search icon
என் மலர்tooltip icon

    தனுசு - வார பலன்கள்

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    20.11.2023 முதல் 26.11.2023 வரை

    உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டாகும் வாரம். சனி, குரு சம்பந்தம் தர்மகர்மாதிபதி யோகம். சிந்தனை செயல் திறன் கூடும். முகப்பொழிவு ஏற்படும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் உங்களின் சொத்துக்களை உடன் பிறந்தவர்கள் பயன்படுத்துவார்கள் சிலரின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும் குடும்பத்துடன் இணைவார். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும்.

    தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாய முண்டு. தடைப்பட்ட வாடகை வருமானம் மீண்டும் வரத் துவங்கும். இரண்டாவது திருமணம் நடைபெறும். கை,கால் வலி சற்று அதிகமாகும்.இறை நம்பிக்கை கூடும்.வேதம் கற்கும் ஆர்வம் உண்டாகும்.குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். திருக்கார்தி கையன்று அண்ணா மலையாரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    13.11.2023 முதல் 19.11.2023 வரை

    உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டாகும் வாரம். சனி குரு சம்பந்தம் தர்மகர்மாதி யோகம் . சிந்தனை செயல் திறன் கூடும். முகப் பொழிவு ஏற்படும். எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் உங்களின் சொத்துக்களை உடன் பிறந்தவர்கள் பயன்படுத்துவார்கள் சிலரின் பிள்ளைகளுக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும்.

    தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதரர் மீண்டும்  குடும்பத்துடன் இணைவார். தொழிலில் நல்ல முன்னேற்றமும் அபரிமிதமான வருமானமும் வரும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு. தடைப்பட்ட வாடகை வருமானம் மீண்டும் வரத் துவங்கும். இரண்டாவது திருமணம் நடைபெறும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். வேதம் கற்கும் ஆர்வம் உண்டாகும்.குல தெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். சஷ்டி யன்று அரளி பூமாலை அணிவித்து முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    6.11.2023 முதல் 12.11.2023 வரை

    தடைகள் விலகி எதிர்பார்த்த வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு குருப் பார்வை, குரு மங்கள யோகம் என முக்கிய கிரகங்கள் பலம் பெறுவதால் உங்களின் முயற்சியும் விருப்பங்களும் நிறைவேறும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புத்தி சாதுர்யத்தை பயன்படுத்தி அனைத்தையும் சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் தென்படும். கனவுகள் நிறைவேறும். தொல்லை கொடுத்த எதிரிகள் விலகிச் செல்வார்கள்.

    அரசின் இலவச வீட்டுமனைத் திட்டத்தில் இலவச மனை கிடைக்கும்.கல்வித் தடைகள் தகரும்.அரியர்ஸ் பாடங்களை எழுதி பாஸ் பண்ண ஏற்ற நேரம். பூர்வீக சொத்தில் அதிக பங்கு கிடைக்கலாம்.இடமாற்றம், வீடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என அவரவர் தேவைக்கும் வயதிற்கும் ஏற்ற மாற்றங்கள் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கையால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். 6.11.2023 மதியம் 1.22 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சலும் ஏற்படும். ஞாபக சக்தி குறையும். பயணங்களும் அலைச்சலும் அதிகரிக்கும். தீபாவளியன்று வித்யா லட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    30.10.2023 முதல் 5.11.2023 வரை

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியாகவும் சிறப்பானதாகவும் நடந்து முடியும். 10-ல் ஒரு பாவியாவது இருக்க வேண்டும். 10-ல் கேது நிற்பதால் வியாபாரிகளுக்கு விற்பனை களை கட்டும். அதிக லாபம் காண்பீர்கள். 1,5,9-ம்மிடங்கள் ஏப்ரல் வரை ராசி அதிபதி குருவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ராகு, கேதுக்களால் பெரிய பாதிப்பு ஏற்படாது. தொல்லை கொடுத்த போட்டியாளர்கள் விலகுவார்கள். கோட்சார ராகு கேதுவால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அரசியல் பிரமுகர்களுக்கு சந்தோசமான வெற்றிச் செய்திகள் தேடி வரும். எதிர்கட்சியினர் கூட தேடி வந்து நட்பு பாராட்டு வார்கள். கல்வி நிறுவனம் நடத்துபவர்களுக்கு உயர் கல்விக்கு அதிக மாணவர்கள் சேர்க்கை உண்டாகும். தீபாவளி செலவுகளை திட்டமிடுவீர்கள்.

