என் மலர்
ரிஷபம் - வார பலன்கள்
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
26.9.2022 முதல் 2.10.2022 வரை
அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும் யோகமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் நீசம் பெற்றாலும் 4-ம் அதிபதி சூரியன் மற்றும் 2,5-ம் அதிபதி புதனுடன் குருப் பார்வையில் இருப்பதால் முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். பண வரவு அமோகமாக இருக்கும். அடிப்படைத் தேவைகளுக்கு திணறியவர்களுக்கு கூட சரளமான பண புழக்கம் உண்டாகும்.
பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல வாபத்தை பெற்றுத்தரும். பத்திரிக்கை நிறுவ னங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். வீடு கட்டப் போட்ட பட்ஜெட் திட்டமிடுதலை விட எகிறும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். இழந்த பதவி தேடி வரும்.
உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும் 2.10.2022 அதிகாலை 3.10 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதது போன்ற மன வருத்தம், சங்கடங்கள் நீடிக்கும். வேலையில் மந்தத்தன்மை நிலவும். விநாயகர் கவசம் பாராயணம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
19.9.2022 முதல் 25.9.2022 வரை
அதிகமாக உழைக்க வேண்டிய வாரம். விரய அதிபதி செவ்வாய் ராசியில் நிற்பதால் பொருளாதாரதத்தில் ஏற்றத் தாழ்வு மற்றும் காரியத் தாமதம் இருக்கலாம். புதிய தொழில் முயற்சிகள் தேடி வந்தாலும் தொழில் தொடர்பான புதிய முடிவுகளை சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். பங்குச் சந்தை ஆதாயம் குறையும். பருவ வயதி னருக்கு நல்ல வரன்கள் அமையும். குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள்.
பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் திருமணத்திற்குத் தேவையான கடன், பொருள் உதவி கிடைக்கும். பழைய சொத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். விற்க முடியாமல் கிடந்த காலி மனைகள் விற்றுத் தீரும். வீடு வாங்குவது, வீடு கட்டுவது சம்மந்தமான முயற்சிகளை சிலர் எடுப்பீர்கள். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் அன்பு மன சஞ்சலத்தைக் குறைக்கும்.
வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்சிகள் பலன்தரும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். அடகு நகைகள் மீண்டு வரும். ஒன்பதில் உள்ள சனி பகவான் சித்தப்பாவின் ஆதரவை பெற்றுத் தருவார். அமாவாசையன்று மொச்சை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
12.9.2022 முதல் 18.9.2022 வரை
மகிழ்ச்சியான வாரம். 2,5-ம் அதிபதி புதன் வக்ரம் பெற்றாலும் குருப் பார்வையில் இருப்பதால் வருமானம் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வந்து குவியும்.ராசி அதிபதி சுக்ரனும் நான்காம் அதிபதி சூரியனும் சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெற்று இருப்பதால் வீடு, மனை பற்றிய நீண்ட நாள் கனவுகளும் முயற்சிகளும் நிறைவேறும்.
இதுவரை தடைபட்ட திருமணம், குழந்தை பாக்கியம் கைகூடும். கணவர்-மனைவி உறவு சுமூகமாக இருக்கும். தாய் வழி உறவினர்களால் ஆதாயங்கள் இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்து சென்ற உண்மையானஉறவுகளின் வருகை ஆனந்த கண்ணீரை வரவழைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.
அலங்காரப் பொருட்கள் வீட்டை அலங்கரிக்கும்.பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். விவாகரத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேலை பார்க்கும் இடத்தில் சாதகமான சூழல் உண்டாகும். பங்கு வர்த்தகர்கள் நிதானித்து செயல்படவும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். வாங்கிய கடனை அடைப்பீர்கள். கண் சிகிச்சைக்கு உதவுவது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
5.8.2022 முதல் 11.9.2022 வரை
அதிர்ஷ்ட தேவதையின் அருள் கிடைக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் செவ்வாயின் பார்வையில் சூரியனுடன் சுகஸ்தானத்தில் நிற்பதால் மனம், புத்தி, செயல் இவற்றால் ஒன்று படுவீர்கள். வக்ர குருவால் வியாபாரத்தில் காணப்படுகின்ற மந்த நிலையை போக்க புதிய திட்டங்களை வகுப்பீர்கள்.
