search icon
என் மலர்tooltip icon

    ரிஷபம் - வார பலன்கள்

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    12.2.2024 முதல் 18.2.2024 வரை

    அதிர்ஷ்டமான வாரம். ராசி அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி புதனுடன் பாக்கிய ஸ்தானத்தில் பலம் பெறுவது ரிஷபத்திற்கு இலக்கை அடைய உதவும். குலதெய்வ அனுகிரகமும், முன்னோர்களின் நல்லாசியும் மகிழ்ச்சியான நிலைக்கு அழைத்துச்செல்லும். பொருளாதார முன்னேற்றத்தால் பணப் புழக்கம் சரளமாக இருக்கும் பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.வெளிநாட்டு வேலை அரசு உத்தியோக முயற்சி பலிதமாகும். அடமானச் சொத்து நகைகளை மீட்கலாம். புதிய சொத்து, வாகனங்கள் சேரும். தொழில் கூட்டாளிகளிடம் ஏற்பட்ட மனக் கசப்பு மாறும்.

    புதிய ஒப்பந்தங்களை ஏற்றுக் கொள்ளக் கூடிய நல்ல சூழ்நிலை உண்டாகும். விரும்பிய ஊர் மாற்றம், உத்தியோக மாற்றம் வந்து சேரும். கவுரவப் பதவிகள், பெயர், புகழ், சலுகைகள் என வெற்றிப் பாதையை நோக்கி முன்னேறுவீர்கள். எதிரி தொல்லை, கண் திருஷ்டி பாதிப்பு விலகும். திருமணத் தடை அகலும். உயர் கல்வி முயற்சி சித்திக்கும். வளர்பிறை வெள்ளிக்கிழமை லலிதா சகஸ்ஹர நாமம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    5.2.2024 முதல் 11.2.2024 வரை

    சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும் உற்சாகமான வாரம். 7, 12-ம் அதிபதி செவ்வாய் உச்சம் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் 4-ம் அதிபதி சூரியனுடன் சேர்க்கை. கவுரவப்பதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புகழ், அந்தஸ்து, கவுரவம் உயரும். குடும்ப உறவுகளுடன் நிலவிய மனக்கசப்பு மாறும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த உறவுகள் மீண்டும் சேருவார்கள். தந்தை மற்றும் தந்தை வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். வெளிநாட்டுப் பயணத்தில் நிலவிய தடை தாமதங்கள் விலகும். உத்தியோகத்தில் பாராட்டு கிடைக்கும். கூலித் தொழிலாளிகளுக்கு சீரான வேலையும், வருமானமும் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும்.

    திருமண முயற்சி கைகூடும். பூர்வீகச் சொத்து தொடர்பான வழக்குகளின் விசாரணை தாமதமாகும். உடல் நலம் சீராகும்.6.2.2024 அன்று காலை 7.35 முதல் 8.2. 2024 அன்று காலை 10.04 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளதால் மன பயம் உண்டாகும். தெளிவான முடிவு எடுக்கும் தன்மை குறையும். தை அமாவாசையன்று ஆன்மீகப் பெரி யோர்கள் மற்றும் முன்னோர்களின் நல்லாசிகள் பெறவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    29.1.2024 முதல் 4.2.2024 வரை

    புதன் ஆதித்ய யோகம் நிறைந்த வாரம். 2, 5-ம் அதிபதி புதன் 4-ம் அதிபதி சூரியனுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தை ஏற்படுத்துகிறது. தாய், தந்தை வழி உறவுகளால் ஏற்பட்ட சங்கடங்கள் சீராகும். இழப்பு, நஷ்டங்கள் பொருட்சேதங்கள் குறையும். பொருளாதார பற்றாக்குறை விலகும். அவசியம், அநாவசியம் அறிந்து செயல்படுவீர்கள்.எதையும் சமாளிக்கும் தைரியமும் தெம்பும் கூடும். மனதளவில் புதிய மாற்றங்கள் உண்டாகும். தொழில் ரீதியான புதிய ஒப்பந்தங்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். புதிய உத்தியோக முயற்சிகள் கைகூடும். திறமை களை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு உண்டாகும். இழுபறியாக இருந்து வந்த வழக்குகளுக்கு முடிவு கிடைக்கும்.

