என் மலர்
ரிஷபம் - வார பலன்கள்
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
12.12.2022 முதல் 18.12.2022 வரை
விபரீத ராஜ யோகமான வாரம். ராசி அதிபதி சுக்ரனும் 2,5-ம் அதிபதி புதனும் சேர்ந்து அஷ்டம ஸ்தானத்தில் சேர்வதால் லாட்டரி, பங்குச் சந்தை லாபம், அதிர்ஷ்ட பணம், சொத்துக்கள் என எதிர்பாராத ராஜ யோகங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரைப் பற்றியும் யாரிடமும் குறை கூறாமல், தர்க்கம் செய்யாமல் அமைதி காப்பது நல்லது. அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் நன்மை ஏற்படலாம்.
அஷ்டமாதிபதி குருவை பாக்கியஅதிபதி சனி பார்ப்பதால் விசுவாசமாக உழைப்பவர்களுக்கு மலைபோல் வந்த பிரச்சினைகள் பனி போல் விலகும். பெண்களுக்கு கணவராலும், ஆண்களுக்கு மனைவியாலும் அதிர்ஷ்டமும், யோகமும் உண்டாகும். உடன் பிறப்புகள், பங்காளிகள், சித்தப்பாவிடம் நிலவிய மனக்கசப்புகள் மறைந்து பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகும்.
திருமண வயதில் இருப்பவர்களுக்கு கெட்டி மேளம் கொட்டப்படும். வீடு கட்ட வாகனம் வாங்க உகந்த நேரம். அலுவலகத்தில் மகிழ்ச்சியான போக்கு நீடிக்கும். வேலை மாற்ற சிந்தனையை ஒத்தி வைக்கவும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபட அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
5.12.2022 முதல் 11.12.2022 வரை
கசந்த காலங்கள் இனி வசந்த காலமாக மாறப்போகிறது. ராசி அதிபதி சுக்ரனும் 2,5-ம் அதிபதி புதனும் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அதிர்ஷ்டம் உங்களை அரவணைக்கும். எந்த நெருக்கடிகளையும் எளிதில் சமாளிப்பீர்கள்.
தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். விபரீத ராஜ யோகம் கை கூடி வரப்போகிறது. அதிர்ஷ்ட பணம், பொருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கையில் பணம் தாராளமாக நடமாடும். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் இருந்த சிரமங்கள் குறையும். பிள்ளைகளால் பெற்றோருக்குப் பெருமை உண்டாகும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள்.
புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள் வேலை தொழிலில் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். திருமணம், சுபகாரியம் தொடர்பாக இந்த வாரம் பேசி முடிக்கலாம். வயோதிகர்களுக்கு உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பவுர்ணமியன்று மகாலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
28.11.2022 முதல் 4.12.2022 வரை
தடைகள் விலகி மாற்றம் உண்டாகும். ராசி அதிபதி சுக்ரன் தன் வீட்டைத் தானே பார்ப்பதால் கடின உழைப்பு, விடா முயற்சி ,வைராக்கியத்தால் தடைகளை கடந்து வெற்றி வாகை சூடுவீர்கள். காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமை அதிகரிக்கும். கண்டும் காணாமல் இருந்த உறவுகள் வலிய வந்து பேசுவார்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள். வீண் செலவு குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்.
நிதானமாக செயல்பட்டால் அரசு வகையில் யாவும் அனுகூலமாகும். தொழில் ரீதியான பாராட்டும், பணமும் உங்கள் உள்ளத்தை உற்சாகப்படுத்தும். லக்னத்தில் உள்ள ராகுவால் சிலருக்கு குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் அதிகரிக்கும். வீடு, வாகனம், திருமணம் போன்ற சுப செலவிற்காக கடன் வாங்கலாம்.
