என் மலர்
விருச்சகம் - வார பலன்கள்
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
29.7.2024 முதல் 4.8.2024 வரை
மகிழ்சியான வாரம். ராசியை குரு, செவ்வாய் பார்ப்பதால் கடன் தொல்லைகள் குறையும். சேமிப்பு உயரும். வாழ்க்கைத் துணை, வியாபார பங்குதாரரை அனுசரித்து செல்ல வேண்டிய காலம். பங்குச் சந்தை ஆதாயம் உபரி வருமானத்தைப் பெற்றுத்தரும். கொடுக்கல், வாங்கலில் சிறப்பான நிலை நீடிக்கும். பங்குதாரர்கள் மற்றும் வேலையாட்கள் ஆதரவால் தொழிலில் ஏற்படும் நெருக்கடியை சமாளிக்க முடியும். சிலருக்கு வெளிநாட்டு கம்பெனியில் வேலை கிடைக்கும்.பூர்வீக சொத்து சம்பந்தமாக உங்களுக்கும் சகோதரருக்கும் கைகலப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
சனி வக்ரமாக இருப்பதால் சித்தப்பா உங்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெண்களுக்கு கோட்சார ரீதியான திருமணத் தடை நீடிக்கும். 31.7.2024 அன்று இரவு 10.15 மணி முதல் 3.8.2024 அன்று காலை 5.41 வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் சொத்துக்கள் தொடர்பான முயற்சிகளை ஒத்திவைக்கவும். கையிருப்புப் பொருள்களைப் பத்திரப்படுத்தவும். அம்மன் கோயில் திருப்பணி நடக்கும் ஆலயங்களுக்கு செங்கல் தானம் வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
22.7.2024 முதல் 28.7.2024 வரை
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் 2,5-ம் அதிபதி குருவுடன் இணைந்து ராசியை பார்க்கிறார்.அரசாங்க காரியங்களில் லாபமும் அனுகூலமும் ஏற்படும்.பிள்ளைகளால் நன்மை, தந்தை வழி ஆதாயம், தொழிலில் முன்னேற்றம், லாபம், மகிழ்ச்சி என்று எல்லா வகையிலும் நன்மைகளை உண்டாகப் போகிறது. குடும்ப உறவுகளுடன் பெருந்தன்மையாக நடந்து கொள்வீர்கள். ஆடம்பர விருந்து, உபசாரங்களில் கலந்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக நினைத்த சில ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். நல்ல தகவல்கள் வீடு தேடி வரும்.வரவேண்டிய பணம் விரைவில் வசூலாக வாய்ப்புள்ளது.
நல்ல ஆடம்பரம், வசதி நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். சுபமங்கள நிகழ்விற்கு தாராளமான பணச் செலவு செய்து மகிழ்வீர்கள். வேலைப்பளுவால் நேரம் தவறிய உணவு, தூக்க மின்மை, உடல் அசவுகரியம் அல்லது உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். உடலில் உள்ள சிறுசிறு உபாதைகளைக் கண்டு பயப்படாமல் மனம் தளராமல் வாழ்க்கையை எதிர்கொள்வது நல்லது. ஆடி வெள்ளிக்கிழமை பால் அபிசேகம் செய்து அம்மன் வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
15.7.2024 முதல் 21.7.2024 வரை
நல்ல வாய்ப்புகள் தேடி வரும் வாரம். ராசிக்கு குரு, செவ்வாய் பார்வை. பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சுக்ரன் சேர்க்கை என கிரக நிலவரம் சாதகமாக உள்ளதால் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கம்பீரமான தோற்றம் உண்டாகும். மனதைரியம் அதிகரிக்கும். கொடுத்த வாக்கு மிக முக்கியம் என உணர்ந்து செயல்படுவீர்கள்.மாணவர்களுக்கு வீர தீரச் செயல்களில் வெற்றி உண்டு. நிலம், வீடு, வாகனம் வாங்குவதில் சுமூகநிலை நீடிக்கும். உடல் நலக்குறைபாடுகள் அகலும். பூர்வீகச் சொத்துக் குழப்பம் முடிவிற்கு வரும்.