    மனதளவில் இருந்துவந்த கவலை நீங்கும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். ஊர் மாற்றம், வீடு மாற்றம் பயனுள்ளதாக அமையும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். குடும்ப ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். இடர்களை தவிர்க்க ஞாயிறு மாலை 4.30- 6 மணி வரையான ராகு காலை வேளை யில் 9 நெய் தீபம் ஏற்றி சிவ வழிபாடுசெய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    22.1.2024 முதல் 28.1.2024 வரை

    மனக்கவலைகள் குறையும் வாரம். 2,5-ம் அதிபதி புதன் தன் வீட்டை தானே பார்ப்பதால் வாழ்க்கைத் தரம் உயரும். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. நீண்ட காலமாக தீர்க்க முடியாமல் கிடந்த குடும்ப சொத்து, பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகள் தற்போது முடிவிற்கு வரும். எதிர்பார்த்த பதவி உயர்வுடன் கூடிய இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் சேர்ந்து வாழும் அமைப்பு உள்ளது. தொழில் லாபத்தில் சிறப்பான லாபம் கிட்டும். தொழில், உத்தியோக ரீதியான விரோதிகள் நண்பர்களாவார்கள்.

    புதிய வாய்ப்புகள் தேடி வரும். நெடுந்தூர தீர்த்த யாத்திரை சென்று வரலாம். குலதெய்வ, பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும்.அரசு வழி ஆதாயம் உண்டு. தந்தையின் கட்டளைக்கு இணங்குவீர்கள். குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறும். வீண் வைத்தியச் செலவுகள் குறையும். பருவ வயதினர் மண நாளை எண்ணலாம்.பெண்கள் புதிய வாகனம், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் என்று இனிமையாக பொழுதை கழிப்பீர்கள். தைப்பூசத்தன்று குல தெய்வத்தை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    15.1.2024 முதல் 21.1.2024 வரை

    சிந்தனைகள் செயலாக்கம் பெறும் வாரம். 2-ம் அதிபதி புதனும் 7-ம் அதிபதி செவ்வாயும் இணைந்து தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் கூட்டுத் தொழிலில் லாபம் அதிகமாகும். புதிய கூட்டுத் தொழில் முயற்சி வெற்றி தரும். தன வரவில் தன் நிறைவு உண்டாகும். வாழ்க்கை துணையின் பூர்வீகச் சொத்தில் மைத்துனரால் ஏற்பட்ட தடைகள் அகலும். கடனுக்காக சொத்தை விற்கலாமா? நகையை அடமானம் வைக்கலாமா? என்று தடுமாறிய நிலை மாறும். விவாகரத்து வரை சென்ற வழக்குகளில் திருப்பம் ஏற்படும். சிலர் புதிய செல்போன் வாங்கலாம். திருமணத் தடை அகலும்.மறு திருமண முயற்சி கைகூடும். பழைய வாகனத்தை எக்சேஞ்ச் ஆபரில் மாற்றுவீர்கள். வீட்டிற்கு தேவை யான விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பெண்களுக்கு கணவரு டனான ஒற்றுமை சிறக்கும். கலைத்துறை யினருக்கு வெளியூர், வெளிநாட்டு பயணத்தால் அலைச்சல் கூடும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்பட்ட தடைகள் விலகும். வராகியம்மனை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்' ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    8.1.2024 முதல் 14.1.2024 வரை

    புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். தன ஸ்தானத்திற்கு சூரியன், செவ்வாய், புதன் பார்வை என மாத, வருட கிரகங்களின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்காலத்திற்குரிய தேவைகளை இப்பொழுது உருவாக்குவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் விலகும். உங்கள் வாழ்க்கை முன்னேற்ற பாதையை நோக்கிச் செல்லும் நல்ல சம்பவங்கள் நடக்கும். வெளிநாட்டு தொழில், வேலை வாய்ப்பில் நிலவிய தடைகள் அகலும். சட்ட சிக்கல்கள் அகலும். வேலை பார்ப்பவர்களுக்கு பற்றாக்குறை பட்ஜெட் உபரி பட்ஜெட்டாகும். பெண்களுக்கு சிறு தொழில், சுய தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும்.