5-ம் அதிபதி புதன் உச்சம்பெற்றதால் பிள்ளைகளுக்கு தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை பாக்கியம்என அனைத்து விதமான சுபபலன்களும் நடக்கும். தந்தை மகன் பிரிந்து தனிக் குடித்தனம் செல்லலாம். பல தலை முறையாக விற்காமலில் இருக்கும் பூர்வீகச் சொத்துகள் விற்றுவிடும். அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரிப்பாக்கிகளை முறையாக கட்டுவீர்கள். குடியிருக்கும் வீட்டிற்கு வர்ணம் பூசி அழகுபடுத்துவீர்கள்.
பெண்கள் ஆபரணங்கள் வாங்குவதில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். ஆரோக்கிய தொல்லைகள் அகலும். 6.9.2022 இரவு 11.37 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சார்ந்த விசயத்தில் நிதானமாக சிந்தித்து செயல்படவும். முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளவும். தினமும் ஸ்ரீ துர்க்கையின் துக்க நிவாரண அஷ்டகம் கேட்க நல்லது நடக்கும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
29.8.2022 முதல் 4.9.2022 வரை
புதிய வளர்ச்சிக்கான பாதை உருவாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் சுக ஸ்தானாதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுவதுடன், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதன் உச்சம் பெறுவதால் உங்கள் நிலையில் மாற்றங்கள் உண்டாகி வேகம் அதிகரிக்கும். எப்படி முயற்சித்தாலும் லாபமில்லை என்று சங்கடப்பட்டு வந்த நிலை மாறும். தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறி அபிவிருத்தி உண்டாகும். சிலர் புதிய தொழில் கிளைகள் திறக்க வாய்ப்பு உள்ளது.
பங்குச் சந்தை வணிகத்தில் சாதனை புரிவீர்கள். குடும்ப உறவுகளால் ஏற்பட்ட கவுரவ குறைபாடு சீராகி நிம்மதியான நிலை நீடிக்கும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். சொத்துக்கள் மீதான வழக்குகள் தள்ளுபடியாகி தீர்ப்பு சாதகமாகும். உடல் நிலையில் இருந்த பாதிப்புகள் அகலும்.
அரசு வேலை முயற்சி கைகூடும். கல்லூரி படிப்பு தடைபட்டவர்கள் மீண்டும் கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்க முடியும். அரசியல் வாதிகளுக்கு பெயர் புகழ் அதிகரிக்கும். புதிய எதிர்பாலினரின் நட்பு உங்களை தேவையற்ற திசைக்கு அழைத்துச் செல்லும் என்பதால் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம். மதுரை மீனாட்சியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
22.8.2022 முதல் 28.8.2022 வரை
காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அனைத்து சிறிய முயற்சிகளும் பெரிய பலன் தரும். தொட்டது துலங்கும். சகோதர சகோதரிகள் ஆதரிப்பார்கள். நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அடிக்கடி குறுகிய பயணம் செய்ய நேரும். சகோதரர் தொழில் உத்தியோகத்திற்காக இடம் பெயருவார்கள்.
ஞாபக சக்தி அதிகரிக்கும். சுக்ரன் சனி பார்வையில் சஞ்சரிப்பதால் புதிய எதிர் பாலின நட்பு கிடைக்கும். சிலருக்கு விரும்பிய கடன் தொகை கிடைக்கும். சிலருக்கு தந்தையின் மூலம் ஆடம்பர பொருட்கள் கிடைக்கும். சிலருக்கு திருமணம் நிச்சயமாகும். தொழிலில் மேன்மை உண்டாகும்.
கடல் சார்ந்த தொழில்கள், வியாபாரங்கள் செய்பவர்களுக்கு வருமானம் வழக்கத்தை விட அதிகமாகும். சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலை முயற்சி சில மாதங்களில் பலிதமாகும். சுகாதிபதி சூரியன் சுக ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் உடல் வலிமையும் ஆற்றலும் பெருகும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். வீடு, வாகனம் வசதி கிடைக்கும். மகாவிஷ்ணு சமேத மகாலஷ்மியை நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
15.8.2022 முதல் 21.8.2022 வரை
ஆரவாரம் மிகுந்த வாரம். ராசி அதிபதி சுக்ரன் சகாய, இளைய சகோதர ஸ்தானம் எனும் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் புதுத்தெம்பும், உற்சாகமும் கூடும். அனைத்து காரியங்களுக்கும் உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும்.விட்டுப் பிரிந்த உறவுகள் ஒட்டி உறவாடுவார்கள்.