அரசுப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும். பெண்களுக்கு மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுக்கும் மனப் பான்மை அதிகரிக்கும். ரோஜா மாலை சாற்றி சிவ பெருமானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
21.11.2022 முதல் 27.11.2022 வரை
கவலைகள் அகலும் வாரம். ராசி அதிபதி சுக்ரனை குரு பார்ப்பதால் உற்சாகமாக, ஆரோக்கியமாக இருப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம் அல்லது பழைய தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியில் எதிர்பார்க்கும் உயர்வுகள், இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கும். கருத்து வேறுபாடுடன் வாழ்ந்த தம்பதிகளுக்குள் நல்ல புரிதல் உண்டாகும். திருமணம், குழந்தை பேறு, வேலை வாய்ப்பு சொத்துச் சேர்க்கை போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். தேவைக்கேற்ற தன வரவால் குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். அழகு, ஆடம்பர நவீன பொருட்கள், தங்க, வெள்ளி நகை சேர்க்கை அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு மிக சாதகமான நேரம்.
25.11.2022 மாலை 5.20 மணி முதல் 27.11.2022 மாலை 6.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உற்றார், உறவினர்களிடம் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்லும் போது வீண் மனஸ்தாபங்களைத் தவிர்க்கலாம். சரபேஸ்வரரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
14.11.2022 முதல் 20.11.2022 வரை
விரயத்தை கட்டுப்படுத்த வேண்டிய வாரம். பதவி ஸ்தான அதிபதி புதன் ராசி அதிபதி சுக்ரன், சுகாதிபதி சூரியனுடன் இணைந்து ராசியைப் பார்ப்பதால் பொது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு சமூக அந்தஸ்த்தை நிலைப்படுத்தும் கவுரவப் பதவிகள் கிடைக்கும். தியாக மனப்பான்மை மிகுதியாகும். 7, 12-ம் அதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், நண்பர்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம்.
வியாபாரத்தில் பெரிய அளவில் பண முதலீடு செய்ய வேண்டாம். யாருக்கும் பெரிய பணம் கடனாக கொடுக்க வேண்டாம். பணம் சம்பாதிக்க கடுமையாக உழைக்க நேரும். புதிய தொழில் முயற்சிகளைத் தவிர்க்கவும். கோபத்தை கட்டுப்படுத்தவும். பூமி வாங்கும் விசயத்தில் சிந்தித்து நிதானமாக செயல்படுவது சிறப்பு. சிலருக்கு கண் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகும்.
தொழில், பணி அல்லது குடும்ப சூழல் காரணமாக தம்பதிகள் சிறிது காலம் பிரிந்து வாழலாம். திருமணம் நிச்சயமாகும். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்களை கவனமாக கையாள வேண்டும்.பிரிந்த தாய், தந்தை மீண்டும் இணைவார்கள். மகாலட்சுமி அஷ்டகம் படிப்பது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிப்பலன்
7.11.2022 முதல் 13.11.2022 வரை
மாற்றமும் ஏற்றமும் தேடி வரும் வாரம். ராசி மற்றும் ஆறாம் அதிபதி சுக்ரன் ஆறில் பலம் பெறுவதால் உங்கள் மீது வெறுப்பை உமிழ்ந்த உயரதிகாரியின் மனநிலை மாறி ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொல்லை கொடுத்த வாடகைதாரர் விலகுவார். புதிய வாடகைதாரர் கிடைப்பார்கள். வீடு, மனை வாங்குவீர்கள். பங்குதாரர், வாழ்க்கைத் துணையால் ஆதாயம் கிடைக்கும்.