வம்பு, வழக்குகளில் சாதகமான முடிவு வரும்.தந்தை மற்றும் உடன் பிறப்புகளுடன் ஒற்றுமை மேலோங்கும். தொழில், வணிகம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக திகழ்வீர்கள். தம்பதிகள் ஒருவரை ஒருவர் நேசிப்பார்கள். பெண்களுக்கு தாய் வீட்டு சீதனம் மன நிறைவைத் தரும். வெளித் தொடர்புகள் மூலம் சீரான பண வரவு இருக்கும். தோல் வியாதி, நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வைத்தியத்தில் கட்டுப்படும்.தர்ம காரியங்களில் மனம் லயிக்கும். பண்ணாரி மாரியம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
8.7.2024 முதல் 14.7.2024 வரை
காரியங்கள் கைகூடும் வாரம்.கடந்த 45 நாட்களாக ராசிக்கு 6ல் நின்று கடன், நோய், எதிரி தொல்லையை வழங்கிய ராசி அதிபதி செவ்வாய் 7ம்மிடமான களத்திர ஸ்தானம் சென்று குருவுடன் இணைந்து ராசியை பார்க்கிறார். இதனால் விருச்சிக ராசியினருக்கு தொழில், உத்தியோகம் தொடர்பான அனைத்து சூழ்நிலையும் சாதகமாக அமையும். தொழில் அபி விருத்தி மூலம் வளர்ச்சி உண்டாகும். தொழில் போட்டிகள் நீங்கும்.கடன் தொல்லை குறைந்து சேமிப்பு உயரும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். கொடுத்த தொகை விரைவில் வசூலாகும். அரசின் கான்ட்ராக்ட் மற்றும் குத்தகைதாரர்களுக்கு நல்ல ஒப்பந்தம் கிடைக்கும்.
பணம் தொடர்புடைய பிரச்சினைகளால் கூட்டாளி களிடம் வாக்குவாதம் ஏற்பட கூடும். தம்பதிகள் ஒருவர் விஷயங்களில் பிறர் தலையிடாமல் அவரவர் வேலையை மட்டும் பார்ப்பது நல்லது. பிள்ளைகள் பெற்றோர்களை புரிந்து கொள்வார்கள்.பெண்களுக்கு உபரி நேரத்தில் தையல், அழகுகலை போன்ற தொழில் தொடர்பான கல்வி கற்கும் ஆர்வம் உண்டாகும். சிலர் விருப்ப திருமணம் செய்யலாம் சிலருக்கு தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும். நவகிரகங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
1.7.2024 முதல் 7.7.2024 வரை
விவேகத்துடன் செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு குருப் பார்வை.3,4ம் அதிபதி சனி வக்ரம்.வெளிநாட்டு பணப் புழக்கம் அதிகரிக்கும். வராக்கடனாக நிலுவையில் உள்ள பணம் வந்து சேரும்.திருட்டுப் போன பொருள்கள் கிடைக்கும். புதிய சொத்துக்கள், வாகனம் வாங்கும் விரும்பம் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் நிலவும். சிலர் கெட்ட பழக்க வழக்கத்திலிருந்து விடுபடுவார்கள். மத நம்பிக்கை குறையும், மத மாற்ற சிந்தனை மேலோங்கும். சனி வக்ரம் பெறுவதால் கூட்டாளிகளை அனுசரித்து செல்ல வேண்டும்.புதிய ஒப்பந்தத்திற்கு கூடுதலாக அலைய வேண்டி இருக்கும்.