    திருமண முயற்சிகள் கைகூடும். சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு குடிபுகுவார்கள். சிலரது காதல் பிரிவினையில் முடியும். திருமணம் ஆகாத ஆண், பெண்களுக்கு நல்ல வரன் அமையும். புத்திர பாக்கியம் உண்டாகும். 4.11.2023 அன்று 1.23 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    23.10.2023 முதல் 29.10.2023 வரை

    எதிர்பாராத நல்ல திருப்பங்கள் உண்டாகும் வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் தன் வீட்டை தானே பார்ப்பதால் பதவி உயர்வும் நல்ல சம்பளமும் கிடைக்கும். புத்திர பிராப்த்தம் சித்திக்கும்.பெரியோர்களின் நட்பும் நல் ஆசியும் கிடைக்கும்.சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். விஜய தசமியன்று புதிய தொழில் முயற்சியை துவங்குவீர்கள். நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். குடும்பத்தி னரின் ஒத்துழைப்பும் பணப்புழக்கமும் நன்றாக இருக்கும்.மனதிற்கு பிடித்த வரன் அமையும். பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சுக்ரன் திருமண வாழ்க்கையில் சாதகமான நிலையைத் தருவார்.

    4-ம்மிடத்தில் ராகு நுழைவதால் சுய ஜாதக தசா புக்திக்கு ஏற்ப வீடு, வாகன முயற்ச்சியில் ஈடுபடுவது நல்லது. மாணவர்கள் கல்விக்காக வெளியூருக்கு செல்லும் வாய்ப்பு அதிகம்.குடியிருப்புகளில் இருக்கும் வாடகைதாரர்கள் மாறுவார்கள். அல்லது வாடகை தாரர்களால் மன சஞ்சலம் உண்டாகும்.பெண்கள் தீபாவளிக்கு புதிய ஆடம்பர ஆடைகள் நகைகள் வாங்கி மகிழ்வார்கள். எதிர் பாலின நட்பை தவிர்ப்பது நல்லது. கிரகணம் முடிந்த பிறகு தினமும் ஸ்ரீ ருத்ரம் கேட்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    16.10.2023 முதல் 22.10.2023 வரை

    புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம். ராசி, பூர்வ புண்ணிய ஸ்தானம்,பாக்கிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் வேறு கிரகப் பெயர்ச்சிக்கு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.கோட்சார ராகு கேது மாற்றத்தால் சிலர் தொழிலை மாற்றுவார்கள் அல்லது தொழில் முறையில் புதுமையை புகுத்துவார்கள். பங்குச்சந்தை, யூக வணிகம் பொருள் வரவை தாராளமாக்கும்.முதலீடுகள் மற்றும் சேமிப்புகள் உயரும். பெண்கள் நகைச் சீட்டு, ஏலச்சீட்டு என பணத்தை பெருக்குவார்கள். கவுரவப் பதவியில் இருப்பவர்கள், அரசியல்வாதிகளுக்கு சாதகமான நேரம்.விவாகரத்து வழக்கு மத்தியஸ்தர்கள் முன் பேசி தீர்க்கப்படும்.

    இளைய சகோதரர் மூலம் ஏமாற்றப்படலாம். சிலருக்கு தொழில் கல்வி படிப்பதில் ஆர்வம் உண்டாகும்.வெளிநாட்டில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வாய்ப்பு கிடை க்கும். பிரமாண்டமான வீடு, வாகனம் கிடைக்கும். சிலர் மன நிம்மதிக்காக சொந்த வீட்டிலிருந்து வாட கை வீட்டிற்கு குடிபெயரலாம். இரண்டாம் திருமணம் நடக்கும். வழக்குகளில் திடீர் திருப்பம் ஏற்படும். ஆரோக்கிய பாதிப்பு மன வருத்தத்தை தரும்.வெள்ளெருக்கு விநாயகரை வழிபட நன்மை மிகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிபலன்