    முதல் திருமணத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு மறு திருமண முயற்சி சாத்தியமாகும். சுப செலவு களால் உடலும் மனமும் புத்துணர்வடையும். குல தெய்வ அருள் உண்டாகும். 9.1.2024 இரவு 9.11 முதல் 11.1.2024 இரவு 11.05 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்காமல் இருப்பது நலம். அமாவாசையன்று ஆஞ்சநேயரை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    1.1.2024 முதல் 7.1.2024 வரை

    இல்லறம் நல்லறமாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் தன் வீட்டைத் தானே பார்க்கிறார். உங்கள் செயல்பாட்டில் மற்றவர்களின் குறுக்கீடு இருக்காது. கொடுத்த வாக்கையும் ,நாணயத்தையும் காப்பாற்றுவீர்கள். வார இறுதியில் தொழிலில் நிலவிய மந்தநிலை மாறி, தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்பு உருவாகும். வாழ்க்கைத் துணையின் படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கும். உடன் பிறந்தவர்களுடன் நல்லுறவு ஏற்படும். இடமாற்றம், ஊர் மாற்றம், வேலை மாற்றம் என நிம்மதியைத் தரும் மாற்றங்கள் உண்டு. 2,5-ம் அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுவதால் பங்குச் சந்தையில் எதிர்பாராத உபரி லாபம் உண்டு.

    பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்று வாங்கிய நிலை மாறி உபரி லாபம் கிடைக்கும். ஒரு சிலருக்கு கவுரவப் பதவிகள் கிடைக்கும். புத்திர பிராப்தம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் குறையும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். தாயின் உடல் நலம் சீராகும். உயர் கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். வீட்டில் சுப காரியப் பேச்சு வார்த்தை நடைபெறும். பெண்கள் குடும்ப முன்னேற்றதால் மகிழ்ச்சி காண்பர். திருமணத் தடை அகலும். அமாவாசையன்று பசுவை வழி படவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    25.12.2023 முதல் 31.12.2023 வரை

    அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் வக்ர கதியில் சஞ்சரிக்கும் 2,5-ம் அதிபதி புதனுடன் ராசிக்கு 7-ல் நிற்பதால் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கை யாளர்கள் அனுகூலமாக இருப்பார்கள். வேலை இல்லா தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.வெளிநாட்டு வேலை, அரசு வேலை முயற்சி வெற்றி தரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் அடையும். வேலைப்பளு அதிகரிக்கும்.உடலில் சிறு சிறு பாதிப்பு தோன்றும். பணத்தட்டுப்பாடு நீங்கி பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். பங்குச் சந்தை லாபம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.புதிய நிலம் வாங்குவது, வீடு கட்டுவது போன்ற சுப பலன்கள் நடக்கும். பூர்வீகத்தில் நிலவிய பாதிப்புகள் அகலும். மகிழ்ச்சி தரும் சுப நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடைபெறும்.

    வாழ்க்கை துணையின் அன்பு அதிக ரிக்கும். காதல் திருமணத்திற்கு பெற்றோர்களின் சம்மதம் கிடைக்கும். உயர் கல்வியில் நிலவிய தடைகள் விலகும்.பகைவர்களும் நண்பர்களாகுவார்கள். அரசியல் பிரமுகர்களின் சமூக அந்தஸ்து உயரும். பழைய கடன்களை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். மகாலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    18.12.2023 முதல் 24.12.2023 வரை

    பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாரம். 2,5-ம் அதிபதி புதன் 4-ம் அதிபதி சூரியனோடு இணைவது புத ஆதித்ய யோகம். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் விலகும். ஆதாயம் தரும் விதத்தில் தொழில் முன்னேற்றம் இருக்கும். பணி புரியும் இடத்தில் உங்கள் திறமைகள் போற்றப்படும். சிலருக்கு உத்தியோக மாற்ற சிந்தனை அதிகமாகும்.வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும்.பங்குச் சந்தையில் ஈடுபட்டவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்ட மாகும். திடீர் பணவரவு மகிழ்ச்சியை இரட்டி ப்பாக்கும். சொத்து தொடர்பான வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.

