என் மலர்
விருச்சகம்
வார ராசி பலன்கள்
இந்த வாரம் எப்படி 20-6-2022 முதல் 26-6-2022 வரை
புதிய முயற்சிகள் மேற்கொள்ள சாதகமான வாரம். ராசி அதிபதி செவ்வாயும், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குருவும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சேர்க்கை பெற்றதால் முடிவெடுக்க முடியாமல் திணறிய முக்கிய செயல்களுக்கு இந்த வாரத்தில் தெளிவான முடிவு எடுப்பீர்கள்.
தாய், தந்தையால் ஆதாயம் உண்டு. குடும்ப பெரியவர்களின் ஆலோசனைக்கு செவி சாய்ப்பீர்கள். குல கவுரவம் பற்றி பேசிக் கொண்டே இருப்பீர்கள். வீடு, வாகனம் என சகல ஐஸ்வர்யங்களும் உண்டு.அதிகார பதவி உண்டு. தன்னைச் சார்ந்தவர்க ளையும் நம்பியவர்களையும் நல்ல அறிவுரையால் வழி நடத்துவீர்கள்.
பெண்களுக்கு இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.பூர்வீகச் சொத்தில் வாரிசுப் பிரச்சினைமேலோங்கும். சித்தப்பாவுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். பாதியில் நிற்கும் கட்டிட பணிகள் துரிதமாகும். முதல் திருமணம் தோல்வியில் முடிந்தவர்களுக்கு மறு திருமணம் நடக்கும்.பிரதோஷத்தன்று பிரதோஷ வேளையில் லட்சுமி நரசிம்மருக்குபானகம் படைத்துவழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406