அக்கம் பக்கம் உள்ளவர்கள் மற்றும் சுற்றுவட்டாரத்தில் நல்ல புகழும், கவுரவமும் உண்டாகும். கஷ்டங்களும், சிரமங்களும் குறையும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். துடிப்புடன் செயல்பட்டு தொழிலை முன்னேற்றப் பாதைக்கு எடுத்துச் செல்வீர்கள். லாப குருவால்வியாபாரிகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும்.உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப் பார்கள்.எதிர்பார்த்த இடத்தில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
திருமண முயற்சியில் நல்ல தகவல்கள் கிடைக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும்.பிள்ளைகளுக்கான கல்விச் செலவு அதிகரிக்கும். புதிய எதிர்பாலின நட்பால் தொல்லைகள் உருவாக வாய்ப்பு உள்ளது. தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
8.8.2022 முதல் 14.8.2022 வரை
பணிச்சுமை அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் சரளமாகும். எதிர்பாராத தன லாபம் உண்டாகும். சுக்ரனே ஆறாம் அதிபதியாக இருப்பதால் வரவிற்கு ஏற்ற செலவும் உண்டு.
7, 12-ம் அதிபதி செவ்வாய் ராசியில் சஞ்சரிப்பதால் வாழ்க்தைத் துணை தொழில், உத்தியோகத்திற்காக குறுகிய காலம் வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். கூட்டாளிகள் மற்றும் தொழிலாளிகளை அனுசரித்துச் சென்றால் நெருக்கடி நிலையை சமாளிக்க முடியும். 2-ம் அதிபதி புதன் 4-ல் நிற்பதால் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் உண்டாகும்.
பருவ மழை பொழியும் காலம் என்பதால் பயிர்களுக்கு காப்பீடு செய்வது உத்தமம். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஒத்துழைப்பு சாதகமாக இருக்கும்.தாய், தந்தை மற்றும் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும். தடைபட்ட காதல் திருமணம் சுபமாக நடந்தேறும். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும்.
8.8.2022 பகல் 2.37 முதல் 10.8.2022 பகல் 2.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு அதிக கண்திருஷ்டியால் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை இழந்த பெண்களுக்கு இயன்ற தான தர்மங்களைச் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
1.8.2022 முதல் 7.8.2022 வரை
பணமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இந்த வாரம் கையில் பணமும் மனதில் மகிழ்ச்சியும் பொங்கி வழியும். குடும்பத்தில் உள்ளவர்களின் அனுசரணையால், குழப்பங்கள் நீங்கி குதூகலம் உருவாகும். உடன் பிறந்தவர்களின் உதவியால் பொருளாதார நிலைகள் உயரும்.
புதிய வீடு போன்ற அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கு முன், அதற்குரிய மூலப் பத்திரங்கள், வில்லங்க விவகாரங்கள், பட்டா போன்ற ஆவணங்களை ஆராய்ந்து வாங்குவது நல்லது. சிறு தொழில் புரிபவர்களுக்குத் தேவையான வங்கிக் கடன் கிடைத்துத் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். புத்திர பாக்கியம் உண்டாகும்.அரசாங்கத் துறைகளின் மூலமாக எதிர்பார்த்த அனுகூலங்கள் யாவும் வந்து சேரும். கவுரவப் பட்டங்கள், பதவிகள் கிடைக்கும்.
3-ல் சூரியன் நிற்பதால் சிலரின் கற்பனை வளம் பெருகி, கதை, கவிதை எனத் திறம்பட எழுதிப் புகழ் பெறுவர். பொறாமையால், கண்திருஷ்டியால் நண்பர்களே பகைவராவார்கள்.பெண்கள் தங்கள் செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முற்பட வேண்டும்.இன்பச் சுற்றுலா போன்ற, இனிய பயணங்களால் இன்பத்தில் திளைப்பீர்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு குங்கும அர்ச்சனை செய்வது நல்லது.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசி பலன்கள்
25.7.2022 முதல் 31.7.2022 வரை
விரும்பிய மாற்றங்கள் தேடிவரும் வாரம். லாப அதிபதி குருவால் தொழிலில் ஏற்றம் அதிகரிக்கும். ஆனால் வேலைப் பளு மிகும். நீண்ட நாட்களாக தடைப்பட்டு வந்த முக்கிய பணிகளை இந்த வாரம் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சிலர் பழைய வேலையை விட்டு புதிய வேலை தேடலாம்.
