என் மலர்
விருச்சகம் - வார பலன்கள்
விருச்சகம்
இந்த வார ராசிபலன்
6.5.2024 முதல் 12.5.2024 வரை
சுபமான வாரம். ராசிக்கு குரு. சனி பார்வை. சுப மங்கலச் செலவு உண்டாகும். வைத்தியம் பலன் தந்து குழந்தை பேறு உண்டாகும். பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம், முன்னேற்றம் வெகு சிறப்பாக இருக்கும்.
வீட்டில் மேளச் சத்தம் கேட்கும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் நடத்தி ஆனந்தம் அடைவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிம்மதி ஏற்படும். மன நிம்மதியை குறைத்த கடன் பிரச்சினை ஓரளவு குறையும். தந்தையின் அன்பும் அனுசரனையும் கிடைக்கும்.சிறுசிறு ஆரோக்கிய குறைபாடுகள் தோன்றி மறையும்.
சொந்த வீட்டில் இருந்து வாடகை வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்து விடுவார்கள். வாழ்க்கைத் துணைக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். சில குழந்தைகள் பள்ளி மாறலாம். வெளியூர், வெளிநாட்டுக்கு இடப் பெயர்ச்சிகள் நடக்கும். ஆவணங்கள் தொடர்பான பிரச்சினைகள் அகலும்.10.5.2024 இரவு 10.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் ஆரோக்கி யத்தில் அதிக கவனம் தேவை. அமாவாசையன்று கால பைரவரை வழிபட காலத்தால் ஏற்படும் இன்னல்கள் நீங்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்த வார ராசிபலன்
29.04.2024 முதல் 05.05.2024 வரை
சோதனைகள் சாதனைகளாக மாறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் ராசிக்கு 5-ல் ராகு மற்றும் அஷ்டமாதிபதி புதனுடன் சேருவதால் பேச்சை மூலதனமாக கொண்ட வக்கீல்கள், ஆசிரியர்கள், விற்பனை பிரதிநிதிகள் ஏற்றம் பெறுவார்கள். பங்கு வர்த்தகத்தில் ஏற்ற இறக்கமான நிலை நீடிக்கும். எதிர் பாலினத்தவரால் நிம்மதி குறையும். தேவையற்ற நட்புகள், உறவுகளின் தொல்லைகள், நெருக்கடிகள் உண்டாகும்.
சொத்துக்களாலும் சொந்தங்களாலும் சில பிரச்சினைகள் தலை தூக்கும். உறவினர்களுக்கு செய்யும் உதவி உபத்திரமாக முடியும். சிலருக்கு வேற்று மொழி கற்கும் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் மூலம் அபாரமான பண வரவு கிடைக்கும். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். திருமணத்திற்கு வெளியூர் வரன் அமையும் வாய்ப்புகளே அதிகம் உள்ளது. உயர் கல்வி வாய்ப்பு நிறைவேறும். வேலைக்காக தனித்தனி ஊரில் வசித்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வார்கள். கோபத்தால், தெளிவற்ற சிந்தனையால் நல்ல வாய்ப்புகளை தவற விடலாம். ராசியை குரு பார்ப்பதால் அனைத்து பிரச்சினைகளும் குரியனைக் கண்ட பனிபோல் விலகும். செவ்வாய்க்கிழமை ஸ்ரீ வீரலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
22.4.2024 முதல் 28.4.2024 வரை
அனுகூலமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்வதால் லெளகீக வாழ்வில் உள்ள அனைத்து இன்பங்களையும் நுகரும் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளால் பூர்வீகச் சொத்தில் அனுகூலமான திருப்பம் ஏற்படும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்புகள் மாறும்.தொழிலில் விறுவி றுப்பாக நடைபெறும். உத்தியோகத்தில் கவுரவமான நிலை இருக்கும். பெற்றோர்களின் ஆதரவால் குடும்ப சுமைகள் இலகுவாகும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். பெண்களுக்கு ஆடம்பர பொருட்களில் ஆர்வம் மற்றும் சேர்க்கை அதிகரிக்கும்.
