search icon
என் மலர்tooltip icon

    தனுசு - வார பலன்கள்

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    12.2.2024 முதல் 18.2.2024 வரை

    புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் சகாய ஸ்தானத்தில் நின்று பாக்கிய ஸ்தானமான தன் வீட்டைத் தானே பார்ப்பதால் புதிய நம்பிக்கை உருவாகும். அத்துடன் தன ஸ்தானத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் உச்சம் பெறுகிறார். எதிர்கால தேவைக்கு இப்பொழுதே சேமிப்பீர்கள். ராசி அதிபதி குரு தன் வீட்டை ராசியை பார்க்கிறார். சகாய ஸ்தானத்தில் சனி ஆட்சி என தனுசு ராசிக்கு கோட்சார கிரகங்கள் மிகச் சாதகமாக உள்ளது.நன்மை கள் மிகுதியாகும். ஆன்மீக ஈடுபாட்டில் அதிக நாட்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியம், தேக வலிமை பெறும். உங்களை வாட்டிய எதிர்மறை சிந்தனைகளை நேர்மறை சிந்தனையாக மாற்றும் பயிற்சியில் ஈடுபடுவீர்கள்.

    பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மன நிறைவோடு செய்து முடிப்பீர்கள் சேமிப்புகள் மற்றும் பங்குச் சந்தை முதலீடு அதிகரிக்கும். வராக் கடன்கள் வசூலாகும். சமுதாய அந்தஸ்து மிகுந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். திருமணம், சுப காரிய முயற்சிகள் சாதகமாகும். வேலைப்பளு அதிகமாகும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணி துரிதமாகும். எல்லாவிதத்திலும் இந்த வாரம் மிகச் சாதகமாக அமைய தினமும் கால பைரவ அஷ்டகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    5.2.2024 முதல் 11.2.2024 வரை

    மாற்றமும் ஏற்றமும் தேடிவரும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயும் பாக்கிய அதிபதி சூரியனும் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அரசு வகை ஆதாயம் உண்டு. தொழில் தொடர்பான முயற்சிக்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். இதுவரை இருந்து வந்த சகோ தர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். நல்ல வரன்கள் தேடி வரும். கடனால் கவலை, கணவன்-மனைவி பிரிவினை அல்லது வழக்கு, பிரச்சினைகள் முற்றிலும் நீங்கும். கடுமை யான நோயில் இருந்து முழு நிவாரணம் கிடைக்கும். குழந்தை பேறு, குல தெய்வ அனுகிரகம், பங்குச் சந்தை ஆதாயம், பிள்ளைகளுக்கு நல்ல உத்தி யோகம், சுப விசேஷங்கள் நடக்கும். பெற்றோர்க ளுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல புரிதல் உண்டாகும்.

    குல தெய்வ பிரார்த்த னைகளை நிறை வேற்ற உகந்த காலம். அதிர்ஷ்டம் பேரதிர்ஷ்டம் உண்டா கும். அவர வரின் சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப சுப அசுபவி ரயங்கள் உண்டு. சிலர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம். வீடு வாகனம் வாங்க லாம். சிலருக்கு மருத்துவச் செலவு கூடுதலாகும்.தை அமாவாசையன்று குல தெய்வத்தையும், முன்னோர் களையும் வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    29.1.2024 முதல் 4.2.2024 வரை

    மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம்.ராசியில் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை.பாக்கியாதிபதி சூரியன் தன ஸ்தானத்தில் 7, 10-ம் அதிபதி புதனுடன் சேர்ந்து இருப்பது அற்புதமான கிரகச் சேர்க்கை. புதிய நபர்களின் சந்திப்பு நிகழும். கூட்டுத் தொழில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் லாபத்தை மேம்படுத்துவீர்கள்.உத்தியோக ரீதியான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். விண்ணப்பித்த கடன் தொகை கிடைக்கும்.மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டு. பினாமி சொத்து, அதிர்ஷ்ட பணம், பாலிசி முதிர்வு தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. பூர்வீகச் சொத்தின் தீர்ப்பு சாதகமாகும்.பல் சீரமைப்பு செய்ய ஏற்ற காலம்.மற்றவருக்கு உதவுவது மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும்.

    பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். குழந்தைகளின் நலனில் அக்கறை வேண்டும்.கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். ஞாபக மறதியால் சிறு சிறு பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சேமிப்பை மேம்படுத்தும் எண்ணம் அதிகரிக்கும். வரன்கள் உறுதியாகும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். மறுமண முயற்சி வெற்றி தரும்.புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குல தெய்வ வழிபாடு குறைகளை நீக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    22.1.2024 முதல் 28.1.2024 வரை

    தடைகள் விலகும் வாரம்.ராசி அதிபதி குரு 5-ம் அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை பெறுவதால் திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப்போகிறது. பங்குச்சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். விவசாயிகளுக்கும், கால்நடை வளர்பவர்களுக்கும் ஏற்ற காலம். தேவையற்ற அலைச்சல், ஆரோக்கிய குறைபாடுகள் உண்டாகலாம். திறமைக்கும், தகுதிக்கும் ஏற்ப வேலையில் முன்னேற்றமும், சம்பள உயர்வும் கிடைக்கும்.

    விரும்பிய இடமாற்றம் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. தனியாக அமைதியாக இருப்பதை மனம் விரும்பும். முன்கோபத்தில் பகைமை உருவாகும். சீரிய சிந்தனைகள் பெருகும். வாழ்வின் திருப்பு முனையான சம்பவங்கள் நடக்கும். கணவன், மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள். 25.1.2024 அன்று நள்ளிரவு 1.47 மணி முதல் 27.1.2024 பகல் 1.01 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தினமும் சூரிய நமஸ்காரம் செய்து வர சிறப்பான யோகங்கள் அதிகரிக்கும். இன்னல்கள் நீங்கி அற்புதமான நல்ல பலன்கள் உண்டாகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    15.1.2024 முதல் 21.1.2024 வரை

    தடைக் கற்கள் படிக்கற்களாக மாறும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் குடும்ப ஸ்தானத்ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நிலவிய குழப்பம் சண்டை, சச்சரவு நீங்கும்.கடன் தொல்லையில் இருந்து மீளும் மார்க்கம் தென்படும். தடைகள் தகரும். பொறுப்பு மிக்க பதவிகள் தேடி வரும்.ஓய்வு எடுக்க நேரம் இல்லாமல் உழைக்க நேரும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தடைபட்ட திருமணம் நடந்து முடியும்.மருத்துவமனைச் செலவு முற்றிலும் அகலும். கை, கால், வலி அசதி நீங்கும். வீட்டில் முடங்கி கிடந்தவர்கள் வெளியில் சென்று வரும் அளவிற்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.அடிமட்டத்தில் இருப்பவர்களின் வாழ்வாதாரம் உயரும். அரசின் இலவச வீட்டு மனை கிடைக்கும். தொல்லை கொடுத்த வாடகைதாரர் விலகுவார். புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள்.பிள்ளைகளின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி உண்டாகும். தனுசு ராசியினருக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டாகும். திருமண முயற்சிகள் சித்திக்கும். விரும்பிய வரன் தேடி வரும். மாணவர்களின் சோம்பலும் மறதியும் அகலும். பொங்கல் பண்டிகை யன்று மகான்களின் நல்லாசி பெறவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    8.1.2024 முதல் 14.1.2024 வரை

    முன்னேற்றங்கள் உண்டாகும் வாரம்.ராசி அதிபதி குரு பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயுடன் பரிவர்த்தனை. மற்றும் ராசியில் சூரியன், செவ்வாய் சேர்க்கை இருப்பதால் சர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தான வலிமை கூடும்.பித்ருக்கள் மற்றும் முன்னோர்களின் நல்லாசியை பெற்றுத் தரும் கிரக அமைப்பாகும். அதிர்ஷ்டம் அரவணைக்கும்.தனுசு ராசியினருக்கு திருமணம், குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் விலகும். பிள்ளை களுக்கு கல்வியில் நிலவிய தடைகள் நீங்கும். வாழ்க்கைத் துணையும், தொழில் பங்குதாரரும் நிறையச் செலவை இழுத்து விடு வார்கள். அரசியல் பிரமுகர்கள் நிவாரணப் பொருட்கள் வழங்கி மக்கள் மனதில் இடம் பிடிப்பீர்கள்.

