என் மலர்
தனுசு - வார பலன்கள்
தனுசு
வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை
20.10.2024 முதல் 26.10.2024 வரை
தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் நேரமிது. பாக்கிய அதிபதி சூரியன் நீசம் பெற்று 7, 10-ம் அதிபதி புதனுடன் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். சிலர் புதிய கூட்டுத் தொழில் முயற்சியில் ஈடுபடலாம். அரசாங்க ஊழியர்களுக்கு பணி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலை முயற்சி சித்திக்கும்.பெண்களுக்கு கணவரின் பாராட்டும் பரிசுகளும் கிடைக்கும். தடைபட்ட வாடகை வருமானம் வரும். புதிய வீடு, மனை வாங்கும் முயற்சி கைகூடும். சிலர் பழைய வாகனத்தை கொடுத்து புதிய வாகனம் வாங்கலாம். தந்தையின் அன்பும் ஆதரவும் மன நிம்மதி தரும். பிள்ளைகளுக்கு அரசு வேலை கிடைக்கும்.
கூட்டுக் குடும்பம் அல்லது கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும். தேவையில்லாமல் யாருக்கும் வாக்கு கொடுக்க கூடாது. தீபாவளி பட்ஜெட் விஷயத்தில் நிதானமும் கவனமும் அவசியமான தாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குழந்தைபேறு சித்திக்கும். 23.10. 2024 அன்று காலை 12.01 முதல் 26.10.2024 அன்று காலை 9.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் சோர்வு, அலுப்பு ஏற்படும். பணியில் சிறு தொய்வு ஏற்படலாம். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை
லாபகரமான வாரம். ராசிக்கு 11-ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சேர்க்கை.தர்ம தர்மகர் மாதிபதி யோகம். குலத் தொழில் செய்பவர்களுக்கு ஏற்றமான பலன் உண்டு. வழக்கத்தைவிட உபரி வருமானம் அதிகளவில் உண்டாகும். கூட்டுத் தொழில் நல்ல வளர்ச்சி அடையும். புதியதாக தொழில் தொடங்குபவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். அலுவலகப் பணியை அதிகரிக்கும் புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். சிலர் வீட்டு மனை அல்லது புதிய வாகனம் வாங்குவீர்கள்.
எதிர்பார்த்த தொகை ஓரிரு வாரங்களில் கிடைக்கும்.பெண்கள் தீபாவளி ஆபரில் புதிய பொருட்கள் வாங்குவார்கள். தொலைந்து போன, திருடு போன, கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும். மகன், மகள் திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் சகோதரரிடம் கருத்து வேறுபாடு உண்டாகலாம். பெண்களுக்கு கணவரிடம் இருந்து எதிர்பாராத வெளிநாட்டு பரிசுகளும் அன்பளிப்புகளும் கிடைக்கும். நிறைய அலைச்சலும், விரயச் செலவும் உண்டாகும். முருகன் வழிபாட்டால் நினைத்ததை அடைவீர்கள்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை
6.10.2024 முதல் 12.10.2024 வரை
லாபம் நிறைந்த வாரம். ராசி அதிபதி குரு வக்ரம் பெற்றாலும் லாப ஸ்தானத்தில் சுக்ரன், புதன் சேர்க்கை இருப்பது தனுசு ராசிக்கு முன்னேற்றத்தை அதிகரிக்கும் நேரமாகும். பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். பணப் புழக்கம் அதிகரிக்கும். குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்தவர்களின் திறமைக்கு தகுந்த ஊதியம் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வசூலாகும்.கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நேரம். ஒரு சிலர் மனைவி பெயரில் வீடு, நிலம் வாங்கலாம்.குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும்.ஆன்மீகச் சிந்தனைகள் கூடும்.
