதே நேரத்தில் குரு நின்ற இடம் சுமாராக இருந்தால் கூட பார்வை பதியும் இடங்கள் நல்ல பலனைத் தரும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

    6ம்மிடத்தில் நிற்கும் குருவின் 5ம் பார்வை 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் பதிகிறது. புதிய தொழில் முயற்சிக்கு உகந்த நேரம். இது வரை தொழிலில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். தொழில் துவங்க அல்லது தொழில் விரிவாக்கம் செய்யத் தேவையான முதல் அரசுடைமை வங்கிகளில் கிடைக்கும். சட்ட ரீதியான சிக்கல்கள் விலகும். குடும்பம். தழைக்க ஆண் வாரிசு பிறக்கும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீகம் தொடர்பான விசயங்கள் விரைவில் முடிவிற்கு வரும்.

    தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.தலைமைப்பதவி தேடி வரும். குருவின் 7ம் பார்வை ராசிக்கு 12ம்மிடமான விரய ஸ்தானத்தில் பதிகிறது. சுபமங்கள விரயச் செலவு உண்டாகும். சுப கடன் வாங்கி பூமி, வீடு, வாகன, வசதியை பெருக்குவீர்கள். சிலர் ஊர் மாற்றம் அல்லது வீடு மாற்றம் செய்யலாம். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள் விலகும். குருவின் 9ம் பார்வை ராசிக்கு 2ம்மிடமான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் பதிகிறது.

    குடும்பத்தில் மகிழ்ச்சி ஆனந்தம் அதிகரிக்கும். விவசாய நிலத்தில் கிணறு வெட்ட, போரிங் போட நல்ல ஊற்று கிடைக்கும். உயர் கல்வியில் மேன்மை உண்டாகும். குறிப்பாக மருத்துவத் துறை படிப்பு முயற்சியில் இருப்பவர்களுக்கு வெற்றி நிச்சயம். கல்லூரி அரியர்ஸ் பாடத்தை எழுதி முடிக்க ஏற்ற காலம்.

    சகாய ஸ்தான சனியின் பலன்கள்:

    தனுசு ராசிக்கு 2, 3ம் அதிபதி சனி. தனம், வாக்கு. குடும்ப ஸ்தான அதிபதி. சகாய ஸ்தான அதிபதி. புதிய நட்பு வட்டாரம் உருவாகும். விலகிச் சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். உடன் பிறந்தோர் நட்பும், நல்லுறவும் ஏற்படும். மூத்த சகோதர, சகோதரியால் ஆதாயம் உண்டு.

    அண்டை அயலாருடன் ஏற்பட்ட மனபேதம் சீராகும். குடும்ப பிரச்சனைகள் அகலும்.ராசிக்கு 3ல் நிற்கும் சனியின் 3ம் பார்வை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பதிகிறது. வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் போன்ற நல்ல விதமான மாற்றங்கள் ஏற்படும். தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும்.அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரிக்கும்.

    அரசாங்கத்தால் நன்மை உண்டாகும். பொருளாதாரத்தைப் பொறுத்தவரை இல்லை என்ற நிலை உங்களுக்கு இல்லை.சிலருக்கு கடல் கடந்த வேலை செய்யும் யோகம் உண்டாகும். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலிகளும் பிரபலமடைவார்கள். கண், காது, மூக்கு தொடர்பான உபாதைகள் வைத்தியத்தில் சீராகும்.

    மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வமும், அக்கறையும் ஏற்படும். மாமனாரால் சிறு சிறு இன்னல்கள் தோன்றி மறையும். சனியின் 7ம் பார்வை பாக்கிய ஸ்தானத்தில் பதிகிறது. புண்ணிய பலன்கள் நடக்கும். மன வலிமை அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணத்திற்கு நாள் குறிக்கலாம். மகளின் திருமணத்திற்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவி கிடைக்கும். சிலர் வீட்டு கிரக பிரவேசத்திற்கு தயாராகுவார்கள்.

    தாய் அன்பும், தாய்வழி உறவுகளின் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். மூதாதையர் சொத்தில் அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். சமூகத் தொண்டு செய்யும் ஆர்வம் உண்டாகும்.மேற்படிப்பிற்கான முயற்சி கை கூடும். வயோதிகர்களுக்கு பேரன், பேத்தி பிறக்கும்.

