search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - வார பலன்கள்

    ரிஷபம்

    வார ராசிபலன் 20.10.2024 முதல் 26.10.2024 வரை

    20.10.2024 முதல் 26.10.2024 வரை

    சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய வாரம். 7, 12-ம் அதிபதி செவ்வாய் ராசிக்கு 3ல் நீசம்.குடும்ப முன்னேற்றம் கூடும். பழைய கடன்களை அடைப்பீர்கள். புதிய உத்தியோக முயற்சிகள் பலிக்கும். தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் லாபகரமாக இருக்கும்.கூட்டுத் தொழில் ஆர்வம் கூடும்.சிறிய முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு நட்புக்கரம் நீட்டுவார்கள். விரயங்கள் அதிகரிக்கும். வரவை விட செலவு கூடும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்தால் பொருளாதார சிக்கல்களில் இருந்து மீளலாம். சமையல் கலைஞர்களுக்கு தீபாவளி வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.

    பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சையில் மூத்த சகோதரத்தின் ஆதரவு மகிழ்சிச்யைத் தரும்.விண்ணப்பித்த வீடு, வாகனக் கடன் இந்த வாரம் கிடைக்கும்.புத்திர பாக்கியம் ஏற்படும். திருமணத் தடை அகன்று நல்ல வரன்கள் வீடு தேடி வரும். காதல் திருமண முயற்சி நிறைவேறும். வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். வீடு, வாகன வசதிகள் மேம்படும். பெண்களுக்கு விரும்பிய வேலையில் சேர உத்தரவு வரும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். நவகிரக சுக்கிரனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிப்பலன் 13.10.2024 முதல் 19.10.2024 வரை

    ஆக்கப்பூர்வமான வாரம். ராசியில் அஷ்டமாதிபதி குரு வக்ரம் அடைந்து ராசிக்கு ராசி அதிபதி சுக்ரனின் பார்வை உள்ளதால் ஆயுள், ஆரோக்கியம், அறுவை சிகிச்சை சார்ந்த பயம் அகலும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். வெளியூர், வெளிநாட்டு வேலையில் நிலவிய தடை, தாமதங்கள் அகலும்.தீபாவளி முடிந்தவுடன் வேலையை மாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது புத்திசாலித்தனம்.

    வீட்டில் மங்களகரமான சுப நிகழ்வுகள் நடக்கும். சிலர் ரசனைக்கு ஏற்ப வீட்டின் அமைப்பை மாற்றுவார்கள். போட்டி பந்தயங்களை தவிர்க்க வேண்டும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். காதல் முயற்சிகளால் அவப்பெயர் உண்டாகும். வேற்று மொழி பேசுபவர்கள், வேற்று மதத்தினரின் நட்பு மற்றும் உதவிகள் கிடைக்கும். கிருஷ்ணர் வழிபாடு நல்லது.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் 6.10.2024 முதல் 12.10.2024 வரை

    6.10.2024 முதல் 12.10.2024 வரை

    விரும்பிய கடன் தொகை கிடைக்கும் வாரம். ராசியில் நிற்கும் குரு பகவான் வக்ர கதியில் சஞ்சாரம் செய்கிறார். ராசிக்கு 6-ல் ராசி அதிபதி சுக்ரன் 2,5-ம் அதிபதி புதனுடன் இணைகிறார். எதையும் எதிர்கொள்ளும் துணிவும் மன தைரியமும் அதிகரிக்கும். தொழில் தொடர்பாக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைபட்ட வெளிநாட்டு பயணம், வேலை வாய்ப்பு கைகூடும். உத்தியோகஸ்தர்கள் வீண் பழியில் இருந்து விடுபடுவார்கள். விண்ணப்பித்த வீடு, வாகன, தொழில் கடன் கிடைக்கும்.

    வீண் விரயங்கள் ஏற்பட்டாலும் தேவைக்கு பணம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் கூடும். புனித தலங்களுக்கு சென்று வருவீர்கள். நண்பர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் குறையும். சமூகப் பணிகளால் செல்வாக்கு உயரும்.தந்தைவழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டா கும். எதிர்பார்த்தபடி வரன் அமையும். புதிய சொத்து கள் சேரும்.9.10.2024 அதிகாலை 4.08 முதல் 11.10.2024 அன்று பகல் 11.40 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம் ஏற்படலாம். எனவே முக்கிய முடிவுகளை ஒத்தி வைக்கவும். அஷ்டலட்சுமிகளை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் (29.9.2024 முதல் 5.10.2024 வரை)

    29.9.2024 முதல் 5.10.2024 வரை

    அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும் யோகமான வாரம். 2,5-ம் அதிபதி புதன் குரு, செவ்வாய் பார்வையில் உச்சம் பெற்று இருப்பதால் குடும்ப உறவுகளிடையே நிலவி வந்த சங்கடங்கள் மறையும். பொருளாதாரத்தில் தன்னிறைவு உண்டாகும். அடிப்படைத் தேவைகளுக்கு திணறியவர்களுக்கு கூட சரளமான பண புழக்கம் உண்டாகும். பங்குச் சந்தை முதலீடுகள் நல்ல வாபத்தை பெற்றுத்தரும், பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம்.

    முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். பொது வாழ்வில் உள்ளவர்க ளுக்கு மதிப்பு, மரியாதை உயரும். பண வரவு அமோகமாக இருக்கும்.வீடு கட்டப் போட்ட பட்ஜெட் திட்டமிடுதலை விட எகிறும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். இழந்த பதவி தேடி வரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு உண்டு. பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.புத்திர பிராப்த்தம் சித்திக்கும். காதல் திருமண முயற்சி நிறைவேறும்.உடல் நிலை தெளிவு பெறும். அமாவாசையன்று கோ பூஜை செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் (22.9.2024 முதல் 28.9.2024 வரை)

    22.9.2024 முதல் 28.9.2024 வரை

    ஆன்ம பலம் பெருகும் வாரம். ராசிக்கு 5ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் புதன், கேது சேர்க்கை இருப்பதால் அதிர்ஷ்டத்தின் மேல் நம்பிக்கை அதிகமாகும். பொன், பொருள் சேரும். தேங்கிய பணிகள், தடைபட்ட காரியங்கள் துரிதமாகும். செயற்கை முறை கருத்தரிப்பு பலன் தரும். பூர்வீகச் சொத்துக்களில் முறையான பாகப் பிரிவினை நடக்கும். பங்குச் சந்தை ஆதாயம், ஆர்வம் கூடும். பருவ வயதினருக்கு நல்ல வரன்கள் அமையும். குலதெய்வ வேண்டுதல்கள் நிறைவேறும்.

    பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் திருமணத்திற்குத் தேவையான கடன், பொருள் உதவி கிடைக்கும். பழைய சொத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். விற்க முடியாமல் கிடந்த காலி மனைகள் விற்பனை ஆகும். பெண்களுக்கு கணவர் மற்றும் புகுந்த வீட்டாரின் அன்பு மன சஞ்சலத்தைக் குறைக்கும். சிலருக்கு இரண்டாவது திருமணம் நடக்கும். அடகு நகைகள் மீண்டு வரும். தந்தையின் ஆதரவும் ஆசிர்வாதமும் மனதை மகிழ்விக்கும். மொச்சை தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் (15.9.2024 முதல் 21.9.2024 வரை)

    15.9.2024 முதல் 21.9.2024 வரை

    விரும்பிய கடன்கள் கிடைக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ராசிக்கு 6-ல் ஆட்சி செய்வதால் உங்களின் விருப்பங்கள் மற்றும் கனவுகள் நிறைவேறும். குடும்ப தேவையை நிறைவு செய்ய, தொழிலை விரிவாக்கம் செய்ய வீடு, வாகனம் வாங்க எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைக்க நேரும். உறவினர்கள் அறியாத நபர்களுக்கு கடன் மற்றும் ஜாமீன் கொடுக்கக் கூடாது. உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படலாம். இழந்த பழைய வேலை மீண்டும் கிடைக்கும்.புத்திர பிராப்த்தத்தில் நிலவிய தடைகள் அகலும்.

    உங்களின் தாராள மனதை உங்கள் நண்பர்கள், உறவுகள் சாதகமாக பயன்படுத்திக் கொள்வார்கள். உங்களின் கெட்ட பழக்கங்கள் உங்களுக்கே கேடாக அமையும். உடல்நலம் குறித்த பிரச்சனைகள் அசவுகரியத்தை ஏற்படுத்தலாம்.சில சட்ட ஆலோசனைகள் பெறுவதற்கு ஒரு வழக்கறிஞரை சந்திப்பீர்கள். தம்பதிகள் உத்தியோகத்திற்காக பிரிந்து வாழலாம். திருமண முயற்சிகள் இழுத்தடிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து எதிர்பாராத பரிசுகளும் அன்பளிப்புகளும் வரும். தினமும் லலிதா சகஸ்ஹர நாமம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிப்பலன் 8.9.2024 முதல் 14.9.2024 வரை

    திருமணத் தடை அகலும் வாரம். 7-ம் அதிபதி செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் காரிய ஜெயம் உண்டாகும். திருமணத்திற்கு மனதிற்கு பிடித்த வரன் அமையும். லட்சுமி கடாட்சம் தைரியம் உண்டாகும்.