குழந்தைபேறு முயற்சி பலன் தரும். பிள்ளைகளின் எதிர்கால தேவைக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். சிலர் வீட்டை பழுது பார்க்கலாம்.ஆரோக்கிய தொல்லைகள் அகலும். மருத்துவ செலவு குறையும். சில முக்கிய சம்பவங்கள் பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் முடிவில் நன்மையாகவே இருக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். திருமண முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சித்ரா பவுர்ணமியன்று முருகனுக்கு பஞ்சாமிர்தம் படைத்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
15.4.2024 முதல் 21.4.2024 வரை
இனிய நிகழ்வுகள் நடக்கும் வாரம். உச்சம் பெற்ற 7, 12-ம் அதிபதி சுக்ரன் ராசிக்கு 5-ல் வக்ரம் பெற்ற 8,11ம் அதிபதி புதன் மற்றும் ராகுவுடன் நிற்பதால் நீண்ட கால கனவுகள் நிறைவேறும். உடல் நல பாதிப்புகள் விலகி எதிலும் உற்சாகமாக, சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.
அசையும், அசையா சொத்துக்களில் முதலீடு செய்யும் வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். மலைபோல் வந்த துன்பம் பனி போல விலகும். காதலுக்கு எதிர்ப்புகள் கூடும் சிலருக்கு பதிவு திருமணம் நடந்து முடியும். அதிக அலைச்சலுக்கு பிறகு தொழில் தொடர்பாக அரசிடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
புதன் ராகு சேர்க்கை இருப்பதால் பத்திரப் பதிவு முக்கிய ஆவணங்கள் தொடர்பான செயல்களில் எச்சரிக்கை தேவை. கடன் பிரச்சினை, வழக்குகளில் இருந்து மீள நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். 15.4.2024 இரவு 8.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்களின் வேகம் அதிகரித்து உச்ச கட்ட கோபத்தை வெளிக்காட்டு வீர்கள் வேலைப்பளு கூடும். குல தெய்வத்தை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
8.4.2024 முதல் 14.4.2024 வரை
பணமழை பொழியும் வாரம். களத்திர ஸ்தான அதிபதி சுக்ரன் உச்சம் பெற்று பூர்வ புண்ணிய ஸ்தா னத்தில் ராகுவுடன் சேர்க்கை
பெறுவதால் பிறர் எளிதில் செய்யத் தயங்கும் காரியங்களை வெற்றி கரமாக செய்வீர்கள்.அன்றாட தேவைக்கு திணறியவர்களுக்கு சரளமான பணப்புழக்கம் உண்டாகும். முக்கிய பணிகளில் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். நிறை வேறாத அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கூடி வரும். சிலருக்கு பினாமிச் சொத்து கிடைக்கும். சிலருக்கு உழைப்பில்லாத வருமானம் அதிர்ஷ்ட பொருள் பணம் தேடி வரும். இது வரை கல்யாணம் நடக்குமா என்று ஏங்கியவர்களுக்கு நல்ல வரன் அமையும். அல்லது விருப்ப விவாகம் நடைபெறும். பூர்வீகம் சம்பந்தப்பட்ட விசயங்களில் சாதகமான மாற்றம் உண்டாகும்.
சிலர் காரிய வெற்றிக்காக கோவில் குளம் என்று செல்லலாம். சிலரின் தந்தை வெளிநாடு செல்லலாம். சில மாணவர்கள் பள்ளி மாற்றம் பற்றி சிந்திக்கலாம். சிலர் பிழைப்பிற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறலாம். 13.4.2024 மதியம் 12.44-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஞாபக சக்தி குறையும். வம்பு, வழக்கு களை ஒத்தி வைக்கவும். விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
1.4.2024 முதல் 7.4.2024 வரை
விடிவு காலம் பிறந்து விட்டது. அஷ்டமாதிபதி புதன் 6-ல் வக்ரம். கெட்டவன் புதன் 6-ல் மறைவது ராஜ யோகம். 7,12-ம் அதிபதி சுக்ரன் உச்சம் என கிரக நிலவரங்கள் விருச்சிக ராசிக்கு சாதகமாக உள்ளது. மேலும் குரு 7-ம்மிடம் சென்று ராசியை பார்க்கப் போகிறார். உடலில் புத்தொளியும், பொலிவும் உண்டாகும். மனதில் சந்தோஷமும் நிம்மதியும் கூடும். நினைப்பது எல்லாம் நடக்கும். கடுமையாக உழைத்து உழைப்பிற்கான ஊதியம் நற்பெயர், அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். கடன்கள் குறையும். சுய தொழில் புரிபவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் உண்டு.
