search icon
என் மலர்tooltip icon

    விருச்சகம் - வார பலன்கள்

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    20.11.2023 முதல் 26.11.2023 வரை

    சோதனைகள் சாதனைகளாகும் வாரம். ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி செவ்வாய் 3, 4-ம் அதிபதி சனியும் ஒன்றையொன்று பார்ப்பதால் உங்களின் முயற்சிகள் நிறைவேறும். தைரியம், தெம்பு உருவாகும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். மூளை பலம் தான் மூலதனம் என புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். ஆயுள் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். கோட்சார ராகு, கேதுக்களால் திருமணம் தடைபடாது.

    பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சினைகள் சீராகும். எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிரும். தனவரவு இரட்டிப்பாகும். பார்த்துச் சென்ற வரனிடம் நல்ல பதில் வரும்.விரும்பிய வரன் கிட்டும். சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும். அசையும், அசையாச் சொத்து வாங்கி மகிழ்வீர்கள். வெளிநாட்டு வேலை அரசு உத்தியோக முயற்சி சித்திக்கும். திருக்கார்த்தி கையன்று முருகப் பெருமானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    13.11.2023 முதல் 19.11.2023 வரை

    சோதனைகள் சாதனையாகும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெற்று 3, 4ம் அதிபதி சனியை பார்ப்பதால் ஆயுள் ஆரோக்கியம் சீராகும். உங்களின் முயற்சிகள் பலிதமாகும்.தைரியம் ,தெம்பு உருவாகும். உடலிலும் மனதிலும் தெம்பு பிறக்கும். குடும்பத்தினரின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சுற்றமும் நட்பும் உங்களின் முயற்சிக்கு பக்க பலமாக இருப்பார்கள். கோட்சார ராகு/கேதுக்களால் திருமணம் தடைபடாது. பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகள் சீராகும்.எழுத்து துறையில் இருப்பவர்களின் தனித்தன்மை மிளிறும். இது வரை தடைபட்ட விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து உங்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தும். தன வரவு இரட்டிப்பாகும். திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கிட்டும்.சிலருக்கு வீடு மாற்றம் செய்ய நேரும்.

    அசையும், அசையாச் சொத்து வாங்கி மகிழ்வீர்கள்.வெளிநாட்டு வேலை வாய்ப்பு, அரசு உத்தியோக முயற்சி சித்திக்கும்.உடன் பிறந்தவர்களுடன் தாயை யார் பராமரிப்பது என்ற கருத்து வேறுபாடு அதிகரிக்கும். சஷ்டி திதியில் வள்ளி தெய்வானை சமேத முருகனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    6.11.2023 முதல் 12.11.2023 வரை

    அறிவாற்றலும், திறமையும் கூடும் வாரம். 5-ம்மிடத்திற்குள் ராகு நுழைவதால் வெளிநாட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமாகும். காதல் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டாகும். இடப் பெயர்ச்சி செய்ய நேரும்.அனைத்து விதமான பாக்கிய பலன்களும் உங்களை தேடி வர உள்ளது. நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், நோய் நொடியில்லாத வாழ்க்கையும் அமையப்போகின்றது. உங்களின் செயல் வேகம் அதிகரிப்பதுடன் மனதில் புத்துணர்ச்சியும் தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் சக்தியும் உண்டாகும். தீபாவளி கொண்டாட்டத்தால் உற்றார் உறவினர்களுடன் சுமூகமான உறவு உண்டாகும். இதுவரை நிலவிய மந்த நிலை மாறும்.

    எங்கு சென்றாலும் உங்களுக்கு முதலிடம் கிடைக்கும். நீண்ட நாள் கனவுகளை நிறைவு செய்து மகிழ்வீர்கள்.பூர்வீக நிலம், வீடு போன்றவற்றை விற்பதை ஒத்திவைத்தால் வீண் விரயம் தடுக்கப்படும். பங்குச் சந்தையில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம். உஷ்ணநோய்க்கு மருத்துவ சிகிச்சை செய்யநேரும். சிலருக்கு மறுவிவாகம் நடைபெறும். சகோதரர்களால் பயனடைவீர்கள். கணவன், மனைவி உறவு மகிழ்வைத் தரும். வீர லட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    30.10.2023 முதல் 5.11.2023 வரை

    சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 12-ல் தொழில் ஸ்தான அதிபதி சூரியன் மற்றும் லாபஅதிபதி புதனுடன் மறைவு பெறுகிறார். எனினும் தன ஸ்தானத்திற்கு குரு பார்வை இருப்பதால் தொழில் முன்னேற்றம் மற்றும் உத்தியோக உயர்வில் சாதகமான பலன் உண்டு. சிலர் புதிய வேலைக்கு மாறலாம். தொழில் சார்ந்த விசயங்களில் அரசின் சட்ட திட்டங்களை கடைபிடிப்பது நல்லது. ராசிக்கு 5-ல் ராகு 11-ல் கேது நுழைவதால் அதிர்ஷ்டத்தின் மேல் ஆர்வம் கூடும். பூர்வீகத்தை விட்டு வெளியூர், வெளிநாட்டு வேலைக்குச் செல்ல நேரும். அரசு ஊழியர்கள் நினைக்காத இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். வயது முதிர்ந்தவர்களுக்கு அரசின் சலுகைகள் உதவிகள் கிடைக்கும்.

    திருமணத் தடை அகலும். காதல் திருமணத்திற்கு வாய்ப்பு அதிகம். உள்ளது. கடன்பட்டு புதிய வீடு கட்டும் பாக்கியம் உள்ளது.1.11.2023 மாலை 4.10 முதல் 4.11.2023 அன்று காலை 1.23 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் தீபாவளி ஷாப்பிங் செல்லும் போதும் வேலை விசயமாக வெளியே சென்று வரும் போதும் கவனம் தேவை. இரவு நேரப் பயணங்களை தவிர்க்கவும். முருகனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    23.10.2023 முதல் 29.10.2023 வரை

    விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் 10-ம் அதிபதி சூரியன் மற்றும் லாப அதிபதி புதனுடன் ராசிக்கு 12ல் இணைந்திருப்பதால் தொழில் வியாபார ரகசியங்கள் கசியும். தொழில் போட்டிகள் உருவாகும். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான சகாயங்கள் கிடைக்கும். சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். மன வேதனையைத் தந்த பிள்ளைகள் உங்களைப் புரிந்து கொள்வர்.எனினும் 5-ல் ராகு நுழைவதால் பிள்ளை களை கண்ணும் கருத்துமாக பாதுகாக்க வேண்டும்.

    அசையும், அசையாச் சொத்து வாங்கத் தேவையான கடன் தொகை கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான முயற்சியில் சகோதரரின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.மன அமைதிக்கு தீபாவளி விடுமுறைக்கு பூர்வீகம் சென்று வர திட்டமிடுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவான சூழல் உண்டாகும். கணவன், மனைவி உறவு மேம்படும்.கிரகணம் முடிந்த பிறகு கற்பக விநாயகரை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    16.10.2023 முதல் 22.10.2023 வரை

    சாதகமும் பாதகமும் நிறைந்த வாரம் . ராசிக்கு சனி பார்வை இருப்பதுடன் 6,12-ம்மிடமான மறைவு ஸ்தானங்களில் அதிக கிரகங்களின் சஞ்சாரம் இருப்பது திருப்தியற்ற நிலையை ஏற்படுத்தும்.தன ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் குடும்ப உறுப்பினர்களிடையே அனுகூலமான சூழல் உரு வாகும். பேச்சை மூலதனமாகக் கொண்டவர்களுக்கு அபாரமான வளர்ச்சி உண்டு.தொழிலில் மறைமுக லாபம், எதிர்பாராத தனவரவு உண்டு.மார்க்கெட்டிங் துறை, வட்டித்தொழில், சீட்டுக்கம்பெனி, நகை அடகு, வக்கீல், நீதிபதிகள் ஏற்றம் பெறுவார்கள்.

    ஐந்தாமிடத்தை ராகு நெருங்குவதால் பங்குச்சந்தை ஆர்வம் மிகுதியாகும். மாணவர்களுக்கு மனக் கட்டுப்பாடு அவசியம். புதிய சொத்துக்கள் வாங்கவும் பழைய சொத்துக்களை விற்கவும் ஏற்ற நேரம். பெண்கள் மகிழ்ச்சியாக இல்லறம் நடத்து வார்கள். கருத்து வேறு பாட்டால் பிரிந்த தாய், தந்தை மீண்டும் இணைவார்கள். திருமணத் தடை அகலும். சிறு சிறு உடல் உபாதைகள் உண்டாகும். அனுபவமிக்கவர்க ளின் ஆலோ சனையும் ஆன்மீகப் பெரி யோர்களின் அறிவுரையும், தக்க சமயத்தில் கைகொடுக்கும். முருகப்பெருமானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்த வார ராசிபலன்