பெண்களுக்கு தாய் வழி ஆதரவு கிடைக்கும். திருமண வயதினருக்கு உத்தியோகத்தில் உள்ள நல்ல வசதியான களத்திரம் அமையும். பொது நல ஈடுபாடு அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சி னைகள் குறையும். வார இறுதியில் பிள்ளைகளின் நலனுக்காக அதிக செலவு செய்ய நேரும்..சில நேரங்களில் குடும்ப உறவுகளுக்காக சூழ்நிலை கைதியாக உண்மையை பேச முடியாத நிலை உண்டாகும். வெளிநாட்டு பயணம் திட்டமிட்டபடி கைகூடும். துர்க்கை அம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)
29.9.2024 முதல் 5.10.2024 வரை
விறுவிறுப்பான நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து மகிழ்விக்கும் வாரம். ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் 9-ம் அதிபதி சூரியனும் 10-ம் அதிபதி புதனும் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகத்தை ஏற்படுத்துவது நன்மைகளை அதிகரிக்கும் கிரகச் சேர்க்கை. புதிய சொத்துக்கள் சேர்க்கை உண்டாகும். சொத்துக்கள் மீதான வாடகை வருமானம் அதிகரிக்கும். பெண்களுக்கு தாய் வழி உறவுகள் மூலம் அன்பளிப்பு கிடைக்கும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். சிலரின் காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.
தொழில் உத்தியோகத்தில் காரியத் தடை, மறைமுக எதிர்ப்புகள் உண்டாகலாம். சிறு வைத்தியச் செலவுகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கல் மற்றும் ஜாமீன் விசயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். சகோதர, சகோதரிகளுக்கு சுப நிகழ்வுகள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளது.அரசு ஊழியர்களுக்கு சாதகமான இடப் பெயர்ச்சி உண்டு. ஆண்கள் பெண்க ளிடம் எச்சரிக்கையாக பழகவும். சித்தப்பாவுடன் ஏற்பட்ட மனக் கசப்பு குறையும். வழக்குகளில் புதிய திருப்பங்கள் உண்டாகும். அமாவாசையன்று பட்சிகளுக்கு தானியம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் (22.9.2024 முதல் 28.9.2024 வரை)
22.9.2024 முதல் 28.9.2024 வரை
தர்ம கர்மாதிபதி யோகம். ராசிக்கு 9ம் அதிபதி சூரியனும் 10ம் அதிபதி புதனும் ராசிக்கு 10ல் சேருவது தர்ம கர்மாதிபதி யோகம். முற்பிறவியில் செய்த புண்ணியமும் முன்னோர்களின் நல்லாசியும் முழுமையாக உங்களை வழி நடத்தும் காலம் இது என்றால் அது மிகைப்படுத்தலாகாது.அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும்.லாபத்தை அதிகரிக்க புதிய விற்பனை யுக்திகளைக் கையாள்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
அரசு வேலை, வெளிநாட்டு வேலை முயற்சி பலிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். அனைத்து விதமான குடும்ப தேவைகளும் நிறைவேறிடும். வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் கிடைக்கும். இளம் வயதினருக்கு புத்திர பிராப்த்தம் உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். 26. 9.2024 அன்று மாலை 5.12 மணி முதல் 29.9.2024 அன்று காலை 5.37 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தெளிவான திட்டமிடுதலும் முயற்சியும் அவசியம். நிதானமற்ற அவரச முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது. இயன்ற வரை அன்னதானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)
15.9.2024 முதல் 21.9.2024 வரை
கடந்த காலத்தில் நிறைவேறாத சில எண்ணங்கள் ஈடேறும் வாரம். லாபஅதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் ஆட்சி. மூத்த சகோதர வழி ஆதாயம், திடீர் அதிர்ஷ்டம், கவுரவப் பதவிகள், மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். விரும்பத்தகுந்த நல்ல மாற்றங்கள் வந்து சேரும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை உணர்வு உண்டாகும். கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் ஏற்படும். எதிரிகள் தொல்லை குறையும். நோய் தொல்லை கட்டுக்குள் இருக்கும். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட மன வருத்தம் நீங்கும்.