    சுக ஸ்தான ராகு / தொழில் ஸ்தான கேது:

    4ம்மிடமான சொத்து சுகம், வீடு, வாகனம் பற்றிக் கூறுமிடத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கிறார். நல்லார் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும். வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டில் குடியேறுவார்கள். சிலர் வாடகைக்கு வசிக்கும் குடியிருப்பை வாங்குவார்கள்.

    சிலர் பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்து வாங்குவார்கள். அதிர்ஷ்ட பொருள், பணம், நகை, உபரி வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சேமிப்புகள் அதிகரிக்கும். தாய், மனைவி மூலம் ஸ்திர சொத்துக்களின் சேர்க்கை உண்டாகும். வீடு, வாகன யோகம் சிறப்பாக உள்ளது. பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் எடுப்பார்கள்.

    ஆரோக்கியம் முன்னேற்றமடையும். சிலர் இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள். மன வேதனையால் முதியோர் இல்லம் சென்ற சில வயது முதிர்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள் தாய், தந்தையரின் விருப்பங்களையும், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவீர்கள். கைவிட்டுப் போகும் நிலையில் இருந்த பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.

    இந்த கால கட்டத்தில் கல்வி நிறுவனங்கள், தர்ம ஸ்தாபனங்கள், வழிபாட்டு ஸ்தலங்களுக்கு உதவி செய்தால் பாக்கிய பலன்கள் அதிகரிக்கும். தாய், பிள்ளை உறவில் பாசமும் உற்சாகம் பொங்கும்.

    பலவீன மனத்தினர் சிலர் மாந்தரீகம், அருள் வாக்கு கூறும் இடம் என அலைந்து மன நிம்மதிக்கான மார்க்கத்தை தேடுவார்கள். 10ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். இப்பொழுது 10ல் உள்ள கேதுவால் எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும் ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு அபாரமான தொழில் வளர்ச்சி ஏற்படும்.

    பெற்றவர்களால் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளால் பெற்றோர்களுக்கும் பெருமை சேரும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழி நடத்தும். குல தெய்வம் தொடர்பான வேண்டுதல்கள் பலிதமாகும். பூர்வீகம் தொடர்பாக இருந்து வந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வர வாய்ப்புண்டு.

    மூலம்:

    கேதுவின் மூலம் நட்சத்திரம் தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டு குதூகலமான இருக்கும்.தடைபட்ட பணிகள் துரிதமாகும். அனைத்து காரியங்களும் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் ஆனந்தம் பொங்கும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் செல்வாக்கு சொல்வாக்கு உயரும். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர்நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு.

    அரசியல்வாதிகளுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும். எதிரிகள் ஒதுங்குவார்கள். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும்.

    திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகனம் என சுப பலன்கள் நடக்கும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள் சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். புதிய தொழிலுக்காக விண்ணப்பித்த லைசென்ஸ் கிடைக்கும்.

    சிலரின் வாழ்க்கைத் துணை தொழிலுக்காக கடல்கடந்து செல்ல வாய்ப்பு உள்ளது. பணம், கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். வீண் செலவால் மனச் சஞ்சலம் இருக்கும். உங்களைப் பாதித்த நோய்த் தொந்தரவில் இருந்து சிறிது சிறிதாக விடுபடுவீர்கள். தினமும் விநாயகர் அகவல் படிக்கவும்.

    பூராடம்:

    சுக்ரனின் பூராடம் நட்சத்திரம் தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு குரோதி வருட புத்தாண்டு மன நிறைவு, மன நிம்மதி மகிழ்ச்சியை அதிகரிக்கும் வருடமாக அமையும். உங்களின் சோதனைகள் சாதனைகளாக மாறும். புதிய சிந்தனைகள் உதயமாகும். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கையும், தைரியமும் மேலோங்கும். நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். இரக்கமும் தயாள குணமும், அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மையும்,தெய்வ நம்பிக்கையும் ஏற்படும்.

    மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். தந்தை ஸ்தானத்தில் இருந்து உங்களின் சகோதர, சகோதரி திருமணத்தை ஏற்று நடத்துவீர்கள்.வியாபாரம் பெருகும். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டு. தாராளமான வரவு, செலவு காணப்படும். கடன் பிரச்சினை குறையும். வீடு, நிலம், வாகனம் போன்றவைகள் வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும்.

    மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. தந்தையுடன் நல்ல புரிதல் ஏற்படும்.உடல் நிலை தேறும். ஸ்ரீ லஷ்மி நரசிம்மரை வழிபட சுப பலன்கள் அதிகரிக்கும்.

    உத்திராடம் 1:

    சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குரோதி வருட தமிழ் புத்தாண்டில் தடைகள் விலகும். பாக்கிய ஸ்தானம் வலிமை பெறுவதால் சாதிக்கும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்சியும் நீடிக்கும். குல தெய்வ அருள் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உத்தியோகத்தில் நிலவிய சங்கடங்கள் விலகும். வேலை இல்லாதவர்களுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.

    தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகி வாழ்க்கைக்கு, ஜீவனத்திற்கு தேவையான, வருவாய் கிடைக்கத் துவங்கும். கடன்களை அடைத்து நிம்மதி அடைவீர்கள். குடும்பத்தில் ஏதாவது செலவு ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சொத்துக்களின் மதிப்பு உயரும்.புதிய சொத்துக்கள் சேரும்.தாய், தந்தை பொருள் உதவி செய்து முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள்.

    வெளிநாட்டில் வேலை பார்த்த சிலர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் விருப்பத்திற்காக வேலையை விட்டு தாயகம் திரும்புவார்கள். அந்நிய தேசத்தில் வாழ விருப்பம் அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். சுருக்கமாக அனைத்து சங்கடங்களும் விலகி நன்மைகள் அதிகரிக்கும். தினமும் கருடாழ்வாரை மனதார வழிபட வம்பு, வழக்குகளிலிருந்து மீள்வீர்கள்.

    திருமணம்:

    இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். முதல் திருமணத்தில் தோல்வி அடைந்தவர்களுக்கு மறு வாழ்க்கை அமையும்.

     பரிகாரம்:

    கால புருஷ 9ம் அதிபதி குருவின் வீடான தனுசு ராசியில் பிறந்த உங்களுக்கு சித்தர்கள் வழிபாடு எளிதில் பாவ விமோசனம் பெற்றுத்தரும். பழனி என்றாலே நம் நினைவுக்கு வருவது அறுபடை வீடுகளில் ஒன்றான முருகனின் மிகப்பெரும் ஆலயம் மட்டும்தான். தற்போது அது மட்டுமல்லாமல் கணக்கம்பட்டி சித்தர் ஜீவசமாதியும் உள்ளது.

    பழனியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கணக்கன்பட்டி சித்தர் ஆலயம். கலியுகத்தில் பலர் நேரில் சந்தித்து ஆசி பெற்ற மகான். சித்தரின் ஆலயத்திற்கு சென்றாலே ஒருவிதமான புதிய உணர்வுடன் கூடிய அதிர்வலைகள் ஏற்படுவதை உங்களால் உணர முடியும். இந்த சித்தரின் ஆலயத்திற்கு சென்று வந்தால் உங்கள் பாவம் கரைந்து நிம்மதி உண்டாகும்.

    தனுசு

    சோபகிருது வருட பலன் 2023

    அதிர்ஷ்டம் அதிகரிக்கும்!

    ஆன்மீக நாட்டம் நிறைந்த தனுசு ராசியினருக்கு பிறக்கும் சோப கிருது வருட புத்தாண்டு அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக அமைய வாழ்த்துக்கள். திருக்க ணித பஞ்சாங்கப்படி ஆண்டின் துவக்கத்தில் குருபகவான் ஏப்ரல் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார். ஜனவரி 17ல் நடந்த சனிப்பெயர்ச்சியில் சனி பகவான் மூன்றாமிடம் எனும் முயற்சி, சகாய ஸ்தானத்தில் சஞ்சரித்துக் கொண்டு இருக்கிறார். தற்போது ராசிக்கு 5,11ல் நிற்கும் ராகு கேதுக்கள் அக்டோபர் 30 முதல்4,10மிடம் செல்கிறார்கள்.

