search icon
என் மலர்tooltip icon

    தனுசு - வார பலன்கள்

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    26.9.2022 முதல் 2.10.2022 வரை

    தடைபட்ட அனைத்து இன்பங்களும் கூடி வரும் வாரம். ராசி அதிபதி குருவிற்கு சனியின் 3ம் பார்வை இருப்பது தர்ம கர்மாதிபதி யோகம். அத்துடன் பாக்கிய அதிபதி சூரியன், 7, 10-ம் அதிபதி புதன், 6,11-ம் அதிபதி சுக்ரன் ராசி அதிபதி குருவை பார்ப்பதால் தர்ம கர்மாதிபதி யோகம் சுப பலனை இரட்டிப்பாக வழங்கப் போகிறது.

    குலத்தொழில் செய்பவர்களின் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். கமிஷன் அடிப்படை தொழில் புரிபவர்களுக்கு அதிகமான நன்மைகள் உண்டு.ஐந்தில் உள்ள ராகு தொழில், உத்தியோகத்தில் குறுக்கு சிந்தனையை புகுத்துவார். சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் செய்ய நேரும். திருமணக் கனவு நினைவாகும்.

    குழந்தை பாக்கியம் கிட்டும்.வீடு,மனை, வாகன யோகம் உண்டு.புதிய வீடு கட்டலாம். பழைய வீட்டை பழுது பார்க்கலாம். அதற்கு தேவையான கடன் உதவி கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும். ஆஞ்சநேயர் வழிபாடு முன்னேற்றத்தை அதிகரிக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    19.9.2022 முதல் 25.9.2022 வரை

    சிறிய முயற்சியில் பெரிய வெற்றி பெரும் வாரம். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்துக்கள் விற்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வரும். சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும். பரம்பரை சொந்தத் தொழிலின் முழுப்பொறுப்பையும் தந்தை உங்களிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வு எடுக்கத் துவங்குவார்.

    2-ம் அதிபதி சனி வக்ரமாக இருப்பதால் சாத்தியமற்ற விசயத்திற்கு யாருக்கும் வாக்கு கொடுத்து வம்பில் மாட்டக்கூடாது. பேச்சை மூலதனமாகக் கொண்டு தொழில் செய்பவர்கள் நிதானமாக சிந்தித்து பேச வேண்டும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் நல்ல பொருள் வரவை பெற்றுத்தரும். பெண்கள் மாமனார், மாமியாரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நேரம்.

    20.9.2022 அன்று மதியம் 2.23 முதல் 23. 9.2022 அன்று மதியம் 2.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடன் வாங்குவதையும் கொடுப்ப தையும் தவிர்க்க வேண்டும். அமாவாசையன்று பசுவிற்கு அகத்திக் கீரை தானம் தரவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    12.9.2022 முதல் 18.9.2022 வரை

    குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப்புள்ளியாகும் வாரம். 5-ல் ராகு இருப்பதால்பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டு. லாப ஸ்தானத்தை கேது கடப்பதால் புதிய தொழில் முதலீட்டில் கவனம் தேவை. லாபத்தை கவனமாக பாதுகாக்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சிலர் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவார்கள்.

    குடும்ப உறவுகளிடையேஇணக்கமான சூழல் நிலவும்.தந்தை மற்றும் தந்தை வழிஉறவுகளின் மேல் ஏற்பட்டவெறுப்பு மாறும். வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் இருந்த வேற்றுமை மறையும். பேச்சை மூலதனமாக கொண்ட தொழில், கமிஷன் அடிப்படையான தொழில் புரிபவர்க ளுக்கும் மிக மிக சாதகமான வாரம்.

    அசையும், அசையாச் சொத்துக்களின் பராமரிப்புச் செலவு அதிகமாகும். சுய விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும்.மனைவி வழி ஆதா யம் உண்டு. தொழில், உத்தியோக அனு கூலம் நல்ல விதமாக இருந்தாலும் விரயம்மிகைப்படுத்தலாக இருக்கும். வியாழக்கிழமை சீரடி ஸ்ரீ சாய் பாபாவை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    5.8.2022 முதல் 11.9.2022 வரை

    பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் ஆட்சி பலம் பெற்றதால் புத்தி சாலித்தனமாக செயல்படுவீர்கள். செல்வாக்கு உயரும். உங்களுக்கென்று தனி லட்சியம், இலக்குகளை நிர்ணயித்து செயல்படுவீர்கள். சமூக அந்தஸ்து பொருளாதார நிலை தொழில் முன்னேற்றம் போன்ற அனைத்தும் மனதிற்கு முழு நிறைவு தரும்.

