என் மலர்
ரிஷபம் - வார பலன்கள்
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
20.11.2023 முதல் 26.11.2023 வரை
நெருக்கடியான நிலை விலகும் வாரம். ராசியை சூரியன், புதன் செவ்வாய் பார்ப்பதால் தன வரவில் நிலவிய தடை தாமதம் சீராகும். குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும்.கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சினைக்கு விடிவு காலமாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனை கொடுத்தாலும் முடிவில் வெற்றியைத் தரும். குடும்ப பொருளாதார பிரச்சி னையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். புத்திரப்பேறு உண்டாகும்.
5- ல் கேது, 11-ல் ராகு இருப்பதால் அதிர்ஷ்டம் தொடர் பான செயல்களில் ஆர்வம் குறைப்பது நல்லது.தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும்.சொத்து வாங்குதல், விற்றல் தொடர் பான செயல்களில் அதிக கவனம் தேவை.வரன் பற்றிய தெளிவான முடிவு எடுப்பீர்கள்.தொழில் உத்தியோகம் தொடர்பான விசயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. பவுர்ணமியன்று மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
13.11.2023 முதல் 19.11.2023 வரை
நெருக்கடியான நிலை விலகும் வாரம். ராசியை சூரியன், புதன், செவ்வாய் பார்ப்பதால் தன வரவில் நிலவிய தடை தாமதம் சீராகும். குடும்ப உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் விலகும்.புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனை கொடுத்தாலும் முடிவில் வெற்றியைத் தரும்.உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கண்ணீர் விட்டு வெளியில் சொல்ல முடியாமல் நீங்கள் அனுபவித்த பிரச்சனைக்கு விடிவு காலமாக இருக்கும். குடும்ப பொருளாதார பிரச்சனையை சமாளிக்க நீங்கள் வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயல்வீர்கள். குழந்தைகளின் முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும்.
தாய் வழி உறவுகளால் சில ஆதாயங்கள், செல்வம் கிடைக்கும்.சொத்து வாங்குதல், விற்றல் தொடர்பான செயல்களில் அதிக கவனம் தேவை.ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும்.வரன் பற்றிய தெளிவான முடிவு எடுப்பீர்கள்.16.11.2023 அன்று 3 மணி முதல் 18.11. 2023 காலை 7 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் உத்தியோகம் தொடர்பான விசயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சஷ்டியன்று முருகனை தேன் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
6.11.2023 முதல் 12.11.2023 வரை
புதிய பாதையில் பயணிக்கத் துவங்கும் வாரம். 9, 10-ம் அதிபதி சனி வக்ர நிவர்த்தி பெறுவதால் தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடும். பொருளாதாரப் பற்றாக்குறை நீங்கும். ராசி அதிபதி சுக்ரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீசம் பெறுவதால் பொது வாழ்வில் உள்ளவர்களின் பொறுப்புகள் திடீரென மாற்றப்படலாம். புதிய முயற்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும்.தீபாவளிக்கு பூர்வீகம் செல்வீர்கள். பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகள் இழுபறியாகும்.தடைகளை கண்டு தளரமாட்டீர்கள்.5ல் கேது இருப்பதால் பிள்ளைகளிடம் எதிர்ப்பை காட்டாமல் அனுசரித்து செல்லவும்.
தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். சுகர், பிபி போன்ற பரம்பரை வியாதிகள் கட்டுக்குள் இருக்கும். விலை உயர்ந்த பொருட்களையும் சொத்துக்களையும் வாங்கும் யோகம் உள்ளது. கணவன், மனைவி அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண முயற்சி வெற்றி தரும். பணியாளர்களால் திடீர் செலவுகளும் ஏற்படும். வேலை மாற்றம் செய்வதை தவிர்க்கவும்.பணிபுரியும் இடத்தில் கவனச் சிதறலை தவிர்த்து பக்குவமாக நடந்து கொள்ளவும். தீபாவளியன்று மகாலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
30.10.2023 முதல் 5.11.2023 வரை
மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும் வாரம். ராசியில் செவ்வாயின் 8-ம் பார்வை பதி வதால் பல வருடமாக எதிர்பார்த்த வாரிசு இல்லாத சொத்து உரிய அங்கீகாரத்துடன் தேடி வரும்.வீடு, வாகனம் வாங்குவதற்கான சாத்தியக் கூறுகள் உருவாகும்.அதற்கான கடன் உதவியும் கிடைக்கும். பயன்படாத சொத்தை விற்று கடன் அடைக்க ஏற்ற நேரம்.தொழில் மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சிலர் தீபாவளி முடிந்தவுடன் புதிய வேலைக்குச் செல்வீர்கள். 6ம்மிடத்தை கேது கடந்ததால் அரசு வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு சாதகமான பதில் வரும்.தீபாவளி போனஸில் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உயர் கல்விக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு சாதகமாகும். சகோதர சகோதரியின் திருமண முயற்சி வெற்றி தரும்.
அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகமாகும். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். பெயர் சொல்ல வாரிசு உண்டாகும்.புதிய பொருள் சேர்க்கையால் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை பய உணர்வு மனதை வாட்டும். குல தெய்வ அருள் கிட்டும். மேலும் பல பாக்கியங்களை பெற மகாலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
23.10.2023 முதல் 29.10.2023 வரை
தன்னம்பிக்கையால் காரியம் சாதிக்கும் வாரம். ராசி அதிபதி சுக்ரனும் 4-ம் அதிபதி சூரியனும் பரிவர்த்தனை பெறுவது இழந்த அனைத்து சுகங்களையும் மீட்டுத்தரும்.வீடு, வாகன கனவு நினைவாகும்.தாய் வழி முன்னோர்களிடமிருந்து நில, புலன், பணம் கிடைக்கும்.இழந்த வேலை மீண்டும் கிடைக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கியும் போனசும் கைக்கு வரும்.உங்களின் வெற்றிக்கு வாழ்க்கை துணையின் ஆதரவு இருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். சொத்துக்கள் சம்பந்தப்பட்ட பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். வியாபாரிகள் தொழிலை விரிவுபடுத்த ஏற்ற காலம்.
மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரியில் ஏற்பட்ட மனசங்கடங்கள் அகலும். மாநில, மாவட்ட அளவிளான போட்டி பந்தயங்களில் கலந்து வெற்றி பெறுவார்கள். விவசாயிகள் கலைத்துறையினர் ஏற்றம் பெறுவர். வாழ்வில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடக்கும். பணப் புழக்கம் மிகுதியாக இருக்கும். கடன் தொல்லை குறையும். சந்திர கிரக ணத்தன்று சுமங்கலிப் பெண்களிடம் ஆசி பெறவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
16.10.2023 முதல் 22.10.2023 வரை
சுகமும், சந்தோஷமும் அதிகரிக்கும் வாரம். ராசியை 7, 12-ம் அதிபதி செவ்வாய் 8-ம் பார்வையால் பார்ப்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.ஆடம்பரச் செலவைக் குறைப்பதன் மூலம் சேமிப்பை அதிகரிக்க முடியும். குருவினால் எதிர்பாராத வீடு, வாகனம் போன்ற சுப விரயம் மிகுதியாகும். சுப செலவுகளுக்கு சகோதர சகோதரிகளின் உதவிகள் கிடைக்கும்.செலவுகளால் நெருக்கடியான சூழல் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். ஆரோக்கிய குறைபாட்டை முறையான வைத்தியத்தில் சரி செய்ய முடியும். கடன் தொல்லை, வாழ்க்கைத் துணையின் பிரச்சினைகள் குறையும்.
