search icon
என் மலர்tooltip icon

    தனுசு - வார பலன்கள்

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    13.3.2023 முதல் 19.3.2023வரை

    சத்ரு ஜெயம் உண்டாகும் வாரம். எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் வரவேண்டும் என பெரியவர்கள் கூறுவார்கள் அந்த நேரம் இப்பொழுது தனுசு ராசிக்கு வந்து விட்டது. வருட கிரகங்கள் அனைத்தும் சாதகமாக உள்ளது. ஏப்ரலில் நடைபெறவிருக்கும் குருப் பெயர்ச்சி ஏழரைச் சனியின் காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் அனைத்தையும் மீட்டுத்தரப் போகிறது.

    எத்தனை இடையூறுகள் வந்தாலும் சமாளிக்கும் துணிச்சலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். 7, 10-ம் அதிபதி புதன் நீச பங்க ராஜ யோகம் பெற்று பாக்கிய அதிபதி சூரியனுடன் சேருவதால் தர்ம ஸ்தாபனம், அறக்கட்டளைகள் நிறுவி அன்னதானம், தானதர்மம் செய்பவர்களின் புகழ் பரவும். தொழிலுக்கு தாய், தந்தையின் உதவி கிடைக்கும். உங்களைப் கெடுக்க நினைத்த எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள்.

    வாங்கிய கடனைத் திருப்பி செலுத்தி அவமானத்தை துடைப்பீர்கள். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டு. வியாழக்கிழமை குரு கவசம் படித்து குருபகவானை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    6.3.2023 முதல் 12.3.2023 வரை

    திட்டமிட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும் வாரம். தனாதிபதி சனி, பாக்கியாதிபதி சூரியனுடன் சகாய ஸ்தானத்தில் சேருவதால் வாழ்க்கையில் அனைத்து வெற்றிகளையும் வழங்கக் கூடிய உப ஜெய ஸ்தானம் வலுப்பெறுகிறது. கை மறதியாக வைத்த பொருட்கள், காணாமல் போன பொருட்கள் திரும்ப கிடைக்கும்.

    தடைபட்ட பத்திரப் பதிவுகள் நடக்கும். அண்டை அயலாருடன் நல்லிணக்கம் உண்டாகும். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. தொட்டது துலங்கும். திட்டுமிட்டு செயல்படுவீர்கள். எல்லா விசயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும். வியாபாரம் அமோகமாக நடக்கும்.

    பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும். கையிருப்பு கணிசமாக உயரும். சித்தப்பா, மூத்த சகோதரர் உதவியால் பல நல்ல காரியங்கள் நடக்கும். மாணவர்கள் பாடங்களை அக்கறையுடன் படிக்க வேண்டும். திருமண விஷயங்கள் சித்திக்கும். மாசி மகத்தன்று சிவ சக்தியை வழிபட வேண்டும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    27.2.2023 முதல் 5.3.2023 வரை

    அனுபவ அறிவால் வெற்றி பெறும் நேரம். 3-ம்மிடத்தில் சூரியன், புதன்,சனி சேர்க்கை இருப்பதால் தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்கும். தொழில் போட்டிகள் குறையும். வியா பாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவார்கள். பண நெருக்கடிகள் அகலும். அடமானச் சொத்துக்கள் நகைகளை மீட்கும் வாய்ப்புகள் உள்ளது.

    பாகப் பிரிவினை தொடர்பாக தந்தை மற்றும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் சிறு மன பிணக்கு ஏற்படலாம். 6ல் செவ்வாய் இருப்பதால் பணியா ளர்களின் திறமைக்கேற்ற புகழும், கவுரவமும் கட்டாயம் கிடைக்கும். 6-ம் அதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் வீடு, வாகனம், திருமணம் போன்ற சுப செலவிற்காக கடன் பெறலாம். சிலர் வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

