search icon
என் மலர்tooltip icon

    தனுசு - வார பலன்கள்

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    29.7.2024 முதல் 4.8.2024 வரை

    நன்மையும், தீமையும் கலந்த வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தை குரு, சூரியன் பார்ப்பதால் அதிகார வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும் அரசு பணியாளர்களுக்குப் புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். உற்றார், உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சிதரும். நல்ல தொழில் உத்தியோக வாய்ப்புகள் தேடி வரும். வெளிநாட்டில் வேலை பார்க்கும் சிலருக்கு வேலையை விட்டுவிடும் எண்ணம் தோன்றும். பிள்ளைகளுக்கு பெற்றோர்களால் மன உளைச்சல் உண்டாகும். சில சங்கடங்கள் நிலவினாலும் அனைத்தும் சூரியனைக் கண்ட பனியாக மறையும். எந்த காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலன் உண்டாகும்.

    பெண்கள் பிறந்த வீட்டிற்கு பெருமை சேர்ப்பார்கள். பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கை யுடன் இருப்பது நல்லது. 3.8.2024 அன்று காலை 5.41-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் சிறிய வேலைகளை முடிக்க கடினமாக உழைக்க நேரும். குழப்பமான மனநி லையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும்.எந்த ஒரு இடத்தி லும் தாமதமின்றி செயலை செய்து முடிக்க முயலவும். ஆடி வெள்ளிக்கிழமை சுமங்கலிப் பெண்க ளுக்கு மங்களப் பொருட்கள் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    22.7.2024 முதல் 28.7.2024 வரை

    தர்ம சிந்தனைகள் மேலோங்கும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் நின்று வாக்கு ஸ்தானத்தை பார்க்கிறார். ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் நிற்கும் ராசி அதிபதி குரு 9ம் பார்வையால் தனம்,வாக்கு, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். உங்கள் வாக்கு நிறைவேறும்.தர்ம காரியங்கள் செய்வதில் ஆர்வம் கூடும். குடும்பத்தார் ஒத்துழைப்பால் உள்ளம் மகிழும். உங்களின் செயல்பாடுகள் சமூகத்தில் நல்ல மதிப்பும், மரியாதையையும் ஏற்படுத்தும். எந்த ஒரு செயலை முடிப்பதற்கும் தாய் தந்தையின் ஆதரவு கிடைக்கும். நிலையற்ற வருமானத்தில் தள்ளாடிய குடும்பம் நிலையான வருமானத்தில் தலை நிமிர்ந்து நிற்கும்.

    தொழில் தொடர்பாக திட்டமிட்ட அனைத்து செயல்பாடுகளும் சிறப்பாக நிறைவேறும். இந்த வாரம் செல்லும் நேர்முகத் தேர்வில் வெற்றியும் மன நிறைவான வேலையும் கிடைக்கும். ஆடம்பர வீடு உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் உண்டாகும். தீராத அரசியல் ஈடுபாட்டால் எவர் தடுத்தாலும் முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். ஆடி வெள்ளிக்கிழமை வாராகி அம்மனை வழிபட வளமான வாழ்க்கை உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    15.7.2024 முதல் 21.7.2024 வரை

    பல தடைகளையும் கடந்து வெற்றி உண்டாகும் வாரம் .பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ராசி அதிபதி குருவுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். தடை தாமதமான உங்களின் முயற்சிகள் காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும். அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். இரக்க சுபாவம் அதிகரிக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் நல்லிணக்கம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும். உங்களை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் கூட பணத்தை கொடுக்க முன் வருவார்கள். இது வரை சம்பாத்தியம் பற்றிய சிந்தனை இல்லாதவர்களுக்கு கூட தொழில், நல்ல வேலை வாய்ப்புகள் தேடிவரும்.

    புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். குல தெய்வம் எதுவென்று தெரியாத வர்களுக்கு குலதெய்வ இருப்பிடம் தெரியும் வாய்ப்பு உள்ளது. தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற உகந்த காலம். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றிகரமாக முடியும். வாழ்க்கைத் துணையால் பொருள் சேர்க்கை ஏற்படும். உடல்நிலை முன்னேற்றம் கூடும். கல்வியில் மேன்மை உண்டு. புத்து மாரியம்மனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    8.7.2024 முதல் 14.7.2024 வரை

    ஆதாயம் நிறைந்த வாரம்.ராசிக்கு பாக்கியாதிபதி சூரியன் பார்வை. தர்மம் தலை காக்கும் நேரம். உங்களின் கவுரவத்தை நிலை நிறுத்திக் கொள்வீர்கள். தனித் திறமையால் சமூகத்தில் நற்பெயர் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். அரசு வேலை எதிர் பார்த்தவர்களுக்கு இந்த வாரம் வேலை கிடைத்துவிடும். சமுதாய மரியாதை கிடைக்கும். சிலருக்கு புதிய தொழில் வாய்ப்பு அமையும். தொழிலில் கிடைக்கும் லாபம் மகிழ்ச்சியைத் அதிகரிக்கும்.உங்கள் மனதை குடைந்த சில முக்கிய பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.

    6-ம் இட குருவால் குறைந்த வட்டிக்கு நீண்ட காலத் தவணையில் கடன் கிடைக்கும். செவ்வாய் ராசி மற்றும் விரய ஸ்தானத்தை பார்ப்பதால் சில விரயங்கள் ஏற்பட்டாலும் இது நல்ல எதிர்கா லத்திற்கான அஸ்திவாரமாக அமையும். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் என உங்கள் கையில் தாராளமாக பணம் புழங்கும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடு சீராகும். திருமண முயற்சி சாதகமாகும்.திருமணத்திற்கு நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். சிவ வழிபாடு யோகத்தை அதிகரிக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    1.7.2024 முதல் 7.7.2024 வரை

    நினைத்தது நிறைவேறும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுவதால். வாழ்க்கையில் போராடி எப்படி வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனை அதிகரிக்கும். வருமான மும், குடும்ப சந்தோஷமும் அதிகரிக்கும். எதிரிகளால் உண்டான சங்கடங்கள் விலகும். ராசியை பாக்கிய அதிபதி சூரியன் பார்ப்பதால் அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். மனைவி வழிச் சொத்தை உயில் மாற்றம் செய்வதில் மாமனாரிடம் இருந்த எதிர்ப்புகள் அகலும். வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்வதில் இருந்த நடைமுறை சிக்கல்கள் நீங்கும்.

    திருமணத் தடை அகலும். புதிய மருமகன், மருமகள் வருவார்கள். சிலருக்கு பேரன் பேத்தி பிறப்பார்கள். புதிய சொத்துக்கள் சேரும்.வைத்தியம் பலன் தரும். பங்குச் சந்தையில் கவனம் தேவை. 6.7.2024 அன்று இரவு 10.34-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் மூன்றாம் நபர்களால் திடீர் பிரச்சிினைகள் தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். அலைச்சல் மிகுந்த பயணங்களால் மன சஞ்சலம் கூடும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    24.6.2024 முதல் 30.6.2024 வரை

    குடும்பத்தில் நிம்மதி நீடிக்கும் வாரம். ராசிக்கு சூரியன், சுக்ரன் பார்வை. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி. சனி வக்ரம் என கிரக நிலவரங்கள் உள்ளது.தன வரவில் தன் நிறைவு உண்டாகும். வெளிநாட்டு தொடர்பு அல்லது பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. சிலர் பங்கு பத்திரத்தில் அதிக முதலீடு செய்யலாம்.செய்யும் தொழிலில் லாபம், முன்னேற்றம் உண்டு. உங்களின் பணிவான, நடத்தைகள், செயல்பாடுகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். சிலர் வியாபார முதலீட்டை அதிகரிக்க கடன் தொகைக்கு விண்ணப் பிக்கலாம். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் மனமார்ந்த பாராட்டுகள் கிடைக்கும்.