அடமான நகைகள், சொத்துக்களை மீட்பீர்கள். உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பெண்களால் காதல் மற்றும் பொருள் பணம் சார்ந்த விசயத்தில் அவமானம் உண்டு. ஒரு சிலருக்கு முன்கோ பங்கள் அதிகரிக்கும். தேவையற்ற பிரச்சினைகள், மன வருத்தம் ஏற்படும். அதனால் பேச்சில், செயல்பாட்டில் கவனமாக இருக்கவும். திருமணத் தடை அகன்று நல்ல வரன்கள் தேடி வரும்.வழக்குகள் சாதகமாகும் அல்லது தள்ளுபடியாகும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆஞ்சநேயரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
25.3.2024 முதல் 31.3.2024 வரை
மனச்சுமை தீரும் வாரம். ராசிக்கு 5ல் 7ம் அதிபதி சுக்ரன் உச்சம். பூர்வீகம், குல தெய்வம், குழந்தைகள் தொடர்பான சில நல்ல சம்பவங்கள் நடக்கும். செயற்கை கருத்தரிப்பு வெற்றி தரும். அதிர்ஷ்ட பொருள், பணம், பங்குச் சந்தை ஆதாயம் போன்ற எதிர்பாராத பண வரவு உண்டு. கவுரவப் பதவி கிடைக்கும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் வாடிக்கையாளர்களால் அனுகூலமான பலன் உண்டு. நெருங்கிய நண்பரின் உதவியுடன், சிலர் நிறைய பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ளது. சிலர் புதிய தொழில் கிளைகள், கூட்டுத் தொழில் துவங்கலாம். தம்பதிக ளிடம் ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறு பாடு காரணமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் கூடி மகிழ்வார்கள்.
ஆரோக்கியம் சீராக இருக்கும். கடன் கட்டுக்குள் இருக்கும். 5ல் சுக்ரன் ராகு சேர்க்கை புதிய எதிர்பாலின நட்பை உருவாக்கும். சிலருக்கு வாழ்க்கையை வளமாக்கும் காதலாக அது அமையும். சிலருக்கு கிடைக்கும் நட்பு வாழ்க்கை சீரழிக்கும் விதமாக அமையும் என்பதால் காதல் விவ காரத்தில் கவனம் தேவை. மேலும் வளம் பெற காக்கைக்கு எள் கலந்த சாதம் மற்றும் தண்ணீர் வைக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
18.3.2024 முதல் 24.3.2024 வரை
கனவுகள் நினைவாகும் வாரம். அஷ்டமாதிபதி புதன் நீசம் பெற்று ராசி அதிபதி செவ்வாய் சுக்ரன் மற்றும் சனியுடன் சுக ஸ்தானத்தில் சேர்க்கை இருப்பதால் நல்ல வாய்ப்புகள் தேடி வரும். எதையும் சாதிக்கும் எண்ணம் உதயமாகும். அரசியல் வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.பணவரவு, பொருள் வரவு நன்றாக இருக்கும். கடன்கள் அடைபடும். உழைப்பிற்கு ஏற்ற பலன் உடனே கிடைக்கும். தொழில் மேன்மை, வியாபார விருத்தி, புதிய கிளை அமைத்தல், புதிய தொழில் துவங்குதல் போன்ற நன்மைகள் உண்டாகும்.
வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்து இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்கும். கணவன், மனைவி ஒற்றுமை மேம்படும். மாணவர்கள் படிப்பின் அவசியம் உணர்ந்து படிப்பார்கள்.கை மறதியாக வைத்த பொருட்கள் கிடைக்கும்.19.3.2024 அன்று மதியம் 1.37 மணி வரை சந்திராஷ்டமம் இருப்ப தால் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து வர நற்பலன்கள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
11.3.2024 முதல் 17.3.2024 வரை
காரியசித்தி கிட்டும் வாரம். 4-ம் இடத்திற்கு செவ்வாய், சுக்ரன். சனி சம்பந்தம் இருப்பதால் உடன் பிறந்தவர்கள் மற்றும் தாயின் ஆதரவு சிறக்கும்.ஏலத்திற்கு போக விருந்த பூர்வீகச் சொத்து சித்தப்பாவின் முயற்சியால் காப்பாற்றப்படும். கடன் தொல்லை குறையும். ஜாமீன் வழக்கில் இருந்து முழுவதுமாக விடுபடுவீர்கள். சிகிச்சை பலன் தந்து ஆரோக்கிய குறைபாடுகள் அகலும். சிறு தொழில் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு தொழிலில் முன்னேற்றமும் உண்டாகும். உங்களின் அனைத்து முயற்சிக்கும் குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக இருப்பார்கள்.
