என் மலர்
தனுசு - வார பலன்கள்
தனுசு
இந்த வார ராசிபலன்
28.8.2023 முதல் 3.9.2023 வரை
போட்டி, பொறாமைகள் அகலும் வாரம்.5ம் அதிபதி செவ்வாயின் 4-ம் பார்வை ராசிக்கு இருப்பதால் உங்களது ஆலோசனையை குடும்பத்தினர் ஏற்பார்கள். குடும்ப உறவுகளிடையே இணக்கமான சூழல் நிலவும். செய்தொழில் விருத்தி யாகும். தொழில் நிமித்தமான வெளிநாட்டுப் பயணம் திருப்திகரமாக அமையும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் ஏற்படலாம். சிலருக்கு உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு சொந்த தொழில் துவங்கும் எண்ணம் தோன்றும்.7ம் அதிபதி புதன் வக்ரமாக இருப்பதால் தம்பதிகள் ஒருவர் விஷயங்களில் பிறர் தலையிடாமல் இருப்பது நல்லது. முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும்.பாக்கிய பலன் மிகுதியாகும். அசையும், அசையா சொத்து வாங்குவது, விற்பது பராமரிப்பது போன்ற காரியங்களில் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். விருந்து உபசாரங்கள், கேளிக்கை களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஆடம்பரப் பொருள் சேரும்.பிரதோஷத்தன்று விபூதி அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிபலன்
21.8.2023 முதல் 27.8.2023 வரை
கடன் சுமை குறையும் வாரம். 6,11-ம் அதிபதி சுக்ரன் வக்ரம் பெறுவதால் கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடு சீராகும். வாடிக்கையாளர்கள் தொழிலுக்கு ஒத்துழைத்து பணம் கொடுங்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும். அடமானச் சொத்துக்கள் நகைகளை மீட்கக் கூடிய நல்ல சந்தர்பங்கள் தேடிவரும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும்.கடன் தொல்லை குறைந்து சேமிப்பு உயரும். எதிரிகள் விலகுவார்கள். புதுபுது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த உகந்த நேரம். அதில் பரிபூரண வெற்றி கிடைக்கும். இப்பொழுது நீங்கள் போடும் விதை ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு விருட்சமாக வளரும். மைத்துனரால் ஏற்பட்ட கவுரவக் குறைச்சல் சீராகும். பாக்கியாதிபதி சூரியன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் முன்னோர்களின் நல்லாசியால் சுற்றமும், நட்பும் நிறைந்த சூழலில் கோலாகலமாக திருமணம் நடைபெறும். ஆண் வாரிசு உண்டாகும். சிலருக்கு இரட்டை குழந்தை உருவாகும். அரசின் கான்ட்ராக்ட் மற்றும் குத்தகைதாரர்களுக்கு நல்ல ஒப்பந்தம் கிடைக்கும்.கருட பஞ்சமியன்று கருடருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
14.08.2023 முதல் 20.8.2023 வரை
பாக்கிய பலம் நிறைந்த வாரம். பாக்கிய அதிபதி சூரியன் பத்தாம் அதிபதி புதனுடன் இணைந்து ஆட்சி பலம் பெறுவது தர்ம கர்மா திபதி யோகம். எண்ணங்களும் லட்சியங்களும் செயல் வடிவம் பெறும். எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். சக ஊழியர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சுமூகமாகும். போட்டிகளை சமாளிக்கும் தைரியம் இருக்கும். வாகனங்களுக்கு பராமரிப்பு செலவு அதிகரிக்கும்.