பட்ட மேற்படிப்பு படிக்க விரும்புபவர்களின் முயற்சி சாதகமாகும். வேலையில் சக பணியாளர்களால், உயர் அதிகாரிகளால் நிலவிய தொல்லைகள் குறையும். சிலர் விருப்ப ஓய்வு பெறலாம்.சுய ஜாதக ரீதியாக எத்தகைய திருமணத் தடை இருந்தாலும் நீங்கி திருமண பாக்கியம் கூடி வரும். பயணங்கள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். பிரிந்து சென்ற பிள்ளைகள் மீண்டும் வந்து இணை வார்கள். விநாயகரை வழிபட இன்னல்கள் அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை
புத ஆதித்ய யோகம். ராசிக்கு 9-ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்ற சூரியனுடன் புதன் சேர்க்கை. மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். இல்லத்தில் தடைபட்ட சுப நிகழ்வுகள் இனிதே நடைபெறும். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் முத்தாய்ப்பான பலன் தரும். குலத்தொழில் செய்பவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும்.
கடன் பெறுவது, கடன் கொடுப்பது, ஜாமீன் போடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் கவனச் சிதறலை தவிர்த்து பக்குவமாக நடந்து கொள்ளவும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். புத்திர பிராப்த்தம் உருவாகும். பிள்ளைகளுக்கு கல்வி ஆர்வம் கூடும்.
சத்ருக்கள் தொல்லை அகலும். வாகன வசதிகள் மேம்படும். புதிய பொருட்சேர்க்கை மகிழ்ச்சி தரும். உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். ராகு கேது மற்றும் குருவின் சஞ்சாரம் சற்று சாதகமற்று இருப்பதால் சிலருக்கு கோட்சார ரீதியாக திருமணத் தடை ஏற்படலாம். மேலும் பல பாக்கியங்களை அடைய சிவபெருமானை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)
1.9.2024 முதல் 7.9.2024 வரை
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ராசியை பார்க்கிறார். பாக்கியாதிபதி சூரியன் ஆட்சி. முக்கிய கிரகங்கள் தனுசு ராசிக்கு மிகச் சாதகமாக உள்ளது.எண்ணங்களும் முயற்சிகளும் நிறைவேறும்.ஆன்மீக சிந்தனை மேலோங்கும்.பொருள் பற்றாக்குறை அகலும்.வீட்டில் அமைதியும் நிம்மதியும் நிலவும். விலகிய சொந்தங்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.தந்தை வழிப் பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.
வீடு வாகன யோகம், தொழில் முன்னேற்றம், புதிய வேலை வாய்ப்பு போன்ற எல்லாவிதமான நன்மைகளும் உண்டாகும்.பணப்புழக்கம் சரளமாக இருக்கும்.பங்குச் சந்தை முதலீடுகளால் உபரி வருமானம் உண்டு. பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அதிகரிக்கும். புதிய வேற்று மத நண்பர்கள் நண்பிகள் கிடைப்பார்கள். குடும்பத்துடன் விருந்து உபசாரங்கள், கேளிக்கைகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரப் பொருள் சேரும். திருமண முயற்சிகள் சாதக மாகும்.ஆரோக்கியம் சீராகும். வழக்குகள் ஒத்திப் போகும். தேங்காய் மாலை அணிவித்து விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)
25.8.2024 முதல் 31.8.2024 வரை
பூர்வ புண்ணியம் பலன் தரும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ராசிக்கு 7-ல் நின்று ராசியை பார்க்கிறார். முன்னோர்கள் செய்த புண்ணியங்கள் பலன் தரும் நேரம். பூர்வீகம் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.குல தெய்வ பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். குழந்தை பிறப்பில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனச் சங்கடம் குறையும். அதிர்ஷ்டத்தை தேடி நீங்கள் செல்ல வேண்டியதில்லை.அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும்.ஸ்திர சொத்துக்கள் சேரும். கமிஷன் அடிப்படையான தொழில் செய்பவர்களுக்கும் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.வாக்கு சாதுரியம் மூலம் சில முக்கிய பணிகளை செய்து முடிப்பீர்கள். வராக்கடன்கள் வசூலாகும். 30.8.2024 காலை 11.33 முதல் 1.9.2024 இரவு 9.48 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. உறவுகளின் நியாயமற்ற நடவடிக்கைகள் உங்கள் மனதில் குழப்பத்தைத் தரும். எதிலும் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. கடலை மிட்டாய் படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் (19.8.2024 முதல் 25.8.2024 வரை)
19.8.2024 முதல் 25.8.2024 வரை
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்ரன் என முக்கூட்டு கிரகச் சேர்க்கை.நினைத்ததை நினைத்த படியே சாதிக்கும் திறனும் முனைப்பும் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். பழைய கடன்கள் விரைவில் வசூலாகும். எதிர்பாராத பணவரவால் மனம் மகிழும். தொழிலில் விஸ்தரிப்பு நடவடிக்கைகள் மூலமாக வருமான வாய்ப்புகள் பெருகும். பூர்வீகம், குழந்தைகள், குலதெய்வப் பணிகள் என தடைபட்ட முக்கிய பணிகளை நடத்தி முடிப்பது நல்லது.