    வருமானம் வழக்கத்தை விட இரட்டிப்பாக கிடைக்கும். வீடு, வாகன கடன், கல்விக் கடன் முற்றிலும் தீரும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். புதிய முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவும், பங்களிப்பும் இருக்கும். உடல் சோர்வும் மனச் சோர்வும் அகலும்.பெண்களுக்கு வீட்டிலும் அலுவலகத்திலும் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

    புதன் வலுப்பெறுவதால் வாழ்க்கைத் துணையால் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டு. தனுசு ராசியினருக்கு மருமகள்,மருமகன் வரும் நேரம் இது. திருமண முயற்சியில் வெற்றி உண்டு. சில பெண்களுக்கு இரண்டவதாக இரட்டை குழந்தை உருவாகும். அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தங்கள் விருப்பத்தை சாதித்துக் கொள்ள மிக நல்ல காலம். அடிப்படை தேவைக்கு கஷ்டப்படுபவர்களின் வாழ்வாதாரம் உயரும். பைரவருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் நன்மைகள் அதிகரிக்கும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    29.8.2022 முதல் 4.9.2022 வரை

    தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும் வாரம். ஆட்சி பலம் பெற்ற பாக்கிய அதிபதி சூரியனுடன் லாப அதிபதி சுக்ரன் சேர்க்கை பெற்றதால் பூர்வீகச் சொத்து முறையாகப் பிரிக்கப்பட்டு முழுப் பங்குத் தொகையும் கிடைக்கும். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இறைசக்தியை உணர்வார்கள். வீட்டில் தெய்வகடாட்சம் பெருகும்.

    நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சமுதாய அந்தஸ்தை அதிகரிக்கும் நல்ல வேலை கிடைக்கும். பண்பான புதிய அதிகாரி உங்களை வழி நடத்துவார். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். ஆடம்பர வீட்டைக் கட்ட திட்டமிடுவீர்கள். பெண்கள் புதிய நகைச் சீட்டு துவங்கும் ஆர்வம் ஏற்படும். சிலர் தவணை முறையில் ஏசி, பிரிட்ஜ் போன்றவற்றை வாங்குவார்கள்.

    கொடுத்த பணம் திரும்ப வரும். திருமணம் முடிந்த இளம் பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் ஆதரவு மகிழ்ச்சி தரும். மூத்த மகளால் ஏற்பட்ட சங்கடங்கள் மறையும். சிலரின் காதல் தோல்வியில் முடியும். நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    22.8.2022 முதல் 28.8.2022 வரை

    பாக்கியபலன்கள் அதிகரிக்கும் வாரம். பாக்கியாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் தேவையற்ற மனக் குழப்பம், திருப்தியற்ற நிலை, வீண் விரயம் அகலும். எதையும் தைரியம் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வீர்கள். கவுரவ தலைமைப் பதவிகள் கிடைக்கும். சமூக அந்தஸ்து செல்வாக்கு உயரும்.

    இழந்த பதவி, நற்பெயர் மீண்டும் கிடைக்கும். பல வருடங்களாக தடைபட்ட திருமணங்கள் இனிதே நடந்து முடியும். புத்திர பிராப்தம் சித்திக்கும். குல தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். இன்னும் சில மாதங்களில் ஏழரைச் சனியின் கெடுபலன்கள் முற்றிலும் நீங்கி சுப பலன்கள் அதிகரிக்கும்.

    உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். 5ம் அதிபதி செவ்வாய் 6ல் சஞ்சரிப்பதால் பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும் விரயங்களும் இருக்கும். பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறி நீடிக்கும். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளுடன் சிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும்.

