search icon
என் மலர்tooltip icon

    தனுசு

    வார ராசிபலன் 5.1.2025 முதல் 11.1.2025 வரை

    5.1.2025 முதல் 11.1.2025 வரை

    தர்மகர்மாதிபதி யோகம். ராசியில் பாக்கிய அதிபதி சூரியனுடன் 7, 10-ம் அதிபதி புதன் சேர்க்கை. இது தர்ம கர்மாதிபதி யோகமாகும்.பாக்கிய பலன்கள் மிகுதியாகும்.தாய், தந்தை பொருள் உதவி செய்து தொழில் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். தொழிலில் உண்டான நெருக்கடிகள் நீங்கும். ஒரு சிலருக்கு தந்தையின் தொழிலை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அரசு வேலை முயற்சி வெற்றி தரும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனஸில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள்.

    மன வேதனையால் முதியோர் இல்லம் சென்ற சில வயது முதிர்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். சிலர் வெளிமாநிலம், வெளிநாட்டுக்கு இடம் பெயரலாம். சிலருக்கு வெளிநாட்டு குடியுரிமை கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு மக்கள் ஆதரவால் நிலையான அதிர்ஷ்டம் கிடைக்கும். திருமணத் தடை விலகி விவாகம் நடைபெறும். பெண்களுக்கு மண வாழ்க்கை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். தத்தாத்ரேயரை வழிபட வளம் பெருகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×