வியாபாரம் தொடர்பான செலவு கூடும். ராசியை குரு பார்ப்பதால் வம்பு, வழக்கு, சிறை தண்டனை, விபத்து, கண்டம் அறுவை சிகிச்சை, தீராத கடன், தீர்க்க முடியாத நோய், கண் திருஷ்டி ஆகிய பாதிப்பு விலகும். 4.7.2024 அன்று பகல் 3.58 முதல் 6.7.2024 அன்று இரவு 10.34 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற சிந்தனைகளை தவிர்க்கவும். அனைவரிடம் பொறு மையாக அன்பாக பழகுவது நல்லது. வெள்ளிக்கிழமை வீட்டில் நெய் தீபம் ஏற்றி லலிதா சகஸ்ஹர நாமம் படித்து வர பொருளாதார மேன்மை உண்டு.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
24.6.2024 முதல் 30.6.2024 வரை
விருப்பங்கள் நிறைவேறும் வாரம். ராசியை குரு பார்ப்பதால் எதிர்மறை எண்ணங்கள் விலகி அழகான தோற்றப் பொலிவு உண்டாகும். வார இறுதியில் சனி பகவான் வக்ரம். ராசி மற்றும் 6-ம் இடத்தை சனி பார்த்ததால் ஏற்பட்ட அசவுகரியங்கள் குறையும். ஆரோக்கியத் தொல்லை அகலும். படபடப்பு, டென்ஷன் குறையும். விவசாயிகளின் விருப்பங்கள் பூர்த்தியாகும். எதிர்ப்புகள் நீங்கும். சில்லரை வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்கு தொழிலில் இயல்பு நிலை நீடிக்கும். பெரும் முதலீட்டாளர்கள் விலை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப ஆர்டர்களை டெலிவரி செய்வதில் நடைமுறைச் சிக்கல் இருக்கும்.
அரசின் ஒப்புதல் ஆவணங்களுக்கு அதிக அலைச்சலை சந்திக்க நேரும். ஆனாலும் பணசுழற்சி அமோகமாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் முன்னர் வேலை பார்த்து விலகிய வேலைக்கே மீண்டும் செல்வார்கள். தந்தை, தந்தை வழி உறவுகளுக்காக சில விரயங்களை சந்திக்க நேரும். தர்ம ஸ்தாபனம், அறக்கட்டளைகள் நடத்துபவர்களுக்கு தாராளமான நிதி உதவி கிடைக்கும். சிலர் பூர்வீக வீட்டை பழுது பார்ப்பார்கள் அல்லது பூர்வீக நிலத்தை சுத்தம் செய்து ஒழுங்குபடுத்துவார்கள்.சிவனுக்கு திருமஞ்சனம் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
17.6.2024 முதல் 23.6.2024 வரை
விபரீத ராஜயோகமான வாரம். ராசியை குரு பார்ப்பதால் குடும்பத்தில் நிம்மதியும் சந்தோசமும் அதிகரிக்கும். மனக்குழப்பம், டென்ஷன் குறையும். வருமானத்தில் நிலவிய பற்றாக்குறை அகலும். ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் தாமாக விலகும்.புதிய தொழில் முதலீட்டிற்கு உகந்த நேரம். 2025 மார்ச் அஷ்டமச் சனியின் ஆதிக்கம் முழுமையாக குறைகிறது. அதனால் புதிய தொழில் தொடர்பான முயற்சியில் சுய ஜாதக பரிசீலனை அவசியம். மகன் தீய சகவாசங்களில் இருந்து விடுபடுவார்.