    9.10.2023 முதல் 15.10.2023 வரை

    எண்ணங்களும் லட்சியங்களும் ஈடேறும் வாரம். கோட்சார ராகு பூர்வ புண்ணிய ஸ்தானத்தை நெருங்குகிறார். கேது லாப ஸ்தானத்தில் நுழையப்போகிறார். இது விருச்சகத்திற்கு அதிர்ஷ்டமான காலம். புதிய முயற்சியில் வெற்றியும், லாபமும் உறுதி.அரசு வகை ஆதாயம் உண்டு. பயணங்களால் பயன் கிடைக்கும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். படித்து முடித்த மகனுக்கு வேலை கிடைத்து விடும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்லும் வாய்ப்பு உருவாகும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். கடன் தொகை வெகுவாக குறையும்.

    கண்கள் தொடர்பான பிரச்சினைகளில் கவனம் தேவை. சுப விரயங்கள், சுப நிகழ்வுகள் மிகுதியாகும்.வழக்கு விவகாரங்களில் வெற்றிகள் உண்டாகும். ராகு கேதுக்கள் தங்கம், வெள்ளி, வைரம் போன்ற விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கையையும் மகிழ்ச்சியை அதிகரிப்பார்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் சீராகும். தியானம் மற்றும் மூச்சுப் பயிற்சியில் ஆர்வம் பிறக்கும். மகாளய அமாவாசையன்று பட்சிகளுக்கு உணவிடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    2.10.2023 முதல் 8.10.2023 வரை

    குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் 12-ம் இடமான மறைவு ஸ்தானம் சென்றாலும் 2,5-ம் அதிபதி குருவின் நேரடிப் பார்வையில் இருப்பதால் குருமங்கள யோகம் வரமாக செயல்படும். லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்ற புதனுடன் தொழில் ஸ்தான அதிபதி சூரியன் என முக்கிய கிரக இணைவுகள் உங்களுக்கு மிகமிக சாதகமாக உள்ளது.மகன், மகளின் திருமண முயற்சி கைகூடும்.சில கெட்டவைகள் கூட நல்லதாக அமையும். கை, கால், மூட்டு வலி குறையும்.ஆரோக்கியம் முன்னேற்றமடையும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். லவுகீக வாழ்வில் உள்ள அனைத்து இன்பங்களையும் நுகரும் ஆர்வம் அதிகரிக்கும். பெண்களுக்கு ஆடம்பர பொருட்களில் ஆர்வம் மற்றும் சேர்க்கை கூடும். குழந்தை பேறு முயற்சி பலன் தரும்.பிள்ளைகளின் எதிர்காலத் தேவைக்காக திட்டமிட்டு செயல்படுவீர்கள். 5.10.2023 அன்று காலை 6.58 முதல் 7.10.2023 மாலை 5.18 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் தோன்றலாம். தொழிலில் நிலையற்ற தன்மை, நெருக்கடிகள் ஏற்படலாம்.மகாளய பட்ச காலத்தில் பட்சிகள், கால்நடைகளுக்கு உணவிடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    வார ராசிபலன்

    25.9.2023 முதல் 1.10.2023 வரை

    லாபகரமான வாரம். ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில், தொழில் ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தான அதிபதி புதனுடன் பரிவர்த்தனை என லாப ஸ்தானம் பலம் பெறுவதால் எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படாத நோயிலிருந்து விடுபடுவீர்கள். பகையை, பகைவர்களை வெல்லக் கூடிய ஆற்றல் உருவாகும். எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள். இதுவரை நீங்கள் பெற்ற கடனை அடைக்க முடியாமல் திணறி கடன்காரர்களுக்கு பயந்து ஒளிந்து வாழ்ந்த நிலைமாறும். கடன் பெறுவதற்காக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை அணுகி அலுத்துப் போன உங்களுக்கு கடன் தர நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் வீடு தேடி வரும். வீட்டின் சுப நிகழ்வுகளை நடத்த, தொழில் விரிவாக்க கடன், ஹவுசிங் லோன், பெர்சனல் லோன் என விரும்பிய கடன் தொகை கிடைக்கும். புதிதாக வேலைக்கு முயற்சிப்பவர்க ளுக்கு திறமைக்கும், தகுதிக்கும் பொருத்தமான வேலை கிடைக்கும் 40 வயதைக் கடந்தும் திருமண மாகாத பல ஆண்கள், பெண்களுக்கும் திருமணம் நடக்கும்.புத்திரப்பேறு உண்டாகும். மகாளய பட்ச காலத்தில் ஊன முற்றவர்களின் தேவையறிந்து உதவவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    18.9.2023 முதல் 24.9.2023 வரை

