என் மலர்
ரிஷபம் - வார பலன்கள்
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
29.7.2024 முதல் 4.8.2024 வரை
எதிர்பாராத பண வரவு உண்டாகும் வாரம்.ராசி அதிபதி சுக்ரன் சுக ஸ்தானத்தில் 2, 5-ம் அதிபதி புதனுடன் சேருகிறார். தடைபட்ட வாடகை வருமானம், நிலுவையில் உள்ள சம்பள பாக்கி, வராக்கடன்கள் கிடைக்கும்.அரசு வேலைக்கான வாய்ப்பு உள்ளது. அரசாங்க ஊழியர்களுக்கு புதிய சலுகைகள் கிடைக்கும்.சமூக அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வி முயற்சிகளில் நன்மைகள் நடைபெறும். தீய சகவாசத்தால் தடம் மாறிப் போனவர்கள் திருந்துவார்கள்.
உடன் பிறந்த வர்களின் நலனுக்காக ஒரு பெரிய தொகை செலவிட நேரும். தந்தை உயில் எழுதுவதில் சர்ச்சைகள் உண்டாகும். பாகப் பிரிவினைகள் இழுபறியாகும்.வீடு அல்லது வேலைமாற்றம் செய்யலாம். புதிய சொத்துக்கள் சேரும். மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். திருமண முயற்சி வெற்றியாகும். விரும்பிய வங்கி கடன் இந்த வாரத்தில் கிடைக்கும். பெண்கள் குடும்பத்திற்கு தேவையான பொருள்களை வாங்குவார்கள். பெரிய வர்களின் ஆசிகள் கிட்டும். ஆடி மாதம் அம்மன் கோவில்களில் உலவாரப் பணிகளில் ஈடுபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
22.7.2024 முதல் 28.7.2024 வரை
எதிர்பாராத நல்ல செய்திகள் உற்சாகப்படுத்தும் வாரம். 2, 5-ம் அதிபதி புதன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நிதி நிலைமை மேம்படும். தன வரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்காலத்திற்கு நல்ல வருமானம் தரக்கூடிய இடத்தில் உங்கள் கூடுதல் பணத்தை பத்திரமாக சேமிப்பீர்கள். நீண்ட காலமாக அனுபவித்து வந்த கடன் தொல்லையில் இருந்து சற்று விடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்து வழக்கு விஷயங்களில் வெற்றி கிடைக்கும், வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த வீட்டைச் சுற்றி சிறிய மாற்றங்கள் செய்வீர்கள்.
விவசாயிகளுக்கு எதிர்பாராத நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடைகளின் மூலம் நல்ல வரு மானம் கிடைக்கும் பணியாளர்களின் திறமைக்கு வெகுமதி கிடைக்கும்.தடைபட்ட திரு மணங்கள் நல்ல முறையில் நடக்கும். பெண்களுக்கு தாய் வழிப் பாட்டி வீட்டு பழங்கால பொருட்கள் மற்றும் நகைகள் கிடைக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி கிடைக்கும். மனதை ஒரு நிலைப்படுத்து வதன் மூலம் ஆரோக்கியத் தொல்லையில் இருந்து விடுபட முடியும். ஆடி வெள்ளிக்கிழமை சர்க்கரை பொங்கல் படைத்து அம்மன் வழிபாடு செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
15.7.2024 முதல் 21.7.2024 வரை
புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். ராசியில் குரு மற்றும் மங்களன் செவ்வாய் சேர்க்கை . ராசி அதிபதி சுக்ரன் முயற்சி, சகாய ஸ்தானத்தில் நிற்பதால் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். தடைபட்ட சில செயல்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக விமர்சனங்கள் தோன்றி மறையும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான பயணங்கள் சாதகமாக அமையும். புதிய தொழில் துவங்க, தொழில் முதலீட்டை அதிகரிக்க உகந்த காலம். விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடியாகும். அரசு வேலை முயற்சி வெற்றி தரும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.
திருமணத் தடை அகலும் பெண்கள் வீட்டிற்கு தேவையான சில முக்கிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விலகிச் சென்ற உறவுகள் பகைமை மறப்பார்கள். 19.7.2024 அன்று அதிகாலை 3.25 முதல் 21.7. 2024 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்ப உறவுகளை அனுசரித்து செல்லவும்.வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து முடிவெடுக்கவும். புன்னைநல்லூர் மாரியம்மனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
8.7.2024 முதல் 14.7.2024 வரை
சங்கடங்கள் நீங்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் முயற்சி மற்றும் சகாய ஸ்தானம் சென்று 2,5-ம் அதிபதி புதனுடன் சேருவது ரிஷபத்திற்கு சுபத்துவத்தை மிகைப்படுத்தும் அமைப்பாகும். பூமியில் ஏன் பிறந்தோம் என மன வேதனையுடன் வாழ்ந்தவர்களின் மன சஞ்சலம் குறையும்.இடப்பெயர்ச்சி உண்டாகும். வீடு அல்லது வேலை மாற்றம் செய்யலாம்.
