என் மலர்
தனுசு - வார பலன்கள்
தனுசு
இந்த வார ராசிப்பலன்
5.6.2023 முதல் 11.6.2023 வரை
எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் வாரம். ராசி மற்றும் 4-ம் அதிபதி குரு அதிர்ஷ்டத்தைப் பற்றிக் கூறும் 5ம்மிடத்தில் சஞ்சரிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து செயல்படுவீர்கள். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி கைகூடும். பிள்ளைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். படித்து முடித்த மகள், மகனுக்கு வேலை கிடைக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்ல வாய்ப்புகள் உள்ளது.
கடன் தொகை வெகுவாக குறையும்.வாழ்க்கைத் துணை யின் ஆரோக்கியம் சீராகும். திருமண முயற்சி வெற்றி தரும். மாணவர்களுக்கு உயர் கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். புதிய முயற்சி யில் வெற்றியும், லாபத்தை யும் பெற சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
29.5.2023 முதல் 4.6.2023 வரை
மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும் வாரம். 5-ம் அதிபதி செவ்வாய் சுக்ரனுடன் இணைந்து தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் அசாத்திய துணிச்சலுடன் எதையும் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். செயல் திறனில்மாற்றம் ஏற்பட்டுஇலகுவாக பணியாற்றி நற்பெயர்பெறுவீர்கள்.
திருமணத் தடை அகன்று தகுதியான வரன் அமையும்.மருமகன் மகன் ஸ்தானத்தில் நின்று உங்கள் தேவைகளை நிறைவு செய்வார். குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். அரசு வேலை முயற்சி சாதகமாகும். சில காரியங்கள் ஆரம்பிக்கும் போது தோல்வி தருவது போல் இருந்தாலும் முடிவில் வெற்றியைக் கொடுக்கும். தொட்டது துலங்கும்.
வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும் அல்லது வாபஸ் பெறப்படும். தந்தை வழிச் சொத்துப்பிரச்சினைகள் சித்தப்பா, பெரியப்பாவின் மூலம் தீர்த்து வைக்கப்படும். புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.கனவாக இருந்த சொந்த வீட்டு ஆசை நினைவாகும். பவுர்ணமியன்று ஸ்ரீ குபேர லட்சுமி அஷ்டோத்திரம் படிக்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
22.5.2023 முதல் 28.5.2023 வரை
லட்சியங்கள் நிறைவேறும் வாரம். 5ம் அதிபதி செவ்வாய் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் எண்ணங்களும், லட்சியங்களும், கனவுகளும் ஈடேறும். அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம், நம்பிக்கை அதிகரிக்கும்.
பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும்.பல வழிகளில் வருமானம் கூடுதலாக வரும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் விலகி அமைதியான சூழல் நிலவும். புதிய தொழில் தொடங்க எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி ஏற்படும். தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். அரசு ஊழியர்களுக்கு மேலதிகாரிகள் உதவியால் உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு புதிய எதிர்பாலின நட்பு கிடைக்கும். திருமணம் கைகூடும். கோர்ட், கேஸ் போன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
24.5.2023 காலை 8.27 முதல் 26.5.2023 இரவு 8.50 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முன்கோபத்தை குறைப்பது நல்லது. அதனால் நல்ல நட்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வியாழக்கிழமை தட்சிணா மூர்த்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
15.5.2023 முதல் 21.5.2023 வரை
சகாயங்கள் மிகுந்த வாரம். 3-ம் அதிபதி சனிக்கு 5-ம் அதிபதி செவ்வாயின் பார்வை இருப்பதால் தன்னம்பிக்கை, தைரியம், சிந்தனைத் திறன் அதிகரிக்கும். தொழிலில் மாற்றம் ஏற்படும். தொழிலிலுக்கு சகோதரர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
சிலருக்கு தாய்மாமன் மூலம் தொழிலுக்கு உதவி கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். பருவப் பெண்களின் மனதிற்கு பிடித்த மணாளனே மாலையிடுவார். குழந்தை பாக்கியத்தில் காலதாமதம் ஏற்படலாம்.