    எடுக்கும் முயற்சிகளில் படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும்.எதையும் தீர்க்கமாக முடி வெடுத்து சிந்தித்து செயல்ப டுவீர்கள். தனித்த அடையா ளத்துடன் மற்றவர்க ளுக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டுவீர்கள்.ஏழரைச் சனியால் சொந்த வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்து விடுவீர்கள்.

    இதுவரை சொத்து வாகன வசதி இல்லாத வர்களுக்கு புதிய சொத்துகள் மற்றும் வாகனங்கள் கிடைக்கும்.கவுரவப் பதவிகள் தேடி வரும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் வந்து சேரும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு அதிக தொழில் முதலீடு செய்யக் கூடிய தொழில் பார்ட்னர்கள் கிடைப்பார்கள்.

    அரசு ஊழியர்களுக்கு விரும்பிய ஊருக்கு வேலைமாற்றம், பதவி உயர்வு உண்டாகும்.3ல் சனி இருப்பதால் ஆவணங்கள் தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் தேடி வரும். புத்திர பாக்கியம் உண்டாகும். ஆரோக்கியம் சீராகும்.

    குடும்பம், பொருளாதாரம் : உங்களுடைய முயற்சிகள் அனைத்தும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். விட்டுப் பிரிந்த உறவுகள் எல்லாம் தேடி வருவார்கள். சில உறவினர்களிடம் எதிர்பார்த்த, எதிர்பார்க்காத உதவிகள் கிடைக்கும். நல்லோர் உறவும், நண்பர்கள் ஆதரவும் உறவினர்கள், ஒத்துழைப்பும் அமோகமாக அமையும்.

    தீட்டிய திட்டங்களில் வெற்றி பெற நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவுவார்கள்.சிலருக்கு வாழ்க்கைத் துணையின் மூலம் சில பொருள் வரவுகள் ஏற்படும். தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும். தேக ஆரோக்கியம், மன அமைதி, பொருளாதார முன்னேற்றம், வாழ்க்கை முன்னேற்றம் என பல புதிய மாற்றங்கள் ஏற்படும்.

    பணிச்சுமை அதிகரித்தாலும் அதற்கு தகுந்த வருமானமும் அதிகரிக்கும்.உயில் சொத்து, பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற மறைமுக வகையில் பொருளாதாரம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாட்டால் பாகப்பிரிவினை தள்ளிப்போகும். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தொடர் கதையாக, இழுபறியாக இருக்கும்.

    பெண்கள் : பெண்களுக்கு இந்த புத்தாண்டில் நன்மைகள் அதிகமாக இருக்கும் குடும்பத்திலுள்ள வர்களிடம்உங்களின் பேச்சு எடுபடும். உங்களின் கௌரவம் அந்தஸ்து உயரும். உங்கள் கணவர்நீங்கள் மனதில் நினைப்பதையும்நடத்துவார். மாமியார் மாமனாரிடம் பாராட்டு கிடைக்கும். புகுந்த வீட்டில் மதிக்கப் பெறுவீர்கள் .பணிபுரியும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். பணவரவு சரளமாக இருக்கும். சொந்த வீட்டு ஆசை அதிகரிக்கும்.

    மூலம் : நெருக்கடி நிலை மாறும் காலம். தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும். தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும்.திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும்.

    போட்டி, பகை, கடன்தொல்லை, வேலை, தொழில் பாதிப்பு குறையும். உங்களை துரத்திய அசிங்கம், அவமானம், அதிர்ஷ்டக் குறைபாடு இருந்த இடம் தெரியாது. உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். பெண் வழிப் பிரச்சனைகள் அகலும். சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்பிற்காகவெளியேறலாம்.பங்கு சந்தை ஆதாயம் மகிழ்விக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் இணைந்துபடிக்கும் வாய்ப்பு உள்ளது. சம்பந்திகள் சண்டை முடிவிற்கு வரும்.வேலையாட்களால் உருவாகிய பிரச்சனை சீராகும்.ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். தினமும் தட்சிணாமூர்த்தி காயத்திரி மந்திரம் படிக்கவும்.