பெண்கள் கணவரின் தொழில், உத்தியோக உயர்வால் நிம்மதி அடைவார்கள். ராசிக்கும் 9ம் இடத்திற்கும் சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் மெக்கானிக் மற்றும் இயந்திரப் பணியாளர்களுக்கு அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ராசிக்கு 12ம் இடமான விரய ஸ்தானத்தில் சந்திர கிரகணம் நிகழ உள்ளதால் அன்று வைத்தியம் செய்வதை தவிர்க்கவும். குறிப்பாக கண் சிகிச்சையை தவிர்த்தல் நலம். சிலருக்கு தேவையற்ற விரையச் செலவுகள் வரலாம். பெரிய தொழில் முதலீடுகள், பங்குச் சந்தை முதலீடுகளைத் தவிர்த்தல் நலம். வயது முதிர்ந்த சுமங்கலிப் பெண்களிடம் நல்லாசி பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிப்பலன்
31.10.2022 முதல் 06.11.2022 வரை
புத்தியை தீட்ட வேண்டிய வாரம். ராசி மற்றும் 6-ம் அதிபதி சுக்ரன் 6-ல் ஆட்சி பலத்துடன் இருப்பதால் பணவரவு நன்றாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். ஒரு சிலர் தங்கம் மற்றும் வெள்ளியில் அதிக முதலீடு செய்து சம்பாதிப்பார்கள். போட்டி பந்தயங்களில் அமோகமாக வெற்றி பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் ஏற்றமும், முன்னேற்றமும் இருக்கும்.
அலுவலக சுமையும் அலைச்சலும் உங்களுக்கு சிரமம் தரும். எனினும் உத்தியோகத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். பூர்வீகச் சொத்துக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். குடும்ப நலனுக்காக இரவு பகல் பாராது உழைப்பீர்கள். சிலர் கடன் பெற்று புதிய வாகனம், சொத்துக்கள், வாங்குவார்கள். சிலர் செல்வாக்கை காட்ட கடன் வாங்கி செலவு செய்வார்கள்.
உடல் ஆரோக்கியத்தில் சிறிய பாதிப்பு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். ஆன்லைன் வர்த்தகர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். திருமணத் தடை அகலும். தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். வரவு, செலவு சீராக இருக்கும். சிவ வழிபாடு நன்மை தரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய வாரம். 4-ம் அதிபதி சூரியன் 6-ல் ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி சுக்ரனுடன் இணைந்து நீச்சபங்க ராஜயோகம் பெறுவதால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பல வருடங்களாக முறைப்படுத்த முடியாமல் கிடந்த தாய் வழிச் சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும்.
தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரமாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும். உறவுகளிடம் நிலவிய பகை மறையும். ஆரோக்கியத்தில் சிறிய முன்னேற்றம் உண்டாகும். 7, 12-ம் அதிபதி செவ்வாய் வக்ரம் பெறுவதால் சில தம்பதிகள் தொழில், வேலை நிமித்தமாக அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழலாம்.
29.10.2022 காலை 9.05 மணிக்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்ப தால் சொந்தங்களையும் சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கிரகணத்தன்று வெள்ளை மொச்சை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
24.10.2022 முதல் 30.10.2022 வரை
தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டிய வாரம். 4-ம் அதிபதி சூரியன் 6-ல் ஆட்சி பலம் பெற்ற ராசி அதிபதி சுக்ரனுடன் இணைந்து நீச்சபங்க ராஜயோகம் பெறுவதால் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். பல வருடங்களாக முறைப்படுத்த முடியாமல் கிடந்த தாய்வழிச் சொத்துப் பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். தற்காலிக பணியில் இருப்பவர்களுக்கு பணி நிரந்தரமாகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல உத்தியோகம் கிடைக்கும்.
உறவுகளிடம் நிலவிய பகை மறையும். ஆரோக்கியத்தில் சிறிய முன்னேற்றம் உண்டாகும். 7, 12-ம் அதிபதி செவ்வாய் வக்ரம் பெறுவதால் சில தம்பதிகள் தொழில், வேலை நிமித்தமாக அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழலாம். 29.10.2022 காலை 9.05 மணிக்கு சந்தி ராஷ்டமம் ஆரம்பிப்பதால் சொந்தங்களையும் சுற்றி இருப்பவர்களையும் பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கிரகணத்தன்று வெள்ளை மொச்சை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிபலன்
17.10.2022 முதல் 23.10.2022 வரை
சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். ராசி அதிபதி சுக்ரன் 6-ல் ஆட்சி பலம் பெறுவதால் விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன் இந்த வாரம் கிடைக்கும். சிலருக்கு சிறு சிறு ஆரோக்கிய தொல்லை ஏற்படும். ஓய்வின்றி உழைக்க நேரும். எந்த காரியமும் அதிக முயற்சிக்குப் பிறகே பலன் தரும்.