தடைபட்ட வாடகை வருமானம் கிடைக்கும். மேலதிகாரிகளால் அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். சிலருக்கு அரசாங்க விருதுகள் கிடைக்கும். பெண்களுக்கு கணவர் மற்றும் குழந்தைகளால் நிம்மதி உண்டாகும். பிள்ளைகளால் ஆதாய முண்டு.கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். அமாவா சையன்று சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
8.5.2023 முதல் 14.5.2023 வரை
அதிர்ஷ்டமான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி செவ்வாய் நீசம் பெற்றாலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியன் உச்சம் பெற்று நிற்கிறார். அத்துடன் ராசி அதிபதி குரு ராசியைப் பார்க்கிறார். அதனால் சிறிய முயற்சியால் வெற்றியும், சாதனையும் படைப்பீர்கள். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும். நாட்பட்ட வியாதிகளின் தன்மை புரியும்.
எந்த முறை வைத்தியம் சிறந்தது என்று புரியும். குடிப்பழக்கம், போதைக்கு அடிமையானவர்கள் மருத்துவ உதவியால் சீராக வாய்ப்பு உள்ளது. கடந்த கால இழப்புகளை ஈடு செய்யும் விதத்தில் தொழிலில் உயர்வு உண்டாகும். சிலர் உத்தியோகத்தில் இருந்து கொண்டே, தொழில் செய்து வருமானத்தை பெருக்குவார்கள். இழந்த வெளிநாட்டு வேலை மீண்டும் கிடைக்கும்.குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு ஆண் வாரிசு கிட்டும்.
காதல் காலை வாரும். உடன் பிறப்புகளுடன் இருந்த கோப தாபங்கள் மாறும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சங்கடஹர சதுர்த்தியன்று அவல், பொரி தானம் வழங்க மகிழ்ச்சி அதிகரிக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
1.5.2023 முதல் 7.5.2023 வரை
அதிர்ஷ்டமும், யோகமும் தேடி வரும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தானம் பலம் பெறுவதால் சமூகத்தில் மதிப்பு மரியாதை, செயல்திறன் கூடும். தெய்வ பக்தி அதிகரிக்கும். பல வருடமாக தடைபட்ட குல தெய்வ வழிபாட்டை தொடரும் சந்தர்ப்பம் அமையும். இதுவரை தடைபட்ட சுப காரியங்கள் ஒவ்வொன்றாக நடக்கும்.திருமண ஏற்பாடுகள் துரிதமாகும்.
வாரிசுயோகம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், தடுமாற்றங்கள் விலகும்.சிலர் புதியதாக தொழில் துவங்கலாம். தொழிலில் வெற்றியும், மேன்மையும் லாபமும் உண்டாகும்.தாய், தந்தை பொருள் உதவி செய்து முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். பழைய கடன்களை அடைத்து ஆறுதல் அடைவீர்கள். சீருடைப் பணியாளர்கள், பதக்கங்களும் பாராட்டுகளும் கிடைத்து புகழ் அடைவர்.
புதிய கட்டிடம், மனை, தோட்டம், வாகனம் வாங்குவீர்கள்.சிலரின் இனம் புரியாத நோய்க்கு தீர்வு கிடைக்கும். ஆரோக்கிய கேட்டால் படுக்கையில் கிடந்தவர்கள் நன்கு தேறுவார்கள். குழந்தைகள் படிப்பில் அறிவில் சிறந்து விளங்குவார்கள். பவுர்ணமியன்று ஸ்ரீ ராமரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
24.4.2023 முதல் 30.4.2023 வரை
முத்தாய்பான முன்னேற்றங்கள் உண்டாகும் சாதகமான வாரம். பஞ்சம ஸ்தானத்தில் நிற்கும் குருபகவான் தைரியத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் கவசமாக இருப்பார்.குரு பகவான் பாக்கிய அதிபதி சூரியனுடன் கூடுவதால் முன்னோர்களின் நல்லாசியும் குல தெய்வ அனுகிரகமும் பக்க பலமாக இருக்கும். தாய் மாமன் மற்றும் தாய் வழி உறவுகளால் அனுகூலம் கிடைக்கும்.
பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். நிதி ஆதாயம் உயரும் .வங்கி இருப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள்.ஆன்மீக செயல்களில் ஈடுபடுவீர்கள், தான தர்மம் செய்து மிக நல்ல புண்ணியங்களை சேர்ப்பீர்கள். தசா புத்திகள் சாதகமாக இருந்தால் ராஜ யோகத்திற்கும் இடமுண்டு. ஆரோக்தியத்தில் தெளிவு உண்டு.
26.4.2023 இரவு 12.18 முதல் 29.4.2023 பகல் 12.48 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். சுய பெருமை பேசி உங்கள் வளர்ச்சிக்கு நீங்களே தடையாக இருக்கக்கூடாது. ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
17.4.2023 முதல் 23.4.2023 வரை
தடைபட்ட அனைத்து செயல்களும் சித்தியாகும் வாரம். ஏழரைச் சனியின் காலத்தில் அனைத்து இழந்த இன்பங்களை குருபகவான் மீட்டுத் தரப் போகிறார்.இதுவரை சிறிய தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.
கோட்சார சனி பகவான் உங்கள் திட்டம் மற்றும் முயற்சியில் வெற்றி பெற உதவி செய்வார். உங்கள் செயல்களில் புத்துணர்ச்சியும், புதுமையும், விவேகமும் உண்டு. தொட்டது துலங்கும். அரசாங்க வேலை கிடைக்கும்.பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கலாம். சிலரின் சுய விருப்ப விவாகம் நிறைவேறும். பெண்கள் தங்க நகை வாங்குவீர்கள்.
அரியர்ஸ் பாடத்தை மீண்டும் எழுதி பாஸ் பண்ணும் சந்தர்ப்பம் கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியன் ராகுவுடன் இணைவதால், மனக்குழப்பம் மன சஞ்சலம் ஏற்படலாம். கிரகணத்தன்று காக்கைக்கு தயிர் சாதம் வைத்தப் பிறகு முன்னோர்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
வார ராசிப்பலன்
10.4.2023 முதல் 16.4.2023 வரை
கலக்கலான வாரம். பாக்கிய அதிபதி சூரியன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் வெற்றிகள் குவியும். எதற்கும் அஞ்சாமல் தைரியமாக அனைத்து முயற்சியிலும் இறங்குவீர்கள். புதன், செவ்வாய் பரிவர்த்தனையில் பலம் பெறுவதால் காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். குலதெய்வ பிரார்த்தனை மற்றும் பித்ருகள் சாந்தி பூஜைகள் நடத்த உகந்த காலம். புதிய தொழில் ஆரம்பிக்க மனைவி மூலம் பொருள் உதவி கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு, சிறப்பு சலுகைகள் கிடைக்கும்.
ராசி அதிபதி குரு ஐந்தாமிடத்தை நெருங்குவதால் சிலர் ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட்மெண்ட் செய்யலாம். சகோதரர் மற்றும் மனைவியுடன் இணைந்து கூட்டுத் தொழில் தொடங்கலாம். திருமணம் கைகூடும். 6ம் அதிபதி சுக்ரன் 6ல் ஆட்சி பலம் பெறுவதால் எதிர்பார்த்த வீடு, வாகன, தொழில் கடன் கிடைக்கும். எதிரிகளை வெல்லும் தைரியம் அதிகரிக்கும். சிலருக்கு கடன், எதிரி தொல்லைகள் கூடும். மாணவர்களுக்கு போட்டி, பந்தயம், தேர்வில் அமோக வெற்றி உண்டு. தேக நலனில் கவனம் தேவை. ஸ்ரீ சவுபாக்கிய லட்சுமியை வணங்கவும்.