    பூராடம் : ஆதாயம் நிறைந்த காலம். கண் திருஷ்டி, போட்டி, பொறாமை பாதிப்புகள் அகலும். பங்குச் சந்தை, திடீர் அதிர்ஷ்ட ஆதாயம் உண்டு. பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், தொழில் முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். தொழிலை விரிவுபடுத்த மற்றும் ரொட்டேஷனுக்கு தேவையான கடன் அரசுடமை வங்கிகள் மூலம் கிடைக்கும்.

    வீட்டில் மேளச் சத்தம் கேட்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி ஆனந்தம் அடைவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். பூர்வீகம்தொடர்பானபிரச்சனைகள் குறையும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றஏற்ற காலம். பருவ வயது பிள்ளைகள் பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது அவசியம். தினமும் தட்சிணாமூர்த்தி மூல மந்திரம் படிக்கவும்.

    உத்திராடம் 1 : மனோதிடம்கூடும் காலம்மனதில் தெம்பு, தைரியம் ஏற்படும். இழுபறி நிலைமாறி துரிதமாக காரியங்கள் நடைபெறும். திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பீர்கள்.யாரும் செய்யத் தயங்கும் செயல்களை துணிச்சலுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும். தாய் மாமா அல்லது தாய்வழி தாத்தா உங்களுக்கு நிதி உதவி செய்யலாம். வெவ்வேறுஊர்களில்பிரிந்துவாழ்ந்ததம்பதிகள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சிகரமாக இல்லறம் நடத்தும்நல்ல நேரம்.உங்களின் முயற்சிக்கு பெற்றோர்கள், உடன் பிறந்தவர்கள், மனைவி, மக்கள் உதவியாக இருப்பார்கள். ஆடம்பரத்தை, அந்தஸ்த்தைதக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்ய நேரும். வெளிநாட்டிற்கு இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். தினமும் தட்சிணாமூர்த்தி அஷ்டோதாரம் படிக்கவும்.

    பரிகாரம் : கற்பக விநாயகா் கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும். இது காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது. தனுசு ராசியினர் இங்கு சென்று வர சுப பலன் கூடும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    சுபகிருது வருட பலன் - 2023

    வில்லை போல் வளைந்து கொடுக்கும் தன்மை மிகுந்த தனுசு ராசியினருக்கு இந்த தமிழ் புத்தாண்டில் அனைத்து விதமான பாக்கியங்களும் கிடைக்க நல் வாழ்த்துக்கள்.

    உங்கள் ராசிக்கு 5ம் இடத்தில் ராகுவும், 11ம் இடத்தில் கேதுவும் நிற்கிறார்கள். குருபகவான் 4ம் இடத்திலும், சனி பகவான் 2, 3ம் இடங்களிலும் சஞ்சரிக்கிறார்கள். 5ம்மிட ராகுவால் மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். மனம் பற்றற்ற நிலையை விரும்பும். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரின் நன்மதிப்பைப் பெற்றுத் தரும்.

    பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கவுரவம் உயரும். உங்கள் இன, மத இயக்கங்களில் முதன்மைப் பதவியும், கௌரவமும் தேடிவரும். 11ம்மிட கேதுவால் சிலருக்கு கலப்பு திருமணம் நடக்கும். சிலரின் மறுமண முயற்சி கைகூடும். வாழ்க்கை துணையால் செலவுகள் அதிகமாகும். சிலருக்க எதிர் பாலினத்தினரால் மனச்சுமை அதிகரிக்கும். 4ம்மிட குருபகவானால் ஆடம்பர பொருட்கள் வாங்குவதிலும், சேர்ப்பதிலும் ஆர்வம் அதிகரிக்கும். வீடு கட்டும் எண்ணமும் நிலபுலன் வாங்கும் எண்ணமும் பலிதமாகும். தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் தாய் மாமன் ஆதரவால் தீரும். இரண்டாமிட சனி பகவானால் வேலைப் பளுவினால் நேரத்திற்கு சாப்பிட முடியாது. திட்டங்கள் பலிதமாகாமல் நினைப்பது ஒன்று- நடப்பது வேறு மாக ஏமாற்றத்தை சந்தித்த நிலை மாறும்.