பிள்ளைகள் போட்டித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். கடன், நோய், எதிரி தொல்லைகள் அகலும். கணவன், மனைவி அன்பாக இல்லறம் நடத்துவார்கள். அஷ்டமாதிபதி புதன் ஆட்சி பலம் பெறுவதால் ஆயுள் ஆரோக்கியம் தொடர்பான பயம் விலகும்.வாழ்க்கைத் துணை மூலம் அதிர்ஷ்ட பொருள் வரவு உண்டு.புதிய வீடு வாங்குதல், புதிய வீடு கட்டி குடிபுகுதல், வசிக்கும் வீட்டை விரிவுபடுத்துல் போன்ற பாக்கிய பலன்கள் இனிதே நடந்தேறும். புத்திர பிராப்தம் கிடைக்கும். திருமண முயற்சிகள் சித்திக்கும். இரண்டாவது குழந்தை பிறக்கும். பவுர்ணமியன்று சத்தியநாராயணரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
10.6.2024 முதல் 16.6.2024 வரை
சாதனைகள் வெளிப்படும் வாரம். ராசியை நவகிரகங்களும் பார்த்ததால் ஏற்பட்ட இன்னல்கள் விலகி மன உறுதி அதிகரிக்கும். சூரியன், புதன், சுக்ரன் அஷ்டம ஸ்தானம் செல்கிறார்கள். சனி, செவ்வாய், புதன் ஆட்சி பெறுவது மிகப்பெரிய யோகத்தை கொண்டு வரும் அஷ்டமாதிபதி ஆட்சி பலம் பெறுவது விபரீத ராஜயோகம். தொழிலில் ஒரு உன்னத நிலையை அடைய முடியும். புதிய வேலை கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் வாசல் கதவை தட்டும். அசையும், அசையாச் சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். உயில் சொத்து, அதிர்ஷ்ட பொருள், பணம் கிடைக்கும்.
ஆயுள் தோஷம் விலகும் தீராத நோய்கள் அறுவை சிகிச்சையில் சீராகும். நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தவராக இருப்பீர்கள். வழக்குகளின் தீர்ப்பு சாதகமாகும் அல்லது தீர்ப்பு தள்ளிப்போகும். திருமணத்திற்காக காத்திருக்கின்ற விருச்சிக ராசியினருக்கு தற்போது நல்ல காலம் . நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்வீர்கள் . இதுவரை புரிதலின்றி பிரிந்த தம்பதிகளிடம் அந்நியோன்யம் அதிகரிக்கும்.மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்க்கவும்.கலைப் பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நவகிரகங்களை வழிபட வாழ்க்கை வளமாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
3.6.2024 முதல் 9.6.2024 வரை
சிந்தனையிலும், செயலிலும் நிதானம் மற்றும் பொறுமையை கடைபிடிப்பது அவசியம். ராசியை ராசி அதிபதி செவ்வாய் 8ம் பார்வையாக பார்க்கிறார். சனி 10-ம் பார்வையாக பார்க்கிறார். குரு, சூரியன், சுக்ரன், புதன் சம சப்தமமாக பார்க்கிறார். 5, 6-ம் தேதிகளில் சந்திரனும் ராசியை பார்க்கிறார். ராசிக் கும் ராகுவிற்கும் திரிகோண சம்பந்தம். கேதுவின் பின் நோக்கிய 3-ம் பார்வை என நவகிரகங்களும் ராசியுடன் சம்பந்தம் பெறுகிறது. ராசிக்கு சனி செவ்வாய் பார்வையும் உள்ளது. 7.6.2024 அன்று காலை 7.55 மணி முதல் 9.6.2024 அன்று பகல் 2.07 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது.
பொதுவாக லக்னம், ராசியை எந்த கிரகமும் தொடர்பு கொள்ளாமல் இருந்தால் வாழ்க்கை இலகுவாக இருக்கும். அதிக கிரகங்கள் ராசியை பார்ப்பதால் அத்தியாவசிய , முக்கிய பணி களை மட்டும் செய்வது நல்லது. பள்ளி விடுமுறை காலம் என்பதால் பெற்றோர்கள் பிள்ளை களின் மேல் அதிக கவனம் செலுத்த வேண்டும்.குரு பார்வை கவசமாக இருப்பதால் பெரிய பாதிப்பு ஏற்படாது. யாரையும் பயமுறுத்த இதை எழுத வில்லை. பொது நல நோக்குடன் எழுதப்பட்டுள்ளது. தினமும் திருக்கோளற்று பதிகம் படிக்கவும். அமாவாசையன்று குல தெய்வத்தை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசி பலன்
27.05.2024 முதல் 02.06.2024 வரை
