search icon
என் மலர்tooltip icon

    தனுசு - வார பலன்கள்

    தனுசு

    வார ராசி பலன்கள்

    4-7-2022 முதல் 10-7-2022 வரை

    நெருக்கடி நிலை மாறும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் ராசியை பார்ப்பதால் தடைபட்ட அனைத்து இன்பங்களும் துளிர் விடும். தடையாக இருந்த ஒரு சில காரியங்கள் தானாக நடைபெறும். திறமைக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரமாகும். பெண் வழிப் பிரச்சினைகள் அகலும்.

    சிலர் பூர்வீகத்தை விட்டு பிழைப்பிற்காகவெளியேறலாம். புத்திர பாக்கியம் உண்டாகும். பங்கு சந்தை ஆதாயம் மகிழ்விக்கும். மாணவர்களுக்கு நல்ல கல்லூரியில் இணைந்துபடிக்கும் வாய்ப்பு உள்ளது.

    6-ம்மிட சுக்ரனால் இதுவரை எந்த வேலைக்கும் போகாமல் இருந்தவர்கள் கூட கிடைத்த வேலைக்குச் செல்வார்கள். சிலர் குடும்ப உறவுகளுக்காக கடன் பட நேரும். சிலர் ஒரு கடன் வாங்கி இன்னொரு கடனை அடைக்கலாம்.

    ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும்.சம்பந்திகள் சண்டை முடிவிற்கு வரும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும். ஆன்மீக பயணங்களால் மகிழ்ச்சி உண்டா கும். முருகன் வழிபாடு சிறப்பு.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசி பலன்கள்

    27-6-2022 முதல் 03-7-2022 வரை

    பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் காலம். 5ம் அதிபதி செவ்வாய் 5ல் ஆட்சி பலம் பெற்று ராகுவுடன் கூடுவதால் எல்லா வழிகளிலும் நன்மை கள் கிடைக்கப் போகிறது. சொத்து, சுகம், காரியசித்தி, தடையில்லாத வருமானம் என வாழ்வில் புது விதமான மாற்றங்கள் அதிகரிக்கப்போகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

    வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் பழைய வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். தாய் மாமன் அனுசரணையால் பூர்வீகம் தொடர்பான பல பிரச்சினைகள் உங்களுக்கு சாதகமாகும்.வாழ்க்கைத் துணையின் ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். சிலரின் வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். பெண்களுக்கு எதிர்பார்த்ததாய் வழி சீதனம் கிடைக்கும். திருமண முயற்சி நிறைவேறும். சிலருக்கு காதல் திருமணம் நடக்கும்.

    30.6.2022 மாலை 6.23 முதல் 3.7.2022 காலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொது வாழ்வில் இருப்பவர்கள் கட்சி தொடர்பான வழக்குகளில் தலையிடாமல் இருப்பது நல்லது.சனிக்கிழமை முன்னோர்களை வழிபட்டு காகத்திற்கு சாதம் வைக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை

    நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலம் . 6,11-ம் அதிபதி.சுக்ரன் 6-ல் ஆட்சி பலம் பெற்று 7,10-ம் அதிபதி புதனுடன் சேர்க்கை பெறுவதால் ருண, ரோக சத்ரு ஸ்தானம் வலுப்பெறுகிறது. கடினமான அலுவலக பணிகளை கூட கச்சிதமாக நிறைவானதாக செய்து கொடுப்பீர்கள். ஆனாலும் அதற்கான உரிய அந்தஸ்து மதிப்பை பெறுவதற்காக போராட வேண்டி இருக்கும். இயல்பாகவே பொறுமைசாலியான நீங்கள் . எதையும் பொறுமையாக தீர யோசித்து முடிவுகளை எடுப்பது நல்லது.

    வீடு மாற்றம் அல்லது வேலை மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளது. சிலர் வீட்டை பழுது பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும்.வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீடு கட்டி குடியேறலாம். சிலர் வாகனத்தை மாற்றலாம். பெண்கள் வீட்டிலும் வேலை பார்க்கும் இடங்களிலும் தானே எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு முடித்து கொடுப்பார்கள்.

    5-ல் ராகு இருப்பதால்தொழில் அல்லது உத்தியோகத்திற்காக குடும்பத்தை பிரிந்து தூர தேச நாடுகளுக்குச் சென்று தனிமையாக சம்பந்தம் இல்லாத நபர்களிடம் வாழ நேரிடும்.பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்குமஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி 13-6-2022 முதல் 19-6-2022 வரை

    உங்கள் வெற்றிக்கும் முன்னேற்றத்திற்கும் உங்கள் மறைமுக எதிரிகளே காரணமாக அமைவார்கள். உங்களின் முயற்சிக்கு மனைவியும், பிள்ளைகளும் ஆதரவாக இருப்பார்கள். பணியில் இருப்பவர்கள் தேவையான நேரத்தில் வேகமாக செயல்படுவதன் மூலம்உயர் அதிகாரிகளின் பாராட்டு பெறுவீர்கள். ஏழரை சனியின் காலத்தில் நீங்கள் அனுபவித்த துன்பம், துயரத்திற்கும் நிரந்தர தீர்வு ஜனவரி 2023ல் ஏற்படப் போகிறது.