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் ராகு சம்பந்தம் பார்வை இருப்பதால் முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்வீர்கள். விருச்சிக ராசி திருமண வயதினரின் வீட்டில் கெட்டி மேளம் ஒலிக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும். 17.3.2024 காலை 4.21 மணிக்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை ஒத்திப் போடவும். தினமும் கந்த சஷ்டி கவசம் படித்து வர நற்பலன்கள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
4.3.2024 முதல் 10.3.2024 வரை
மாற்றங்களால் மனம் மகிழும் வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் சுக்ரனுடன் சகாய ஸ்தானத்தில் சேருவதால் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். தடை, தாமதங்கள் விலகும். உற்சாகமாக சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இல்லறம் நல்லறமாகும். வீடு மாற்றம், ஊர் மாற்றம் போன்ற நல்ல விரும்பிய மாற்றங்கள் வந்து சேரும்.சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராக இருந்தாலும் லாபம் குறையாது. வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு பாராட்டுதல்களைப் பெறுவீர்கள்.
சில மறைமுக எதிர்ப்புகள், போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் ராசிக்கு 6-ல் குரு சஞ்சரிப்பதால் வெற்றி உங்களுக்கே கல்விக்காக வெளியூர், வெளிநாடு மற்றும் விடுதியில் தங்கி யிருந்த பிள்ளைகள் இல்லம் திரும்பு வார்கள். ஆரோக்கியம் சார்ந்த பயம் விலகும். பெண்க ளுக்கு உற்றார், உறவினர் வரு கையால் வீட்டுப் பொறுப்பு கள் அதிக ரிக்கும். பெண்களுக்கு வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டு. சிவ னுக்கு பஞ்சாமிர்த அபிசேகம் செய்து வழிபட இறையருள் பரிபூரணமாக துணை நிற்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
26.2.2024 முதல் 3.3.2024 வரை
மகிழ்ச்சியான வாரம். உச்சம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் சுக்ரனுடன் முயற்சி ஸ்தானத்தில் சேருவதால் புதிய வாழ்க்கைப் பாதையை நோக்கி முன்னேறுவீர்கள். இதுவரை இருந்த சிரமங்கள், சங்கடங்கள், நெருக்கடிகள் அனைத்தும் விலகக் கூடிய காலமாக இருக்கும். புத்தி சாதுர்யத்தால் வருமானத்தை பெருக்கி குடும்பத்தில் அமைதி நிலவச் செய்வீர்கள். உபரி வருமானத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். வாழ்க்கைத் துணை அல்லது தாய் மூலம் அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வீடு, வாகனம், அலங்கார ஆடம்பர பொருட்கள், உயர் ரக ஆடைகள் நகைகள் என வாழ்க்கையை அனுபவிப்பீர்கள்.
உங்கள் சேமிப்புகள் சுப விரயங்களாக மாறும். அரசியலில் சிலருக்கு நல்ல பொறுப்புகள் தேடி வரும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். செயற்கை கருத்தரிப்பிற்கு ஏற்ற காலம். உடல் நிலை குறித்த பய உணர்வு, கவலைகள் விலகும். கைவிட்டுப் போன சொத்துக்கள் அதிர்ஷ்ட வசமாக கிடைக்கும். மகான்க ளின் தரிசனம், குலதெய்வம், முன்னோர்களின் ஆசியால் வாழ்க்கை வளமாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
விருச்சகம்
இந்தவார ராசிபலன்
19.2.2024 முதல் 25.2.2024 வரை
விருப்பங்கள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் உச்சம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். முக்கிய கிரகங்கள் சாதகமாக உள்ளதால் முயற்சிகளை நிறை வேற்றக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் கூடி வரும். வியாபாரத் துறையினருக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சியில் சாதகமான பலன் எதிர்பார்க்கலாம். ராசி அதிபதி செவ்வாய், சுக்ரனுடன் சேர்ந்ததால் உண்ண உறங்க நேரமின்றி உழைப்பீர்கள்.குடும்ப உறுப்பினர்களால் சகாயமான பலன்கள் உண்டாகும். பழகிய வட்டாரத்தில் மதிப்பும், அந்தஸ்தும் கூடும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வராக்கடன்கள் வசூலாகும். அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் புரிந்து படிப்பீர்கள். புதிய சொத்துக்கள், வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.
சிலருக்கு அரசின் இலவச வீட்டுமனை கிடைக்கும். விவசாயிகள் வங்கி கடனை திரும்பச் செலுத்த கால அவகாசம் கிடைக்கும். தேக நலனில் நிலவிய குறைபாடுகள் அகலும். 21.2.2024 அன்று காலை 7.44 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பணிகள் கால தாமதமாகும். மன சஞ்சலம் அதி கரிக்கும். மாசி மகத்தன்று சிவனுக்கு நெய் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406