    புத ஆதித்ய யோகத்தால் மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். ஜென்ம ராசியில் நிற்கும் குருபகவான் திருமணம், குழந்தை பேறு, வீடு, வாகன யோகம், பொன், பொருள் சேர்க்கை என பல்வேறு பாக்கிய பலன்களை ஏற்படுத்துவார். புதிய தொழில் தொடங்க அதிர்ஷ்டமான காலம் இது. அரசு வகை ஆதாயம் உண்டு.

    பயணங்களால் பயன் கிடைக்கும். சொத்து வாங்கும், விற்கும் முயற்சி ஈடேறும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். வெளிநாட்டு தொடர்பு தேடி வரும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளிடம் நண்பர்களிடம் வேகமான வார்த்தைகளை தவிர்த்து விவேகமான வார்த்தைகளை பேச வேண்டும். 11.9.2024 அன்று இரவு 9.21 முதல் 14.9.2024 அன்று காலை 3.23 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை தவிர்க்க முடியாது. பண விசயத்தில் கவனம் தேவை. அலைச்சல் உண்டு. பன்னீர் அபிஷேகம் செய்து சிவனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் (1.9.2024 முதல் 7.9.2024 வரை)

    1.9.2024 முதல் 7.9.2024 வரை

    வேதனைகளும் சோதனைகளும், சாதனைகளாக மாறும்.ராசி அதிபதி சுக்ரன் நீசம் பெற்று குரு மற்றும் செவ்வாயின் பார்வையில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேதுவுடன் சேர்க்கை பெறுகிறார்கள். வியாபாரத்தில் நிலவி வந்த எதிர்ப்புகள் விலகும்.குறைந்த வட்டிக்கு நீண்ட காலத் தவணையில் கடன் கிடைக்கும். உள்நாட்டு பணம், வெளிநாட்டு பணம் என உங்கள் கையில் தாராளமாக பணம் புழங்கும்.உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் வெற்றிமேல் வெற்றியை அதிகமாக்கும்.

    உழைப்பின் மேல் ஆர்வம் குறைந்து அதிர்ஷ்டத்தை நோக்கி பயணிக்கும் எண்ணம் மேலோங்கும்..திருமணத் தடை அகலும். அரசு சார்ந்த துறைகளால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டு குடியுரிமைக்கு முயன்றவர்களின் விருப்பம் நிறைவேறும். பூர்வீகச் சொத்தை பிரிப்பதில் சர்ச்சைகள் விலகும். லாப ஸ்தான பலத்தால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு நடக்கும். வழக்குகளில் வெற்றி உறுதி.ஆரோக்கியம் சீராகும். பயணங்கள் மிகுதியாகும். விபூதி அபிசேகம் செய்து விநாயகரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் (25.8.2024 முதல் 31.8.2024 வரை)

    25.8.2024 முதல் 31.8.2024 வரை

    கடந்த காலத்தில் நிறைவேறாத சில எண்ணங்கள் ஈடேறும். ராசி அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீசம் பெற்று கேதுவுடன் இணைந்து குரு, செவ்வாய் பார்வை பெறுகிறார். வசீகரமான தோற்றப் பொழிவு உண்டாகும். உங்களின் முன்னேற்றம் ஆச்சரியப்படும் விதத்தில் இருக்கும். உடலில் இருந்த பிணிகள் ஓடி ஒளியும். தடை கற்கள் படிக்கற்களாக மாறும். இழுபறியாக கிடந்த அனைத்து விசயங்களும் சாதகமாகும். தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் புரிபவர்களுக்கு அபாரமான வாய்ப்புகள் உள்ளது. சிலருக்கு குலத் தொழிலில் இருந்து விடுபட்டு வேறு தொழில் செய்யும் ஆர்வம் அதிகமாகும்.

    குரு தீட்சை, ஆன்மீகப் பெரியோர்களின் ஆசி கிட்டும். பணி நிரந்தரம் இல்லாத பெண்களுக்கு நிரந்தர பணி நியமன ஆணை வரும். மருத்துவ சிகிச்சை வெற்றி தரும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறும். தாய் வழிச் சொத்தை பிரிப்பதில் இருந்த குறுக்கீடுகள் அகலும். அடகு வைத்த நகைகளை, சொத்துக்களை மீட்க சந்தர்ப்பம் கூடி வரும். எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேரும். வீடு கட்டும் பணி துரிதப்படுத்தப்படும். அவல் பாயாசம் படைத்து கிருஷ்ணரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் (19.8.2024 முதல் 25.8.2024 வரை)