    24.8.2022 காலை 6.56 முதல் 26.8.2022 மாலை 6.32வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மறதியால் பல பிரச்சினைகள் ஏற்படும். சோம்பல் மிகுதியாகும்.விநாயகரை தீபம் ஏற்றி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    15.8.2022 முதல் 21.8.2022 வரை

    வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். ராசி அதிபதி குரு கேந்திரம் பெற்றதாலும் 7, 10-ம் அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் பாக்கிய அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெற்றதாலும் வியாபாரம் நல்ல முறையில் நடக்கும். தொழிலுக்குத் தேவையான புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சில தம்பதிகள் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம்.

    உங்களைக் கெடுக்க நினைத்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். நீண்டகாலமாக உங்களைப் பாதித்த நோய்த் தொந்தரவில் இருந்து விடுபடுவீர்கள். பிரிந்து போன உறவுகளை இணைக்க பெரும் முயற்சி எடுப்பீர்கள். 5-ல் ராகு இருப்பதால் வெளிவட்டார செல்வாக்கை அதிகரிக்கஆடம்பரமாகச் செலவு செய்வீர்கள்.குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள் பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும்.

    சில தம்பதிகள் வெளி யூர், வெளிநாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்லலாம். வேலையாட்கள் உங்கள் எண்ணப்படி நடப்பார்கள்.நாத்தனார், மாமியாரால் ஏற்பட்ட மனக் கசப்பு மறையும். சோதனை களை சாதனை களாக மாற்று வீர்கள். ஆரோக்கியம் சீராகும். தினமும் ஆஞ்சநேயர் கவசம் படிக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    8.8.2022 முதல் 14.8.2022 வரை

    விரும்பிய கடன் தொகை கிடைக்கும் வாரம்.புதிய வீடு வாங்கலாம், அல்லது மாறலாம். வீடு, வாகனம் தொடர்பான கடன் முயற்சிகள் சாதக மாகும். ராசிக்கு இரண்டில் சனி பகவான் வக்ரமாக இருப்பதால் கடின வார்த்தைகளை பயன்படுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்சினைகளை சந்திப்பீர்கள்.

    பேசியவார்த்தைகளால்நண்பர்களையும் சில வாய்ப்புகளையும் இழக்க நேரிடும். நிதானமாக பேசினால் நன்மை உண்டு.பூர்வீகச் சொத்து தொடர்பான பங்காளிகள் கருத்து வேறுபாடு மத்தியஸ்தர்களால் சுமூகமாகும். குடும்ப உறவுகளுடன் ஆன்மீக, இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் மங்கள நிகழ்வு கள் விமரிசையாக நடக்கும்.

    தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் விரும்பிய இடமாற்றம் பெற்று குடும்பமாக சேர்ந்து வாழ்வார்கள். சிலர் மனதிற்கு பிடிக்காத வேலையை நிராகரித்து புதிய பணிக்கு முயற்சி செய்யலாம். சிலருக்கு எதிர்பாராத தலைமைப்பதவி கிடைக்கலாம்.திருமண ஏற்பாடுகள் துரிதமாகும்.சிலருக்கு வேலையாட்களால் மன சஞ்சலம் உண்டாகும்.மாணவமணிகள் கல்வியில் முன்னேற அதிகமாக உழைக்கவும். மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    1.8.2022 முதல் 7.8.2022 வரை

    குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம். வாழ்க்கைத் துணையுடன் நிலவிய பனிப் போர்மறையும். விவாகரத்து வரை சென்ற வழக்குகள் திரும்பப் பெறப்படும். திருமண விசயத்தில் வேண்டாம் என்று ஒதுக்கிய வரனே சாதகமாக முடியும். பணவரவுகளில் ஏற்ற இறக்கம் இருந்தாலும் சமாளிக்க முடியும்.பணிபுரிபவர்களுக்கு எதிர்பாராத இடமாற்றத்தால் அதிக அலைச்சல் உண்டாகும். பிள்ளைகளின் நலனுக்காக எடுக்கும் திருமணம் மற்றும் மேற்படிப்பு முயற்சிகள் சித்திக்கும்.

    ராசி, நான்காம் அதிபதி குரு மற்றும் இரண்டு, மூன்றாம் அதிபதி. சனி வக்ர கதியில் சஞ்சரிப்பதால் நினைப்பதொன்று நடப்பது ஒன்றாக இருக்கும். கண் திருஷ்டி அதிகரிக்கும். அக்கம் பக்கத்தினருடன் பொதுச்சுவர், காம்பவுண்ட சுவர் தொடர்பான பிரச்சினையால் மன உளைச்சல் அதிகரிக்கும்.