வக்கீல்கள், ஜோதிடர்கள், நிதித்துறை, நீதித்துறை, ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். அரசு உத்தியோகம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு சாதகமாகும்.சூரியனை சனி பார்ப்பதால் சினத்தை அடக்கினால் சிரமங்கள் குறையும். உடன் பிறந்தவர்களோடு அனுசரித்துச் செல்வது நல்லது. பெண்களுக்கு தாய் மற்றும் சகோதர வழி அன்பு ஆறுதலாக இருக்கும். நவகிரகங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)
12.8.2024 முதல் 18.8.2024 வரை
பாக்கிய பலன்கள் அதிகரிக்கும் வாரம். வார இறுதியில் பாக்கியாதிபதி சூரியன் ஆட்சி பெற்று சுக்ரன் மற்றும் புதனுடன் இணைகிறார்கள். தொழிலால், தொழில் கூட்டாளிகளால் நன்மை உண்டாகும். சிலர் அதிக முதலீடு கொண்ட புதிய தொழில் முயற்சியில் ஈடுபடலாம். நல்ல தொழில் தொடர்புகளால் ஊக்கமும், சந்தோஷமும் உண்டாகும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். சிலர் அரசு வேலைக்கு முயற்சி செய்வார்கள். குரு மங்கள யோகத்தால் வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும்.
சிலருக்கு கவுரவப் பதவி கிடைக்கும். வேலை, வியாபாரம், தொழில் அபிவிருத்தி போன்ற ஏதாவது காரணத்திற்காக அலைச்சலான பயணமும் செலவுகளும் செய்ய நேரும். விளையாட்டு, காவல் துறையினரின் திறமை பாராட்டப்படும். அண்டை, அயலாருடன் இருந்த தகராறுகள் சுமுகமாகும். புதிய சொத்துக்கள் சேரும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். பித்ருக்களின் நல்லாசி கிடைக்கும். ஆன்ம பலம் பெருகும். ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும். வரலட்சுமி நோன்பு அன்று சுமங்கலிகளுக்கு மங்களப் பொருட்கள் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)
5.8.2024 முதல் 11.8.2024 வரை
சாதகமான வாரம். எதிர்பாராத சிலருடைய சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பெரியோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான தேடல்கள் அதிகரிக்கும். பணி சார்ந்து சில முடிவு களை எடுப்பீர்கள். கூட்டுத் தொழில் மீது உருவான வழக்குகள் முடிவுக்கு வரும். சிலருக்கு பகுதி நேர வேலை கிடைக்கும். சம்பளம் குறை வாகவும் வேலை அதிகமாகவும் இருக்கும்.
சிலர் வீட்டை புதுப்பிப்பீர்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட முடியாது. வரவை விட செலவு மிகுதியாகும். பெண்கள் உயர் அதிகாரிகளின் கெடுபிடி காரண மாக மன உளைச்சல் ஏற்பட்டு வேறு இடத்துக்கு வேலை மாறி செல்வார்கள். வாழ்க்கை துணையின் பூர்வீகச் சொத்தில் மைத்துனரால் ஏற்பட்ட தடைகள் அகலும். 5.8.2024 அன்று மாலை 3.21 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு பால் அபிசேகம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406