அண்டை அயலாருடன் எல்லைத் தகராறு, முறையான ஆவணம் இல்லாத சொத்து, வில்லங்கம், ஜாமீன் பிரச்சினை, கடன் பிரச்சினை, நோய் தாக்கம், எதிரி தொல்லை, செய்வினைத் தாக்கம், பய உணர்வு, நிரந்தரமில்லாத உத்தியோகம், அடிக்கடி வேலையை மாற்றுவது, தாய் மாமன், உடன் பிறப்புகளால் மன வேதனை, முறையற்ற பாகப்பிரிவினை போன்ற பாதிப்புகள் விலகும்.தாய் மற்றும் நண்பர்கள் உதவியால் தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமடையும்.சிலருக்கு புதிய நிலம், வீடு வாகனங்கள் வாங்கும் முயற்சி பலிதமாகும். வியாபாரத்தில் நிலவிய எதிர்ப்புகள் சீராகும். வீண் அலைச்சல் விரயம் தொடரும். நோய்,நொடிகள் நிவர்த்தியாகும். மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
1.7.2024 முதல் 7.7.2024 வரை
சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் குடும்ப பிரச்சினைகள் குறையத் துவங்கும். மனக்கசப்பால் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்தவர்கள் மீண்டும் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்வார்கள். கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும்.உத்தியோகம், தொழிலில், நிலவி வந்த சிக்கல்கள் நீங்கி தொட்டது துலங்கும். இரட்டிப்பு வருமானம் உண்டாகும். கவுரவ பொறுப்புகள் மூலம் மதிப்புகள் உயரும். அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும்.பாகப்பிரிவினையில் உடன் பிறப்புகள், பங்காளிகள், சித்தப்பாவிடம் நிலவிய மனக்கசப்புகள் மறைந்து பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் சுமூகமாகும்.
வங்கியில் கடன் உதவி பெறுவதற்கு ஏற்ற காலம். பெற்றோர்கள், உடன் பிறந்தவர்களின் ஆதரவு இருக்கும். எதிரிகளின் பலம் குறையும். ஆரோக்கி யத்தில் கவனம் தேவை.உடல் சோர்வால் எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திருமணத் தடை அகலும்.ஸ்திர சொத்துக்கள் சேரும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகமாகும். கோமாதா வழிபாட்டால் மகழ்ச்சி கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
24.6.2024 முதல் 30.6.2024 வரை
செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும் அதிர்ஷ்ட மான வாரம் .ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் நிற்பதால் இது வரை பட்ட கஷ்டத்திற்கான விடிவு காலம் பிறக்கும். விவேகமாக செயல்பட்டு விரும்பிய இலக்கை அடைவீர்கள். தொழில் உத்தியோகத்தில் நிலவிய நெருக்கடிகள் விலகும்.குடும்ப கூட்டுத் தொழிலில் சித்தப்பா, பெரியப்பாவுடன் பங்குதாரராக இணையும் வாய்ப்பு உள்ளது. எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வெளிநாட்டு வேலை, அரசு வேலை முயற்சி வெற்றியாகும். பணவரவு அதிகமாகும். பொன், பொருள் சேரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடக்கும்.திருமண வயதினருக்கு தகுதியான வரன் அமையும்.