மனக்குறை அகலும் வாரம். ராசியை ஆட்சிபலம் பெற்ற சுக்ரன் குரு, சூரியனுடன் இணைந்து பார்ப்பதால் பகட்டான ஆடை, ஆபரணங்களை அணிந்து மதிப்பாக தெரிய வேண்டும் என்று விரும்புவீர்கள். நிர்வாகத்திறன் அதிகரிக்கும். அதிகார தோரணை உண்டாகும். புதிய திட்டத்துடன் சளைக்காமல் செயலாற்றுவீர்கள். நினைத்ததை சாதிக்க கூடிய பணபலம், படைபலம் பெருகும். அரசு வேலை தேடுபவர்களுக்கு நல்ல சாதகமான பதில் கிடைக்கும். பெண்களுக்கு திருமண வாழ்க்கை மன நிறைவைத் தரும். சில தம்பதிகள் தொழில், உத்தியோக நிமித்தமாக வெவ்வேறு ஊர்களில் பிரிந்து வாழ நேரும். தாய்மாமா அல்லது தாய்வழி தாத்தா மூலம் பொருள் உதவி கிடைக்கும். வெளிநாடுகளில் தொழில்முறை தொடர்புகளை ஏற்படுத்த இது அருமையான நேரம். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சலால் கணிசமான லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். தவணை முறை திட்டத்தில் சொத்து வாங்குவீர்கள். சீட்டு பணம், பாலிசி முதிர்வு தொகை, கிடைக்கும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை அரளி பூவால் வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
20.5.2024 முதல் 26.5.2024 வரை
புதிய நம்பிக்கை பிறக்கும் வெற்றிகரமான வாரம்.ராசிக்கு 7ல் சூரியன் குரு, சுக்ரன் சேர்க்கை விரும்பிய வாழ்வியல் மாற்றத்தை வழங்கப் போகிறது. கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.திட்டமிட்ட செயல்பாட்டால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டம், பேரதிர்ஷ்டமும் ஒருங்கே கை கொடுக்கும் காலம்.பங்குச் சந்தை முதலீடுகள் லாபத்தை பெற்று தரும். குடும்ப உறவுகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை தரும். வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடிவரும். வியாபாரத்தின் சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள்.
தொழில் அபிவிருத்தி உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட பிணக்குகள் மறையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பு அதிகரிக்கும். மனதளவில் திருப்தி ஏற்படும். கவலை விலகும். வரவு அதிகரித்து செலவு குறையும். கடன் தொல்லை குறையும். சொத்துக்களின் மதிப்பு உயரும் . வீடு, வாகனம் வாங்க கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் அமையும். கணவன் மனைவி அந்நியோன்யம் கூடும்.ஆரோக்கியத்தில் நல்ல மாற்றம் தெரியும். நவக்கிரக செவ்வாயை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
13.5.2024 முதல் 19.5.2024 வரை
எண்ணம் போல் வாழ்க்கை அமையும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி குரு ராசியை பார்ப்பதால் மறைந்து கிடந்த உங்களின் அனைத்து திறமைகளையும் வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும்.எதிர்காலம் தொடர்பான புதிய எண்ணங்கள் மற்றும் திட்டங்கள் நிறைவேறும். இழந்த அனைத்து இன்பங்களும் மீண்டும் கிடைக்கப் போகிறது. கவுரவப் பதவிகள் கிடைக்கும். மாமியார் மற்றும் மாமனாரால் பொருள் வரவு உண்டாகும். சிலருக்கு தொழில் உத்தியோக நிமித்தமாக இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வேற்று இன மத நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பெற்றோர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பு மறையும். அரை குறையாக நின்ற கட்டிடப்பணிகள் தொடரும்.
வாழ்க்கைத் துணைக்கு பதவி உயர்வு கிடைக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளுக்காக சுபச் செலவு செய்ய நேரும். மருமகள், மருமகன் பூர்வீகச் சொத்து பிரிவினையில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பெண்கள் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதால் சுபச் செலவுகள் உண்டாகும். விரும்பிய வரன் வீடு தேடி வரும். சிலரின் மறுமண முயற்சி நிறைவேறும். முருகன் வழிபாடு சிறப்பு.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406