    சனி பகவான் உங்களை விட்டு விலகும் போது நீங்கள் பல வருடங்களாக எதிர்பார்த்த நல்ல மாற்றத்தை தருவார்.பெற்றோர்களின் ஆசிர்வாதம்உங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியைத் தரும். பூமி, வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும்.வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும்.மூத்த சகோதர, சகோதரி மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சொத்துக்கள் மூலம் வாடகை வருமானம் வந்து கொண்டே இருக்கும். சில பெண்கள் கருத்தரிப்பார்கள்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசி பலன்கள்

    6.6.2022 முதல் 12.6.2022 வரை

    வியாபாரத்தில் கிடைக்கும் லாபம் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தரும். 7-ம் அதிபதி புதன் 6ல் இருப்பதால் எந்த கூட்டு முயற்சியிலும் ஈடுபடக் கூடாது.

    பார்ட்னர்கள் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள் அல்லது வம்பில் மாட்டி விடலாம். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். பாக்கிய அதிபதி சூரியன் 6-ம் இடத்தில் சஞ்சரிப்பதால் தந்தை பூர்வீகச் சொத்து, பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விசயத்திற்காக கோபத்துடன் மன இறுக்கத்துடன் இருப்பார். தந்தையின் ஆரோக்கியத்திற்காக விட்டுக் கொடுக்க முயற்சிப்பீர்கள். சிலருக்கு பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையில் கணிசமான லாபம் கிடைக்கும்.

    பெண்களுக்கு கணவரின் புரிதல் மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினைகளை தம்பதிகள் தங்களுக்குள் பேசி சீராக்குவார்கள். வீட்டில் ஆனந்தமும், மகிழ்ச்சியும் களை கட்டும். உடல்வலி, அலுப்பு போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். பருவ வயதினர் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பிரதோஷத்தன்று சிவனுக்கு பஞ்சாமிர்தம் அபிசேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசி பலன்கள்

    30.5.22 முதல் 5.6.22 வரை

    விவேகத்துடன் செயல்பட்டு விரும்பிய இலக்கை அடையும் வாரம். ராசி அதிபதி குரு 5-ம் அதிபதியுடன் சுக ஸ்தானத்தில் நிற்பதால் விவசாயிகள் ஆதாயம் அடைவார்கள். நிலத்தகராறு, வாய்கால் வரப்புத் தகராறு மற்றும் எல்லைத் தகராறுகள் முடிவிற்கு வரும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிய பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். ஏழரைச் சனியின் தாக்கத்தால் பிரிந்து வாழ்ந்த தம்பதிகளுக்கு சேர்ந்து வாழும் விருப்பம் அதிகரிக்கும்.

    தொழிலில் எப்பொழுது விடிவு காலம் வரும் என்று புலம்பி தவித்தவர்களுக்கு தொழில் அபிவிருத்தி உண்டாகும். எதிர்பார்த்ததை விட அதிக வருமானம் கிடைக்கும். உத்தியோ கத்தில் கவுரவமான சூழல் உண்டாகும். மன ரீதியாக, உடல் ரீதியாக அனுபவித்த வேதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நேரம். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்கும்.

    5ல் சுக்ரன் ராகு சேர்க்கை இருப்பதால் பருவ வயது பிள்ளைகள் பெற்றோர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.3.6.2022 பகல் 12.20 முதல் 5.6.2022 நள்ளிரவு 12. 24 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி இறங்கும் காரியங்கள் தோல்வியைத் தரும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். வெள்ளிக்கிழமை ஸ்ரீ வர லட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22

    ராசி அதிபதி குருவுடன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் சேர்க்கை பெறுவதால் தனுசு ராசியினருக்கு இது ஒரு பொற்காலம் என்றால் அது மிகையாது.எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.பிறவிக் கடன் மற்றும், பொருள் கடனில் இருந்து விடுபடுவீர்கள். தந்தையின் கடனாலும், வைத்தியச் செலவாலும் கலங்கியவர்களுக்கு கடன் தீர்க்கும் மார்க்கம் தென்படும்.

    பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையில் முட்டுக்கட்டையாக இருந்த பங்காளிகள் மனம் மாறுவார்கள்.வயதானவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும்.5ம் இடத்தில் சுக்ரன், ராகு சேர்க்கை இருப்பதால் பிள்ளைகளை உங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு மேல் அதிகாரியின் தொல்லைகள் அகலும். சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும்.

    சிலருக்கு சுய தொழில் ஆர்வம் அதிகரிக்கும்.

    வீடு, வாகன யோகம் மற்றும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். அமாவாசையன்று அந்தணர்களுக்கு விரும்பிய தானம் தந்து ஆசி பெறவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிப்பலன்

    இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை

    ராசி அதிபதி குருவின் ஆதிக்கத்தால் புதிய தொழில் துவங்கும் எண்ணம் மேலோங்கும். அதற்கான கடனும் கிடைக்கும். சுக ஸ்தானத்தில் 6-ம் அதிபதி சுக்ரன் ராசி அதிபதி குருவுடன் இணைந்ததால் தாய் வழி உறவுகளுடன் மன பேதம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் மனைவி உறவு திருப்தி தரும். மாமியாரால் குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் சாதுர்யமாகச் சமாளித்து விடுவீர்கள்.

    7-ம் அதிபதி புதன் வக்ரம் பெற்றதால் வாழ்க்கைத் துணையின் உடல் நலனில் சிறு பாதிப்பு ஏற்படும். அல்லது சிலர் வாழ்க்கைத் துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். குல தெய்வ பிரார்த்தனைகளை செலுத்துவது பற்றிய சிந்தனை உருவாகும். திட்டமிடுதலில் சிறு குறைபாடு நிலவினாலும் குடும்பப் பெரியவரின் அறிவுரை பயனுள்ளதாக, பக்கபலமாக இருக்கும். தினமும் ஸ்ரீ ஐயப்பன் பாடல்கள் கேட்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×