என் மலர்
தனுசு - வார பலன்கள்
தனுசு
இந்த வார ராசிபலன்
6.5.2024 முதல் 12.5.2024 வரை
சாதகமான வாரம். பாக்கிய அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம். தொழில் ஸ்தானத்திற்கு குருப் பார்வை என முக்கிய கிரகங்கள் சாதகமாக உள்ளது. தொழிலில் சிறிய முயற்சியில் பெரிய லாபம் கிடைக்கும்.
தாய், தந்தைவழி தாத்தா மூலம் உங்களுக்கு நிதி உதவி கிடைக்கலாம்.உயர் கல்வி முயற்சிக்கு சாதகமான சூழல் உண்டாகும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. பெற்றோர்களால் ஏற்பட்ட மன பாரம் குறையும். ஆரோக்கிய குறைபாடு அகலும். புத்திர பாக்கியம் உண்டாகும். பங்கு சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். மாணவர்கள் நல்ல கல்லூரியில் இணைந்து படிக்கும் வாய்ப்பு உள்ளது.
பூர்வீகம் தொடர்பான பிரச்சினைகள் குறையும். ஆடம்பரத்தை, அந்தஸ்த்தை தக்க வைத்துக் கொள்ள அதிக செலவு செய்ய நேரும்.தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். திருமண வாழ்வு சிறக்கும். பங்குதாரர்கள், நண்பர்களிடம் சிறு மன பேதம் ஏற்படும்.ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். அமாவாசையன்று குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்றவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிபலன்
29.04.2024 முதல் 05.05.2024 வரை
சிந்தித்து செயல்பட வேண்டிய காலம் ராசி அதிபதி குரு 6-ல். தனுசு ராசியினருக்கு இந்த வருடம் என்ன தான் நடக்கப் போகிறது. நல்லதா, கெட்டதா? ஒருவருக்கு ஒரு நல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் தசா புத்தியே காரணம். அதே நேரத்தில் கோட்சாரமும் தசா புத்தியுடன் இணைந்து பலன் தரும். 6ல் உள்ள குருவின் பார்வை பதியும் 2,10, 12ம் இடங்கள் மூலம் வருமானம் குறையாது.
குடும்பத் தேவைக்கு ஏற்ற சரளமான பணப்புழக்கம் உண்டு. 10-ல் கேது இருப்பதால் தொழிலில் அகலக்கால் வைக்காமல் இருந்தால் தப்பித்து விடலாம். திருப்பச் செலுத்தும் திறன் அறிந்து கடன் வாங்குவதாலும் நல்லதே நடக்கும். புதிய வேலையின் தன்மையை அறிந்து வேலையை மாற்ற வேண்டும். இந்த ஒரு வருடம் முழுவதும் ஆரோக்கியம், கடன், வேலை, புதிய முதலீடு இந்த மூன்று விசயத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் கோட்சார கிரகங்கள் நல்லதை நடத்தி தரும்.
5ம் அதிபதி செவ்வாய் ராகுவுடன் சேர்க்கை பெறுவதால் பருவ வயது பிள்ளைகள் பெற்றோர்களின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். வியாழக்கிழமை ஸ்ரீசவுபாக்கிய லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்தவார ராசிபலன்
22.4.2024 முதல் 28.4.2024 வரை
எதிர்பார்த்த இலக்கை அடையும் வாரம். ராசிக்கு ராசி அதிபதி குருவின் பார்வை இன்னும் ஒரு வாரத்திற்கு மட்டுமே உள்ளது. அதேபோல் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் குரு சேர்க்கை 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஏற்படும்.மே1, 2024 வரை நீடிக்கும் இந்த யோகத்தால் அரசாங்கம் மூலமாக திடீர் அதிர்ஷ்டம் ஏற்படலாம். ஆன்மீகம் ,ஜோதிடம் ஆகியவற்றில் சிறப்பான தேர்ச்சி, நல்ல வீடு,வாகனம் வாங்குதல் போன்ற நன்மைகள் கிடைக்கும். சுய ஜாதகத்தில் அதற்கேற்ற தசா புக்திகள் நடக்கும் காலங்களில், எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்டம் ஏற்பட்டு, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணலாம்.
உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் காணாமல் போவார்கள்.தொழிலில் நிலவிய சங்கடங்கள் அகலும். குடும்பசுமை குறையும். எதிர்பார்த்த தன வரவுகள் இருக்கும். செலவைவிட வருமானம் அதிகரிக்கும்.மனம் விரும்பும் திருமண வாழ்க்கை அமையும். மறுமண முயற்சி சித்திக்கும். நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளுக்கு ஜாமீன் போடக்கூடாது. உடல் நிலை தேறும். புதியசொத்து வாங்குபவர்கள் பட்டாவை சரிபார்க்க வேண்டும். சித்ரா பவுர்ணமியன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்தவார ராசிபலன்
15.4.2024 முதல் 21.4.2024 வரை
மட்டற்ற மகிழ்ச்சியில் மனம் லயிக்கும் வாரம். உச்சம் பெற்ற பாக்கியாதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி குருவுடன் சேர்க்கை பெறும் ஆரவான வாரம். பாக்கியாதிபதி சூரியன் வருடம் ஒரு முறை பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். ஆனால் ராசி அதிபதி குருவுடன் 12 ஆண்டு களுக்கு ஒரு முறையே பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இணைவார்.
இந்த அற்புதமான கிரகச் சேர்க்கை மே 1, 2024 வரை இருப்பதால் தனுசு ராசியினர் குல, இஷ்ட தெய்வ வழிபாடு, முன்னோர்கள் நல்லாசியால் விரும்பிய பலனை அடைய முடியும். புத்தாண்டு அன்று பெற்றோ ர்கள். பெரியோர்களை, ஆசிரியர்கள், அந்தணர்களை வணங்கி னால் 12 வருடத்திற்கு எந்த தீவினை யும் உங்களை அண்டாது. சூரியன் மேஷத்தை கடக்கும் வரை குழந்தைபேறு, திருமணம், அசையும். அசையாச் சொத்துக்க ளின் சேர்க்கை என மகிழ்ச்சி யான சம்பவங்கள் நடக்கும்.
குடும்பத்துடன் குதூகலமாக இருப்பீர்கள். இல்லறம் நல்லறமாகும். எதிர்கால வாழ்க்கையில் பிரகாசிக்க தேவையான முயற்சிகளில் ஈடுபடு வீர்கள். 15.4.2024 இரவு 8.38 முதல் 18.4.2024 காலை 7.56 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் செயல்படவும். பேச்சில் நிதானம் தேவை. சிவ வழிபாடு சிறப்பான யோகத்தை வழங்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்தவார ராசிபலன்
8.4.2024 முதல் 14.4.2024 வரை
செல்வாக்கு உயரும் வாரம்.இந்த வாரம் முழுவதும் ராசி நாதன் குருபகவானின் அருள் மழையில் நனை யப் போகிறீர்கள். இளமையாக அழகாக மாறுவீர்கள். உடலில் மனதில் புத்துணர்வு பெருகும். உங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணையை இந்த வாரம் சந்திப்பீர்கள். 6, 11-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெற்று பாக்கிய அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுவதால் நெடுநாளைய தரித்திரம் விலகும்.சுப விரயங்கள் மிகுதியாகும். அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும். சினிமா கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.தாய், தந்தையின் அன்பும், ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும். செயற்கை முறை கருத்தரிப்பு பலன் தரும்.
பிள்ளைகளுக்கு சுப நிகழ்வு நடத்த வசதி, வாய்ப்பு கிடைக்கும். தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி முயற்சி கைகூடும். பெண்களுக்குமன உளைச்சல் நீங்கி நிம்மதி கிடைக்கும். ஆரோக்கியத்தில் நிலவிய சங்க டங்கள் விலகும். பாகப் பிரிவினை யில் சகோதர,சகோதரிக்காக விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்தவார ராசிபலன்
1.4.2024 முதல் 7.4.2024 வரை
நிதானத்துடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி குரு 5-ல் வக்ரம் பெற்ற 7, 10-ம் அதிபதி புதனுடன் சேர்க்கை பெறுகிறார். குல தெய்வ அனுகிரகத்தால் தடுமாற்றங்கள் அகலும் எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில தொழில் வாய்ப்பு கள் கைகூடும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட சர்ச்சைகள் சீராகும். போட்டி, பொறா மைகளை சமாளிப்பீர்கள். அன்றாட செயல்களில் நிலவிய தடை தாமதங்கள் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு தேவைக்கு ஏற்ப இருக்கும். அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். குறிப்பிட்ட சில குடும்ப பிரச்சினைகளில் அமைதியாக இருப்பது அவசியம்.