அண்டை, அயலாருடன் இருந்த தகராறுகள் விலகும். உங்களின் அனைத்து செயல்பாடுகளும் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும். பூர்வீகச் சொத்துக்கள் விற்பனையில் கணிசமான லாபம் கிடைக்கும். 14.8.2023 அதிகாலை 4.25 முதல் 16.8.2023 மாலை 4.58 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சை குறைத்து அமைதி காப்பது நல்லது. பண உதவி செய்வது, பண உதவி பெறுவது ஆகியவற்றை தவிர்க்கவும். முறையாக பித்ருக்களை வழிபட மூன்று தலைமுறை முன்னோர்கள் சாபம் விலகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
07.08.2023 முதல் 13.8.2023 வரை
உழைப்பிற்கு ஏற்ற பலன் உண்டு. ராசி அதிபதி குரு ராசியைப் பார்ப்பதால் எங்கும் எதிலும் உற்சாகமாக இருப்பீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். 5-ம் அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மருமகன், மருமகள், பேரன், பேத்தி, புத்திரம், திருமணம் சொத்து, சுகம் என வயதிற்கு ஏற்ப சுப பலன்கள் நடைபெறும். சிலருக்கு பெரிய பதவிகள் கிடைக்க கூடிய சாத்தியக்கூறும் உள்ளது. திடீர் லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மனதை மகிழ்விக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வுடன் கூடிய இடமாற்றம் உண்டாகும்.
தொழிலாளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். வெளியில் சொல்ல முடியாமல் இருந்த சிக்கல்கள் முடிவிற்கு வரும். லவுகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துவிதமான சுக போக நாட்டம் சற்று மிகுதியாகும். காது, மூக்குத் தொண்டைக்கு சிகிச்சை செய்ய நேரும்.கண் திருஷ்டி செய்வினைக் கோளாறு அகலும். சிலர் ஆன்மீக சுற்றுலா சென்று வரலாம். ஆடி வெள்ளிக்கிழமை காசி விசாலாட்சியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
31.7.2023 முதல் 6.8.2023 வரை
மகிழ்ச்சியான வாரம். மூன்றாம் அதிபதி சனி பதவி ஸ்தானத்தில் உள்ள ராசி அதிபதி குருவை பார்ப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விரும்பிய பதவி தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். புத்திர பாக்கியம் சித்திக்கும். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும். நிலுவையில் உள்ள தொழில் தொடர்பான வழக்குகள் சாதகமாகும். பல வருடங்களாக தீராத பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மாதத்தவணையில் பொருட்கள் வாங்குவதைத், தவிர்க்கவும்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். சிலருக்கு முன்னோர் வழி நோய் தாக்கம் உருவாகலாம். சிறிய உடல் உபாதைகளை கண்டு கொள்ளாமல் இருந்தால் பின் நாளில் அதுவே பெரிய பிரச்சினை யாக உருவாகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களுடைய மூத்த சகோதரர் உங்களுக்கு பக்க பலமாக இருந்து உதவுவார். இதுவரை இருந்து வந்த சகோதர, சகோதரி பிணக்குகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். சென்று சர்க்கரைப் பொங்கல் படையலிட முன்னேற்றம் உண்டாகும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
24.7.2023 முதல் 30.7.2023 வரை
விரும்பிய மாற்றங்கள் தேடிவரும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன், சுக்ரன் சேர்க்கை இருப்பதால் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடிவரும்.மனதில் நம்பிக்கையும் உறுதியும் அதிகரிக்கும். கடந்த கால மனச் சோர்வுகள் நீங்கும். திடமான எண்ணத்தோடு அனைத்து காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள்.
அடிப்படை வாழ்வா தாரத்திற்குப் போராடியவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். கூட்டாளிகளுடன் இணைந்து புதிய தொழில் கிளைகள் துவங்கலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பாக்கிய அதிபதி சூரியன் அஷ்டம ஸ்தானத்தில் ராகு/கேதுவின் மையப்புள்ளியில் சஞ்சரிப்பதால் அரசாங்க பணிகள் தடைபடும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பெண்களுக்கு கணவர் விலை உயர்ந்த அன்பளிப்பு வழங்குவார்.
பெற்றோர்கள் பிரச்சினையை பிள்ளைகள் முன் விவாதிப்பதை தவிர்க்கவும். தவணை முறைத் திட்டத்தில் வீட்டு மனை அல்லது தோட்டம் வாங்குவீர்கள்.பண விசயத்தில் சிக்கனமாக இருப்பது நல்லது. அம்மன் கோவிலுக்கு தேவையான மின் சாதனங்களை வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
17.7.2023 முதல் 23.7.2023 வரை
பிறவிக்கடன், பொருள் கடன் தீரும் காலம்.குருவின் 5-ம் பார்வை 9-ம் இடத்திற்கு கிடைக்கும் இந்த காலத்தில் பெற்றோர்கள், தாத்தா, பாட்டி வாழ்ந்து கொண்டு இருந்தால் அவர்களுக்கு தேவையான உங்களால் முடிந்த உதவிகளைச் செய்து அவர்களின் நல்லாசிகளைப் பெறுங்கள். பெற்றோர்கள் இறந்த பிறகு எவ்வளவு பித்ருக்கள் பூஜை செய்தாலும் கிடைக்காத பாக்கிய பலன் ஒரு நொடியில் கிடைத்து விடும்.