    19.8.2024 முதல் 25.8.2024 வரை

    உற்சாகமான வாரம். ராசிக்கு 11-ம்மிடமான மீனத்தில் ராகு இருப்பதால் புதிய வெளிநாட்டு தொழில் ஒப்பந்தங்கள் தேடி வரும்.உத்தியோகம் தொடர்பான பிரச்சினைகள் நீங்கும். சக ஊழியர்களுடன் பொறுமையுடன், பொறுப்பாக நடந்து கொள்வீர்கள். சிலருக்கு தடைபட்ட பதவி உயர்வு கைகொடுக்கும்.ராசியில் குரு, செவ்வாய் இணைவதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தைரியம் ஏற்படும். சொத்து சார்ந்த பிரச்சினைகள் சீராகும். சிலர் உத்தியோக நிமித்தமாக பூர்வீகத்தை, குடும்பத்தை விட்டு பிரியலாம். உங்களின் நியாயமான கோரிக்கைக்கு உயர் அதிகாரிகள் செவி சாய்ப்பார்கள்.

    தடைபட்ட திருமணம் இந்த மாதத்தில் நிச்சயிக்கப்படும். மூத்த சகோதரரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அரசியல் பிரமுகர்கள் தொண்டர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மருத்துவச் செலவிற்கு பிள்ளைகள் உதவுவார்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சொத்துக்கள், சேமிப்புகள் அதிகரிக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். துர்க்கையை வழிபட வாழ்வாதாரம் உயரும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் (12.8.2024 முதல் 18.8.2024 வரை)

    12.8.2024 முதல் 18.8.2024 வரை

    ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும் வாரம். வார இறுதியில் 4-ம் அதிபதி சூரியன் ஆட்சி பெற்று ராசி அதிபதி சுக்ரனுடன் இணைவதால் வீட்டிற்கு தேவையான பிரிட்ஜ், வாசிங்மெஷின், மெத்தைகளை ஆபரில் மாற்றுவீர்கள். வீடுகட்டுதல், வாங்குதல் போன்ற பணிகள் சுலபமாக நடைபெறும். தனம், தான்யம், புகழ், செல்வாக்கு, வீரம், அறிவு இவற்றுடன் அஷ்ட ஐஸ்வரியமும் தேடி வரும். இதுவரை இருந்த மனக்கவலை, உடல்நலக் குறைவு, கடன் தொல்லை, தொழில் தடை, அதிர்ஷ்டமின்மை விலகும்.

    தகுதிக்கும், திறமைக்கும், படிப்பிற்கும் தகுந்த வேலை தேடி வரும். இழந்த பாக்கிய பலன்களை மீண்டும் கிடைக்கப் பெறுவீர்கள். திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற சுப விசேஷங்கள் நடக்கும்.15.8.2024 அன்று பகல் 12.52 மணி முதல் 17.8.2024 அன்று மாலை 5.28 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத சில பயணங்களால் சோர்வு உண்டாகும். கடன் சார்ந்த விஷயங்களில் நிதானத்தை கையாளவும். அலுவலகப் பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். வரலட்சமி நோன்பு அன்று சர்க்கரை பொங்கல் படைத்து மகாலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    வார ராசிபலன் (5.8.2024 முதல் 11.8.2024 வரை)

    5.8.2024 முதல் 11.8.2024 வரை

    முன்னேற்றங்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் 2, 5-ம் அதிபதி புதனுடன் சனி பார்வையில் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். திறமைகளை வளர்த்துக் கொள்ளக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் தேடி வரும்.இருண்டு கிடந்த வாழ்க்கையில் மெதுவாக வெளிச்சம் பரவும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். கற்ற கல்விக்கு ஏற்ற வேலை கிடைக்கும். பொருளாதார நெருக்கடி குறையும். ஆன்லைன் வர்த்தகம், தகவல் தொடர்பு துறை, ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு, கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும்.

    வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்புகள் தேடிவரும். பெண்கள் வீட்டிற்கு தேவையான மங்கலப் பொருட்கள் வாங்குவார்கள். திருமண பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். விவசாயி களுக்குத் தடைபட்ட குத்தகை வருமானம் வந்து சேரும். குடியிருப்புகளுக்கு புதிய வாடகைதாரர் வரலாம். சிலர் குடியிருப்புகளை லீசுக்கு விடலாம். சொந்த வீட்டுக் கனவை பிள்ளைகள் நனவாக்குவார்கள். உடல் நிலை தேறும்.இன்சூரன்ஸ் பாலிசி முதிர்வுத் தொகை கிடைக்கும்.ஆடிப் பூரத்தன்று குங்கும அர்ச்சனை செய்து அம்மன் வழிபாடு செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×