    திருமணம் பற்றிய நல்ல முடிவுகள் உங்கள் எண்ணம் போல் நிறைவேறும். சிலரின் இரண்டாம் திருமண முயற்சி பலன் தரும். மனைவி வழி உறவுகளுடன் கருத்து வேறுபாடு உருவாகலாம் என்பதால் ஒதுங்கி இருப்பது நல்லது.எதையும் பெரிது படுத்தாமல் விட்டுக் கொடுத்தால் நாட்கள் சுமூகமாக நகரும்.ஆரோக்கிய குறைபாடுகள் அகலும்.பிள்ளைகள் தங்கள் சாதனைகளால் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். வீடு, மனை வாங்குவது பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    17.6.2024 முதல் 23.6.2024 வரை

    குடும்ப முன்னேற்றம் மகிழ்ச்சி கூடும் வாரம். 5-ம் அதிபதி செவ்வாய் 5ல் ஆட்சி. 5-ம்மிடம் குலதெய்வம், குழந்தைகள், அதிர்ஷ்டம், காதல். ஆழ்மன சிந்தனை பற்றிக் கூறுமிடம் என்பதால் தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும். குல தெய்வ அனுகிரகம் கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்ட மன உளைச்சல். மன சஞ்சலம் அகலும். குழந்தை பேறு உண்டாகும். சிந்தனைகள் பெருகும். எவராலும் சாதிக்க முடியாத செயல்களை செய்து முடிப்பீர்கள். மாணவ, மாணவிகள் சிரத்தையுடன் கவனமாக படிப்பார்கள். உடன் பிறந்த வர்களின் நலனுக்காக சிறிய பொருள் விரயத்தை சந்திக்க நேரும்.தாய்வழி ஆதரவு திருப்தி தரும்.

    மனக் குழப்பம் அகலும். குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக குறையும். மனக் கசப்பால் பிரிந்த சொந்தங்கள் மீண்டும் இணைவார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல கம்பெனியில் இருந்து அழைப்பு வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும். சிலருக்கு சுய தொழில் பற்றிய எண்ணம் அதி கரிக்கும். தாய்மாமனுடன் ஏற்பட்ட மன பேதம் மறையும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. பவுர்ணமியன்று நடராஜரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    10.6.2024 முதல் 16.6.2024 வரை

    ஆதாயமான வாரம்.5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பெறுவதால் முடங்கி கிடந்த முயற்சிகள் முன்னேற்றம் அடையும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். எதிரிகளை வெல்லக்கூடிய சக்தியை அடைவீர்கள். உங்களைத் துரத்திய துக்கம், அவமானம் விலகும். உத்தியோகத்தில் மிகப்பெரிய மேன்மை உண்டு. சொந்த தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் இறங்கலாம். பங்கு வர்த்தகத்தில் ஆர்வம் அதிகமாகும்.

    புதிய எதிர்பாலின நண்பர்கள் கிடைப்பார்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு பிரமாண்ட வெற்றி உண்டு. அதே போல் அரச பதவிக்கு காத்திருப்பவர்களுக்கு விரும்பிய அந்த பதவி கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்கள் அகலும்.கணவன் மனைவி உறவு திருப்தி தரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். 11.6.2024 அன்று இரவு 11.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் நினைப்பதை அப்படியே அடுத்தவர்களிடம் கூறுவதால் அவர்கள் தவறாக புரிந்து கொண்டு கருத்து வேற்றுமைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ஸ்ரீ ராமர் பட்டாபிசேக படம் வைத்து வழி படவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    3.6.2024 முதல் 9.6.2024 வரை

    சுபச் செய்திகளால் சுபவிரயங்கள் ஏற்படும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ஆட்சி. புதிய தொழில் துவங்கும் திட்டங்கள் நிறை வேறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதோடு உழைப்பிற்கேற்ற அங்கீகாரமும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வழக்கம் போல் இருக்கும். பழைய கடன்களை அடைக்கக் தேவை யான வருமானம் கிடைத்தாலும் 6ம் அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் புதிய கடன் வாங்க வேண் டிய சூழ்நிலை வரலாம். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிக்கும்.