    9.10.2023 முதல் 15.10.2023 வரை

    திட்டமிட்டு வெற்றிபெறும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானத்தி லிருந்து ராகு பகவான் சுக ஸ்தானம் செல்லப் போகிகிறார். கேது பகவான் தொழில் ஸ்தானத்தில் நுழையப் போகிறார். ராசிக்கு குருப் பார்வை என கோட்சார கிரகங்களின் செயல்பாடுகள் சாதகமாக இருப்பதால் தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் முத்தாய்ப்பான பலன் தரும். குலத்தொழில் செய்பவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாக இருக்கும். பலருக்கு வெளிநாட்டு வேலை, தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். வேதனைகளை விரட்டி சாதனைகளாக மாற்றும் சிந்தனைகள் உதயமாகும். அரசியல் தொடர்புடை யவர்களுக்கு பொது இடத்தில் புகழ் கிடைக்கும்.

    தாய் வீட்டுச் சீதனத்தால் பெண்களுக்கு உற்சாகமும், தெம்பும் ஏற்படும். கூட்டுக்குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவினைகள் சுமூகமாகும். வெளிநாட்டில் வேலை பார்ப்பவர்கள் பிறரின் பெயரில் சொத்து வாங்குவதை தவிர்க்கவும். ஆரோக்கிய தொல்லைகள் அகலும். 10.10.2023 அன்று காலை 5.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உடல்களைப்பும், சோர்வும் உண்டா கலாம். கவனமாக இருப்பது நல்லது. உணவு கட்டுப்பாடு அவசியம். மகாளய அமாவாசை யன்று அந்தணர்களுக்கு தான, தர்மம் வழங்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    2.10.2023 முதல் 8.10.2023 வரை

    நெருக்கடிகள் விலகும் வாரம்.பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் ராசி அதிபதி குருவைப் சமசப்தமாக பார்ப்பதால் பெற்றோர்களின் ஆதரவால் குடும்ப சுமைகள் இலகுவாகும். கூட்டுக் குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் கட்டுப்படும். செலவைவிட வருமானம் அதிகரிக்கும். அத்தியாவசிய தேவைக்கு தடுமாறிய நிலை மறையும். புதிய வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். சிலரின் வாழ்க்கை துணைக்கு வேலை மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.நண்பர்கள் மற்றும் தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டு. பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட் துறையினரின் வருமானம் அதிகரிக்கும். இடமாற்றம், வீடுமாற்றம் பதவி மாற்றம் வரும். ஆரோக்கிய குறைவால் விடுப்பில் இருந்தவர்கள் மீண்டும் பணிக்கு செல்வார்கள். முதலாளி, தொழிலாளி கருத்து வேறுபாடு சீராகும்.தொலை தூர ஆலய வழிபாடு மன அமைதியை அதிகரிக்கும்.பெண்கள் குடும்பத்தை நல்ல முறையில் நடத்துவார்கள். 7.10.2023 மாலை 5.18-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் முக்கிய பணிகளை அதற்கு முன்பாக முடிப்பது நல்லது. மகாளய பட்ச காலத்தில் வயது முதிர்ந்தவர்களின் தேவையறிந்து உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    வார ராசிபலன்

    25.9.2023 முதல் 1.10.2023 வரை

    தர்மகர்மாதிபதி யோகம் உங்களை வழி நடத்தும் வாரம்.பாக்கியாதிபதி சூரியன் கர்மாதிபதி புதனுடன் பரிவர்த்தனை. பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் பாக்கியாதிபதி சூரியனுடன் கர்ம ஸ்தானத்தில் இணைவு என முக்கிய கிரக சஞ்சாரம் தர்ம கர்மாதிபதி யோகத்தை வலுப்படுத்துகிறது.உங்கள் தனித் திறமைகள் வெளிப்படும். தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றிக் கொள்ள இயலும்.தோற்றப் பொலிவு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.வீடு, வாகன யோகம் சித்திக்கும். தனுசு ராசியினருக்கு தடைபட்ட திருமண வாய்ப்பு, புத்திர பிராப்தம் கூடி வரும். ஜனன ஜாதகத்தில் எவ்வளவு கடுமையான தோஷம் இருந்தாலும் இப்பொழுது திருமணம், புத்திர பிராப்தம் கூடிவிடும். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் சேரும் வாய்ப்பு உருவாகும். அரசுப் பணியாளர்களின் உத்தியோகம் தொடர்பான வழக்குகளில் திருப்பம் ஏற்படும்.ஆரோக்கியக் குறைபாடுஅகலும். கணவரின் ஆரோக்கிய கேட்டால் வருந்திய பெண்களுக்கு நிம்மதி கிடைக்கும். கலைத்துறையி னருக்கு சாதகமான நேரம். மகாளய பட்ச காலத்தில் கால்நடைகளுக்கு உணவு வழங்கு வது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    18.9.2023 முதல் 24.9.2023 வரை

    திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு ராசி அதிபதி குரு மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாயின் நான்காம் பார்வை . செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைவீர்கள். ஒரு சிலருக்கு தகுதிக்கு மீறிய வேலை கிடைக்கும். தடைப்பட்ட சம்பள பாக்கிகள் வசூலாகும். பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். மாமியாரின் பாராட்டு மகிழ்ச்சியை அதிகரிக்கும். மகன், மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். இடப் பெயர்ச்சி யால் நல்ல மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படும். பெண் குழந்தைகளுக்கு காதணி விழா, பூப்புனித நீராட்டு விழா,திருமணம், குழந்தைப்பேறு போன்ற சுப மங்கள நிகழ்வுகள் நடைபெறும். வீடு, வாகனம் போன்ற சுபச் செலவு ஏற்படலாம். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் ஒன்றுகூடி மகிழ்வீர்கள். வயது முதிர்ந்தவர்களுக்கு முழங்கால் வலி, மூட்டு வலி போன்ற உடல் உபாதைகள் கட்டுக்குள் இருக்கும். தினமும் ராகு காலத்தில் ஸ்ரீ சரபேஸ்வரரை வழி படவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    11.9.2023 முதல் 17.9.2023 வரை

    முன்னோர்களின் நல்லாசியையும், குலதெய்வ அருளையும் பெற்றுத் தரவிருக்கும் ஆரவாரமான வாரம். பாக்கிய அதிபதி சூரியனும், கர்ம அதிபதி புதனும் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்து தர்ம கர்மாதிபதி யோகத்தை வழங்குகிறார்கள்.உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஏற்படும். தடைபட்ட வேலை கிடைக்கும்.வேலையாட்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். குடும்ப நலனுக்காக ஆன்மீக தலங்களுக்கு சென்று வர திட்டமிடுவீர்கள். குடும்ப உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும் தன வரவில் தன்னிறைவு உண்டாகும். அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும். சிலருக்கு இடப்பெயர்ச்சி ஏற்படும். திருமணமா காதவர்களுக்கு திருமணம் கூடி வரும். புத்திர பிராப்தம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகும். 12.9.2023 இரவு 11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சியை தவிர்க்கவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. அமாவாசையன்று முன்னோர்களை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்தவார ராசிபலன்

    4.9.2023 முதல் 10.9.2023 வரை

    தலைமைப்பதவி தேடி வரும் வாரம். 5-ம் அதிபதி செவ்வாய் 10-ம்மிடத்தில் நிற்பதால் அரசு உத்தியோக வாய்ப்பு உறுதி. சிலருக்கு கவுரவப் பதவி, தலைமைப் பதவிகள் கிடைக்கும். தொழிலில் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வீர்கள். ஆலய தரிசனமும் புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிட்டும்.புதிய பெரிய மனிதர்களின் நட்பால் அந்தஸ்து உயரும். தன ஸ்தானம் வலுப்பெறுவதால் நல்ல பொருளாதார அனுகூலம் கிடைக்கும். பண சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. பெண்களுக்கு பொருள் சேரும் யோகம் உண்டு. 5-ம்இடத்தில் நிற்கும் குரு வக்ரமடைவதால் செயற்கை கருத்தரிப்பு முறையை நாடுவதை தவிர்க்கலாம். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பீர்கள். திருமணமாகாமல் இருப்பவருக்கு திருமண உறுதி செய்யும் நிகழ்ச்சிகள் இருக்கும்.10.9.2023 அன்று காலை 10.25-மணிக்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்பதால் தேவையற்ற வீணடிக்காதீர்கள். தினமும் மகாலட்சுமி அஷ்டோத்திரம் படிக்க தன வரவு இரட்டிப்பாகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×