    மனைவியின் ஆரோக்கிய குறைபாடு சீராகும். பிள்ளைகள் மீண்டும் படிப்பில் ஆர்வம் செலுத்து வார்கள். வீடு மாற்றம், வேலை மாற்றம் உண்டாகும். ஆண்க ளுக்கு மாமனா ருடன் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும். சிலருக்கு ஞாபக சக்தி குறைவு, மன சஞ்சலம் குறையும். அமாவாசையன்று அந்தணர்களுக்கு தானம், தர்மம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    1.1.2024 முதல் 7.1.2024 வரை

    பரிபூரண வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும் வாரம் .பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தான அதிபதி சூரியனுடன் ராசியில் சேர்க்கை பெறும் அற்புதமான வாரம். பூர்வ புண்ணிய அதிபதி பாக்கிய அதிபதிகள் பலம் பெறுவதால் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு கவுரவத்தை உயர்த்தும் தரமான நிகழ்வுகள் நடக்கும். தொட்டது துலங்கும்.பட்டது பூக்கும்.கடந்த கால மனக்கசப்புகள் விலகி நிம்மதி பிறக்கும். புதிய தொழில் தொடங்கும் திட்டம் நிறைவேறும். அதற்குத் தேவையான நிதி உதவி கிடைக்கும். பொருளாதார பற்றாக்குறை அகலும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு பணிக் காலம் முடிந்தப் பிறகும் பதவி நீடிப்புகள் ஏற்படலாம்.

    தந்தை மகன் கருத்து வேறுபாடு அகலும். தந்தையின் அன்பும் ஆசியும் கிடைக்கும். திருமண முயற்சி வெற்றி தரும். புத்திர பிராப்தம் கூடிவரும். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பொன், பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.சங்கடத்தில் ஆழ்த்திய நோய் வைத்தியத்திற்கு கட்டுப்படும்.குல தெய்வ அருளும் முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். அமாவா சையன்று பித்ருக்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    25.12.2023 முதல் 31.12.2023 வரை

    சுகமும் சந்தோஷமும் நிறைந்த வாரம். பாக்கிய அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயுடன் ராசியில் சஞ்சரிப்பதால் திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்ப டைய முடியும். உடலும், உள்ளமும் புனிதமடையும். பித்ருக்கள் மற்றும் குல தெய்வத்தின் நல்லாசிகள் கிடைக்கும்.தொழில் போட்டிகள் விலகும். வேலை பார்க்கும் இடத்தில் நிலவிய குழப்பங்கள் அகலும். கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். உப ஜெய ஸ்தான அதிபதி சனி பகவானால் புகழ், தைரியம், தன்னம்பிக்கை, வீரம், விவேகம் அதிகரிக்கும். அடமான சொத்துக்கள் நகைகள் மீண்டு வரும். ஜாமீன் பிரச்சினைகள் முடியும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். திருமணம், குழந்தை பாக்கியம், சொத்துச் சேர்க்கை என தடைபட்ட அனைத்து சுப நிகழ்வு களும் நடக்கும்.

    நோய், நொடிகள் விலகும். அரசியல் பிரமுகர்களின் செல்வாக்கு, சொல் வாக்கு ஓங்கும். தம்பதிகளிடம் நெருக்கம் கூடும். பிரிந்தவர்கள் கூடுவார்கள். 28.12.2023 மாலை 6.37 முதல் 31.12.2023 அதிகாலை 5.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவும். தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    18.12.2023 முதல் 24.12.2023 வரை

    பாக்கிய ஸ்தானம் பலம் பெறும் வாரம். ராசியில் பாக்கிய அதிபதி சூரியன் சஞ்சரிப்பதால் பாக்கிய பலம் கூடும்.கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். முன்னோர்களின் நல்லாசிகளைப் பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர், உறவினர் மத்தியில் மதிப்பு கூடும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் வரும். தந்தையின் ஆரோக்கியத்தால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். வீட்டிற்கு அடங்காமல் இருந்த பிள்ளைகளின் நடவடிக்கை மன நிம்மதி தரும். ராசியில் 7, 10-ம் அதிபதி புதன் சூரியனுடன் நிற்பதால் புதன் தொடர்பான கணிதம், வங்கி, ஜோதிடம், சார்ந்த தொழில்கள் வளரும்.