    சிறு சிறு உடல் உபாதைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவருடன் வாழாமல் பிறந்த வீட்டில் தஞ்சம் அடைந்த சகோதரி மீண்டும் கணவருடன் சென்று வாழத்துவங்குவார். அரசியல் வாதிகளுக்கு கட்சிப் பணியினால் வீண் விரயங்கள், மன உளைச்சல் ஏற்படும். வியாழக்கிழமை விநாயகரை வழிபட்டால் இன்னல்கள் அகலும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசி பலன்கள்

    25.7.2022 முதல் 31.7.2022 வரை

    இன்னல்கள் முடிவுக்கு வரும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதிசெவ்வாய்ஆட்சி பலம் பெற்றதால் தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சமூக அந்தஸ்து அதிகரிக்கும். சொந்தக்காலில் நிற்பவர்களுக்கு லாபம் அதிகமாகும். கூட்டு தொழிலில் லாபம் அதிகரிக்கும். சிலரது துணைக்கு உத்தியோகம் கிடைக்கும்.

    திருமணத்திற்கு வரன் அமையும். வரன் மிகஅருகாமையிலேயே அமையும். சிலரின் தாயார் மூலம் தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு உருவாகும். விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்புவார்கள். விரைவில் பணிக்கு செல்ல முடியும். விபத்துக் காப்பீட்டு தொகை கிடைக்கும்.

    வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். புத்திர விருத்தி உண்டு. 28.7.2022 அன்று காலை 12.20 மணி முதல் 30.7.2022 பகல் 12.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் பிரச்சினை, தேவையற்ற பழிச்சொற்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால் கவனம் தேவை. பிரதோசத்தன்று சிவனுக்கு அரிசி மாவு அபிசேகம் செய்யவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    18-7-2022 முதல் 24-7-2022 வரை

    மகிழ்சியான வாரம். ஐந்தாம் அதிபதி செவ்வாய் 5-ல் ஆட்சி பலம்பெற்றதால் கடன் தொல்லைகள் குறையும். சேமிப்பு உயரும்.பங்குச் சந்தை ஆதாயம் உபரி வருமானத்தைப் பெற்றுத்தரும். நல்ல தொழில் உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் சிறப்பான நிலை நீடிக்கும்.

    பங்குதாரர்கள் மற்றும் வேலையாட்கள் ஆதரவால் தொழிலில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க முடியும். சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் வெளிநாட்டு கம்பெனியில்கிடைக்கும். முதலாளிகள் வேலையாட்களிடம்இனிக்க, இனிக்கப் பேசி இரண்டு நபர் வேலையை செய்ய வைப்பார்கள்.உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சிதரும்.

    உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள். தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்கள் ஆன்லைனில் பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். சித்தர்களின் ஜீவ சமாதியில் அன்ன தானம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    11.7.2022 முதல் 17.7.2022 வரை

    பொருளாதாரத்தில் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும் வாரம்.5,12-ம் அதிபதி செவ்வாயால் எதிர்பாராத பண வரவு உண்டாகும்‌. சமூக அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும்.

    குழந்தைகளால் ஏற்பட்ட கவலை குறையும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அரசாங்க ஊழியர்களுக்கு புதிய வீடு கட்டகடன் உதவி கிடைக்கும்.வியாபாரிகளின் வருமானம்திருப்திகரமாக இருக்கும்.முதலாளிகளின் பாராட்டுதலால் பணியாளர்கள் பெருமிதம் அடைவார்கள். பெண்கள் குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்குவீர்கள்.

    பழைய நண்பரை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். பெரியவர்களின் ஆசிகள் கிட்டும். தாயாரின் உடல்நலத்தைக் கவனிக்க வேண்டி வரும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். திருமண முயற்சியில்திருப்பம் உண்டாகும் . ஜனவரியில் ஏழரைச் சனி முடிந்தவுடன் நிலையான நிரந்தரமான முன்னேற்றம் ஏற்படும். வியாழக்கிழமை ஜீவ சமாதியில் மகான்களை வழிuடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×