    3.3.2023 காலை 8.58 முதல் 5.3.2023 இரவு 9.30 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அஜீரண கோளாறு ஏற்படும் என்பதால் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பணிச்சுமை அதிக ரிக்கும். தினமும் சூரிய பகவானை வழி படவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    20.2.2023 முதல் 26.2.2023 வரை

    வாழ்க்கைத் தரம் உயரும் வாரம். பாக்கிய ஸ்தானத்திற்கு செவ்வாய், சனி சம்பந்தம் இருப்ப தால் வெளிநாட்டு வாய்ப்பு சாதகமாகும். சிலர் புதிய தொழில் அல்லது வேலைக்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள். வேலை தொழில் வியாபாரத்தில் போட்டிகளையும், சிக்கல்களையும் அனுபவித்தவர்களுக்கு நிலைமை சாதகமாக மாறும்.

    உங்களின் அனைத்துப் பிரச்சினைகளும் நல்லபடியாக முடிவுக்கு வரப் போகிறது.தொழிலில் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் மன வேதனையில் இருந்தவர்கள் நம்பிக்கை, நாண யத்தை நிலை நிறுத்துவார்கள். சிலருக்கு வாரிசு அடிப்படை யிலான தந்தையின் அரசு வேலை கிடைக்கும்.

    உங்களின் முயற்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். தொழிலுக்கு அரசின் உதவி கிடைக்கும். திருமண முயற்சி ஒரிரு வாரங்களுக்குப் பிறகு சாதகமாகும். பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடிக்க சாதகமான சூழ்நிலை உண்டாகும். வெகு விரைவில் பொதுத் தேர்வு துவங்க இருப்பதால் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. அமாவாசையன்று அந்தணர்களின் தேவையறிந்து உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    13.2.2023 முதல் 19.2.2023 வரை

    கடன் சுமை அதிகரிக்கும் வாரம். ராசிக்கு 4ம்மிடத்தில் ஆட்சி பலம் பெற்று நிற்கும் ராசி அதிபதி குருவுடன் 6, 11-ம் அதிபதி சுக்ரன் உச்சம் பெற்று நிற்கிறார். இழந்த வேலை மீண்டும் கிடைக்கும்.சிலருக்கு தாய்மாமாவால் வீண் செலவு அல்லது கடன் உருவாகும்.சிலர் கவுரவம் பெருமைக்காக கடன் வாங்கி வீண் செலவு செய்வார்கள். சிலர் வியாபார முதலீட்டிற்கு கடன் கேட்க முனைவார்கள். சிலர் ஏதாவதொரு வகையில் ரொட்டேசன் செய்து தொழிலை பெருக்குவார்கள்.

    பங்கு வர்த்தகத்தில் நிதானிக்க முடியாத ஏற்ற இறக்கம் நிலவும்.அரசு அதிகாரிக ளுக்கு பணிச்சுமை அதிகரிப்பதுடன் விரும்பத்த காத இடமாற்றமும் உண்டாகும். முக்கியமான ஆவணங்கள், பொருட்களை கவனமாக பாதுகாக்கவும். பெண்களுக்கு மாமியார், நாத்தனார் வரவால் வேலைப்பளு அதிகரிக்கும்.

    அரசின் உதவித் தொகை கிடைப்பதில் நிலவிய தடைகள் அகலும். ஆரோக்கிய குறைபாடுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி துரிதமாகும். அதற்கு தேவையான நிதியுதவி கிடைக்கும். சிவராத்திரியன்று சிவபுராணம் படித்து சிவனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    பாக்கிய பலம் அதிகரிக்கும் வாரம். தன ஸ்தானத்தில் ஒன்பதாம் அதிபதி சூரியனும் ஏழு, பத்தாம் அதிபதி புதனும் சேர்க்கை பெறுவதால் முன்னோர்களின் ஆசிர்வாதமும் வழிகாட்டலும் விரும்பிய மாற்றத்தை தரும். இதுவரை சொந்த தொழில் நாட்டம் இல்லாதவர்களுக்கு கூட தொழில் ஆர்வம் உருவாகும். தொழிலுக்கு தேவையான உபரி மூலதனம் கிடைக்கும். அரசு உத்தியோகத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடன் வாங்கிய நிலை மாறும்.