உங்களுக்கு பிறவி கொடுத்தவர்களுக்கு நீங்கள் செய்ய வேண்டிய பிரதி உபகாரம் தீரும். நீங்கள் யாரிடமாவது பணம் அல்லது பொருள் பெற்று இருந்தால் திருப்பச் செலுத்துங்கள். திரும்ப செலுத்த முடியாவிட்டால் கால அவகாசம் கேளுங்கள்.
17.7.2023 இரவு 10.30 மணி முதல் 20.7.2023 காலை 10.55 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது குறிப்பாக விடி யற்காலை 5 முதல் 6 மணிக்குள் மறைந்த தாய், தந்தை முன்னோர்களிடம் மானசீகமாக பேசுங்கள். அடுத்த நொடியில் உங்கள் குறைகள் பரிசீலிக்கப்படும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
10.7.2023 முதல் 16.7.2023
நெருக்கடி நிலை மாறும் வாரம். 5,12-ம் அதிபதி செவ்வாய் 6, 11-ம் அதிபதி சுக்ரனுடன் பாக்கிய ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவதால் யாரும் செய்யத் தயங்கும் செயல்களை துணிச்ச லுடன் செய்து முடிக்கும் வல்லமை உண்டாகும். பாக்கிய அதிபதி சூரியன் ராசியைப் பார்ப்பதால் இதுவரை கருத்தரிக்காத பெண்களுக்கு பாக்கிய பலத்தால் கரு உருவாகும்.
கருத்தரிப்பில் சிரமம்உள்ளவர்களுக்கு வைத்தியம் பலன் தரும். பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும். வீட்டில் மேளச் சத்தம் கேட்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் திருமணத்தை நடத்தி ஆனந்தம் அடைவீர்கள்.
வங்கி கடன் மூலம் புதிய வாகனம் வாங்குதல் அல்லது நிலத்தில் முதலீடு செய்தல் போன்ற அமைப்பு உருவாகும். சிலர் குடியிருப்பை மாற்றம் செய்யலாம். பூர்வீகம்தொடர்பானபிரச்சினைகள் குறையும். குல தெய்வ, இஷ்ட, தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற ஏற்ற காலம். சர்க்கரை பொங்கல் படைத்து அம்பிகையை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
3.7.2023 முதல் 9.7.2023 வரை
குடும்ப சுமை குறையும் வாரம். தன ஸ்தானத்திற்கும், தன ஸ்தான அதிபதி சனிக்கும் 5,12-ம் அதிபதி செவ்வாயின் பார்வை இருப்பதால் பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு புகழ், அந்தஸ்து நல்ல பெயர் கிடைக்கும். உங்கள் முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள். கொடுக்கல்-வாங்கல் சுமூகமாக நடைபெறும். பொருளாதார நிலை சீராகும்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். தொழில் விறுவிறுப்பு அடையும். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்சிப்பீர்கள். வேலைப்பளுவும் கூடும். பெண்களின் புத்தி சாதுர்யத்தால் குடும்பத்தில் அமைதி நிலவும். தாய், தந்தை, உடன் பிறந்தவர்கள் மற்றும் பெற்ற மக்களால் பெருமை சேரும். சிலர் அழகு, அந்தஸ்து, ஆடம்பரம் நிறைந்த அப்பார்ட்மென்ட் வீடு வாங்குவீர்கள்.