விவசாயிகள் ஆதாயம் அடைவார்கள். நிலத்தகராறு, வாய்கால் வரப்புத் தகராறு மற்றும் எல்லைத் தகராறுகள் முடிவிற்கு வரும்.சொத்துக்கள் விற்பனையில் நல்ல லாபம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிய பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளின் நலனில் அதிக அக்கறை காட்டினாலும் இளைய சகோதரர் உங்களுக்கு எதிராகவே செயல்படுவார். ஆரோக்கியம் சீராக இருக்கும். வெள்ளிக்கிழமை ஸ்ரீ மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
17.6.2024 முதல் 23.6.2024 வரை
புதிய பாதை தென்படும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன ஸ்தானத்தில் தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி புதனுடன் சேர்க்கை .பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்கு சீராகும்.உயர்ந்த நிலையை எட்டிவிட வேண்டும் என்று வைராக்கியமாக செயல்படுவீர்கள். வாக்குப் பலிதம் உண்டாகும். புதிய சிந்தனைகளால் முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்வீர்கள். வர்த்தகப் பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும்.பதவி உயர்வு கிடைக்கும். நிலுவையில் உள்ள தொழில் தொடர்பான வழக்குகள் சாதமாகும். தடைபட்ட நிலுவையில் உள்ள சம்பளபாக்கி மொத்தமாக வந்து சேரும். பொருளாதார பற்றாக்குறை அகலும். குழந்தைகள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். ஆரோக்கிய குறைபாடு அகலும். சாஸ்த்திர ஈடுபாடு ஆன்மீக நாட்டம் ஏற்படும். உயர் கல்வி முயற்சி சித்திக்கும். பழைய வாகனத்தை கொடுத்து விட்டு புதிய வாகனம் வாங்கலாம். வீடு கட்டலாம். வாங்கலாம்.21.6.2024 மாலை 6.18 மணி முதல் 23.6.2024 இரவு 10.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பிறரை நம்பி இறங்கும் காரியங்கள் தோல்வியைத் தரும். இரவு நேர பயணங்களைத் தவிர்க்கவும். பவுர்ணமியன்று மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
10.6.2024 முதல் 16.6.2024 வரை
ஆக்கப்பூர்வமான வாரம். வாரத்தின் மத்திம பகுதியில் ராசி அதிபதி சுக்ரன் சூரியன் மற்றும் புதனுடன் தன ஸ்தானம் செல்கிறார். சூழ்நிலைக்கு ஏற்ப வளைந்து கொடுத்து செயல்படுவீர்கள். தன ல்தானத்தில் புத ஆதித்ய யோகம் ஏற்படுவதால் நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள், வராக்கடன்கள் வசூலாகும்.வரவுக்கு மீறிய செலவுகளால் ஏற்பட்ட நெருக்கடிகள் சீராகும். விரய ஸ்தானம் பலம் பெறுவதால் வியாபாரம் சார்ந்த முதலீடுகளை ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.
உழைப்பிற்கு உண்டான பலன்கள் சாதகமாக அமையும். சுப காரிய தடைகள் விலகும். மாணவர்களுக்கு கற்கும் ஆர்வம் அதிகமாகும். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். கை கால் அசதி போன்ற சிறு சிறு உடல் உபாதைகள் இருக்கும். புதிய சொத்துக்களில் முதலீடு செய்யலாம் .வாழ்க்கைத் துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.வழக்கு விஷயங்களில் கவனம் வேண்டும். புத்திர பிராப்தம் உண்டாகும். அரசு உத்தி யோகம், வெளிநாட்டு வேலை கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். மகாலட்சுமி வழிபாட்டால் மகத்தான முன்னேற்றம் உண்டு.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
3.6.2024 முதல் 9.6.2024 வரை
அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடி வரும் வாரம். ராசியில் குரு, சூரியன், புதன் , சுக்ரன் என உள்ள கிரக கூட்டணிகள் ரிஷபத்திற்கு இழந்ததை மீட்டுத்தரும் அமைப்பாகும்.நிதானமாக எச்ச ரிக்கையாக செயல்படுவீர்கள். திரைக் கலைஞர்கள் புகழ் பெறுவார்கள். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப விசேஷங்கள் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தந்தை மற்றும் மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டு. பெற்றோரின் ஆரோக்கியம் மேம்படும், விமர்சனப் பேச்சுக்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.