2,5ம் அதிபதி புதன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் காதலில் நீங்கள் விரும்புபவரின் இசைவு கிடைக்கும். சிலருக்கு செல்போன் தொலையலாம் அல்லது புதிய செல்போன் வாங்கலாம். தாய்வழி உறவுகளால் ஏற்பட்ட மனச் சங்கடம் அகலும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும்.
தவணை முறைத் திட்டத்தில் வீட்டு மனை அல்லது தோட்டம் வாங்குவீர்கள். இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வுத் தொகை கிடைக்கும். சிலர் புதிய பாலிசி எடுப்பார்கள். தந்தைக்கு கண், இருதயம் தொடர்பான சிகிச்சை செய்ய நேரும்.உயர் ஆராய்ச்சி கல்வி படிப்பில் ஏற்பட்டதடைகள்அகலும்.பெண்களுக்கு ஆன்மீகநாட்டம் அதிகரிக்கும். சிலர் ஆன்மீக சுற்றுலா செல்ல திட்டமிடலாம். ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி உடல் சுறுசுறுப்படையும்.பிரதோசத்தன்று சிவனுக்கு சந்தனஅபிசேகம் செய்யவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
18-7-2022 முதல் 24-7-2022 வரை
பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு வரவேண்டிய பணம் விரைவில் வசூலாக வாய்ப்புள்ளது. ஆடம்பர விருந்து, உபசாரங்களில் கலந்து மகிழ்வீர்கள். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த சில ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்.
நல்லதகவல்கள் வீடு தேடி வரும். திருமணத்திற்கு நல்ல ஆடம்பரம், வசதி நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். சுபமங்கள நிகழ்விற்குதாராளமானபணச் செலவுகள் ஏற்படும். 3ம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால்இடப் பெயர்ச்சி எண்ணம் மிகுதியாகும்.ஞாபக குறைவு ஏற்படலாம்.
உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுடன் சில விஷயத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்வது உங்களுக்கு சிக்கலைத் தரலாம். பெருந்தன்மை யுடன் நடந்து கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பராமரிப்பு இல்லாத கோவில்களுக்கு விளக்கு ஏற்றநல்லெண்ணெய் வாங்கித் தரவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிப்பலன்
11.7.2022 முதல் 17.7.2022 வரை
நிதி நிலைமை மேம்படும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு மாறுவதால் தன வரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருங்காலத்தில் நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமிப்பீர்கள். நீண்ட காலமாக அனுபவித்து வந்த கடன் தொல்லையில் இருந்து முற்றிலும்விடுபடுவீர்கள்.
அதில் இருந்து நிரந்தரமாக விடுபட வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள சரியான நேரம். பூர்வீகச் சொத்து வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும், மற்றவர்களுக்கு வாக்குக்கொடுப்பதையோ முன்ஜாமீன் போடுவதையோ தவிர்க்கவும். குடும்பத்தினருடன் சமூக நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கும். நாத்தனாரின் குடும்ப பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் சில மன ஸ்தாபங்கள் அதிகரிக்கும். வீட்டின் தோற்றத்தை மேம் படுத்த வீட்டைச் சுற்றி சிறிய மாற்றங்கள் செய்வீர்கள்.
பணியாளர்களின் திறமைக்கு வெகுமதி கிடைக்கும். பாக்கிய ஸ்தான சனி பகவான் தர்ம காரியங்கள் மூலம் பாக்கிய பலன்களை அதிகரிப்பார். 12.7.2022 காலை 5.15 முதல் 14.7.2022 அதிகாலை 4.32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உங்கள் குடும்பத்தாருடன் வீண் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். வெள்ளிக்கிழமை நவகிரக சுக்கிரனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406