search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம் - வார பலன்கள்

    விருச்சகம்

    வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை

    20.10.2024 முதல் 26.10.2024 வரை

    கவனமாக செயல்பட வேண்டிய வாரம். ராசி மற்றும் 6-ம் அதிபதி செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் நீசம் பெறுகிறார். சிலருக்கு அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும். சிலர் பூமியை விற்று கடன் அடைக்கலாம்.மாமனார் மற்றும் மைத்துனர்கள் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும். புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருக்கம் ஏற்படும். சிலர் பணியில் ஏற்பட்ட வீண் பழியால் வேலையில் இருந்து விலகலாம்.தொழில் முன்னேற்றம் , அரசாங்கப் பணி தேடி வர வாய்ப்புண்டு. கடன் வாங்குவதை பெறுவதை தவிர்க்கவும்.

    தீபாவளிக்கு பிள்ளைகளிடம் இருந்து எதிர்பாராத அன்பு பரிசு கிடைக்கும்.சிலர் ஆரோக்கியத்தை சீராக்க மாற்று மருத்துவ முறையை நாடலாம். வரவும், செலவும் சமன்படும். தடைபட்ட திருமண முயற்சிகள் துரிதமடையும். 21.10.2024 அன்று மாலை 6.15 முதல் 23.10. 2024 அன்று காலை 12.01 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவை யற்ற கருத்து வேறுபாட்டைத் தவிர்க்கவும். தீபாவ ளிக்கு பொருட்கள் வாங்கப் போகும் போது கவனம் தேவை. செவ்வாய்கிழமை நவகிரக அங்காரகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை

    திருமணத்தடை அகலும் வாரம். ராசியில் களத்திரக்காரன் சுக்ரன். களத்திர ஸ்தானத்தில் குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு ராசி அதிபதி செவ்வாயின் பார்வை. என திருமணம் தொடர்பான பாவகங்கள் மிக வலிமையாக இயங்குகிறது. காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிப்பார்கள். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும்.

    பாக்கிய பலத்தால் அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகமாகும். ரியல் எஸ்டேட் தொழில் துறையினருக்கு அபிவிருத்தி உண்டு. பரம்பரை குலத் தொழில் செய்பவர்களுக்கு தொழிலில் புதிய மாற்றமும் ஏற்றமும் உண்டு. தந்தையின் பூர்வீகச் சொத்துக்கள் உங்கள் பெயரில் மாற்றி எழுதப்படும். பணவசதி சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலையிலே மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். வராது என்று நினைத்த பணம் வந்து சேரும். பிள்ளைகளின் கல்வி ஆர்வம், முன்னேற்றம் மன நிம்மதி தரும். தீபாவளி சீசன் பொருள் விற்பனை வருமானம் இரட்டிப்பாகும். வெகு விரைவில் அர்த்தாஷ்டமச் சனி முடிவு பெற உள்ளதால் அனைத்து விதமான சுப பலன்களும் நடக்கும். செவ்வாய் கிழமை வீர பத்திரரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை

    6.10.2024 முதல் 12.10.2024 வரை

    ஏற்ற இறக்கம் நிறைந்த வாரம். 2, 5-ம் அதிபதி குரு வக்ரம். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். தன வரவில் தாமதம் இருந்தாலும் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். தொழில், உத்தியோக ரீதியான பயணங்கள் லாபம் பெற்றுத்தரும். போட்டி பொறாமையைச் சந்திக்க நேரும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் தாமத பலன் உண்டு. விசாரணைக்கு வராத வழக்கு, விவகாரங்கள் மீண்டும் தலை தூக்கும். தாய் வழி இல்ல விசேஷங்களில் நடைபெறும்

    விருந்துகளில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உறவுகளின் சந்திப்பு பால்ய வயது இன்பங்களை மலரச் செய்யும். பழைய வீட்டை புதுப்பித்து பொலிவு பெறச் செய்வீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும்.குழந்தைகளை சிரத்தையோடு கண்காணிக்கவும். சிலர் இது வரை ஒத்தி வைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்து வமனை செல்ல நேரும். செயற்கை கருத்தரிப்பிற்கான முயற்சியை சிறிது காலம் ஒத்தி வைக்கவும். சண்டி ஹோமங்களில் கலந்து கொள்ளவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)