    தாய் வழிச் சொத்தின் மூலம் சகோதரர்களிடம் ஏற்படும் கருத்து வேறுபாட்டை தவிர்க்க முறையான பத்திரப் பதிவை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். புத்திர பிராப்தம் உண்டாகும். திருமணத் தடை அகலும். போட்டி பந்தயங்களில், கலந்து கொள்பவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. 6.2 2023 மதியம் 3.03 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை தவிர்க்கவும். குடும்பப் பொறுப்புகள் காரணமாக அலைச்சலும் சோர்வும் ஏற்படும். விநாயகருக்கு அருகம்புல் அணிவித்து வழிபட நல்லது நடக்கும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    தன்னம்பிக்கையான வாரம். ஏழரைச் சனி காலத்தில் பொறுப்பில்லாமல் நாடோடியாக ஊர் சுற்றியவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் இல்லம் திரும்புவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். வார ஆரம்பத்தில் தொழிலில் மந்த போக்கு நிலவினாலும் நிலையான முன்னேற்றத்தை எட்டி பிடிப்பீர்கள். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். அடமானப் பொருட்களை மீட்க தேவையான பணம் கிடைக்கும்.

    உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் நிலவிய மன அழுத்தம் குறையும். நவீன கரமான பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் பாராட்டும் அன்பும் கிடைக்கும். 7.1.2023 இரவு 8.23 மணிக்கு சந்திராஷ்டமம் துவங்குவதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பேச்சில் பய உணர்வும், இயலாமையும் வெளிப்படும். சிந்திக்கும் திறன் குறையும். ஏகாத சியன்று அவல் பாயாசம் படைத்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    23.1.2023 முதல் 29.1.2023 வரை

    தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும் வாரம். கோட்சார கிரகங்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கி நல்ல சுப பலன்கள் உண்டாகும். அரைகுறையாக நின்ற அனைத்துப் பணிகளும் துரிதமாகும். விலகிச் சென்ற உறவுகள் விரும்பி வந்து இணைவார்கள். அண்ணன் தம்பிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும்.திட்டமிட்டபடி பாகப் பிரிவினைகள் சுமூகமாகும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும். ஏழு, பத்தாம் அதிபதி புதன் ராசியில் நிற்பதால் உங்கள் தோற்றப் பொலிவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்காலம் சார்ந்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

    வாழ்க்கைத் துணைக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் வாழ்க்கைத் துணை, நண்பர்களுடன் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். தொழில் சார்ந்த அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். சிலருக்கு நல்ல வெளிநாட்டு வேலை கிடைக்கும். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். திருமணத் தடை அகலும். பெண்களுக்கு ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தினமும் ஸ்ரீ நடராஜரை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    16.1.2023 முதல் 22.1.2023 வரை

    பரிபூரண வெற்றியும் மகிழ்ச்சியும் உண்டாகும் வாரம். கடந்த ஏழரை ஆண்டுகளாக உடலாலும், உள்ளத்தாலும் வேதனைப்பட்டு வந்த உங்களுக்கு இனி வெற்றிக்கனியை சுவைக்கும் வாய்ப்பு வரப்போகிறது. 7,10-ம் அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெற்று ராசியில் சஞ்சரிப்பதால் தொழிலில் வெற்றி நடை போடுவீர்கள்.

    புதிய கூட்டுத் தொழில் முயற்சிகள் சாதகமாகும். அடிப்படை வசதி பெருகும். மதிப்பும், மரியாதையும் உயரும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணை மூலம் திடீர் அதிர்ஷ்டம் உயில் சொத்து ,எதிர்பாராத தன வரவு வரும் வாய்ப்பு உள்ளது. இதுவரை இருந்து வந்த கடன் பிரச்சினை குறையும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராகும்.