    நிறைவான வாரம். ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம். தொழில் ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தான அதிபதி புதனுடன் பரி வர்த்தனை என கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக உள்ளது. நிறைந்த அறிவு, திறமை இருந்தும் பயன்படுத்தவோ சாதிக்கவோ முடியவில்லையே என்ற மனக்குறை தீரும். உண்மையான உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் வாரம். கடல் தாண்டிச் செல்லும் யோகம் உள்ளது.எதிரிகளையும், நம்பிக்கை துரோகி களையும் அடையாளம் காண்பீர்கள். சொந்த ங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். தடைப்பட்ட திருமணம் கைகூடும். காதலர்க ளுக்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். பழைய வாகனத்தை எக்ஸ்சேஞ் ஆபரில் மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள். வளர்ப்பு பிராணிகளிடம் கவனத்துடன் செயல்படவும். ஆதார் கார்டு, ஏ.டி.எம். கார்டு, பாஸ் புக், ஆர்.சி. புக் போன்ற ஆவணங்களையும் பணத்தையும் கவனமாக கையாள வேண்டும். மாற்றுமுறை வைத்தியத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும். எந்த செயலிலும் வெற்றி பெற பிரத்தியங்கரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வணங்குதல் மிக நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    11.9.2023 முதல் 17.9.2023 வரை

    புதிய தொழில் வாய்ப்புகள், தொழில் முயற்சிகள் மன நிறைவு தரும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் டிராவல்ஸ், குளிர்பான விற்பனை, உணவுத் தொழில் மிகுந்த லாபம் பெற்றுத் தரும். தொழில் போட்டிகள் குறையும். புதிய தொழில் முதலீட்டிற்கு ஏற்ற நேரம். ராஜயோகம் ஏற்படும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டு. காணாமல் போன உயில் பத்திரம் கிடைக்கும். வார இறுதியில் பிள்ளைகளின் நலனுக்காக அதிக செலவு செய்ய நேரும். காதல் விவகாரத்தில் முடியும். விற்கப்பட வேண்டிய சொத்துக்கள் இருந்தால் விற்றுத் தீரும். உயில் எழுதுவதற்கு உகந்த காலம். இதுவரை ஒத்திவைத்த அறுவை சிகிச்சைக்காக மருத்து வமனை செல்ல நேரும். மகன், மகளுக்கு எதிர்பார்த்திருந்த வேலை கிடைக்கும். பிள்ளைகளின் சுப நிகழ்விற்கான பேச்சு வார்த்தை நடக்கும். மனதிற்கு பிடித்ததை பிடித்தபடி செய்வீர்கள். அதனால் சில செலவுகளும் வரும். திருமண முயற்சி சாதகமாகும். பிரதோஷத்தன்று மஞ்சள் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    விருச்சகம்

    இந்தவார ராசிபலன்

    4.9.2023 முதல் 10.9.2023 வரை

    பல்வேறு புதிய அனுபவங்களை சந்திக்கும் வாரம்.ராசி அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மகிழ்ச்சியில் உற்சாகம் பொங்கும். தொழிலில் இருந்த பிரச்சினைகள் குறையும். தொழிலுக்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும்.உத்தியோகத்தில் நினைத்த இடமாற்றம் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினையை பொறுமையாக கையாளவும்.

    6-ல் நிற்கும் குரு வக்ரமடைவதால் பிள்ளைகளால் மேன்மை உண்டாகும். மனநிறைவு, நிம்மதி ஏற்படும்.இளைஞர்களுக்கு இப்போது காதல் வரும். காதலுக்குப் பின்னாடியே பிரச்சினைகளும் வரும். விரும்பிய உயர் கல்வி வாய்ப்பு தடைக்குப் பிறகு சாதகமாகும். சொத்துக்களை விற்று கடன் அடைக்க ஏற்ற நேரம். மாற்று முறை வைத்தியம் நல்ல பலன் தரும். 7.9.2023 இரவு 11.13 மணி முதல் 10.9.2023 அன்று காலை 10.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பெண்களுக்கு இது வேலைச்சுமையைத் தரும் காலமாகும். எங்கும், எதிலும் நீங்கள்தான் அனைத்தையும் செய்ய வேண்டியது இருக்கும். முக்கிய பணிகளை ஆரம்பிக்கும் முன்பு விநாயகருக்கு சிதறு தேங்காய் உடைக்கவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×