    குல தெய்வ வழி பாட்டில் ஆர்வம் கூடும். தெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்ற உகந்த காலம். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர் கள். இளம் தம்பதிகள் பிள்ளைப்பேறு அடைவார்கள்.புதிய காதல் துளிர்க்கும். பங்குச் சந்தை, அதிர்ஷ்டம் தொடர்பான செயல்களில் ஆர்வம் கூடும். கவுரவப் பதவி கிடைக்கும். 9.6.2024 அன்று பகல் 2.07 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்ப தால் சின்ன சின்ன விஷயங்கள் கூட பெரிதாகி தொந்தரவு தரும். உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. அமாவாசை யன்று அந்தணர்களின் தேவையறிந்து உதவவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசி பலன்

    27.05.2024 முதல் 02.06.2024 வரை

    முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். வார இறுதியில் யோகாதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுகிறார். கவலைகள், கஷ்டங்களை விரட்டி அடிக்கும் விதமான சந்தர்ப்பம் அமையும். தடைபட்ட பணிகள் சுறுசுறுப்பாக நடைபெறும். விரும்பிய கடன் தொகை கிடைக்கும். ஜாமின் போடுவதையும், பெறுவதையும் தவிர்க்கவும். குலதெய்வ கடாட்சத்தால் தெய்வ பிரார்த்தனைகள் வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். பணம், அன்பு, குடும்பம் ஆகியவற்றில் இருந்து விலகி ஆன்மீக மார்க்கத்தில் இணைய மனம் லயிக்கும். மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கு ஆன்மீகம் தான் சிறந்தது என்பதை உணர்வீர்கள். பணப் பிரச்சனை காரணமாக தடைபட்ட முக்கியமான வேலைகள் துரிதமாகும். விட்டுக் கொடுத்து வாழ்வது தான் திருமண வாழ்க்கை என்பதை உணர்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் வரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். சிலருக்கு கை கால், மூட்டுவலி போன்ற சிறு, சிறு உடல் உபாதைகளால் சோர்வு மிகுதியாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். பிள்ளைகளுக்கு சுப விசேஷம் நடக்கும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு கொழுக்கட்டை படைத்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    20.5.2024 முதல் 26.5.2024 வரை

    திட்டமிட்ட பணிகள் சிறப்பாக நிறைவேறும் வாரம். ராசி அதிபதி குரு தன ஸ்தானத்தைப் பார்ப்பதால் குரு கடாட்சத்தால் தாராள தன வரவு உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வருமானத்தால் நிதி நிலை உயரும். பற்றாக்குறை பட்ஜெட் அகலும். 7, 10-ம் அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், உத்தியோக அனுகூலம் உண்டு. வியாபாரிகள் சந்தை நிலவரத்திற்கு ஏற்றபடி அளவோடு கையிருப்பு வைத்து பலன் பெறுவார்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கல்வி தொடர்பான செயல்களில் முன்னேற்றம் ஏற்படும்.

    அடமான நகைகள் மீண்டு வரும். மாதாந்திர சேமிப்பில் இருந்து புதிய நகைகள் வாங்குவீர்கள். திருமணமான இளம் பெண்கள் கருத்தரிப்பார்கள். பிள்ளைகளின் திருமணம் நிச்சயமாகும். ஆரோக்கிய குறைபாடு அகலும். மருத்துவச் செலவு குறையும். புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். கை மறதியாக வைத்த பொருட்கள், தொலைந்த ஆவணங்கள் கிடைக்கும். மறு திருமணத்திற்கு வரன் அமையும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் செய்ய நேரும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    13.5.2024 முதல் 19.5.2024 வரை

    தடைபட்ட அனைத்து செயல்களும் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி குரு 6-ல் சஞ்சரிப்பதால் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நன்மை உண்டாகும். இதுவரை சிறிய தொழில் செய்தவர்கள் கடன் பெற்று தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்கள், கமிஷன் தொழில் புரிபவர்களுக்கு நல்ல தொழில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும்.

    எதிர்காலம் பற்றிய பயம் அகலும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்களை சமாளிக்கும் ஆற்றல் ஏற்படும். நண்பர்களால், தொழில் கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் சீராகும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும்.

    இயன்றவரை கடன் பெறுவதையும், கொடுப்பதையும் தவிர்க்க வேண்டும். பூர்வீகச் சொத்துக்களை நல்ல விலைக்கு விற்க ஏற்ற நேரம். திருமணத் தடை அகலும். சில பெண்கள் பள்ளி விடுமுறைக்கு தாய் வீடு செல்வார்கள்.13.5.2024 அன்று காலை 5.05 முதல் 15.5.2024 அன்று மதியம் 3.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி இறங்கும் காரியங்கள் தோல்வியைத் தரும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×