புத்திர பிராப்த்தம் உண்டாகும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். பாக்கிய அதிபதி சூரியன் ராகுவை விட்டு விலகும் வரை கொடுக்கல் வாங்க லில் பெரியளவு முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை சிறக்கும். திங்கட்கிழமை சத்திய நாராயணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்தவார ராசிபலன்
25.3.2024 முதல் 31.3.2024 வரை
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராசிக்கு 4-ல் பாக்கிய அதிபதி சூரியன் ராகுவுடன் உச்சம் பெற்ற 6.11-ம் அதிபதி சுக்ரனுடன் சேர்க்கை. 6,9-ம் சேர்க்கை பெறுவதால் உத்தியோக ரீதியான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வேலை, தொழில் உத்தி யோகம் ஆகியவற்றில் மாற்றம் உண்டாகும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு, இடமாற்றம் வரலாம். தந்தைக்கு, நோய், கடன், எதிரி தொல்லை உருவாகலாம். அல்லது ஜாதகர் கடன் பெற்று சொத்து வாங்கலாம். அல்லது முன்னோர்களின் பரம்பரை வியாதிகள் உருவாகலாம். மருத்துவச் செலவுகள் வரலாம். உடல் நலனில் கவனமும் அக்கறையும் தேவை. தாய்மாமனால் செலவும் அதற்காக கடன் வாங்கும் அவசியமும் ஏற்படும்.
பெண்கள் யாருக்கும் நகை இரவல் கொடுக்கவும் கூடாது வாங்கவும் கூடாது. சுபச் செய்திகள் சுபவிரயங்கள் ஏற்படும். வீட்டில் பெண் குழந்தைகளுக்கு காதணி விழா, பூப் புனித நீராட்டு விழா, திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பெண்கள் அழகு, ஆடம்பர பொருட்க ளுக்கு அதிகம் செலவிடுவார்கள். ஆஞ்சநேயரை 11 முறை வலம் வந்து வழிபட நோய், எதிரி, கடன் பாதிப்பு விலகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்தவார ராசிபலன்
18.3.2024 முதல் 24.3.2024 வரை
சுபமான வாரம். 5-ம் இடத்தில் நிற்கும் குரு ராசியை பார்ப்பதால் குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பொது வாழ்வில் புகழும், பெருமையும் உண்டாகும். போட்டி, பொறாமை ஒரு புறம் இருந்தாலும் அவற்றை சமாளித்து தொழிலில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். தொழில், வியாபார முன்னேற்றம் அல்லது வீடு, வாக னத்திற்காக கடன் பெறலாம். உடன் பிறந்தவர்களுடன் பூர்வீகச் சொத்து பிரிப்பதில் கருத்து வேறுபாடு உண்டாகும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளைச் சந்திக்க நேரும். சுப மாற்றத்தை தரும் இடப்பெயர்ச்சி உண்டாகும்.
மகன், மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். பிரிந்து வாழும் தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். திருமணத் தடை அகலும். 19.3.2024 அன்று மதியம் 1.37 முதல் 22.3.2024 அன்று காலை 1.27 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சத்ருக்களால் தொல்லைகள் ஏற்படும். நீண்ட தூர பயணங்களைத் தவிர்க்கவும். முக்கிய ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும். திருச்செந்துர் முருகனை ஆத்மார்த்தமாக வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்தவார ராசிபலன்
11.3.2024 முதல் 17.3.2024 வரை
சாதகமும், பாதகமும் நிறைந்த வாரம். ராசியை குரு பார்ப்பதால் உடலில் இருந்த பிணிகள் அகலும். உற்சாகமாக பணிபுரிவீர்கள்.உங்கள் கடமையை மன நிறைவாக செய்து முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் அமையும். நல்லது கெட்டது அறிந்து தைரியமாக விரைந்து முடிவெடுப்பீர்கள். உயர் கல்வி முயற்சி சித்திக்கும். கல்யாண காரியம் கை கூடும். வெளியூர் வரன் அமையும். பாக்கிய அதிபதி சூரியன் ராசிக்கு 4-ல் ராகுவுடன் கிரக ணம் அடைவதால் தாய் வழி உறவு களுடன் மன பேதம் ஏற்படலாம். உடல் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம்.