    குடும்பம்:லாபகரமான நேர்மறையான பலன்கள் அடுக்கடுக்கான அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சமுதாயத்தில், உற்றார், உறவினர்களிடம் நல்ல வரவேற்பு, உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்ற உறவுகள் நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.குலதெய்வம், பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசுவழி ஆதாயம் மிகும். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும்.தாயின் நல்லாசியும் ஆஸ்தியும் கிடைக்கும். இதுவரை பாராமுகம் காட்டிய உங்களின் மூத்த சகோதரர் உங்கள் வீட்டின் சுப நிகழ்விற்கு முன் வந்து நின்று உங்களை கவுரவிக்கலாம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். வெளிநாட்டுப் படிப்பு அல்லது வேலைக்கு முயற்ச்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும்.

    ஆரோக்கியம்: ஆயுள்,ஆரோக்கியம் சிறப்படையும். உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாகஎன்னவென்றே தெரியாத நோய் தாக்கம் இருப்பவர்களுக்கு எந்த வைத்தியம் செய்தால் நோய் பூரணமாக குணமாகும் என்ற புரிதல் ஏற்படும். நீண்ட நாள் நோய்க்கு அல்லது பரம்பரை நோய்க்கு சிகிச்சை செய்பவர்களுக்கு சிகிச்சை நல்ல பலன் தரும்.

    திருமணம்:குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் சனி நின்று 7ம் பார்வையாக 8ம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தைப் பார்ப்பதால் கோட்சார ரீதியாக திருமணம் தடைபட்டது. குரு மீனத்திற்கு பெயர்ச்சி ஆகுவதால் 8ம் இடத்திற்கு குருப் பார்வை கிடைக்கும். திருமணத் தடை அகலும்.

    பெண்கள்: தங்க நகைகள், சொத்துக்களை அடமானம் வைத்து பிழைப்பு நடத்திய நிலை முற்றிலும் மாறும். நீண்ட காலமாக தடைபட்ட காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும். தாய் வழி உறவுகளால் அதிக நன்மையும், ஆதாயமும் உண்டாகும். மகளிர் சுய உதவிக் குழு, மாதர் சங்கம் போன்ற முக்கியமான அமைப்புகளில் உயர் பதவிகள் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும்.

    மாணவர்கள்:பொழுதுபோக்கில் நாட்டத்தைக் குறைத்து கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 5ல் ராகு இருப்பதால் கெட்ட சகவாசங்களை தவிர்க்க வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்களை முக்கியத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தவும்.

    உத்தியோகஸ்தர்கள்:உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட கணக்கமற்ற சூழல் மாறும். 5ல் ராகு இருப்பதால் அரசு அதிகாரிகள் லஞ்ச விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் அதிக சம்பளத்திற்கு ஆசைப்பட்டு வேலையை மாற்றலாம். சிலர் ஒப்பந்த வேலைக்காக குறுகிய காலம் பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். சிலர் அதிக சம்பளத்திற்குஆசைப்பட்டு பார்க்கும் வேலையை நழுவ விடுவார்கள்.புதிய வேலைக்கான பணி நியமன உத்தரவை வாங்கிய பிறகே பழைய வேலையை விட வேண்டும்.

    முதலீட்டாளர்கள்:வியாபாரிகள், முதலீட்டாளர்களுக்கு இது மிகச் சிறப்பான நன்மைகள் நடைபெறும் நல்ல நேரம். சிறுதொழில், சில்லறை வணிகர்கள் மொத்த வியாபாரிகளாக தொழிலை உயர்த்துவீர்கள். சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை, தொழில் முன்னேற்றம் போன்ற அனைத்தும் மனதிற்கு முழு நிறைவு அளிக்கும். நல்ல நம்பிக்கையான வேலையாட்கள் கிடைப்பார்கள். வேலையாட்களால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மந்தமான தொழில் சூடு பிடிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு தேவையான கடன் தொகை தாய்மாமன் மூலம் கிடைக்கும்.

    அரசியல்வாதிகள்:5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப் பெறுவதால் தனுசு ராசி அரசியல் பிரமுகர்கள் வைத்ததுதான் சட்டம். உங்களைச் சுற்றி எப்பொழுது தொண்டர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பதால் மக்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவீர்கள்.