பல பெண்கள் சுயதொழில் துவங்குவார்கள். தொழில் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ராகு லாப ஸ்தானத்தை நோக்கிச் செல்கிறார். கேது 5-ம் மிடத்தை நெருங்கு கிறார். பூர்வீகச் சொத்து, தாய்வழிச் சொத்து போன்றவற்றில் பாகப் பிரிவினை நடக்கும்.19.10.2023 இரவு 9.03 முதல் 22.10.2023 காலை 1.38 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உறவுகளிடம் அமைதிப் போக்கினை கையாளவும். ஆரோக்கியத்தை பேணவும். ஆன்மீக வழிபாட்டில் கவனம் செலுத்தினால் மலை போல் வந்த துன்பம் பனி போல விலகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்த வார ராசிபலன்
9.10.2023 முதல் 15.10.2023 வரை
தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரம். 2,5-ம் அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தா னத்தில் உச்சம் பெறுவதால் தன்னம்பிக்கை, மன உறுதி அதிகமாகும்.எந்த பிரச்சினை, கஷ்டம் வந்தாலும் சோர்ந்து போக மாட்டீர்கள். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டு. அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். வீடு கட்ட லோன் கிடைக்கும்.வியாபார விச யங்கள் கசிவதையறிந்து அதற்கேற்ப செயல்படுவீர்கள்.பணி நிரந்தரமாகும்.கண்டும் காணாமல் இருந்த உறவுகள் வலிய வந்து பேசுவார்கள். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும்.
பூர்வீகச் சொத்து கைக்கு வரும். திட்டமிட்ட நீண்ட தூர வெளிநாட்டு பயணங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் எதிர்கால நலனிற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றிதரும். குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்விற்கான அறிகுறிகள் தென்படும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். சிலருக்கு கண், காது சார்ந்த பிரச்சினைக்கு மருத்துவம் செய்ய நேரும்.நவீன மின்னணு மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பயம் விலகும். மகாளய அமாவாசையன்று பசுவிற்கு மஞ்சள் வாழைப்பழம் தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
2.10.2023 முதல் 8.10.2023 வரை
புத ஆதித்ய யோகம். 2,5-ம் அதிபதி புதன் உச்சம் பெற்று 4ம் அதிபதி சூரியனோடு சேர்க்கை பெறுவது மிக அதிர்ஷ்டம்.இந்த கிரகச் சேர்க்கையால் ஏற்படும் புத ஆதித்ய யோகம் ரிஷப ராசிக்கு மிகப் பெரிய திருப்புமுனையாகும். புத்திக் கூர்மை ஏற்படும்.நாத்திகம் பேசியவர்கள் ஆன்மீகம் பேசுவார்கள். குருமார்களின் மந்திர உபதேசம் கிடைக்கும். தெய்வ கடாட்சம், குல தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும். குழந்தைகளின் மந்த தன்மை நீங்கும். புதிய தொழில் ஒப்பந்தம் செய்ய ஏற்ற காலம் இல்லை. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.தாயாரின் உடல் நலனில் நல்ல முன்னேற்றம் தென்படும். அனுபவித்த வம்பு, வழக்கு கோர்ட் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குழந்தை பாக்கியம் ஏற்படும். மறுமணம் நடக்கும்.ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பண வரவு இருக்கும். அழகு ஆடம்பரப் பொருட்கள் சேரும். வீடு கட்டும் பணி துரிதமாகும்.பங்குச் சந்தை வணிகம் லாபத்தில் முடியும். கொடுக்கல், வாங்கல் சீராகும். தொன்மையான பழமையான பொருட்களை சேகரிப்பதில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் கூடும். மகாளய பட்ச காலங்களில் ஆடை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
வார ராசிபலன்
25.9.2023 முதல் 1.10.2023 வரை
சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் சகாய ஸ்தானத்தில் இருப்பதால் புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீர்கள்.இளைய உடன் பிறப்புகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் குறையும்.ஆதாயம் தரும் இடப்பெயர்ச்சி நடக்கும். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களின் பணிவான நடத்தை பாராட்டப்படும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். காதலில் அவசரமான நடவடிக்கையை தவிர்க்கவும்.புதிய சொத்துக்களின் பத்திரப் பதிவு இந்த வாரத்தில் நடக்கும்.கடன் பிரச்சினைகளால் மனவருத்தங்கள் ஏற்படும். சில முக்கிய சம்பவங்கள் பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் முடிவில் நன்மையாகவே இருக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். தம்பதியர்க ளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் அசதி, அசவுகரியம் மற்றும் பொருள் விரயத்தில் இருந்து விடுபட மகாளய பட்ச காலத்தில் வயது முதிர்ந்த பெண்களுக்கு ஆடை தானம் வழங்கவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
18.9.2023 முதல் 24.9.2023 வரை
சேமிப்பு உயரும் வாரம்.2,5-ம் அதிபதி புதன் 4-ம் அதிபதி சூரியனுடன் பரிவர்த்தனை பெறுவதால் எடுக்கப்பட்ட முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு.நாணயம் நீடிக்கும். புகழ், அந்தஸ்து,கவுரவம், பணபலம் உயரும்.முக்கியமான செயல்களைத் தெளிவாக திட்டமிட்டு செய்வதன் மூலம் மதிப்பு கூடும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு அதிகப்படி யான நன்மைகள் உண்டு.எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். ராசி அதிபதி சுக்ரன் மூன்றாமிடத்தில் சஞ்சரிப்பதால் காது,மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும்.கணவன் மனைவி உறவில் அன்பு அதிகரிக்கும். திருமணத் தடை அகலும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும்.22.9.2023 மதியம் 3.35 முதல் 24.9.2023 இரவு 7.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.மேலும் பல பாக்கியங்களை அடைய மகாலட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
11.9.2023 முதல் 17.9.2023 வரை
எதிர் நீச்சல் போட்டு வெற்றி பெறும் வாரம். ராசி அதிபதி சுக்ரன் முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் அமோகமான மாற்றங்கள் ஏற்படும். தைரியம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். புத்தி சாதுர்யத்தால் சில காரியங்களை சாதிப்பீர்கள். பிறர் புகழ வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். சமூக சேவை புரிபவர்களுக்கு அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்கள் பற்றிய விமர்சனங்களைத் தவிர்க்கவும். வீடுகட்டும் பணி துரிதமடையும். வாகனத்தில் பழுது நீக்கம் செய்வீர்கள். ஆரோக்கிய முன்னேற்றம் மனதை மகிழ்விக்கும். கணவன்-மனைவி விசயத்தில் சம்பந்தமில்லாத நபர்களின் குறுக்கீடு வரலாம். வரவும் செலவும் சரியாக இருக்கும். 5-ம் அதிபதி புதன் 4-ல் சூரியனுடன் இணைவு பெற்றதால் இழுபறியில் நின்ற தந்தைவழிப் பூர்வீகச் சொத்துக்களின் முடிவு சாதகமாகும்.புதிய தொழில் முயற்சியில் அனுபவஸ்தர்களின் ஆலோசனை கேட்டு நடப்பது உத்தமம்.மனைவி, குழந்தைகளின் அனுசரணை நிம்மதி தரும். பிரதோஷத்தன்று தேன் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
ரிஷபம்
இந்தவார ராசிபலன்
4.9.2023 முதல் 10.9.2023 வரை
கவுரவமான உத்தியோகம் கிடைக்கும் வாரம். ராசி மற்றும் 6-ம் அதிபதி சுக்ரன் வக்ர நிவர்த்தி பெறுவதால் கவுரவமான அரசு வேலை கிடைக்கும். தந்தையின் உடல் நலன் முற்றிலும் நலம் பெறும்.உங்கள் ராசிக்கு 12-ம் இடமான விரைய ஸ்தானத்தில் குருபகவான் வக்ரமடைகிறார். வெளியூர், வெளிநாட்டில் வசிப்பவர்கள் பூர்வீகம் வந்து செல்ல வாய்ப்புள்ளது.இடப் பெயர்ச்சியால் நல்ல பலன்கள் ஏற்படும். தொழிலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.மேலதி காரிகளின் பாராட்டு உங்களை உற்சாகப்படுத்தும். புதிய சொத்துச் சேர்க்கை ஏற்படும்.குடும்பத்திற்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்கு வீர்கள். சுப விரைய செலவுகள் வீடு தேடி வரும். பணத்தட்டுப்பாடு அதிகமானாலும் அதை சமாளிக்க கடுமையாக உழைப்பீர்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். சிலருக்கு தூக்கம் குறையும்.இன்பமும், துன்பமும் இணைந்த காலகட்டம் என்ப தால் பராசக்தியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406