செய் தொழிலில் போட்டி, பொறாமையை சமாளிக்க திணறுவீர்கள். பூர்வீக சொத்து தொடர்பாக பேச்சு வார்த்தையை தவிர்க்கவும்.குரு பெயர்ச்சியானவுடன் பெற்றோர் வழிச் சொத்துகளை பிரிப்பதில் நிலவிய குழப்பங்கள் அகலும். இதில் உங்கள் பெற்றோர்களின் அன்பும், ஆசிர்வாதமும் உங்களுக்கு துணையாக இருக்கும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் மற்றவர்கள் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். வாழ்க்கைத் துணையை அனுசரித்துச் செல்லவும். மகிழ்ச்சியை அதிகரிக்க காலபைரவருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்தவார ராசிபலன்
4.3.2024 முதல் 10.3.2024 வரை
மகிழ்ச்சியான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ராசி அதிபதி குருவைப் பார்ப்பதால் வெற்றிமேல் வெற்றி வந்து உங்களைச் சாரும். பணம் பல வழிகளில் வந்து பையை நிரப்பும். பண வரவு தாராளமாக இருப்பதால் தாராளமாக செலவு செய்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆடம்பர பொருட்களின் சேர்க்கையும், சேமிப்பும் அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள் பூர்வீகத்திற்கு சென்று குல தெய்வ வழிபாடு செய்து வருவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு மனதில் நினைத்தது போன்ற சிறப்பான நல்ல வரன்கள் தேடி வரும்.
ராசி அதிபதி குருவின் பார்வை சுமார் 2 மாதங்களுக்கு மட்டுமே ராசிக்கு கிடைக்கப்போகிறது. அதன் பிறகு , தனம், குடும்ப ஸ்தானத்தில் குரு பார்வை பதியப் போகிறது. அதற்குரிய அறிகுறிகள் இப்பொழுதே உங்களுக்கு தெரியத் துவங்கிவிடும். தொழிலில் ஏற்பட்ட மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் விலகும். குடும்பத்தி னரின் தேவைகளை நிறை வேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கி டையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சகோதரர்களுடன் இணைந்து முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த காலம். சிவராத்திரியன்று சந்தன அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்தவார ராசிபலன்
26.2.2024 முதல் 3.3.2024 வரை
கடன் தொல்லைகள் குறையும் வாரம். உச்சம் பெற்ற பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நிற்கும் ராசி அதிபதி குருவை பார்க்கிறார். இது தனுசு ராசிக்கு திருப்பு முனையான வாரமாக அமையும். குரு மங்கள யோகத்தால் பல காலமாக உங்களுக்குள் இருந்த மனக்கவலைகள் எல்லாம் குறையும். சகல செளபாக்கியங்களையும் ஏற்படுத்தக் கூடிய நல்ல வாரமாக இருக்கும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.நீங்கள் பிறந்த பலனை அடையப் போகிறீர்கள்.புதிய சொத்துக்கள் வாங்கலாம். என்றோ வாங்கிப் போட்ட சொத்துக்களின் மதிப்பு உயரும். பழைய கடன்களை செலுத்தி புதிய வாழ்க்கைக்கு அடித்தளம் அமைப்பீர்கள்.
கடன்பத்திரம், ஆவணங்கள் தொடர்பான தொல்லைகள் விலகும். மன உளைச்சல் அகலும். பூர்வீகம் சென்று வரும் வாய்ப்பு உள்ளது. திருமணம், குழந்தை பிறப்பில் நிலவிய தடைகள் அகலும். எதிரிகள் தொல்லை குறையும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பால் தேவையில்லாத கெட்ட பெயர் உருவாகும். தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்தவார ராசிபலன்
19.2.2024 முதல் 25.2.2024 வரை
புதிய அனுபவங்களால் மகிழ்ச்சி உண்டாகும் வாரம். முயற்சி ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி மூன்று கிரகச் சேர்க்கை. பாக்கியாதிபதி சூரியன் 7,10-ம் அதிபதி புதனுடன் சேருவது புத ஆதித்ய .யோகம், தர்மகர்மாதிபதி யோகம். தனுசு ராசியினருக்கு இது மேன்மையான, அபரிமிதமான பலன்களை வழங்கும் யோகம் என்றால் அது மிகைப்படுத்தலாகாது. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பது வள்ளுவர் வாக்கு.பாக்கிய ஸ்தானமும் சகாய ஸ்தானமும் பலம் பெறும் இந்த காலத்தில் நெடுங்கால திட்டங்களை துணிந்து செயல்படுத்தலாம்.புதிய கூட்டுத் தொழில் துவங்க உகந்த காலம். ஏற்கனவே கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு சகாயமான திருப்பு முனையான சம்பவங்கள் நடக்கும்.
பிள்ளைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு தாய் வழிச் சொத்து கிடைப்பதில் நிலவிய தடை, தாமதங்கள் தாய் மாமன் உதவியால் சீராகும். திருமணத் தடை அகலும். ஸ்திர சொத்துக்கள் சேரும். 21.2.2024 அன்று காலை 7.44 முதல் 23.2.2024 அன்று மாலை 7.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிக்க கூடாது. பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. மாசி மகத்தன்று மஞ்சள் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406