7,12-ம் அதிபதி செவ்வாய் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நின்று 9-ம் அதிபதி சனியை பார்ப்பதால் வாக்கு வாதத்தால் குடும்பத்தில் பிரச்சினைகள் எழலாம். எனவே, அனைவரையும் அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் லாபகரமாக இருந்தாலும் விரயங்கள் அதிகரிக்கும். குடும்பச் சுமை கூடும். வரவை விட செலவு அதிகரிக்கும்.
ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீளலாம். சமையல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி வேலை வாய்ப்பு அதிகரிக்கும். சிலருக்கு அன்பளிப்புகொடுத்து அரசு வேலைக்கு முயற்சி செய்யும் எண்ணம் உண்டாகும். சிலரது வாரிசுகளுக்கு திருமண யோகம் உண்டாகும். பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சையில் மூத்த சகோதரத்தின் ஆதரவு மகிழ்சியைத் தரும். நவக்கிரகங்களில் சுக்ர பகவானை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
10.10.2022 முதல் 16.10.2022 வரை
லட்சியமும், எண்ணங்களும் நிறைவேறும் வாரம். ராசியில் செவ்வாய் நிற்பதால் மந்த தன்மை குறைந்து விரைந்து செயல்படும் தன்மை அதிகரிக்கும். தைரியத்துடன் மனம் விரும்பும் அனைத்தையும் சாதித்து காட்டுவீர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம், பொன், பொருள், செல்வம், செல்வாக்கு என எல்லாவிதமான பாக்கிய பலன்களையும் சனி பகவான் பெற்றுத் தருவார்.
சிலருக்கு ஆன்மீக நாட்டம் குறையும் உத்தியோகஸ்தர்கள் ஒப்படைக்கப்பட்ட பணிகள் அனைத்தையும் எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள்.வெளியூர், வெளிநாட்டு வேலை வாய்ப்பை விரும்பியவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் ஆரம்பமாகிவிட்டது. புதிய தொழில் முயற்சிகள் கைகூடும். தொழிலில் பிரமாண்ட வளர்ச்சி உண்டாகும். நம்பிக்கையான, விசுவாசமான வேலை ஆட்கள் கிடைப்பார்கள். தீபாவளி போனஸ் உற்சாகப்படுத்தும்.
விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள், நண்பர்களின் உதவி பக்க பலமாக இருக்கும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும். ராசி அதிபதி சுக்ரன் பலவீனமாக இருப்பதால் பெண்களால் ஆண்களுக்கு மன சங்கடம் ஏற்படும். விநாயகரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
3.10.2022 முதல் 9.10.2022 வரை
பொருளாதார முன்னேற்றம் உண்டாகும் வாரம்.2,5ம் அதிபதி புதன் உச்சம் பெறுவதால் உபரி வருமானம் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தாராள வரவு செலவு இருக்கும். பங்குச் சந்தை ஆதாயம் மற்றும் அதிர்ஷ்ட பணம், பூர்வீகச் சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது. உயர் கல்வியில் இருந்த தடை தாமதம் விலகும். தாய்,தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும். விருந்தினர் வருகை வீட்டை கலகலப்பாக்கும்.
சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். பிறர் புகழ வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் சற்று விட்டுக் கொடுத்து செல்லவும். இதுவரை எந்த வேலையும், தொழிலும் செய்யாதவர்களுக்கு கூட வருமானம் ஈட்டும் எண்ணம் உதயமாகும். குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா சென்று வரும் வாய்ப்பு உருவாகும்.
ஒரு சிலர் மனைவி பெயரில் வீடு, நிலம் வாங்கலாம். உணவால் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம்.
4.10.2022 காலை 6.01 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையைச் சோதிக்கும் பல்வேறு அனுபவங்களை சந்திக்க நேரும். எனவே பிறரிடம் பேசும் போது பொறுமை, நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. காளியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406