பிரசன்ன ஜோதிடர்
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
3.4.2023 முதல் 9.4.2023 வரை
அதிர்ஷ்ட தேவதை அரவணைக்கும் வாரம். 5,12-ம் அதிபதி செவ்வாயும் 7,10-ம் அதிபதி புதனும் பரிவர்த்தனை பெறுவதால் அறிவாற்றல் பெருகும். எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படு வீர்கள். எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. தொழில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு உயரும்.
பொருளா தாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் தேடி வரும். ரியல் எஸ்டேட், ஒப்பந்த தொழில் புரிபவர்கள். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் உண்டு. அக்கம் பக்கத்தி னருடன் இருந்து வந்த கருத்து வேற்றுமை மாறும். அரசியல் வாதிகளுக்கு பொது ஜன ஆதரவு அதிகரிக்கும். திருமண வாய்ப்புகள் உள்ளது.
வீட்டில் சிறுசிறு சுப மங்கல நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் எவ்வளவு தாழ்வான நிலையில் இருந்தாலும் உயர்வு உண்டு. அதிர்ஷ்டத்தை அதிக ரிக்கும் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பங்குனி உத்திரத்தன்று முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
27.3.2023 முதல் 2.4.2023 வரை
தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் ஏழாமிடம் சென்று பத்தாமிடம், ராசி மற்றும் தன ஸ்தானத்தை பார்வை செய்வதால் பல தலைமுறையாகவிற்காமல் கிடந்த குடும்ப சொத்து கூட விற்று விடும். பூர்வீக சொத்து தொடர்பாக பங்காளிகளிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி உங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கு சட்ட ரீதியாக கிடைக்கும்.
வழக்கு கள் உங்களுக்கு சாதகமாகும். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், மருத்துவம் சம்பந்தமான தொழிலில் இருப்பவர்களுக்கு இது ஒரு இனிய காலமாக அமையும். மாமன் மைத்துனன் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் முடிவிற்கு வரும். இல்லத்தில் பிள்ளைகளின்சுப விசேஷத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும்.
அரசு ஊழியர்களுக்குவிரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகாதவர்களுக்கு வேலை நிரந்தரமாகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
30.3.2023 மாலை 4.15 முதல் 2.4.2023 அதிகாலை 4.48 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
தனுசு
இந்த வார ராசிப்பலன்
20.3.2023 முதல் 26.3.2023 வரை
வெற்றிக் கனியை ருசிக்கும் வாரம். வெகு விரைவில் குருபகவான் ஐந்தாமிடம் சென்று ராசியை பார்க்கப் போகிறார். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஊழியர்கள் உற்பத்தியை அதிகப்படுத்திக் காட்டுவார்கள். பகல் இரவு பாராமல் உழைத்து அனைத்து வசதிகளையும் தேடிக் கொள்வீர்கள். சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும். மாமனார், மாமியா ரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும்.
6-ம் அதிபதி சுக்ரன் ராகுவுடன் இருப்பதால் சுகவீனத்தால் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டால் நிர்வாகத்திற்கு முறையாகத் தெரியப்படுத்துங்கள். அலட்சியமாக இருந்து வேலையை இழந்து விடாதீர்கள். ஏழரைச் சனியின் காலத்தில் செய்யாத குற்றத்திற்காக அனுபவித்து வரும் சிறை தண்ட னையில் இருந்து விடுபடுவீர்கள்.
கடன் காரண மாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள். காணாமல் போன வர்கள் வீடு திரும்புவார்கள். திருமணத் தடை அகலும். ஸ்ரீ ரங்கநா தரையும், ஆண்டா ளையும் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406