    29.9.2024 முதல் 5.10.2024 வரை

    சுப விரயங்கள் செய்ய உகந்த காலம். ராசியை 3, 4-ம் அதிபதி சனியும் 2,5-ம் அதிபதி குருவும் பார்க்கிறார்கள். லாபஸ்தான அதிபதி புதன் உச்சம் பெறுவதால் கிரகங்கள் சாதகமாக உள்ளது. சேமிப்பு அதிகரிக்கும். தாராள வரவு செலவு இருக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மற்றும் அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. உயர் கல்வியில் இருந்த தடை தாமதம் விலகும். இந்த காலகட்டத்தில் எதையும் யோசிக்காமல் ஒரு வீட்டை வாங்கிப் போடுவது உத்தமம். நிலைமை சீராகும் போது கடன் தானாக அடைபட்டு விடும்.குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரமாகும். கணவரின் அன்பும் ஆதரவும் உற்சாகம் தரும்.

    சிலருக்கு இடப்பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் ஏற்படுத்தும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும்.எதிர் பாலினத்தவரால் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் அவமானம் ஏற்படலாம். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான சம்பவங்கள் ஏற்படும். சிலருக்கு உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் உடலை தாக்கும்.சிலருக்கு காது வலி, ஞாபக மறதி போன்ற அசவுகரியங்கள் தலை தூக்கும். அமாவாசையன்று பித்ருக்களை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் (22.9.2024 முதல் 28.9.2024 வரை)

    22.9.2024 முதல் 28.9.2024 வரை

    லாபகரமான வாரம். லாப ஸ்தானத்தில் தொழில் ஸ்தான அதிபதி சூரியன் மற்றும் உச்சம் பெற்ற புதன் சேர்க்கை. கிணற்றில் போட்ட கல்லாக கிடந்த சில முயற்சிகள் முடிவிற்கு வரும். கைக்கு எட்டி வாய்க்கு எட்டாத நிலை மறையும். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் உயர்வாக இருக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உடன் பிறந்த சகோதர, சகோதரிகள் மூலம் ஏற்பட்ட சொத்து தகராறு, கருத்து வேறுபாடு அகலும்.

    சிலருக்கு தாயார் மூலம் கனிசமான தொகை கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். சிலருக்கு திருமணத் தடை நீடிக்கும். சிலருக்கு. மறு விவாகம் நடக்கும். மே 2025 வரை ராசிக்கு குருப் பார்வை இருப்பதால் பெரிய பாதகங்கள் ஏற்படாது என்பதை உறுதியாக கூறலாம். 24.9.2024 அன்று காலை 9.55 மணி முதல் 26.9.2024 அன்று மாலை 5.12 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோகம் ,நோய் , கடன், தாய்மாமா, போட்டித் தேர்வுகள் போன்றவற்றில் ஏமாற்றங்கள் ஏற்படலாம். சிவப்பு துவரை தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)

    15.9.2024 முதல் 21.9.2024 வரை

    திட்டங்களில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும் வாரம். ராசிக்கு சனி,குரு பார்வை.எதையும் சமாளிக்கும் தைரியமும் ஆற்றலும் உண்டாகும். புதிய திட்டங்களில் ஏற்பட்ட தடைகள் தாமதங்கள் அகலும். ஆக்கப் பூர்வமான ஆலோசனைகள் உதயமாகும்.புதிய பதவிகள் கிடைத்து, அதற்கேற்ப அந்தஸ்தும் உயரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் உண்டு. இடமாற்றங்கள் ஏற்படலாம். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்கள் வரும்.புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். பூர்வீகச் சொத்து தொடர்பான பாகப்பிரிவினை மற்றும் முக்கிய ஆவணங்கள் எழுத ஏற்ற காலம். புத்திர பாக்கியம் உண்டாகும்.

    அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். தொழிலிலும் வருமானத்திலும் குறையில்லை என்றாலும் மனநிறைவு ஏற்படாது. எப்போதும் பணம் விஷயமான சிந்தனையுடன் இருப்பீர்கள். இடைவிடாத கடின உழைப்பின் காரணமாக நேரத்துக்கு சாப்பிட முடியாது.சிலருக்கு தலைவலி போன்ற சிறுசிறு உபாதைகள் ஏற்படலாம்.செவ்வாய் கிழமை சுப்ரமணிய புஜங்கம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை

    குரு பலம் மிகுந்த வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் மறைந்தாலும் குருவின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடிய வில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் நேரம்.

    திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும். பல வருடங்களாக புத்திர பாக்கியம் தடைபட்டவர்கள் செயற்கை கருத்தரிப்பு முறையை அணுக உகந்த காலம். தொழில் நிறுவனத்திற்கு நம்பிக்கையும், நன்றியும் உள்ள புதிய வேலையாட்கள் அமைவார்கள். சக ஊழியர்களால் அதிக நன்மை கிடைக்கும். திருமணத்தடை அகலும். தடைப்பட்ட பாக்கிகள் வசூலாகும்.

    பழைய கடன்களையும், சிக்கல்களையும் தீர்க்கும் நிலை உருவாகும். உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.குடும்ப சுமை குறையும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். ராசியை சனி பகவான் பார்ப்பதால் சிறு சோர்வு, அசதி அலுப்பு தோன்றி மறையும். பிரதோஷ காலங்களில் நந்தியம் பெருமானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)

    1.9.2024 முதல் 7.9.2024 வரை

    குறிக்கோளுடன் செயல்படும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் அஷ்டம ஸ்தானம் சென்றாலும் ராசியை குரு பகவான் பார்க்கிறார்.இதனால் பய உணர்வு நீங்கும். மன சஞ்சலம் அகலும்.ஆன்ம பலமும் நம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்காலத் தேவைக்கான திட்டமிடுவீர்கள். தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். செல்வாக்கு, திறமை மற்றும் கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும். தொழில் போட்டிகள் நீங்கி திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். வீடு கட்டத் தேவையான கடன் அல்லது புதிய தொழில் கடன் கிடைக்கும்.

    வேலை பார்க்கும் இடத்தில் சக ஊழியர்களிடம் இருந்த வேற்றுமை மறையும்.ஊடகங்களில் பணி புரிபவர்களின் தனித்திறமை வெளிப்படும்.நோய்,நொடிகள் நிவர்த்தியாகும். ஒரு சிலர் வீடு மாற்றம், வேலை மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம் செய்ய நேரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வீண் அலைச்சல் விரயம் தொடரும். கொடுக்கல், வாங்கலில் சிரத்தை தேவை. விரயத்தை சுபமாக்க முயற்சிப்பது நலம். அரசியல் பிரமுகர்களின் சொல்வாக்கு ஓங்கும். சதுர்த்தியன்று விநாயகர் அகவல் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)

    25.8.2024 முதல் 31.8.2024 வரை

    தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும் வாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சியால் நினைப்பதொன்று நடப்பது ஒன்றாக இருந்த நிலை மாறும்.எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றிக்கனியை பறிக்காமல் விடமாட்டீர்கள். தடைபட்ட நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் இந்த வாரம் கிடைத்துவிடும்.கடன் தொல்லையில் இருந்து இடைக்கால நிவாரணம் கிடைக்கும் . எதிரிகள் தொல்லை குறையும். வியாபாரிகள் வணிக ரீதியான பயணம் செய்ய வாய்ப்பு உள்ளது. திருமண முயற்சி கைகூடும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். இந்த வாரத்தில் எல்லா வகையிலும் உங்களுக்கு சாதகமான நன்மைகள் உண்டாகும்.

    நோய் தொல்லை கட்டுக்குள் இருக்கும். தாய்வழி அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் அனைத்தும் தாமதமின்றிக் கிடைக்கும். 28.8.2024 அன்று 3.41 காலை முதல் 30.8.2024 காலை 11.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் தோன்றும் திட்டங்களை செயல்படுத்துவதில் சற்று கால தாமதம் உண்டாகும்.திட்டமிட்ட சில காரியங்களில் மாற்றமான சூழல் அமையும். அவல் படைத்து கிருஷ்ணரை வழியடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் (19.8.2024 முதல் 25.8.2024 வரை)

    19.8.2024 முதல் 25.8.2024 வரை

    செயல்களில் வெற்றி உண்டாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய அதிபதி குருவுடன் இணைந்து குரு மங்கள யோகத்தை வழங்கும் அமைப்பு சில நாட்களுக்கு மட்டுமே உள்ளது. வருமானமும் வசதியும் பெருகும். இதுவரை நிலவிய பொருளாதார நெருக்கடிகள் விலகும். பொன் பொருள் சேரும். குல தெய்வ அருள் கிடைக்கும். குல தெய்வ பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்ற உகந்த காலம். குழந்தைக்காக ஏங்கிய வர்களின் விருப்பம் நிறைவேறும். பிள்ளைகளால் பெற்றோருக்கும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் பயன் உண்டு.