    கலைஞர்கள்:திரைப்பட கலைஞர்கள் சங்கத்தில் உயரிய பதவி கிடைக்கும். சின்னத்திரை, பெரிய திரை, நாடக துறையினர் மற்றும் தெருக்கூத்து கலைஞர்கள் என அனைத்துப் பிரிவினருக்கும் இது பொற்காலம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது.

    விவசாயிகள்:வேளாண் பணிகளில் ஆத்மார்த்தமாக ஈடுபடுவீர்கள் பச்சைபசேல் என்று விளைந்த வயல்களைப் பார்த்து பூரிப்படை வீர்கள். செவ்வாய் உங்களின் 5 ம் அதிபதி என்பதால் மண்ணை நம்பி உழைத்த உழைப்பிற்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும். பூ உற்பத்தியாளர்களுக்கு விளைச்சலும், விற்பனையும் அமோகமாக இருக்கும்.

    கவனமாக செயல்பட வேண்டிய காலம்.

    ராகு/கேது: 21.2.2023 முதல் கேதுவின் அசுவினி நட்சத்திரத்தில் ராகு பயணிக்கிறார்.18.10.2022 முதல் ராகுவின் சுவாதி நட்சத்திரத்தில் கேது சஞ்சரிக்கிறார்.ராகுவும் கேதுவும் தங்கள் நட்சத்திரங்களை பரிமாறிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த கால கட்டத்தில் 5-11ம் இடத்தில் ராகு/கேதுக்கள் சஞ்சரிப்பதால் குறுக்கு சிந்தனைய பயன்படுத்தி சம்பாதிக்க வைத்து குறுகிய காலத்தில் அதிகமாக சம்பாதிக்க வைப்பார். பணத்தின் சுவையை அனுபவிக்கும்முன்பு அதை பிடுங்குவார். அல்லது சட்டச் சிக்கலில் மாட்ட வைப்பார். ஒரு சிலருக்கு தீடீர் பக்தியை கொடுப்பார். பக்திக்கு பின் பெரிய பதவி ஆசையைபுகுத்துவார். பதவியை கொடுப்பார். பதவி எப்பொழுது பறிபோகுமோ என்ற பயத்துடன் பதவியில் பல தவறுகளை செய்து பெயருக்கு கலங்கம் ஏற்படுத்துவார்.

    இது போன்ற பின்விளைவுகள் மிகுதியாக இருக்கும்.குரு: 29.7.2022 முதல் 23.11.2022 வரை ராசிக்கு 2ல் சஞ்சரிக்கும் கோட்சார சனியின் உத்திராடம் நட்சத்திரத்தில் குருபகவான்வக்ரம் அடையும் காலத்தில் உங்களுக்கு ஏற்படும் நல்லது கெட்டது இரண்டிற்கும் நீங்களே காரணமாக இருப்பீர்கள். நீங்கள் பிறரின் நலத்திற்காகசெய்த செயல் கூட உங்களை பதம் பார்க்கும். மந்தத் தன்மை, தயக்கம்இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். சிலர் கடன் பெற்று வீடு, வாகன யோகம் கிடைக்கப் பெறுவர். சிலருக்கு வீடு, வாகன வகையில் ரிப்பேர் செலவு கையை கடிக்கும்.

    பரிகாரம்:வியாழக்கிழமை கோவில் யானைக்குகரும்பு, பழங்கள் இயன்ற உணவு தானம் வழங்க மகத்தான வாழ்வு உண்டு.

    வாழ்க்கைத் தரம் உயரும்

    ஐந்தாமிட ராகு மிகுதியான பொருளாசையைக் கொடுப்பார்.அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். பொன், பொருள் கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்ட பணம் கிடைக்கலாம். பலகாலமாக விற்காமல் கிடந்த சொத்து விற்பனையில் பெரிய பணம் கிடைக்கலாம். முதலீடு இல்லாத கமிஷன் அடிப்படையிலான தொழில் புரிபவர்கள், ஆன்லைன் வர்த்தகர்களுக்கு நல்ல வருமானம் உண்டாகும். பேச்சை மூலதனமாக கொண்ட ஆசிரியர்கள், விற்பனை பிரதிநிதிகள், ஜோதிடர்கள், வக்கீல்கள் போன்றவர்களுக்கு தொழிலால் வருமானம் பெருகும். வாழ்க்கைத் தரம் உயரும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×