    பாகப்பிரிவினை சுமூகமாகும்.மங்களகரமான சுப நிகழ்வில் கலந்து கொள்வீர்கள்.குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் விலகும். மருத்து வச் செலவுகள் குறையும். உடன் பிறந்தவர்க ளுடன் நிலவிய கருத்து வேற்றுமை மறையும். வெளிநாடு செல்வதில் நிலவிய விசா பிரச்சினை சீராகும். ஆன்மீகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. தாய், தந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். ஏகாதசியன்று மகாவிஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    11.12.2023 முதல் 17.12.2023 வரை

    நினைத்ததை அடையும் வாரம். லாப ஸ்தான ராகுவால் நல்ல திட்டம் போட்டு புதிய தொழில் துவங்குவீர்கள். விவேகத்துடன் செயல்பட்டு இலக்கை அடைவீர்கள்.வரா கடன்கள் வசூலாகும்.புதன் அஷ்டம ஸ்தானத்தில் நின்று குடும்ப ஸ்தா னத்தைப் பார்ப்பதால் உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். நண்பர்கள், உறவினர்கள் மூலம் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெற்று மன நிம்மதியாக செயலாற்றுவீர்கள் இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும்.திருமணம் போன்ற சுப காரியம் தொடர்பாக பேசலாம்.

    பூர்வீகச் சொத்து தொடர்பாக உடன் பிறந்தவர்களுடன் பேசி பாகப் பிரிவினை செய்ய உகந்த நேரம் மாணவர்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டும். 13.12.2023 அன்று காலை 11.05 முதல் 15.12.2023 பகல் 1.45 வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தகவலை நம்பி வங்கிக் கணக்கு எண்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. ஆஞ்சநேயரை வழிபட நெருக்கடிகள் விலகும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    4.12.2023 முதல் 10.12.2023 வரை

    வெற்றி மேல் வெற்றி உண்டாகும் காலம்.ராசி அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவதால் மனச் சங்கடங்கள் அகலும்.ஞாபக சக்தி அதிகரிக்கும். தடை, தாமதம் விலகும். தைரியமும் தெம்பும் குடிபுகும்.அன்றாட பணிகளில் திறம்பட செயல்பட முடியும். நினைப்பதெல்லாம் நடக்கும். பணவரவில் முன்னேற்றம் இருக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும்.புதிய வாய்ப்புகள் தேடிவரும். எடுத்த காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி கிடைக்கும்.

    புதிய வாகனம்நிலம், வீடு தோட்டம் போன்ற சொத்துச்சேர்க்கை உண்டாகும். பெண்கள் உறுதியான மனத்துடன் இருந்து பொறுமை காத்து வருவதன் மூலம் குடும்பத்தினரின் பேரன்பையும், நன்மதிப்பையும் பெற முடியும். தாய், தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் குறையும். சிறு உடல் நலக்குறைவையும் எதிர்கொள்ள நேரும். மாணவர்களுக்கு கல்வியால் ஏற்பட்ட கவலைகள் சீராகும். மகாலட்சுமி அஷ்டகம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ரிஷபம்

    இந்தவார ராசிபலன்

    26.11.2023 முதல் 3.12.2023 வரை

    திட்டமிட்டு வெற்றி பெறும் வாரம். வார இறுதியில் ராசி அதிபதி சுக்ரன் 6-ல் ஆட்சி பலம் பெறுவதால் பிறர் பாராட்டும் படியான செயல்கள் செய்வீர்கள். ஆளுமைத் திறன் மேம்படும்.உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வாரத் துவக்கத்தில் சில காரியங்களில் தொய்வு ஏற்பட்டாலும் முடிவில் வெற்றி கிடைக்கும். வீண் மனசஞ்சலம் அகலும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். புதிய சொத்துக்கள் வாங்குதல் பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கு திட்டமிடுதல் என குடும்ப நலனை ஒட்டியே உங்கள் செயல்பாடுகள் இருக்கும்.

    தொழில், வியாபாரம் நன்றாக இருக்கும். 7ம் அதிபதி செவ்வாய் ஆட்சி பலம் பெறுவதால் புதிய வாடிக்கையாளர் நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். திருமணத் தடை அகலும்.பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். வாழ்க்கை துணை யின் மூலம் அனுகூலம் உண்டாகும். தான தர்மங்கள் உதவிகள் செய்து மகிழ்வீர்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.வாசனை மலர்கள் சூட்டி மகாலட்சுமியை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×