    உயர் கல்வி யோகம் உண்டு.பூர்வீக சொத்து பிரச்சனை முடிவிற்கு வரும். தொழில், கூட்டுத் தொழில், உத்தியோகத்தில் நிலவிய சர்ச்சைகள் சீராகும். காதல் திருமணத்திற்கு வாய்ப்பு உள்ளது. சுய ஜாதகரீதியான தோஷங்கள் விலகி திருமணம் நடைபெறும் .நல்ல உணவு ,விருந்து, மகிழ்ச்சிக் கொண்டாட்டம், ஆரவாரம், என வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். சுபச் செய்திகளை எதிர்பார்க்கலாம். பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் அணிவதால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடு மேன்மை தரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)

    12.8.2024 முதல் 18.8.2024 வரை

    மகிழ்ச்சியான வாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் ஆட்சி. ராசியை குரு பார்ப்பதால் மனதில் ஏற்பட்ட இனம் புரியாத வேதனைகளும் பயங்களும் முற்றிலும் விலகும். தொழில் தொடர்பான அனைத்து திட்டங்களும் வெற்றியடையும்.வியாபாரிகளுக்கு சிறிய முயற்சியில் பெரிய வெற்றி உண்டு. சமூக அந்தஸ்து கவுரவம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். உற்றார், உறவுகளிடம் சுமூகமான நிலை நீடிக்கும். இயன்றவரை வேலையை மாற்றாமல் இருப்பது நல்லது. பெற்றோர்கள், உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும்.குழந்தைகளின் திறமைகளைக் கண்டு மனம் மகிழ்வீர்கள்.

    கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். குற்றம் குறை கண்டு பிடித்த மனைவி உங்களை புரிந்து கொள்வார். குடும்பத்தில் சுப காரியம் நடக்கும் வாய்ப்பு உள்ளது. பண வரவும் அதிகரிக்கும் அதற்கு இணையான செலவும் உண்டாகும். திருமணம் நிச்சயமாகும். சிலருக்கு முக்கிய தேவையான வீடு, வாகன தேவைக்கு கடன் வாங்கும் நிலை உண்டாகும். அப்படி வாங்கினால் அதை அடைத்து விட முடியுமா? என்ற கவலையும் உண்டாகும். வரலட்சுமி நோன்பு அன்று வயது முதிர்ந்த சுமங்கலிகளிடம் நல்லாசி பெறவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)

    5.8.2024 முதல் 11.8.2024 வரை

    செயல் திறன் மிகவும் சிறப்பானதாக இருக்கும் வாரம்.10-ம் அதிபதி சூரியன் 9-ல் நிற்பது பாக்கிய பலன்களை மிகைப்படுத்தும் அமைப்பாகும். வியாபாரத்தில் நிலவிய மந்த நிலைகள் மாறி சூடு பிறக்கும். இலாபமும் அதிகரிக்கும். சிலர் புதிய வீடு, நிலம் வாங்கும் முயற்சியில் ஈடுபடலாம். தாய், தந்தை உங்களை புரிந்து கொண்டு உதவுவார்கள். கடன் தொல்லை குறையும். எதிர்பாராத தனச் சேர்க்கையால் கடந்த கால இழப்புகள் இருந்த இடம் தெரியாது.மனம் நிம்மதியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோ ஷம் நிறைந்திருக்கும். தம்பதிகளிடையே அன்னி யோன்யம் அதிகரிக்கும்.

    அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் சகோதரரால் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். தகாத நட்புகளையும் தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளின் உதவியால் உயர்பதவிகள் கிடைக்கும். புதிய வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து தொடர்பான சர்ச்சைகள் ஓரிரு வாரங்களில் முடிவுக்கு வந்து விடும் எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். அரசு பணிகளில் இருந்து வந்த இழுபறிகள் மறையும். ஆடிப் பூர நாளில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை சாற்றி வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×