    வறுமையில் வாடியவர்களுக்கு வாழ்வில் வசந்தம் வீசும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடும். சொத்துப் பிரச்சினை சுமூகமாகும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பொதுக் காரியங்களில் ஆர்வம் உண்டாகும். சிலருக்கு மறுமணம் நடக்கும். வியாழக்கிழமை நவக்கிரக குரு பகவானை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    9.1.2023 முதல் 15.1.2023 வரை

    மனப் போராட்டம் அகலும் வாரம்.  பாக்கியாதிபதி சூரியனும் 7, 10-ம் அதிபதி புதனும் ராசியில் சஞ்சரிப்பதால் உயர் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். கொடுத்த வாக்கை யும் நாணயத்தையும் காப்பாற்றுவீர்கள். 

    பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொழில் செய்யும் எண்ணம் உருவாகும். நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருந்த வரன்கள் இப்பொழுது முடிவாகலாம். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். வெளிநாடு சென்று சொந்த ஊர் திரும்ப முடியாமல் இருப்பவர்கள் விரும்பிய ஊருக்கு திரும்பும் வாய்ப்பு அமையும். சனி 3-ம் இடம் செல்வதால் உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவு ஏற்படும். 

    இடமாற்றம், வீடு மாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என அவரவரின் வயதிற்கும், தேவைக்கும் ஏற்ற மாற்றம் உண்டாகும். 10.1.2023 காலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். சங்கடங்களைத் தவிர்க்க விநாயகரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    2.1.2023 முதல் 8.1.2023 வரை

    தன்னம்பிக்கையான வாரம். ஏழரைச் சனி காலத்தில் பொறுப்பில்லாமல் நாடோடியாக ஊர் சுற்றியவர்கள், குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் இல்லம் திரும்புவார்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.

    வார ஆரம்பத்தில் தொழிலில் மந்த போக்கு நிலவினாலும் நிலையான முன்னேற்றத்தை எட்டி பிடிப்பீர்கள். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். அடமானப் பொருட்களை மீட்க தேவையான பணம் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணியில் நிலவிய மன அழுத்தம் குறையும். நவீன கரமான பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும்.

    பெண்களுக்கு புகுந்த வீட்டினரின் பாராட்டும் அன்பும் கிடைக்கும். 7.1.2023 இரவு 8.23 மணிக்கு சந்திராஷ்டமம் துவங்குவதால் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். பேச்சில் பய உணர்வும், இயலாமையும் வெளிப்படும். சிந்திக்கும் திறன் குறையும். ஏகாத சியன்று அவல் பாயாசம் படைத்து மகாவிஷ்ணுவை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    தனுசு

    இந்த வார ராசிப்பலன்

    19.12.2022 முதல் 25.12.2022 வரை

    எதிர்ப்புகள் அகலும் வாரம். பாக்கிய அதிபதி சூரியன் ராசியில் நிற்பதால் தடைபட்ட அனைத்து பாக்கியங்களும் கைகூடும். திருமணம், புத்திரம் போன்ற சுப காரியங்களில் இதுவரை இருந்த தடைகள் நீங்கும். ஏழரைச் சனியால் இழந்த பதவிகள் மீண்டும் கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமூகமாக முடியும்.

    கட்டிய வீட்டை பழுது பார்ப்பது அல்லது புதிய மனை வாங்கி வீடு கட்டுவது போன்ற செலவுகளை மேற்கொள்ள நேரும். கணவன், மனைவிக்குள் நிலவிய பிணக்குகள் நீங்கி இணக்கம் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குறிப்பாக தாய்மாமன் வழியில் பணவரவு கிடைக்கக்கூடும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  

    6-ம் அதிபதி சுக்ரன் ராசியில் நிற்பதால் தொழிலில் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். விவசாயிகளுக்கு வெள்ள நிவாரண நிதி கிடைக்கும். பிள்ளைகளால் மேன்மை உண்டாகும். அமாவாசையன்று பறவை களுக்கு தானியங்களை இரையிட்டால் துன்பங்கள் விலகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×