    வட்டித் தொழில், அடகு பிடித்தல், படப்பிடிப்பு தொழில் செய்பவர்கள் தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும்.புத்திர பிராப்தம், திருமணம், சொத்துச் சேர்க்கை என தடைபட்ட அனைத்து பாக்கிய பலன்களும் நடைபெறும். ஆரோக்கியத்தில் சீரான முன்னேற்றம் இருக்கும். படுக்கையில் இருப்பவர்கள் கூட எழுந்து நடமாடு வார்கள். மாணவர்க ளுக்கு போட்டித் தேர்வில் வெற்றி சுலப மாகும். ஏகாதசி யன்று மகாவிஷ்ணுவை விரதமிருந்து வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    11.12.2023 முதல் 17.12.2023 வரை

    லாபகரமான வாரம். லாப அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் சிறப்பான பலன்கள் தேடி வரும். ராசி அதிபதி குரு தன் வீட்டைத் தானே பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தான வலிமையால் வாழ்க்கை யின் அனைத்து விஷயங்களும் சாதகமாக நடக்கும். குடும்ப தேவைக்காக புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள், வாழ்வின் முன்னேற்றம்,தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆழ்மன சிந்தனை பெருகும். சுறுசுறுப்பாக இயங்கி புதிய முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்.பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. குல தெய்வ அனுகிரகம் உண்டாகும்.

    பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். பரிசுகள், பட்டங்கள், பதவிகள் கிடைக்கும். தடைபட்ட பல விசயங்களுக்கு விடைகள் கிடைத்து அனுகூலமான மாற்றங்கள் பெற்று மகிழ்வீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி கணி சமான லாபம் உயரும். பிள்ளை களால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும்.தாயாரின் ஆயுள் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    4.12.2023 முதல் 10.12.2023 வரை

    சாதகமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயும், பாக்கிய ஸ்தான அதிபதி சூரியனும் ராசிக்கு 12-ல் சேர்க்கை. தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் பலித மாகும். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். சகோதர்களிடம் ஒத்துப் போக முடியாத நிலை உண்டாகும். சிலரின் தாய், தந்தை உயில் எழுதலாம். உயில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அடமான நகைகள் சொத்துக்கள் மீட்கப்படும். தந்தை மகன் ஒற்றுமை அதிகரிக்கும். தாய் வழி உறவுகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும்.

    பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். மாணவ, மாணவிகளின் கல்வி முன்னேற்றம் சிறப்பாக இருக்கும் தடைப்பட்ட திருமணங்கள், நின்று போன திருமணங்கள் நடக்கும். புதிய அணிகலன்கள், அழகு, ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். வீட்டிலும் பணிபுரியும் இடத்திலும் சாதகமான சூழல் நிலவும். குரு கவசம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    26.11.2023 முதல் 3.12.2023 வரை

    இறைவழிபாட்டால் மகிழ்ச்சி உண்டாகும் வாரம். 7, 10-ம் அதிபதி புதன் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். ராசிக்கும், புதனுக்கு குருப் பார்வை என முக்கிய கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். கூட்டுத் தொழில் வெற்றி தரும். தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்களால் வாழ்க்கைத் துணையால் சகாயமான பலன் உண்டு. வேலை தேடுபவர்களுக்கு அரசு, தனியார் துறையில் நல்ல வேலை கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடுகள் சீராகும்.சிலருக்கு வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். 5-ம் அதிபதி செவ்வாய் விரய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியனுடன் சனி பார்வையில் ஆட்சி பலம் பெறுவதால் பங்கு வர்த்தகர்கள் சிந்தித்து செயல்படவும்.

    திடீரென பணம் வரும். எதிர்பாராத விரயச் செலவு உண்டாகும். பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு. 1.12.2023 அன்று காலை 10.12 மணி முதல் 3.12.2023 இரவு 9.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் பேச்சால், முன் கோபத்தால் நல்ல வாய்ப்புகள் தள்ளிப்போகும். பணியாளர்களால் சில அசவுகரியங்கள் ஏற்படலாம் சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி செவ்வாயை வழிபட துன்பம் தீரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×