வரவிற்கு ஏற்ற செலவு இருக்கும்.அனாவசிய வைத்தியச் செலவு இருக்காது. புத்திர பாக்கிய தடை வில கும். திருமணத்திற்கு நல்ல வரன் தேடி வரும். ஆன்மீக சிந்தனை மேலோங்கும். சிலரின் வெளி நாட்டு வேலை முயற்சியில் வெற்றி கிடைக்கும். குழந்தை வடிவில் உள்ள கிருஷ்ணரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
26.6.2023 முதல் 2.7.2023 வரை
ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணையான சம்பவங்கள் நடக்கும் வாரம். 7, 10-ம் அதிபதி புதனும் பாக்கிய அதிபதி சூரியனும் ராசிக்கு 7-ல் இணைந்து புத ஆதித்ய யோகத்தையும், தர்ம கர்மாதிபதி யோகத்தையும் வழங்கு கிறார்கள். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆரோக்கியம் சீராகும்.
சிலருக்கு பிள்ளையில்லாச் சொத்து, லாட்டரி, பினாமி சொத்து கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் லாபம் உண்டு. பணக்கஷ்டம் தீரும். பொருள் பற்றாக்குறை அகலும்.தொழிலில் அதிக முதலீடு செய்வீர்கள். 5-ல் குரு, ராகு இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குழந்தைப்பேறுக்காக செயற்கை கருத்தரிப்பை நாட உகந்த காலம்.
சிலருக்கு காதல், காமம், பூர்வீக சொத்து, குழந்தைகள், அறிவு சார்ந்த விஷயங்களில் பிரச்சினைகள், ஏமாற்றங்கள், தர்மசங்கடங்கள் வரலாம். சிலர் தொழில், உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை விட்டு வெளியேற நேரும். திருமணத்தடை அகலும். நவகிரக குரு பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
19.6.2023 முதல் 25.6.2023 வரை
புது வசந்தம் பிறக்கும் வாரம்.ராசி அதிபதி குரு மற்றும் பாக்கிய அதிபதி சூரியன் ராசியைப் பார்ப்பதால் ஆன்ம பலம் பெருகும். உடல் தேஜஸ் பெரும். பூமியில் ஏன் பிறந்தோம் என மன வேதனை யுடன் வாழ்ந்தவர்களின் வாழ்வில் வசந்தம் பிறக்கும். பொது ஜனத் தொடர்பில் இருப்பவர்களின் ஆலோசனை மற்றும் கட்ட ளைக்கு பலர் அடி பணிவார்கள்.அரசியல் ஆதாயம் உண்டு.
குல தெய்வ கடாட்சம் கிடைக்கும். பூர்வீகச் சொத்தால் பயன் உண்டு.பித்ருக்களின் நல் ஆசியால் நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை உண்டு. புண்ணிய சேத்திரங்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். 2,3-ம் அதிபதி சனி வக்ரம் பெறுவதால் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடு அல்லது பொருள் விரயம் ஏற்படும்.
20.6.2023 அன்று மாலை 3.58 முதல் 23.6.2023 அதிகாலை 4.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் மூன்றாம் நபர்களால் திடீர் பிரச்சினைகள் தலை தூக்கலாம். ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து நவகிரக சூரிய பகவானை வழிபட வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
12.6.2023 முதல் 18.6.2023 வரை
எண்ணற்ற புதிய வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசியை குரு பார்ப்பதால் நீண்ட நாட்களாக நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள்.பெரும் புள்ளிகளின் அறிமுகத்தால் நன்மைகள் ஏற்படும்.உறவினர்களுக்கிடையே உறவு நிலை மேம்படும். அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் சேர்க்கை இருப்பதால் திடீர் யோகத்தால் எதிர்பாராத நல்ல நிகழ்வுகள் நடைபெறும்.
சிறியஉழைப்பு பெரிய லாபத்தை ஈட்டித்தரும். தொழிலில் கூட்டாளிகளால் சாத கமான சூழல் ஏற்பட்டு தனலாபம் அடைவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்தால் எளிதில் பணி உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும்.பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பிள்ளைகளின் சுப நிகழ்விற்கு எதிர்பார்த்த தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும்.
கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சினைகள் குறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.தாயிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். உயர் கல்வியில் தேர்ச்சி ஏற்பட கடின உழைப்பு தேவை. நவகிரக குரு பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406