திருமண வாய்ப்பு கூடி வரும். விரய ஸ்தானத்திற்கு சனி, செவ்வாய் சம்பந்தம் இருப்பதால் சிலருக்கு வரவிற்கு மேல் செலவு உண்டாகும். சிலருக்கு புதிய எதிர்பாலின நண்பர்கள் கிடைப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அரசியல் பிரமுகர்கள் கட்சியையும், தொண்டர்களையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். பதவிக்கு எந்த ஆபத்தும் ஏற்பட வாய்ப்பு இல்லை. உயர் கல்வி வாய்ப்பு தேடி வரும். பசு மாட்டிற்கு அமாவாசையன்று அகத்திக்கீரை வழங்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசி பலன்
27.05.2024 முதல் 02.06.2024 வரை
பணப்பரிவர்த்தனை சுமூகமாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ராசியில் சூரியன், குருவுடன் இணைந்து ஆட்சி. வார இறுதியில் 2,5ம் அதிபதி புதன் ராசிக்குள் நுழைகிறார். மனதில் அமைதி குடிபுகும். சுறுசுறுப்பு அதிகரிக்கும். ஆன்ம பலம் பெருகும். சிவ வழிபாட்டில் ஆர்வம் உண்டாகும். ஆளுமைத்திறன் செல்வம், செல்வாக்கு அதிகரிக்கும். தாராள தனவரவால் வரவு செலவு சுமூகமாகும். பெயர், புகழ், பரவும். நன்மக்கட் பேறு உண்டாகும். சுய தொழில் புரிபவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை உணர்ந்து சரியாக செயல்பட்டு ஆதாயத்தை அடைவார்கள். தொழிலாளர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். அயராது உழைத்து உயர் அதிகாரிகளின் நன்மதிப்பை பெறுவீர்கள். மகன், மகளுக்கு திருமணம் நிச்சயமாகும். தங்கம், வெள்ளி பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும். பெற்றோருடன் ஏற்பட்ட மனத்தாங்கல் மறையும். அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்குவீர்கள். மலை வாசஸ்தலங்கள், தொலை தூர சுற்றுலா தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைக்கும். 27.5.2024 அன்று மாலை 4.05 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கற்பனை பயம் கூடும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகருக்கு மாதுளம் பழம் படைத்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
20.5.2024 முதல் 26.5.2024 வரை
எதிர்பார்த்த இலக்கை அடையும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் ஆட்சி. ராசியில் குரு, சூரியன், சுக்ரன் சேர்க்கை என கிரக நிலைகள் சாதகமாக இருக்கிறது. பல வருடமாக நடைபெறாமல் தடைபட்ட அனைத்து முயற்சிகளும் சித்திக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பதவி உயர்வு, விரும்பிய இடப்பெயர்ச்சி என எதிர்பார்த்த மாற்றங்கள் நடக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு புதிய கூட்டுத் தொழில் ஆர்வம் உண்டாகும். வீடு, வாகனம், உயர்கல்வி, சுப விசேஷங்களுக்கு எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சுப விசேஷங்கள் நடத்தி மகிழ்வீர்கள்.
பெற்றோர்கள், பெரியோர்களின் நல்லாசிகள் கிடைக்கும். தாய் வழிச் சொத்தில் நிலவிய பிரச்சினைகள் சீராகும். பாகப் பிரிவினை சுமூகமாகும். அழகு, ஆடம்பரப் பொருட்கள் சேரும். மாணவர்களுக்கு விரும்பிய கல்லூரி, பள்ளியில் பயில வாய்ப்பு கிடைக்கும். வரவிற்கு ஏற்ற செலவும் இருக்கும். 25.5.2024 அன்று காலை 10.36 மணிக்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் ஆரோக்கியத்தில், கொடுக்கல், வாங்கலில் கவனம் செலுத்த வேண்டும். சுக்ர பகவானை வழிபட முத்தாய்ப்பான முன்னேற்றம் உண்டு.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
13.5.2024 முதல் 19.5.2024 வரை
காரியசித்தி உண்டாகும் வாரம். ராசியில் சூரியன், குரு சேர்க்கை திட்டங்கள் செயல்பாடுகள், காரியங்களில் வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் தடைபட்ட அனைத்து விசயங்களிலும். மிகப்பெரிய நல்ல மாற்றங்கள் ஏற்படப் போகிறது. வருமானம் மகிழ்ச்சியைத் தரும். கடனால் பாதித்த கவுரவம், மரியாதைக் குறைவு மறையும்.நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும். சமாளிக்க முடியாமல் இருந்த பல பிரச்சினைகளுக்கு இனி சுலபமாக தீர்வுகாண முடியும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் வாய்ப்பு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும்.
சித்தப்பா, நண்பர்கள் மூலம் ஆதாயங்களும், உதவிகளும் பெறும் வாரமாக இருக்கும்.படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் மீண்டும் கல்வியைத் தொடரும் வாய்ப்பு உண்டாகும். பங்கு வர்த்தகத்தின் மேல் ஆர்வம் கூடும். சிறிய பங்குச்சந்தை முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும். புதிய அசையும், அசையா சொத்துக்கள் உருவாகும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமையும். சகோதர, சகோதரிகள் மேல் அன்பு அதிகரிக்கும். அறுவை சிகிச்சை வெற்றியாகும்.பைரவர் வழிபாடு நன்மை தரும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406